ஆதவன் மெல்ல மெல்ல கடலுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் அந்தியில் “வசீகரா.. என் நெஞ்சினிக்க” என மொபைல் சிணுங்க “இன்னும் 15 நிமிஷத்துல நான் அங்கே இருப்பேன், ரெடியா இரு” என்றாய். “என்னடா அவசரம்” என்பதற்குள் “ட்ராஃபிக் போலிஸ் பாக்குறாண்டா, வந்து பேசறேன்” வைத்து விட்டாய்.
அடுத்த பதினைந்து நிமிடங்களில் காருக்குள் நாமிருவரும். “என்னடா திடீர்ன்னு”
“இப்போ நேரா உன் ஃப்ளாட்டுக்குப் போறோம். அங்கே உன் ஃப்ரெண்ட் உன் ட்ரெஸ்ஸஸ் பேக் பண்ணி வெச்சிருப்பா. 2 நாள் வெளியூர் போறோம்”
“ஓய், கொழுப்பா. நான் வரல. இப்படியெலலாம் திடீர்ன்னு கூப்பிட்டா வர முடியாது”
“ஹலோ, உங்ககிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டெல்லாம் கூட்டிட்டுப் போக முடியாது” அதற்கு மேல் என்னைப் பேச விடவில்லை நீ.
நெடுந்தூரப் பயணம் ஆரம்பமானது. அதன் பின் ஒரேயொரு முறை கேட்டேன் “எங்கே போறோம்?” “நம்மிருவருக்கு மட்டுமேயான உலகத்திற்கு” இதற்கு மேல் தெளிவாக நீ சொல்லப்போவதில்லை எனத் தெரிந்ததால் எங்கே போகிறொமென்ற கவலையின்றி உன்னுடன் போகிறேன் என்ற மகிழ்ச்சியில் பேச ஆரம்பித்தேன். “எப்போடா கார் ஓட்டக் கத்துத் தருவ, ஃப்ராட்” “அதான் ட்ரைவர் நானிருக்கேனே மேடத்துக்கு. என்ன கவலை”
“ஏசியை செட் செய்து விட்டு, ஏ.ஆர்.ரஹ்மான்?” என்றாய். “இல்லை, இளையராஜா” என்றேன். சிரித்து விட்டு ப்ளேயரை ஆன் செய்தாய். “ஏதோ தாகம்.. ஏனோ மோகம்..” ஜானகி உருக, உன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தேன். அடுத்தடுத்து எஸ்.பி.பி.யும் சித்ராவும் சேர்ந்து தொடரத் தொடர ஆரம்பித்து விட்டாய் நீ. “ஹேய், இது என்ன சாங் தெரியுமா.. என்ன ம்யூசிக். சே.” இப்படியாக எனக்குப் பிடித்தது, உனக்குப் பிடித்தது, நம் ரசனை, வெறிச்சோடிய சாலைகள், அதற்குள்ளே தொடர்ந்து கொண்டிருக்கும் நீண்ட பயணம், கனவு, கற்பனை, காதல்... நீ பேசிக் கொண்டேயிருந்தாய். நான் எப்போது தூங்கினேனெனத் தெரியவில்லை.
மேனி சுடா வெயில் மேலே விழ கண் விழிக்கவிருந்த நிமிடம் என் மேலிருந்த ஷால்வையில் நிறைந்திருந்தது உன் அன்பு. மெல்ல விழி திறந்து “எங்கேடா இருக்கோம். மணி என்ன” என்றேன். இப்போதும் ஹாரிஸ் ஜெயராஜ் மெதுவாய் கசிந்து கொண்டிருந்தார். “ஆச்சு, இன்னும் பத்து நிமிஷம்” அரை மணி நேரத்தில் கெஸ்ட் ஹவுஸ் அடைந்தோம். “அப்பாவோட ஃப்ரெண்டோடது. ரொம்ப நாளா போக சொல்லிட்டிருந்தாரு. இப்போ தான் நேரம் கிடைச்சது.”
பயணக் களைப்பேயில்லை எனக்கு. “பாவம்டா நீ. நைட் முழுக்க ட்ரைவ் பண்ணியிருக்க. ரெஸ்ட் எடுத்துக்கோ” “நீ பக்கத்துல இருக்கும் போது நான் எப்படிடி டயர்டாவேன்...” இப்போதும் உன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தேன். “சரி, சீக்கிரம் ரெடியாகு. வெளில போறோம்” கிளம்பி காலை உணவு முடித்து வெளியேறுகையில் சூரியன் வெளியேறவா வேண்டாமா என்ற யோசனையிலேயே இருந்தான்.
பெரிய கடற்கரை. தூரத்தில் மனிதர்களின் தலைகள் மட்டுமே சிறிதாய்த் தெரிந்த தனிமை. அலைகளின் ஆர்ப்பரிப்பு. மனம் துள்ளியது. அலைகளுக்குள் நுழைந்து, எழுந்து ,தொலைந்து, தேடி, விளையாடிக் குளித்துத் திளைத்து வெளிவருகையில் உன் அண்மை தேவைப்பட்டது. கொஞ்ச நேரம் மணலுக்குள்ளும் குளித்து விட்டுக் கரையிலமர்ந்தோம். நீல அலைகளையும் மறுபுறத்துத் தூரத்துப் பச்சைச்செடிகளையும் உன் கரம் பற்றி ரசித்துக் கொண்டிருந்தேன். “பிடிச்சிருக்கா” என் கண்கள் பார்த்துக் கேட்டாய். “ரொம்ப தேங்க்ஸ்டா” மார்பு பற்றி அணைத்து சொன்னேன்.
மறுபடி அறை சென்று உடை மாற்றிக் கொஞ்சமாய் சுற்றிப் பின் களைத்துத் திரும்பி ஓய்வெடுத்துக் கண் விரிக்கையில் “கிளம்பலாமாடா” தலை கோதிக் கொண்டே கேட்டாய். “இப்போ எங்கேடா?” “டின்னர்”
வெளிர் நீல நிற ஜீன்ஸும், கட்டமிட்ட ஆரஞ்சு நிற சட்டையும் என்னை என்னவோ செயததென்னவோ உண்மை தான். ப்ளூ நிற சல்வாரும், நாவல் பழ நிற காட்டன் குர்தாவும் சரியாக இருந்தன எனக்கு. “லுக்கிங் கார்ஜியஸ்” கைகளால் இடுப்பைச் சுற்றிக் கொண்டாய். நான் ஒன்றும் சொல்லாமல் கேசம் வருடி சிரித்தேன்.
மொத்தமாய் இருட்டான பிரதேசம். துணைக்கு அலைகளின் சத்தம் மட்டும். இருக்கையிலமர்ந்த பின் நடுவிலிருக்கும் மெழுகை ஏற்றினாய். “நைஸ் அரோமா”. பதிலாய்ப் புன்னகைத்தேன். “நல்ல இடம். அமைதியா, நிம்மதியா, முழுமையா இருக்கு” என்றேன் உன் கண்களை நோக்கி. “தெரியும்” இருபது நொடிகள் எதுவும் பேசவில்லை. புதுமையான மௌனத்தை உடைத்தாய் “இந்த ஹோட்டல் எனக்கு ரொம்பப் பிடிச்சது. நண்பர்களோட வந்திருக்கேன். பால்கனில நின்னு கடலைப் பார்க்கற மாதிரி சாப்பிடும் போதே கடலைப் பார்த்திட்டே இந்தக் காற்றை ரசிச்சிட்டே மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் என் தேவதையைப் பார்க்கணும். உனக்கும் பிடிக்கும்னு நினைச்சேன். சொன்னா சஸ்பென்ஸ் போய்டும்னு தான் சொல்லல.”என்றவாறே என் இடக்கரம் பிடித்து மோதிரம் நுழைத்தாய். வெட்கத்தில் முகமெல்லாம் சிவந்திருந்தது.
உணவு வேளையில் உணவெங்கே உள்ளே போனது... இரவுணவிற்குப் பின் காற்றைக் கிழித்துக் கொண்டு கொஞ்சம் நடந்தோம். “உட்காரலாமா” மெலிதாய்க் கேட்டேன். தூரப் பாறை ஒன்றில் அமர்ந்தோம். கொஞ்சம் தயங்கி உன் தோளில் சாய்ந்தேன்.
வாழ்வின் சிறந்த நேரமாகத் தெரிந்தது. உன் தோளில் சாய்ந்தவாறே கடலோரத்தில் அமர்ந்திருந்தேன். நிலா இன்னும் பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது. “இதோ நானுமிருக்கிறேன்” என்றவாறு அலைகளும் உயர எழத் துவங்கின. எதைப் பற்றிய கவலையுமின்றி என் கை பற்றிக் கொண்டிருந்தாய். நான் எரிந்து கொண்டிருந்தேன். எதுவும் பேசத் தோன்றவில்லை. நிசப்த வெளியில் இரு மனங்கள் பேசிக்கொண்டிருந்தன.
40 comments:
காதல் பொங்குது!
லேபிள்ல 18+னு போட்டிருக்கலாம்ல......நான் வாசிச்சிருக்கவேமாட்டேன் :(
வாழ்த்துக்கள் நல்ல படைப்பு
நல்லாருக்கு விக்கி..
ஆகா...
“பாவம்டா நீ. நைட் முழுக்க ட்ரைவ் பண்ணியிருக்க. ரெஸ்ட் எடுத்துக்கோ” “நீ பக்கத்துல இருக்கும் போது நான் எப்படிடி டயர்டாவேன்...”
ஸ்ஸ்ஸ் முடியலை போங்க
என்ன ஒரு அன்னியோன்யம்
வாழ்க வளமுடன்!!!!
விக்னேஷ்வரி
கடலும் கடல் சார்ந்த காதலும் நன்றாக இருக்கிறது!
காதல் எழுத்து உங்களிடமிருந்து அல்லாமல் இவ்வளவு சிறப்பாய் ஒரு படைப்பாய் இந்நாட்களில் வேறு யாரிடம் இருந்தும் பிறக்கிறாற்போல இல்லை. அல்லது உண்டா?
:)
//நீ பேசிக் கொண்டேயிருந்தாய். நான் எப்போது தூங்கினேனெனத் தெரியவில்லை.//
;-) உள்ளத உள்ளபடியே நேர்மையா எழுதறீங்க...
//“எங்கே போறோம்?” “நம்மிருவருக்கு மட்டுமேயான உலகத்திற்கு” //
இந்த மாதிரி அங்கங்க அள்ளி தெளிக்கற மேட்டர்ஸ்தாங்க அம்சம்...
காதல் காதல் காதல்.... :)
பகிர்வுக்கு நன்றி!
வெங்கட்.
டெல்லி கிளைமேட் எப்படி இருக்குங்க? ரொமான்ஸ் இழையோடுது....
தமிழ்ல mills and boon படிச்ச மாதிரி இருக்கு .. :) ,
இந்த கதைய பத்தி சொல்ல நிறைய இருக்கு ... அப்புறம் வர்றேன் ..
காதல்...
காதல்...
கடைசி வரை
காதல்....
அருமை
டொக்..டொக்.. மே ஐ கம் இன்..
ஐ ஆம் கார்க்கி, 16 இயர்ஸ் ஓல்ட்
nice vicky!!
நல்லாருக்கு விக்னேஷ்வரி.. :)
அருமை என்று சொல்லிகொண்டிருக்கும் போதே
---
Blogger rajasundararajan said...
காதல் எழுத்து உங்களிடமிருந்து அல்லாமல் இவ்வளவு சிறப்பாய் ஒரு படைப்பாய் இந்நாட்களில் வேறு யாரிடம் இருந்தும் பிறக்கிறாற்போல இல்லை. அல்லது உண்டா?
---
சற்றே பொறாமயும் எட்டிப் பார்க்கிறது உங்கள் எழுத்தின் மேலே.
The Best From you .. Best Wishes.
உங்களின் இனிமையான அந்த காதல் காட்சிகளுக்கு இளையராஜா, ரஹ்மான், ஹாரீஸ் மூன்று பேரும் இணைந்து பின்னணி இசை அமைத்திருப்பது பிரம்மாண்டம்.
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு விக்கி..
அடிக்கடி டெல்லில மழை பெய்யணும் பிள்ளையாரே :))))
என்ன ஒரு நடை.. காதல் நீங்க சொல்லும்போது காதலா இல்லை.. கவிதையாவும் இருக்கு..
தாங்க்ஸ்பா..
காதலால் ஆசிர்வதிக்கப்பட்ட சொற்களைப் பெற்றிருக்கிறீர்கள்
பெருமக்கள் சொன்னதை விட என்ன சொல்லி விடப் போகிறேன்
தொடர்க.. வாழ்த்துகள்
நல்லாருக்கு
காதல் திண்ணை.
விக்கி சூப்பர்...
காதல், கடல் அலைகள் போல தொர்டந்து வந்துகொண்டே இருக்கிறது பகிர்வு முழுக்க...
அருமையான நடை...
மணிஜீ.. சென்னையில வெயில் கொளுத்துது..
வாழ்க விக்னேஷ்வரி..
எழுத்துக்களுடன் ஒன்றிப்போவது நாம் வாசிக்கும் எழுத்துக்களும் நமக்கு பிடித்தாற்போல் அமைந்தால் மட்டுமே அது சாத்தியம் . இன்று கண்களைக் கட்டி செவியின் அருகில் யாரோ ஒருவர் ஒரு புதிய உலகத்தின் அழகை வார்த்தைகளின்றி மயிலிறகு கொண்டு வருடிய ஒரு உணர்வை ஏற்படுத்தியது இந்த பதிவு . காதல் திணை அற்புத எழுத்து வடிவம் . பகிர்வுக்கு நன்றி தோழி .
காதல் சொட்டுகிறது... வாழ்த்துக்கள்
இதமான காதல்,
அருமையான நடை..
ரசனை..;)
ஹாய் ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க..
காட்சிகள் கண்முன்னே விரிந்தது போல் இருந்தது..
படிக்க சுவாரஸ்யமாக இருந்தது....
மெழுகுவர்த்தியில்...மௌனமாய்....மோதிரம்.. அணிவித்தது..
ரொம்ப ரொம்ப சூப்பர்..
கார்க்கியவிட நான் சின்னப்பையன்... தெரியாம படிச்சிட்டேன்!!!
Very good....
காதலிக்கிறவங்களுக்குப் புரியும். கடைசி வாக்கியம் வரை வாசிக்க வைத்த நடை.
ஸ்ரீ....
ரைட்டு, அடுத்த தோழன் அப்டேட்ஸ் ஆரம்பமாயிருச்சு.
வார்த்தைகளில் பின்னரீங்க விக்கி, தேர்ந்தெடுத்து செதுக்கற மாதிரி அப்படி ஒரு கச்சிதம்.
ஆனாலும்,
//ஓய், கொழுப்பா. நான் வரல. இப்படியெலலாம் திடீர்ன்னு கூப்பிட்டா வர முடியாது//
ஓய், துஸி பஞ்சாப் த குடி நஹினா, பிர் ஓய் கஹாசே ஆகயா?????
காதல் திணை.... ம்... நல்லாருக்குங்க.
சூப்பர்ப் விக்னேஷ்வரி.
மனவோட்டத்தை எல்லோராலும் சரியாக பிரதிபலிக்க முடியாது.
கலக்கியிருக்கீங்க.. அப்படியே எங்க வீட்டு கதை போலல்லவா இருக்கு... என்ன மோதிரம் மட்டும் மிஸ்ஸிங்... ;-)
இதே போல பல அருமையான நினைவலைகள் பல இருந்தும் எழுதவில்லை.. நீங்கள் என் பங்கை பூர்த்தியாக்கிவிட்டீர்கள்.
இனிய தம்பதிகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பூமகள்.
''“ஏதோ தாகம்.. ஏனோ மோகம்..” ஜானகி உருக, உன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தேன்."
‘மேனி சுடா வெயில் மேலே விழ கண் விழிக்கவிருந்த நிமிடம் என் மேலிருந்த ஷால்வையில் நிறைந்திருந்தது உன் அன்பு.’
இந்த வரிகள் மட்டும் excellent!
மற்றபடி எல்லாம் ரொம்ப சினிமேட்டிக்!
இப்படிப்பட்ட காட்சிகளை தமிழ் சினிமாக்களில் அதிகம் வைத்து வைத்தேதான் பல பேருக்கு தம்மடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டுவிட்டார்கள்.
சினிமாவோ, இலக்கியமோ.. இயல்புதான் இன்றைய ட்ரெண்ட்!
வைரமுத்து ‘விண்ணோடு வா நிலவே’ எழுதிய காலம் பறந்துவிட்டது. அவரே ‘கருவாச்சி காவிய’த்துக்கு மாறிவிட்டார். மனநலம் குன்றிய அண்ணன் பற்றிய உங்கள் பதிவில் எழுத்துநடைக் குறைகள் இருந்தாலும் இந்தக் குறை இல்லை. இனி, இயல்பான எழுத்தை மட்டும் தருவீர்கள் என்று நம்புகிறேன்!
வேலையை விட்டா முழு நேர எழுத்தாளர் ஆகிடுவீங்களோ?
ரொம்ப அழகா, ஒரு ஃபீலை உருவாக்கியிருக்கிறீர்கள். அழகாக காட்சி கண்முன் விரிகிறது.
முதல் வரியில் இருந்து கடைசி வரி வரைக்கும் காதல் மழை....
' ' ' ' ' ' ' ' ' ' ' '
' ' ' ' ' ' ' ' ' ' '
' ' ' ' ' ' ' ' ' '
' ' ' ' ' ' ' ' '
' ' ' ' ' ' '
' ' ' ' ' '
' ' ' ' '
' ' '
'
romba romatic and excellent
beautiful and excellent......
ரொம்ப நல்லா இருக்கு...... ஒரு வித உணர்ச்சி ..... ஒரு வித காதல் உணர்வு ..... காதலில் கலந்த ஊடல் ...... அற்புதம் ......
Post a Comment