Monday, November 15, 2010

ஒரு மாலை இளங்குளிர் நேரம்


ஒரு மாதம் முடியும் முன்னரே பதிவுலகிற்கு மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி. எழுதுவது ஆனந்தக் கலை. (வாசிக்கறவங்களைப் பத்தி எப்போவாச்சும் யோசிச்சியா...)

தீபாவளி இனிதாய்க் கழிந்தது. வெடிச்சத்தங்களும் பட்டாசு வாசமும் ஊரையடைக்க ஒரு மத்தாப்பு கூட இல்லாமல் நான் கொண்டாடிய முதல் தீபாவளி. சிறு வயதில் கையில் வைத்துத் தூக்கியெறிந்த லட்சுமி வெடிகள் என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. இதுவரை இரு தீபாவளி விபத்துகளைக் கடந்து வந்துமே வெடியில்லாத தீபாவளி என் கனவிலும் வந்ததில்லை. உறவினர்கள், அக்கம்பக்கத்தினரென அவரவர் பங்கிற்கு வெடிகளைக் கொண்டு வந்து தருவார்கள் எங்கள் வீட்டில். சிவகாசி அருகிலிருந்தது மேலும் சிறப்பு. தீபாவளி வெடிகளில் கொஞ்சத்தை எடுத்து இதைக் கார்த்திகைக்கு வெடிக்கலாம் என அப்பா சொல்லி எடுத்து வைத்ததும், இருக்கும் வெடிகளை விட உள்ளே வைக்கப்பட்ட வெடிகள் மீதே அதிகக்கவனமிருக்கும். எல்லாம் சாம்பலாய்ப் போன பின்னே நிம்மதிப் பெருமூச்சு வரும்.

ஆனால் யோகிக்கு சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சி அதிகம். (!!!) பாலிதீன் பைகளைத் தவிப்பது, குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவது, வாகனங்களை மாசின்றிப் பராமரிப்பது என வழக்கமான ஒன்றுடன் வெடியில்லாத் தீபாவளியும் அடக்கம். முதல் வருடம் தலை தீபாவளி என்பதால் என் தொல்லை தாங்காமல் கொஞ்சமாய் வாங்கித் தந்தார். இந்த முறை அதுவும் கட். பேருக்கு ஒரு பாம்பு மாத்திரை கூட கொளுத்தல. :( (உக்காந்து உக்காந்து லக்ஷ்மி பூஜை பண்ணியே தீபாவளி கழிஞ்சது)*************************************************************************************************************

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நொய்டாவின் அவ்வைத் தமிழ்ச்சங்கம் நடத்திய யுவகலாபாரதி “ஸ்வர்ணமால்யா”வின் பரத நிகழ்ச்சி மிகச் சிறப்பு.

மிக எளிமையாக, அதீத அழகாக மேடையில் தோன்றிய ஸ்வர்ணமால்யா, மிக இயல்பாகப் பேச ஆரம்பித்தார். நடனத்தில் ஆர்வமிருக்கும் குழந்தைகளுக்கு பரதம் பற்றிய அறிமுக உரையுடன் கூடிய நடன நிகழ்ச்சியாய் அமைந்திருந்தது. அவரிடமிருந்த உற்சாகம் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதி வரை குறையவில்லை. அவரின் மிகத் தெளிவான ஆங்கிலமும் தமிழும் கூடுதல் பலம். பக்கவாத்தியங்களும் மிகச் சிறப்பு. ஆடி அவர் களைப்படையவில்லை. முழு உற்சாகத்துடனிருந்தார். சிறப்பான நாட்டிய நிகழ்ச்சி. அவர் உடலசைவுகளைக் காண்பதா, விரல்களின் அபிநயங்களை ரசிப்பதா அல்லது முகபாவங்களில் மூழ்குவதா எனும் சந்தேகம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு வந்தது மிகையில்லை.

இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நேரத்தில் ஒரு குழந்தை “எங்கம்மா என்னை ஹோம் வொர்க் செய்யலைன்னா திட்டறாங்க. என்னால படிப்புக்கும் நடனத்துக்கும் ஒண்ணா நேரம் குடுக்க முடியல. நீங்க எப்படி சமாளிச்சீங்க” எனக் கேட்கையில் அவர் முகத்தில் நாணமும் பார்வையாளர்களிடமிருந்து கரகோஷமும். “ஹோம்வொர்க்ஸை மிஸ் பண்ணித் தான் பரதம் கத்துக்கிட்டேன். ஆனாலும் எக்ஸாம்ஸ்ல மார்க் ஸ்கோர் பண்ணிட்டேன்” என குழந்தையின் கன்னம் வருடி அழகாய்ச் சொன்னார். பரதம் அவர் மூச்சில் கலந்திருந்ததை உணர முடிந்தது. (ஒரு அழகான இளங்குளிர் மாலை நேரம்)


*************************************************************************************************************

ஒரு இணையதளத்தைத் தற்செயலாய்ப் பார்த்தேன். www.snapdeal.com. இந்தியாவின் பெரு நகரங்களில் தினமொரு ஆஃபரென அள்ளி வழங்குகிறார்கள். இது எப்படி சாத்தியமென ஃபோன் செய்து விசாரித்ததில் பிஸினஸ் ப்ரோமஷனுக்காக செய்வதாகவும் அவர்களிடம் 85000 கஸ்டமர்களின் டேடாபேஸ் இருப்பதாகவும் சொன்னார்கள். ஆனால் இதில் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை உபயோகிப்பது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என்கிறார் என்னவர். அப்படியா? விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். (இதுக்காக மாச பட்ஜெட்ல ஒரு பங்கு போய்டக் கூடாதுன்னு அவர் பயப்படறாரோ என்னவோ!)

*************************************************************************************************************

இன்று பதிவுலகில் தனது ஐந்தாவது வருடத்தில் காலடி (கையடி!?) எடுத்து வைக்கும் பதிவர் முத்துலெட்சுமிக அவர்ளுக்கு நம் மனமார்ந்த வாழ்த்துகள். சிறு முயற்சி பெரும் சாதனையாய் வளர நாம் அவரை ஊக்குவிப்போம். (ஊக்கு விப்போம் இல்ல)

*************************************************************************************************************

எழுத்தார்வமும் வாசிப்பார்வமும் உள்ள எங்க ஊர்ப் பொண்ணு ஒருத்தங்களை அடிச்சுப் பிடிச்சு எழுதச் சொல்லி இழுத்திட்டு வந்தேன். அம்மணி இப்போ தான் ப்ளாக் ஆரம்பிச்சா மாதிரி இருக்கு. அதுக்குள்ள நாற்பதாவது பதிவை நெருங்கப் போறாங்க. அவங்களுக்கு கொஞ்சம் லேட்டான வரவேற்பையும், நம்மளோட வாழ்த்துகளையும் சொல்லிக்கலாம். வாங்க ஜிஜி வாழ்த்துகள். (எங்க ஊர்ப் பொண்ணு - ஸ்ரீவி டு டெல்லி)

*************************************************************************************************************

பதிவர்கள் ட்விட்டரில் 140 வார்த்தைகளுக்குள் எண்ணங்களைப் பகிர்வதோடில்லாமல் பஸ்ஸிலும் ஆக்டிவாக இருப்பது அவர்களுக்குள் நல்ல நட்பை வளர்க்கிறது. நேரம் கொல்லியான பஸ்ஸில் பொழுது போகாத அசமந்த மதிய வேளையில் நான் பஸ்ஸியவை.

# ரோட்ல நின்னு ஒரு பொண்ணைப் பார்த்தா ‘பொறுக்கி’ன்னு சொல்றாங்க. அதே, வீட்ல போய் பொண்ணைப் பார்த்தா ‘மாப்ள’ன்னு சொல்றாங்க. வாட் அ க்ரேஸி சொஸைட்டி!

# ஃப்ரெண்ட்ஷிப்ன்னா
“ஐ ஆம் ஸாரி”ன்னு சொல்றதில்ல.
“ங்கொய்யால உன் தப்புதான்டா”
அப்படிங்கறது.

ஃப்ரெண்ட்ஷிப்ன்னா
“ஐ மிஸ் யூ”ன்னு சொல்றதில்ல
“டேய் உயிரோட இருக்கியா செத்துட்டியாடா”ங்கறது.

ஃப்ரெண்ட்ஷிப்ன்னா
“அவளை லவ் பண்றியாடா”ங்கறதில்ல.
“நாளைக்கு அவ வீட்டுக்குப் போறோம்;
தூக்கறோம் மச்சி”ங்கறது.

நண்பேன்டா!

# சாஃப்ட்வேர் டெவலப்பர் மற்றொரு சாஃப்ட்வேர் டெவலப்பரை சந்திக்கிறார்.
ஒரு பிச்சைக்காரர் மற்றொரு பிச்சைக்காரரை சந்திக்கிறார். இரு ஜோடியும் ஒரே கேள்வியைக் கேட்டுக் கொள்கிறார்கள். ????


எந்த ப்ளாட்ஃபார்ம்ல இப்போ வொர்க் பண்ணிட்டிருக்க?

# பசங்க காதலிச்சா சேரலாம்என்ற நம்பிக்கையில் காதல் செய்கின்றார்கள்.... பெண்கள் பெற்றோர் இருக்காங்க எப்படியும் பிரிசிடுவாங்க என்ற நம்பிக்கையில் காதலிக்கின்றார்கள்... :)

# எனக்கு சகோதரர்கள் குறைவு. குறைவே நிறைவாயுள்ளது.

# சனிக்கிழமை அலுவலகத்துக்கு வர சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கிறார் மேனேஜர். அவரைப் பார்க்கிறேன் நான். ஆஃபிஸில் சைட்டடிக்கலாம் தானே...

# காதலிக்கு பைக் ஓட்டக் கற்றுத் தரும் காதலனைப் பார்க்கையில் பொறாமையாய்த் தான் இருக்கிறது. நானும் பைக் ஓட்டத் தெரியாமலேயே இருந்திருக்கலாமோ...

(ஏற்கனவே பஸ்ஸில் கும்மியவர்கள் இங்கும் கும்ம வேண்டாமென [கெஞ்சிக் கதறி] எச்சரிக்கப்படுகிறார்கள்)

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்

தமிழ்நாட்டிலிருந்து அழைக்கும் உறவினர்களுடனான உரையாடலைத் தமிழிலேயே ஆரம்பிக்க விரும்புகிறார் யோகி. “ஹாய் எப்படி இருக்கீங்க.. நான் நல்லா இருக்கேன். பொண்டாட்டி நல்லா இருக்கா. அப்பறம்” இதுக்கு மேல் எதிர்முனையில் தமிழ்த் தாக்குதல் தொடர்ந்தால் “அய்யோ, போதும் போதும். எனக்குத் தெரியாது.”
“ஏன் உங்க வொய்ஃப் இன்னும் தமிழ் முழுசா கத்துத் தரலையா” எதிர்முனையில் நம்மை அசிங்கப்படுத்த நிச்சயம் யாரேனும் இந்தக் கேள்வியைக் கேட்பதுண்டு.
“அய்யோ பாவம் பையன் நான். என்ன பண்ண.. என் வடியார் சரி இல்ல”
முதல் முறை இதை நான் கேட்ட போது “வடியார்?” என்றேன் அவரிடம்.
பின்னரே தெரிந்தது ஏதோ புத்தகம் வாங்கித் தமிழ் பழக ஆரம்பிக்க அதிலிருந்த வாத்தியார் (vadiyar) வடியாராகிப் போனது. அவ்வார்த்தையைத் திருத்திய பின் இப்போதெல்லாம்
“நான் நல்ல மாணவன். என் வாத்தியார் சரி இல்ல” அவரின் ஸ்டேண்டர்ட் டயலாக்.
எல்லாரும் என்னைத் திட்றாங்க. தமிழ் நல்லா சொல்லிக் குடுத்தா என்னன்னு. :(
(கொஞ்சிக் கொஞ்சித் தமிழ் பேசி குடும்பத்தோட செல்ல மாப்பிள்ளை ஆகிட்டார். நானும் ஆரம்பிக்கிறேன் பஞ்சாபி அட்டாக்கை.)

44 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஒரு மாத இடைவெளிக்குப் பின் வந்தாலும், கலக்கலான பதிவுடன் வந்து இருக்கீங்க விக்கி. வாழ்த்துக்கள் நல்ல பகிர்வுக்கு. இனிமே தினம் ஒரு பதிவு தானே :)))))

LK said...

//நான் நல்ல மாணவன். என் வாத்தியார் சரி இல்ல” //

unmaithaan

மோகன் குமார் said...

Good. Kalakkal pathivu.. literally.

நேசமித்ரன் said...

ம்ம் கலவை நன்று.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்வர்ணமால்யா :)

S Maharajan said...

//நானும் ஆரம்பிக்கிறேன் பஞ்சாபி அட்டாக்கை//

Pavam யோகி sir

பதிவர் முத்துலெட்சுமி ku வாழ்த்துகள்

janaki said...

vanthucha vanthcha.........

janaki said...

vanthacha ..........

அமுதா கிருஷ்ணா said...

இந்த முறை நான் வெடிகளுக்கு தடா போட்டேன்.என் இரண்டு மகன்களுக்கும் வருத்தம்.ஆனால், சொன்ன படி கேட்டுக் கொண்டர்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வடியார் .. என்ன வடியார் நீங்க? ஒழுங்கா சொல்லிக்குடுங்க..

:)

சுவர்ணமால்யா . முகபாவத்துல கலக்கிட்டாங்கல்ல..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வடியார் .. என்ன வடியார் நீங்க? ஒழுங்கா சொல்லிக்குடுங்க..

:)

சுவர்ணமால்யா . முகபாவத்துல கலக்கிட்டாங்கல்ல..

Priya said...

துணுக்ஸ், யோகி டைம்ஸ்.... என எல்லாமே அருமை!

இராமசாமி கண்ணண் said...

யோகி டைம்ஸ் கலக்கல் :)

வழிப்போக்கன் - யோகேஷ் said...

பஸ்ஸிய மேட்டர் மற்றும் யோகி டைம்ஸ் சூப்பர்.......

Balaji saravana said...

தலைப்பே ஒரு வித சந்தோஷ மனநிலையை செட் பண்ணிடுச்சு...
"பஸ்"ஸிங் கலக்கல்.. :)

டம்பி மேவீ said...

நல்லாயிருந்துச்சுங்க. பஞ்சாபி பாவமுங்க. :))))

♥ RomeO ♥ said...

கொஞ்சிக் கொஞ்சித் தமிழ் பேசி குடும்பத்தோட செல்ல மாப்பிள்ளை ஆகிட்டார். நானும் ஆரம்பிக்கிறேன் பஞ்சாபி அட்டாக்கை.//

செம போட்டி போல ...

Anonymous said...

//யோகிக்கு சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சி அதிகம். (!!!) பாலிதீன் பைகளைத் தவிப்பது, குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவது, வாகனங்களை மாசின்றிப் பராமரிப்பது என வழக்கமான ஒன்றுடன் வெடியில்லாத் தீபாவளியும் அடக்கம். //

Hats off to Yogi uncle. சேம் பிள்ட்டைப் பார்த்தது (பத்தி கேட்டது) சந்தோஷம்னு சொல்லுங்க.

வாத்தியார் - Vathiyaar என்று எழுதி இருக்கணும்.

( @ ஹூஸைன்னம்மா உங்களுக்கு வேலை வந்திடுச்சு. புக் போட்டவன் ஃபோன் நம்பர் எடுத்து திட்டுங்கோ. )


ஸ்வர்ணமால்யா பத்தி மங்கையர் மலரில் ஒரு பேட்டி (அவங்க சின்னப் பொண்ணாக இருந்தப்போ கொடுத்தது) படிச்சு ரொம்ப மரியாதையாக இருந்துச்சு. அப்புறம் அவங்கள பத்தி ரொம்ப மோசமாகவே எழுதிட்டு இருப்பாங்க. மார்கழி டைம்ல நடந்த ப்ரோகிராம்ல கூட ரொம்ப அசிங்கமாக ஆடினாங்கனு எழுதி இருந்தாங்க.

நீங்க தான் முதல் முறை ரொம்ப நல்லாத எழுதி இருக்கீங்க. சந்தோசமாக இருக்கு.

Hameed said...

lateaha vanthalum latestaha irrukku

தராசு said...

//(வாசிக்கறவங்களைப் பத்தி எப்போவாச்சும் யோசிச்சியா...)//

அதான கொஞ்சமாச்சும் யோசிச்சீங்களா....

//எனக்கு சகோதரர்கள் குறைவு. குறைவே நிறைவாயுள்ளது.///
# நெருடல்.

பஞ்சாபி கத்துக்கறது இருக்கட்டும், முதல்ல யோகிக்கு நல்ல வாத்தியாரா இருங்க.

சிவகுமார் said...

Good

சிவகுமார் said...

Good

ஜிஜி said...

கலவையான பதிவு நல்லா இருக்குங்க.
என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
பாவம்ங்க யோகி.அவருக்கு சீக்கிரம் நல்லா தமிழ் கத்துக்குடுங்க.

ர‌கு said...

//வாசிக்கறவங்களைப் பத்தி எப்போவாச்சும் யோசிச்சியா..//

ப‌திவெழுதிட்டு நீங்க‌ளே க‌மெண்ட் போட்டுக்க‌ற‌து ச‌ரியில்ல‌ விக்கி

//ஃப்ரெண்ட்ஷிப்ன்னா
“அவளை லவ் பண்றியாடா”ங்கறதில்ல.
“நாளைக்கு அவ வீட்டுக்குப் போறோம்;
தூக்கறோம் மச்சி”ங்கறது//

:‍‍‍‍‍)

கோவை2தில்லி said...

கலக்கலோ கலக்கல்.

dr.tj vadivukkarasi said...

hello two states! ur blog gives the pleasure of reading ananda vikatan.keep going.

shortfilmindia.com said...

வெல்க்ம் பேக்.. இண்டரஸ்டிங் பஸ்ஸுகள். எப்படி பார்க்காமல் விட்டேன்..:))

கேபிள் சங்கர்

ஆர்.ராமமூர்த்தி said...

பாவம் அந்த பஞ்சாபி!!

விந்தைமனிதன் said...

//சாஃப்ட்வேர் டெவலப்பர் மற்றொரு சாஃப்ட்வேர் டெவலப்பரை சந்திக்கிறார்.
ஒரு பிச்சைக்காரர் மற்றொரு பிச்சைக்காரரை சந்திக்கிறார். இரு ஜோடியும் ஒரே கேள்வியைக் கேட்டுக் கொள்கிறார்கள். ????


எந்த ப்ளாட்ஃபார்ம்ல இப்போ வொர்க் பண்ணிட்டிருக்க?//

ஹா ஹா...ஹி ஹி.. ஹே..ஹே..ஹோ ஹோ!

விந்தைமனிதன் said...

பஸ்லயே இந்த கடியா! யோகிக்கு அனுதாபங்கள் :))) (சும்மானாச்சிக்கும்... கோச்சுக்கிடாதீங்க)

balak said...

Hi great blog news and it's ur life like apiyum nanum story based ?

வல்லிசிம்ஹன் said...

ரொம்பநாளாச்சு விக்னேஷ்வரி பதிவு படிச்சு. நல வடியார் போங்க நீங்க:0
வடித்துக் கொடுத்தால் தானே அழகாச் சாப்பிட, கொள்ள. அதென்ன ஸ்ரீவி
? ஸ்ரீவில்லிபுத்தூரா?

சே.குமார் said...

கலக்கலான பதிவுடன் வந்து இருக்கீங்க.

ஹுஸைனம்மா said...

ஸ்வர்ணமால்யா வித்தியாசமாக, மிக அழகாக இருக்கிறார் புகைப்படத்தில்.

//பதிவர் முத்துலெட்சுமிகளுக்கு//

லெட்சுமி எத்தனை லெட்சுமிகள்? ;-))))

@அனாமிகா, லெட்டர் எழுதுறதெல்லாம் ஒன்லி இன் அமீரகம். இங்கே ஆட்டோ வராது. இந்தியா வந்தா நானும் ஒரு அப்பாவிப் பொதுஜனம்!! ;-)))

commomeega said...

//சிறு வயதில் கையில் வைத்துத் தூக்கியெறிந்த லட்சுமி வெடிகள் என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது.//

எப்படி,எப்படி,எப்படி,எப்படி

விக்னேஷ்வரி said...

நன்றி வெங்கட். என்ன தினமொரு பதிவா... ஹிஹிஹி.

வாங்க LK. நானே தமிழை மறக்கக் கூடாதுன்னு எழுதிட்டிருக்கேன். இதுல எங்கே அவருக்குக் கத்துக் குடுக்க..

நன்றி மோகன்.

நன்றி நேசமித்ரன்.

வாங்க மஹாராஜன்.

வந்தாச்சு ஜானகி. நான் இல்லாம நீங்க ரொம்ப நாள் சந்தோஷமா இருக்கக்கூடாதுல்ல. அதான். :)

விக்னேஷ்வரி said...

அவங்களும் என்னை மாதிரியே சமத்துக் குழந்தைங்க அமுதா.

முத்தக்கா, யோகிக்கும் சபரிக்கும் இருக்கற போட்டியை மறந்துடாதீங்க. ;)
ம், ஆமாக்கா. உண்மையிலேயே அசத்தலான நடனம்.

நன்றி ப்ரியா.

நன்றி இராமசாமி கண்ணன்.

நன்றி யோகேஷ்.

நன்றி பாலாஜி சரவணா.

விக்னேஷ்வரி said...

நன்றி டம்பி மேவீ.

ஆமா ரோமியோ, விட்ருவோமா..

சைட் கேப்ல அவரை அங்கிள்ன்னு சொல்லிட்டீங்களே அனாமிகா. அவர் பாத்தாருன்னா அழப் போறாரு..
ஒரு மனுஷன்கிட்ட இருக்கற நிறைகளை மட்டும் பார்த்தா நல்லா இருக்கும்ங்க. அவங்க நடனம் நிச்சயம் ஃபெண்டாஸ்டிக்.

நன்றி ஹமீத்.

வாங்க தராசு. :)
உங்களுக்கேங்க நெருடல்?
அதெல்லாம் கஷ்டம் பெஞ்சு.

நன்றி சிவகுமார்.

விக்னேஷ்வரி said...

நன்றி ஜிஜி.
அவருக்குத் தமிழ் கத்துத் தர்றது அவ்ளோ ஈசி இல்லைங்க.

உங்க வேலையை மிச்சப்படுத்தினேன் ரகு. :)

நன்றி கோவை2தில்லி.

நன்றி வடிவுக்கரசி.

நன்றி. தெரியலையே கேபிள். இனி பார்த்திடுங்க.

விக்னேஷ்வரி said...

இனி ஒண்ணும் பண்ண முடியாது ராமமூர்த்தி.

வாங்க விந்தை மனிதன்.
ஆமாங்க, அவர் பாவம் தான். :)

எங்க கல்யாணத்துக்கப்புறம் தான் அந்தப் படம் வந்தது. ஆனாலும் எங்க கதையும் அதே தான் பாலாK

அதான் இம்சிக்க வந்துட்டேனே. :)
ஆமாங்க ஸ்ரீவில்லிபுத்தூர் தான்.

நன்றி சே.குமார்.

நேர்லேயும் ரொம்ப அழகா இருந்தார் ஹூஸைனம்மா.
ஸாரிங்க, ‘அவர்’ மிஸ்ஸாகிடுச்சு. சேர்த்துட்டேன்.

விக்னேஷ்வரி said...

அட நம்புங்க commomeega. அதான் 2 முறை கைல வெடிச்சுகிட்டேன். :)

Anonymous said...

அக்கா புருஷன் மாமா தானே. மாமான்னா இங்கிலீஷூல அங்கிள் தானே. நாங்க யாரு? ரொம்ப விபரமானவங்க.

நீங்களே அழாதவர அழ வச்சுடுவீங்க போல இருக்கு. என்னா வில்லத்தனம்.

@ ஹூஸைன்னம்மா,
பரவாயில்லயே. எல்லா பின்னூட்டங்களையும் படிக்கறீங்க போல இருக்கு. அனாமிகா டார்லிங், நீ கொஞ்சம் அடக்கி வாசிம்மா (மைன்ட் வாயிஸ் தேன்)

கனாக்காதலன் said...

அம்மணி நமக்கும் உங்க ஊரு பக்கம் தாங்க ( இப்போ கூட) இராசை டூ நொய்டா :)

கனாக்காதலன் said...

வடியாரை நினைத்து நினைத்துச் சிரித்துக் கொண்டிருக்கிறேன். அருமை அருமை !
ஆமா கேட்க மறந்துட்டேன் நீங்களும் பல ப்ளாட்ஃபார்ம் பார்த்துருப்பீங்க போல :)

r.v.saravanan said...

கலவையான பதிவு நன்று.

எழுதுவது ஆனந்தக் கலை. (வாசிக்கறவங்களைப் பத்தி எப்போவாச்சும் யோசிச்சியா...)

அதானே