Tuesday, November 23, 2010

மிஸ்டர் ஆஃப் த மிஸஸ்


நம்ம மிஸ்டர்ஸோட குணங்களைப் பத்தி எழுத ஒரு பதிவு போதுமா.. அதுனாலதான் அடுத்த பகுதி. உங்ககிட்ட/உங்க மிஸ்டர் கிட்ட எல்லாத் தகுதிகளும் இருக்கான்னு சரி பார்த்துக்கோங்க.

=> காலைல 6 மணிலேருந்து பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ செல்லமா கூப்பிட்டு, ஒவ்வொரு முத்தமா எண்ணி எண்ணிக் குடுத்து எழுப்பி விட்டா ஈஈஈஈஈஈன்னு சிரிச்சுட்டுத் திரும்பிப் படுத்திட்டு 8 மணிக்கு மண்டகப்படி நடக்கும்போது அரக்க பறக்க எழுந்து போய் எட்டரைக்கு டைனிங் டேபிள்ல உக்காந்திருக்கும் போது “நேத்தே சொன்னேன்ல. சீக்கிரம் எழுப்ப சொல்லி. எழுப்பிருக்கலாம்ல”ன்னு எங்களைக் கடிக்கறீங்களே மிஸ்டர். இது எந்த ஊர் நியாயம்...

=> பச்சை, மஞ்சள், கருப்புன்னு சொன்னா சரியாத் தெரியறதில்லைன்னு தான் கிளிப்பச்சை, துவரம்பருப்பு மஞ்சள், யானைக்கருப்புன்னு சொல்லி சொல்றோம். ஆனாலும் கரெக்ட்டா சொன்னதுக்கு எதிரா வித்தியாசக் கலர்களோட வந்து நிக்கறீங்களே, உங்க கண்ணுக்கு என்ன லென்ஸ் போட்டாத் தேவலை...

=> தட்டுல இருக்கற சாப்பாடை வழிச்சு நக்கி பாதித் தட்டையே முழுங்கற நீங்க, காலைல இருந்து கட்டிக்கிட்டு வந்தவ அடுப்படில காயறாளேங்கற எண்ணமே இல்லாம, சாப்பிடும் போது “இன்னிக்கு சமையல் நல்லாருக்கு”ன்னோ, “ப்ரமாதம்”ன்னோ சொல்லாம “எந்த ரெஸ்டாரண்ட்ல இருந்து ஆர்டர் பண்ண”ன்னு கேக்கும் போது அடுப்புல அந்த பாத்திரத்துக்குப் பதிலா உங்களை உக்கார வெக்கலாம் போல இருக்கு.

=> காலைல குளிக்க டவல் எடுத்து வைக்கறதுல இருந்து ஆஃபிஸ் போக ஃபைல், லேப்டாப், இதர எல்லாத்தையும் எடுத்துக் கைல குடுத்தனுப்பி, அரை மணி நேரம் கழிச்சு ஆஃபிஸ் பத்திரமாப் போய்ட்டீங்களான்னு கேட்க ஃபோன் பண்ணா, அது வீட்டுக்குள்ளேயே அடிக்கும் போது உங்க ஞாபக மறதியை நினைச்சுப் புல்லரிக்குது எங்களுக்கு.

=> அதெப்படி உங்க செல்ஃபோன்ல மட்டும் ஒரு பொண்ணு பேர் கூட இருக்கறதில்ல. நிஜமாவே அம்மா, அக்கா, மனைவிங்கற இந்த 3 பொண்ணுங்களை சுத்தியே தான் உங்க வாழ்க்கை இருக்கா.. எனக்கு ஒரு பொண்ணையும் தெரியாதுன்னு சீன் போட்டுட்டு சீனுன்ற பேர்ல இருந்து கால் வரும் போது சீறிப் பாஞ்சு எடுக்கறீங்களே, நடப்பது என்ன...

=> அதெப்படி நாங்க கால் பண்ணும் போது மட்டும் கரெக்ட்டா மீட்டிங்லேயோ, ட்ரைவிங்லேயோ அல்லது இம்பார்டண்ட் டிஸ்கஷன்லேயோ இருக்கீங்க. ஒரு நாள் உங்க ஆஃபிஸ்ல வந்து செக் பண்ணாத் தெரியுமோ...

=> நோ ஆய்லி ஃபுட்ன்னு படிச்சுப் படிச்சு சொல்லியும் வெளில போகும் போது லேஸ் பாக்கெட்டுக்கு நேரா கை போகுதே உங்களுக்குக் காதும் ஔட்டா... கடவுளே!

=> வெளில எல்லார்கிட்டேயும் நான் என் பொண்டாட்டிக்கு வீட்ல எல்லா வேலைலயும் சரிசமமா உதவுவேன்னு பெருமை பீத்திக்கிட்டு வீட்ல வந்து என்ன சொன்னீங்கன்னு கேட்டா “நீ சமைக்கற, நான் சாப்பிடறேன்; நீ வீடை சுத்தமாக்குற, நான் அழுக்காக்கறேன்; நீ துணி துவைக்கற, நான் போட்டுக்கறேன். இதுக்கு மேல என்ன பெரிய உதவி செய்ய முடியும்”ங்கறீங்களே... இப்போ நான் கட்டையை எடுக்கறேன், நீங்க அடி வாங்கிக்கறீங்களா...

=> எங்களுக்கு ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கற அன்னிக்கு மட்டும் எப்படி தவறுதலா உங்க க்ரெடிட் கார்டுக்குப் பதிலா எங்க க்ரெடிட் கார்டை எடுத்திட்டு வந்திடறீங்க...

=> வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் தான் ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டின்னு பெர்மிஷன் கேக்கற உங்களுக்கு ஒரு மாசத்துல எத்தனை வாரங்கள் இருக்கு..

=> எங்க வீட்டு விசேஷங்களுக்கு போகணும்ங்கும் போது மட்டும் உங்க ஆஃபிஸ்ல லீவு கிடைக்க மாட்டேங்குதே எப்படி...

=> வீட்ல இருக்கற எல்லா வேலையும் செஞ்சிட்டு வெளில கிளம்பற அவசரத்துல “ஏங்க அந்த கேஸ் சிலிண்டரை மட்டும் ஆஃப் பண்ணிடுங்களேன்”ன்னு வெட்டியா வரிவரியா பேப்பர் வாசிக்கற உங்ககிட்ட சொன்னா ஆடுக்குப் போட்டியா தலையைத் தலையை ஆட்டிட்டு வீட்டை விட்டு 10 கி.மீ. போகும் போது “ஏங்க, கேஸ் ஆஃப் பண்ண சொன்னேனே, பண்ணீங்களா”ங்கும் போது ஆமா, இல்லைன்னு ஒண்ணு சொல்லாம, மையமா நீங்க தலையாட்டற லட்சணத்துலேயே புரிஞ்சிடும் வேலை நடக்கலைன்னு.

=> கிரிக்கெட் மேட்ச்ல கடைசி பால்ல 2 ரன் எடுத்தா இந்தியா ஜெயிக்கும்ங்கற நிலைமைல அந்த ரன் எடுத்திட்டா “யெஸ், யெஸ்”ன்னு நீங்க குதிக்கறதுல தரைல இருக்கற பொருளெல்லாம் உடையும், தோத்துட்டா ரிமோட் உடையும்ன்னு எல்லாத்தையும் பத்திரப்படுத்தி வெச்சிருக்கும் போது ட்ரால முடிஞ்சதுக்காக டேபிளை உடைக்கறீங்களே, உங்களை எந்தக் காட்டுல கொண்டு போய் விடலாம்...

=> ரெஸ்டாரண்ட் போகும் போது ஏதோ எனக்குப் பிடிச்சதை மட்டுமே நீங்க சாப்பிடப் போற மாதிரி மெனு கார்டை என் கைல குடுக்கறீங்களே, நான் ஆர்டர் பண்றதை சாப்பிடவா போறீங்க... ஏன் இந்த நல்ல புள்ள கெட்டப்பு..

(மிஸ்டரின் அட்டூழியங்கள் தொடரும்)

63 comments:

CS. Mohan Kumar said...

எனது கைகள் எதிர் பதிவு போடு என பர பரக்கிறது, ஆனால் எதிர் பதிவுக்கான எதிர் விளைவுகளை எண்ணி அமைதி காக்கிறேன்

Raman Kutty said...

அட மீ தெ பர்ஸ்ட்.. ஆனா நல்லா இருக்குங்க...

'பரிவை' சே.குமார் said...

Romba ovarunnga....
naanga solla arambichcha thangathunnnga....

தருமி said...

//நான் கட்டையை எடுக்கறேன், நீங்க அடி வாங்கிக்கறீங்களா...//

அம்மாடி!

வெங்கட் நாகராஜ் said...

அச்சச்சோ, நான் இந்த விளையாட்டுக்கு வரல.... ஆளை உடுங்கம்மா... மோகன், எதுக்கு வம்பு... சும்மா லூசா விடுங்க... எதிர்பதிவு எதுக்கு, நமக்குதான் உண்மை தெரியுமே....

ADHI VENKAT said...

ரொம்ப நல்லா யோசிச்சு எழுதியிருக்கீங்க. சூப்பர்.

அன்பேசிவம் said...

ரியலி .. ஒரு ஜாலியான பதிவு... நிறைய விஷயங்கள், மன்மதன் அம்புவில் கமலின் கவிதைபோல உண்மையேயென்றானாலும் பலதும் பொருந்திப்போகிறது,இன்றைய மிஸஸ்களுக்கும்....

தமிழ் அமுதன் said...

/// பச்சை, மஞ்சள், கருப்புன்னு சொன்னா சரியாத் தெரியறதில்லைன்னு தான் கிளிப்பச்சை, துவரம்பருப்பு மஞ்சள், யானைக்கருப்புன்னு சொல்லி சொல்றோம். ஆனாலும் கரெக்ட்டா சொன்னதுக்கு எதிரா வித்தியாசக் கலர்களோட வந்து நிக்கறீங்களே, உங்க கண்ணுக்கு என்ன லென்ஸ் போட்டாத் தேவலை...///


நியாயமா இது..? மஞ்ச கலர் எடுத்து வந்தா இது மஞ்சள் இல்ல மாம்பழ கலர்னு சொல்ல வேண்டியது..!
(மாம்பழம் மஞ்சள் கலர் கிடையாதாம்..!);(

நீல கலர் எடுத்து வந்தா இது ராமர் கலர் னு சொல்ல வேண்டியது..!

கலருகெல்லாம் பேர எங்க இருந்துதான் கண்டு புடிப்பீங்களோ..!;;))

S Maharajan said...

மனைவி தான் எங்களுக்கு எல்லாம்னு நினைப்பதால் இருக்கலாம்.

மிசஸ்க்கு ஒரு கேள்வி:

மூன்று வருசமா இந்த பத்து பவுன் செயின்ண நானே போட்டு இருக்கேனே? ஒரு பத்து நிமிசமாவது நீங்க போடுங்க ஏன் எங்ககிட்டே கழட்டி தரமாட்டேங்குரீங்க..........

ஐயோ நான் சும்மா தமாசுக்கு கேட்டேன் இது எதிர் பதிவு எல்லாம் இல்லைங்கோ?

ஹுஸைனம்மா said...

இதுல பாதிக்குப் பாதி எங்க வீட்லயும் நடக்கறதுதான். ஆனா, மீதிப்பாதி ரிவர்ஸ்ல... ஹி.. ஹி.. ஸோ, மணாளனே மங்கையின் பாக்கியம்!!

/இப்போ நான் கட்டையை எடுக்கறேன், நீங்க அடி வாங்கிக்கறீங்களா...//

இத நீங்க ஃப்ர்ஸ்ட் பாயிண்ட்ல ஃபர்ஸ்ட் மினிட்லயே செஞ்சிருக்கணும்!! அதுக்கப்புறம், ”இந்த நாள் இனிய நாள்” - உங்களுக்கு. ;-)))))))

வெங்கட் said...

ஹி., ஹி., ஹி..!!

இதே மாதிரி ஒரு பதிவு..

ஆம்பள்ளங்கன்னா அப்படித்தான்..!!

அதுக்கு எதிர் பதிவு இது..

பொண்ணுங்கன்னா இப்படித்தான்..!!

ஷர்புதீன் said...

ஹி ஹி ஹி
( கொஞ்சம் பொறுங்கள், இந்த வருசத்துக்குள் எதிர் பதிவு போட்டு ஒரு வ"லி" பண்ணுறேன்., !)

வெங்கட் said...

லிங்க் குடுக்கிற அவசரத்துல
சொல்ல மறந்துட்டேன்..

உங்க பதிவு சூப்பர்ங்க..!!

இதுக்கு எதிர்பதிவு ஆவலா
எதிர்பார்க்குறேன்..

என்னாது..?! நானே எழுதறதா..?!
One Minute Pls..

எதுக்கும் எங்க வீட்டுக்கார அம்மாகிட்ட
ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்..

ஏன்..? ஏன்.. ? எல்லாம்
கேவலமா சிரிக்கிறீங்க..?

இது பயமெல்லாம் இல்ல..
மரியாதை..!! மரியாதை..!!

நீங்க இந்த " காதலுக்கு மரியாதை "
கேள்விப்பட்டதில்ல.. அதான் இது..

இம்சைஅரசன் பாபு.. said...

அய்யோ.........என்னை சொன்ன மாதிரியே இருக்கு ..................

Vidhya Chandrasekaran said...

சூப்பர்:)))

சௌந்தர் said...

எப்படி எங்க ரகசியத்தை எல்லாம் வெளிய சொல்லாம்...இருங்க இருங்க...என்னத்த இருங்க ஒன்னும் பண்ண முடியாது....

துளசி கோபால் said...

ஹாஹா:-)))))))))))


பத்துக்கு எட்டு பழுதில்லை!

க ரா said...

இப்படியே ஒருத்தங்க இன்னொருத்தங்கள் சொல்லிட்டு கிடக்க வேண்டியதுதான் :)

Raghu said...

//நிஜமாவே அம்மா, அக்கா, மனைவிங்கற இந்த 3 பொண்ணுங்களை சுத்தியே தான் உங்க வாழ்க்கை இருக்கா//

ஹுக்கும் ஒரு பொண்ணை‌ ச‌மாளிக்க‌ற‌துக்கே நுரை த‌ள்ளுது!

//அதெப்படி நாங்க கால் பண்ணும் போது மட்டும் கரெக்ட்டா மீட்டிங்லேயோ, ட்ரைவிங்லேயோ அல்லது இம்பார்டண்ட் டிஸ்கஷன்லேயோ இருக்கீங்க//

அதெப்படி கரெக்ட்டா மீட்டிங்லேயோ, ட்ரைவிங்லேயோ அல்லது இம்பார்டண்ட் டிஸ்கஷன்லேயோ இருக்கும்போது கால் ப‌ண்றீங்க :))

ILA (a) இளா said...

//இப்போ நான் கட்டையை எடுக்கறேன், நீங்க அடி வாங்கிக்கறீங்களா//
நெஜமாவே இந்த வரி வரும்போது வாய்விட்டு சிரிச்சுட்டேன்.

Unknown said...

வேணாம்......வலிக்குது.....

Prabu M said...

இதெல்லாம் பழசுங்க....

ஒருகாலத்துல இப்படியெல்லாம் நம்ம இருந்திருக்கோம்டான்னு 2010ல் ஒரு அப்பா தன் மகனுக்குக் கதைசொல்லி சோறு வேணும்னா ஊட்டிவிடலாம்! :-)

கார்க்கிபவா said...

தலைப்பு சூப்பர்..

மிஸ்டர் முதலில் வந்தாலும், அவங்க மிஸஸ்க்குதான் மிஸ்டர்னு சொல்க்றீஙக்ளே..

தலைப்பிலே இவ்ளோ உள்குத்துன்னா, பதிவுல எத்தனையோ!!

deesuresh said...

கண்ணாவிற்குத் தமிழ் படிக்கக் கற்றுக் கொடு சகோதரி..!!

a said...

ஏன் என்னாச்சு.......... அடப்பாவமே...........
(என் கவலையெல்லாம் அந்த ஒரு நல்ல ஜீவன நினைத்துதான்....)

மணிநரேன் said...

பாவம்ங்க மிஸ்டர்......

ஆமா மிஸஸ்யெல்லாம் அட்டூழியமே செய்யமாட்டாங்களா??

விஜி said...

இவ்வளவு கொடுமைக்காரரா யோகி? பார்த்தா தெரியலையே :)))

"உழவன்" "Uzhavan" said...

ஹா ஹா.. இப்படியெல்லாமா நாங்க பண்ணுறோம்.. சொல்லவேயில்ல :-))
சூப்பர்.. நல்ல அவதானிப்பு

கருடன் said...

டைம் கிடைச்சா இங்க வாங்க... மிஸஸ் ஆஃப் த மிஸ்டர்

VELU.G said...

ok ok ok ok ok ...

Please stop

இதோட போதுங்க விட்ருங்க

நாங்களும் கொஞ்சம் மரியாதையோட வெளியே போகனுமில்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///காலைல 6 மணிலேருந்து பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ செல்லமா கூப்பிட்டு, ஒவ்வொரு முத்தமா எண்ணி எண்ணிக் குடுத்து எழுப்பி விட்டா ஈஈஈஈஈஈன்னு சிரிச்சுட்டுத் திரும்பிப் படுத்திட்டு 8 மணிக்கு மண்டகப்படி நடக்கும்போது அரக்க பறக்க எழுந்து ///

எச்சூஸ் மி ஒரே ஒரு நாளு பல்லு வெளக்காம அதக் கொடுத்துபாருங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///=> எங்களுக்கு ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கற அன்னிக்கு மட்டும் எப்படி தவறுதலா உங்க க்ரெடிட் கார்டுக்குப் பதிலா எங்க க்ரெடிட் கார்டை எடுத்திட்டு வந்திடறீங்க...////

இதுல இது வேறயா....?

அமுதா கிருஷ்ணா said...

அடி..தூள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் தான் ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டின்னு பெர்மிஷன் கேக்கற உங்களுக்கு ஒரு மாசத்துல எத்தனை வாரங்கள் இருக்கு..///

வாங்குன சரக்கு காலியாக வேணாமா? இப்பிடி எல்லாத்தையும் உங்கள மாதிரி எங்களையும் வேஸ்ட் பண்ண சொல்றீங்களா?

Madhavan Srinivasagopalan said...

காலைல குளிக்க டவல் எடுத்து வைக்கறதுல இருந்து ஆஃபிஸ் போக ஃபைல், லேப்டாப், //இதர எல்லாத்தையும் எடுத்துக் கைல குடுத்தனுப்பி, அரை மணி நேரம் கழிச்சு ஆஃபிஸ் பத்திரமாப் போய்ட்டீங்களான்னு கேட்க ஃபோன் பண்ணா, அது வீட்டுக்குள்ளேயே அடிக்கும் போது உங்க ஞாபக மறதியை நினைச்சுப் புல்லரிக்குது எங்களுக்கு.//


அவரு ஆபீஸ்ல போய் சேர்ந்துட்டார / இருக்காரானு தெரிசுக்கனும்னா, நீஙக அடிக்கவேண்டியது அவரோட ஆபீஸ் லேண்ட் லயன் போனுக்கு..

தினேஷ் said...

அவருக்கு டமிழ் டெரியாதுனு பொய்புகாரா அடிச்சு விடுரீங்க..

யோகி டமிழ் படிச்சு உங்கலுக்கு எதிர் பதிவு போடுவதை எதிர்பாத்து...

Madhavan Srinivasagopalan said...

//எங்களுக்கு ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கற அன்னிக்கு மட்டும் எப்படி தவறுதலா உங்க க்ரெடிட் கார்டுக்குப் பதிலா எங்க க்ரெடிட் கார்டை எடுத்திட்டு வந்திடறீங்க...//

அப்புறம் எப்படி நாங்க பிசினஸ் மேனஜ்மேன்டுல கோல்ட் மெடல் வாங்கினதை நிருபிக்குறது..

தினேஷ் said...

//காலைல 6 மணிலேருந்து// நீங்க 4.30 இருந்து ஆரம்பிச்சா 6.30 எந்திரிச்சுப்பார்ல அவர குறை சொல்லாதீங்க உங்கமேல தப்ப வச்சுகிட்டு....

Chitra said...

காலைல 6 மணிலேருந்து பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ செல்லமா கூப்பிட்டு, ஒவ்வொரு முத்தமா எண்ணி எண்ணிக் குடுத்து எழுப்பி விட்டா ஈஈஈஈஈஈன்னு சிரிச்சுட்டுத் திரும்பிப் படுத்திட்டு 8 மணிக்கு மண்டகப்படி நடக்கும்போது அரக்க பறக்க எழுந்து போய் எட்டரைக்கு டைனிங் டேபிள்ல உக்காந்திருக்கும் போது “நேத்தே சொன்னேன்ல. சீக்கிரம் எழுப்ப சொல்லி. எழுப்பிருக்கலாம்ல”ன்னு எங்களைக் கடிக்கறீங்களே மிஸ்டர். இது எந்த ஊர் நியாயம்...


....ha,ha,ha,ha.... சான்சே இல்லை!

அன்பரசன் said...

நல்லா இருக்குங்க...
ஆனா ரொம்பத்தான் குறை சொல்றீங்க.

Madhavan Srinivasagopalan said...

didn't link to indli ?

good one.. I liked it, ofcourse.

Iyappan Krishnan said...

இதை அம்மினிக்கு படிச்சு காமிச்சதும் ஏகப்பட்ட ரகள. வீட்ல நடக்கறதெல்லாம் ஏன் எல்லார் கிட்டையும் சொல்றீங்க. அப்படின்னு

mvalarpirai said...

super !

தராசு said...

த்தோடா,

இங்க பார்றா, கேள்வி மேல கேள்வியா அடுக்கி இருக்காங்க,
விரைவில் எதிர் பதிவு வரும்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

என்னங்க மேடம் இப்படி வாருறீங்க ! அமர்க்களம் போங்க !

அப்பாதுரை said...

ரொம்ப நாள் கழிச்சு சிரிக்க வச்ச பதிவு.. மிஸ்டருங்க தயவாலே :)

commomeega said...

பதிவும்,பின்னுடங்களும் நகைசுவையாகவும்,சுவாரசியமாகவும் இருக்கிறது.

vinthaimanithan said...

ஹாஹ்ஹாஹ்ஹா...

//அடுப்புல அந்த பாத்திரத்துக்குப் பதிலா உங்களை உக்கார வெக்கலாம் போல இருக்கு//

//ஆடுக்குப் போட்டியா தலையைத் தலையை ஆட்டிட்டு//

நல்லாவே இருக்கு உங்க நகைச்சுவை எழுத்து. ரொம்ப ரசிச்சேன்... ரொம்ப சிரிச்சேன்

keep rocking!

RAMYA said...

விக்கி இதை படிச்சி மிஸ்டர் மேலே எனக்கு கோவம் வரலை..:))

எல்லாரும் இவ்வளவு அல்லல் படறீங்களா??

ஐயோ.. சரி சரி இதுக்கு ஏதாவது யோசிச்சி செய்வோம்:)

அம்மா தாயே பதிவு நல்லா இருந்திச்சு:)

பூமகள் said...

ஓஹ்.. இப்படித் தான் எல்லா மிஸ்டர்களும் இருக்காங்களா?? நான் இந்த பதிவை முதல்ல எங்க மிஸ்டர் கண்ணுல படாம மறைக்கனும்... ;-)

தோழி.. நல்லா யோசிச்சிருக்கீங்க.. மிஸ்டர்ஸ் பத்தி மிஸ் பண்ணாம தொடருங்கள். :)

Pradeep said...

laptop udan neenga utkarinthu irupathai paartha.... ellam ultavaga ungal veetil nadapathu pol oru ennam enaku thondrugirathu

கொங்கு நாடோடி said...

விக்கி,
எங்கே டிசம்பெர்லே ஒரு பதிவும் காணோம்! ரொம்ப பிசியா?

இங்கே வேலை பாக்குற ஒரு டெல்லி பொண்ணு விசாலகிழமைன மஞ்ச கலர்லே வரும், இப்போதான் அர்த்தம் தெரியுது....

Thamira said...

சுவாரசியமான, ரசனையான தொகுப்பு..

நான் என்ன சொல்றேன்னா 'வாழ்க்கை என்பது ஒரு அனுபவம்தானே.. நல்லா அனுபவியுங்க..' பதிலுக்கு உங்க பேச்ச நாள் பூரா கேட்டும் இன்னும் கீழ்ப்பாக்கம் போகாம இருக்கிறோமே, அது போதாதா.?

r.v.saravanan said...

நல்லா இருக்குங்க பதிவு

ஹேமா said...

அட்டகாசம்...வீட்டுக்கு வீடு வாசல்படிதானா.சிரிச்சு முடியல விக்னேஸ்வரி !

விக்னேஷ்வரி said...

அந்த பயமிருக்கட்டும் மோகன். ;)

நன்றி ராமன்.

ஹாஹாஹா.. வாங்க குமார்.

வாங்க தருமி சார். அனுபவமிருக்கா.. ;)

வாங்க வெங்கட். அப்படி மோகனுக்குப் புரியற மாதிரி புத்திமதி சொல்லுங்க. ;)

விக்னேஷ்வரி said...

நன்றி புவனா.

நன்றி முரளி. கல்யாணமாகமலேயே இவ்வளவு அனுபவமா மிஸஸ் பத்தி... :)

ஒவ்வொரு கலரையும் வித்தியாசப்படுத்துற எங்க புத்திசாலித்தனத்தைப் பாராட்டுங்க தமிழ் அமுதன்.

ஹிஹிஹி... நாங்க 10 பவுன் செயினைக் கழட்டிக் குடுத்துடுவோம் மஹாராஜன். ஆனா திருப்பிக் குடுக்கும் போது 20 பவுனாத் தரணும். சம்மதம்னா, இப்போவே வாங்கிக்கோங்க. :)

வாங்க ஹூஸைனம்மா. ஹிஹிஹி...

ரெண்டு பேரைப் பதிவெழுத வெச்ச புண்ணியவதியானேன். சுட்டிக்கு நன்றி வெங்கட்.

அடப்போங்க ஷர்ஃபுதீன். ஏகப்பட்ட எதிர்ப்பதிவுகள் வந்தாச்சு. நீங்க எழுதி...

வெங்கட் :)

விக்னேஷ்வரி said...

வாங்க பாபு.

நன்றி வித்யா.

வாங்க சௌந்தர். :)

நன்றி துளசிகோபால்.

எல்லாம் ஒரு ஜாலிக்குத் தான் இராமசாமி கண்ணன்.

வாங்க ரகு.

நன்றி இளா.

வாங்க கலாநேசன். :)

வாங்க பிரபு. இன்னும் இப்படி இருக்காங்க :)

விக்னேஷ்வரி said...

கார்க்கி, இல்லாத குத்தையெல்லாம் இருக்க்ற மாதிரி போட்டுக் குடுக்கறீங்களா..

தமிழ் லெர்னிங் ஆன் த வே சுரேஷ் ப்ரதர்.

உங்க பேர் அப்படிங்க யோகேஷ். :)

நீங்க ரொம்ப அப்பாவிங்க மணிநரேன்.

ச்சே ச்சே, அவர் ரொம்ப சமத்து விஜி.

உண்மையை சொன்னா அவதானிப்பு சொல்றீங்களே உழவன்.

வாசிச்சாச்சு டெரர் பாண்டியன். நல்லாருக்கு உங்க பதிவு.

ஓகே வேலு, நிறுத்திக்கலாம். :)

விக்னேஷ்வரி said...

நன்றி அமுதா கிருஷ்ணா.

ஹாஹாஹா.. வாங்க பன்னிக்குட்டி ராமசாமி.

இனி லேண்ட் லைன் தான் டார்கெட் மாதவன்.

ஹாஹாஹா... அவருக்கு அவ்ளோ தைரியம் வந்துடும்னு நினைக்கறீங்க தினேஷ்... ;)

வாங்க சித்ரா.

குறை இல்லீங்க. ஒரு நக்கலுக்குத் தான் அன்பரசன்.

சேர்த்துட்டேன் மாதவன். நன்றி.

ஹாஹாஹா... அங்கேயும் அதே தானா ஜீவ்ஸ். சூப்பர்.

விக்னேஷ்வரி said...

நன்றி வளர்பிறை.

சீக்கிரம் போடுங்க பெஞ்சு.

நன்றி கனாக்காதலன்.

நன்றி அப்பாதுரை.

நன்றி commomeega.

நன்றி விந்தை மனிதன்.

நன்றி ரம்ஸ்.

நன்றி பூமகள்.

அப்படியெல்லாம் தப்புத் தப்பா நினைக்கக் கூடாதுங்க few drops.

ஆமாங்க, வழக்கம் போல நாடோடி வேலை தான். ஊர் ஊரா சுத்தி இப்போ தான் டெல்லி வந்தேன். இனி தொடர்ந்து எழுதறேன் கொங்கு நாடோடி.

நன்றி ஆதி. ஆமாங்க, மிஸ்டர்ஸ் க்ரேட் தான். ;)

நன்றி சரவணன்.

நன்றி ஹேமா.

இல்யாஸ்.மு said...

அட்டகாசம். என்னையே நான் மறுஆய்வுக்கு உட்படுத்த தூண்டியது. வரிகளை வாழ்க்கையிலிருந்து எடுத்துள்ளீர்கள். வண்ணமாய் மின்னுகிறது.

தமிழ்கிழம் said...

வாய் விட்டு சிரிச்சேன்....
நன்றி சகோதரி ...