டெல்லி வரும் நண்பர்கள் பலருக்குமான பிரச்சனை தங்குமிடம். தலை நகரின் பிரம்மாண்டங்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாதவை இங்கிருக்கும் செலவுகளும். குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியிலேயே இரண்டாயிரம் ரூபாய்க்குள் டெல்லியை அடைந்து விடும் பலருக்கும் அறையெடுத்துத் தங்குவதென்பது மிரட்சியான விஷயம். சில ஆயிரங்களுக்குள் நல்ல, தரமான, பாதுகாப்பான, நகரின் பிரதான இடத்திலிருக்குமாறு தங்கும் விடுதிகள் கிடைப்பது அசாத்தியமே. இக்குறையைப் போக்க டாடா அறிமுகப்படுத்தியுள்ள பட்ஜெட் ஹோட்ட்ல்கள் “Ginger” (ஜிஞ்சர்). ஆயிரம் ரூபாய்க்கே குளிர்சாதன வசதியுடன் கூடிய அறை கிடைக்கிறது. அனைத்து வசதிகளுமிருக்குமாறும் தரமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும் இது டெல்லி ரயில் நிலையத்தின் முன்னேயே அமைந்துள்ளது. இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் கிளைகளை ஆரம்பித்தும், வாடிக்கையாளர்களை த்ருப்திப்படுத்தும் சலுகைகளை அளித்தும் பலரையும் வரவேற்கிறது இவ்விடுதிகள். இவர்களின் இத்தனித்தன்மையான சேவையால் அறைகள் கிடைப்பதில் எப்போதும் பற்றாக்குறை இருக்கிறது. அதனால் முன்பதிவு அவசியமாகிறது. இனி இந்தியாவின் பெரு நகரங்களுக்குப் பயணிக்கவிருக்கும் அனைவரும் முன்னமேயே பதிவு செய்து இவ்விடுதிகளின் வசதியை அனுபவிக்கலாம் (பேர் தான் ஜிஞ்சர்ன்னு காரமா இருக்கு. வசதிகள் சொகுசாவே இருக்கு)
*************************************************************************************************************
நண்பர் ஒருவர் வருத்தத்துடன் பகிர்ந்த ஒரு வீடியோவைக் கண்டு மிகுந்த சினமானது. டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன், கே.பி. சுந்தராம்பாள் என பாடல்களால் நம்முள் பக்தியை ஊற்றியவர்கள் பலர். இப்போதும் முருகன் பாடல்களில் டி.எம்.எஸ். குரலுக்கு இணையேது. இது போன்றே நம்மை ஆனந்தப்படுத்தும் பாடல்களைத் தருபவர் பெங்களூர் இரமணியம்மா. அவரது வேலவா வடிவேலவா எனும் பாடலை எந்த ஊரிலெனத் தெரியவில்லை, யாரென்றும் தெரியவில்லை போட்டு சாவடிச்சிருக்காங்க. ஓங்கி அறைய நினைத்து முடியாமல் போன இயலாமையும், ஒரு பக்திப் பாடலுக்கு அந்தப் பெண் அணிந்திருக்கும் அரைகுறை உடைகளும், உடலசைவுகளும் உள்ளுக்குள் ஏனோ அதீத வருத்தத்தைத் தருகின்றன. இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை நேரில் காண நேர்ந்தால் யோகியைத் தனியாக விட்டுப் போவதை எண்ணிக் கூட வருந்தாமல் அப்பெண்ணைப் போட்டுத் தள்ளிவிட்டு கம்பி எண்ணப் போயிருப்பேன். (என்ன கொடுமை சரவணன் இதுன்னு கூட சொல்ல முடியாதே. கொடுமையே சரவணனுக்குத் தானே :( )
*************************************************************************************************************
நம் குடும்பத்தின் முந்தைய தலைமுறையினரை நாம் அறிந்திருக்கவில்லை; மூதாதையர் பெயர் தெரியவில்லை எனக் குமுறுவதை நிறுத்திவிட்டு வரும் தலைமுறைக்கு நம் பெற்றோர் மற்றும் நம் பெயரை எப்படி எடுத்துச் செல்வது என யோசிக்கலாமே. மும்பையிலிருக்கும் என் அண்ணன் ஒருவர் குடும்ப வரைபடமொன்றை ஏற்படுத்தி அதில் ஒவ்வொருவரின் மெய்ல் ஐடியையும் சேர்த்திருந்தார். கடந்த ஒரு வருடத்தில் உறவுகளுக்குள் மிகுந்த மாற்றம். மொத்தக் குடும்பத்தில் எத்தனை பேரிருக்கின்றனர் எனக் கூடத் தெரியாமலிருந்தவர்கள் இப்போது ஒவ்வொருவரின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களுக்கு வாழ்த்துவது, அடிக்கடி மெயிலில் பேசிக் கொள்வதென ஒரு நல்ல பகிர்வும், மனமகிழ்வும் ஏற்பட்டிருக்கிறது. தவிர, குடும்பத்திலிருக்கும் வித்தியாச உறவுகளை அறியவும் முடிந்தது. எங்கள் குடும்பத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என அனைத்து மொழி சொந்தங்களும் உள்ளன. ஆம், என் அண்ணாக்கள் பலரும் காதல் திருமணம். ஒவ்வொருவரும் அவர்கள் சென்று குடியேறிய ஊர்களிலேயே காதலித்துத் திருமணம் செய்தவர்கள். இதில் எல்லாவற்றிற்கும் மேலாக என் அத்தை பையனொருவர் அமெரிக்காவிலேயே ஒரு கிறித்துவரை மணமுடித்து எங்கள் குடும்பத்தில் ஒரு கேத்தரினும் இருக்கிறார். இவையனைத்தையும் அறியவும், அனைவருடனும் தொடர்பிலிருக்கவும் உதவிய அண்ணனுக்கும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட Geni இணையதளத்திற்கும் நன்றி. நீங்களும் முயற்சிக்கலாமே. (நேர்ல எல்லாரும் ஒண்ணு சேர்ந்து பொங்கச் சோறு வெச்சு சாப்பிட்டக் காலமெல்லாம் போய் மெயிலில் ஹாய் எனத் தொடரும் மாற்றங்கள்)
*************************************************************************************************************
வைஷ்ணு தேவி பயணம் குறித்து எழுதியிருந்த பொழுது ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல மறந்து விட்டேன். அது என்னவென்றால் மலைக்கு ஏறும்முன் கீழிருந்து ஒரு சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும். அச்சீட்டில் எத்தனை பேர் செல்கிறோமென்ற எண்ணிக்கை மட்டுமிருக்கும். இச்சீட்டு இலவசமாகக் கட்ராவிலேயே கிடைக்கும். மட்டுமல்லாமல் பெரும்பாலான SBI ATMகளிலும் கிடைக்கிறது. இச்சீட்டின்றி மேலே செல்ல அனுமதி கிடையாது. இதன் மூலம் எந்த ஒரு அபாய நேரத்திலும் மலை மேல் எத்தனை மக்கள் உள்ளனர் என அறியலாம் என்பதே நோக்கம். நல்ல விஷயமாகப்பட்டது. (மலைக்குப் போன இடத்துல ஏதாச்சும் ஆச்சுன்னா மீடியாக்காரங்களுக்கு எண்ணிக்கை வேணும்ல)
*************************************************************************************************************
மதராசப்பட்டினத்தின் பாடலொன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் போன வாரம் தான் அமைந்தது. பாடல் காட்சி லகான் திரைப்படத்தை நினைவூட்டியது. படம் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. பலரின் விமர்சனங்கள் கொண்டு பார்க்கையில் லகான் மற்றும் டைட்டானிக்கின் தாக்குதல் படத்திலிருப்பதாகத் தெரிகிறது. அங்காடித் தெரு, களவாணி வரிசையில் பார்ப்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் மற்றொரு படம். (எப்படியோ அங்கீகாரப் பூர்வமான டிவிடி வந்து தான் பாக்கப் போற. ஏன் இந்த பில்டப் என துப்புபவர்கள் தூரப் போக ;) )
*************************************************************************************************************
வட இந்தியத் தொலைக்காட்சிகளின் ஒரு நல்ல விஷயம், வெளியாகி திரையரங்கில் ஓடாமல் திரையரங்கை விட்டு ஓடிடும் படங்கள் விரைவிலேயே சின்னத் திரையில் வந்துவிடும். அதாவது படம் வெளியாகி ஒரு மாதத்தில். அதுவே சூப்பர் ஹிட் படமெனில் ஆறு மாதங்களில். உதாரணத்திற்கு ப்ளூ, கைட்ஸ், 3 இடியட்ஸ், மை நேம் இஸ் கான், கார்த்திக் காலிங் கார்த்திக் எனத் தொடர்ந்து போன வாரம் ஒளிபரப்பப்பட்ட ராவண் வரை. ஆனால் நம்மூரில் ஓடாத படத்துக்கே ஓவர் பில்டப் குடுக்குறாங்களே அது ஏன்... (இந்த ஊர் கல்சரை அங்கே ஃபாலோ பண்ணினா இந்நேரம் சன் பிக்சர்ஸின் அவ்வளவு படங்களும் தொலைக்காட்சியில் வந்திருக்கும்)
*************************************************************************************************************
விகடனில் நாலு வரிக்கு நாம சொன்ன விஷயம் வந்ததுக்கே என்ன ஒரு ரெஸ்பான்ஸ். அது தான் விகடன் ரீச். ரொம்ப மகிழ்வாகவும், நெகிழ்வாகவுமிருந்தது. என் மனதிலிருந்து இதற்காக நான் நன்றி சொல்ல வேண்டுமெனில் அது பரிசல் கிருஷ்ணாவிற்குத் தான். ரொம்ப தேங்க்ஸ் கிருஷ்ணா. (விகடனில் சுஜாதாவையும், எஸ்.ரா.வையும் பார்த்து மிரண்டிருக்கிறேன். அதில் நானுமா.. இன்னும் நம்ப முடியவில்லை.)
*************************************************************************************************************
யோகி டைம்ஸ்
போன வாரம் ரொம்ப ஆசையாய் “ரசம் பண்ணேன்” என்றார் என்னவர். ரசம் சாதம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு என்றதும் ரசம் செய்தேன். நிறைய ரசம் விட்டு சாப்பிட்டவர் என் தட்டிலும் ரசத்தை ஊற்றிக் கொண்டேயிருந்தார். “ஜி, போரும் ரசம்” என்றேன். “ஓ, இந்த ரசம் பேரு போரும் ரசமா.. எப்படிப் பண்ண... ரொம்ப நல்லாருக்கு” என அப்பாவியாய்க் கேட்க மறுபடி “நான் போதும் ரசம்ன்னேன்” என்றேன். இவருக்காக நான் பேசும் தமிழை டீஃபால்ட்டாக வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
போன வார இறுதியில் தமிழ்ப்படம் பார்க்க வேண்டுமென சித்திரம் பேசுதடி டிவிடி வாங்கி வந்தோம். தமிழைப் படப் பெயர்களின் வழியாய்க் கற்கும் யோகியிடம் “சித்திரம் பேசுதடி. சொல்லுங்க. என்ன அர்த்தம்னு” என்றேன். ஒரு நிமிடம் யோசித்து விட்டு “சித்திட்ட பேசணுமா” என்றார். ஙே என முழித்துக் கொண்டு “இல்லை இல்லை” என்றேன். “ஓகே, எக்ஸாக்ட்டா அது இல்லைன்னா சம்திங் ரிலேட்டட் டு சித்திகிட்ட பேசறது”ன்னார். என்ன சொல்லவெனத் தெரியாமல் கொல்லென சிரித்து வைத்தேன். (சித்திரம் பேசுதடி ன்னு வெச்சு புரிஞ்சிருக்கார்)
41 comments:
yogi times :)))))
விகடனில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்! இன்னும் பல வெற்றிகளைப் பெறுவதற்கும்!
ஸ்ரீ....
யோகி டைம்ஸ் சூப்பர் :)
//போன வாரம் ஒளிபரப்பப்பட்ட ராவண் வரை//
This week Love,Sex aur Dhoka!
//ஒவ்வொருவரும் அவர்கள் சென்று குடியேறிய ஊர்களிலேயே காதலித்துத் திருமணம் செய்தவர்கள்//
ஊரு விட்டு ஊரு வந்து பப்பப்பா...
அயன், கண்டேன் காதலை'லாம் சன் பிக்சர்ஸுக்கு ஹிட்தான் விக்கி.....இந்த ரெண்டு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை என்னன்னு பார்த்தீங்களா ;)
\\யோகியைத் தனியாக விட்டுப் போவதை எண்ணிக் கூட வருந்தாமல்\\
செஞ்சு பாருங்களேன். அவர் ரொம்ப சந்தோஷமா இருப்பார்:)
விகடனுக்கு வாழ்த்துகள்.
// என்ன கொடுமை சரவணன் இதுன்னு கூட சொல்ல முடியாதே. கொடுமையே சரவணனுக்குத் தானே :( //
அடடா... என்ன ரைமிங்... :-)
விகடனில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள்.. :-)
// இந்த ஊர் கல்சரை அங்கே ஃபாலோ பண்ணினா இந்நேரம் சன் பிக்சர்ஸின் அவ்வளவு படங்களும் தொலைக்காட்சியில் வந்திருக்கும //
எங்கங்க... ஆறு மாசம் வரைக்கும் டாப் 10-ல இருந்தே தூக்க மாட்டேங்கறாங்க...
Ginger - உபயோகமான ஒரு தகவல். அப்ப்டியே முன்பதிவு செய்ய இணைய முகவரியோ, அல்லது தொலைபேசி நம்பரோ கொடுத்திருந்தால் உபயோகமா இருந்திருக்கும்.
இப்படிக்கு
செய்வன திருந்த செய்வோர் சங்கம்.
பக்திப் பாடல் - கூல் டவுன், கூல் டவுன்
இப்படிக்கு
டேக் இட் ஈஸி சங்கம்
Geni - சூப்பர்
இப்படிக்கு
நல்ல விஷயத்தை (எப்போதும்)பாராட்டுவோர் சங்கம்
//வைஷ்ணு தேவி பயணம் குறித்து எழுதியிருந்த பொழுது ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல மறந்து விட்டேன்.//
ஹூக்கும், அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே.
இப்படிக்கு
சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் கும்முவோர் சங்கம்
மதராச பட்டினம்/வடநாட்டு தொலைக்காட்சி
சினிமா, டி.வி --- லீவுல இருக்கீங்கன்னு தெரியுது.
இப்படிக்கு
ஓய்வு எடுப்பவர்களைப் பார்த்து வயிறு எரிவோர் சங்கம்.
//விகடன் - ரொம்ப மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருந்தது//
அசராதே, இன்னும் ஏற வேண்டிய சிகரங்கள் நிறைய உள்ளது.
இப்படிக்கு
அநியாயத்துக்கு அட்வைஸ் பண்ணுவோர் சங்கம்.
//“ஜி, போரும் ரசம்” என்றேன்.
“சித்திரம் பேசுதடி. சொல்லுங்க. என்ன அர்த்தம்னு”//
இப்படிக்கு
ஜுனூன் தமிழ் பேசும் மதராசிகளை கண்டால் நறநறன்னு பல்லை கடிப்போர் சங்கம்.
விகடன்ல வந்ததை ஸ்கேன் பண்ணி போடுங்க... இந்த ஊர்ல விகடன் வாங்க அலையணும்... :)
அவங்க பேரு : Susheela Raman
http://en.wikipedia.org/wiki/Susheela_Raman
you might like this one
http://www.youtube.com/watch?v=L331Kih7yt0&feature=related
உங்க friends உங்களுக்கு நல்லத அனுப்ப சொல்லுங்க ..
போன பின்னுட்டத்தில் விடுபட்டது
சித்திரம் = art or movie
பேசுதடி = speaks
raja ravivarma's art speaks .. ( you might try like this )
art speaks (or ) it speaks itself , here movie speaks itself
thx. .
rang rasiya பாத்தாச்சா
பல விஷயங்களை சொல்லி இருக்கீங்க சித்திரம் பேசுதடி மூலமா!
விகடனில் உங்கள் கருத்து வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.
டெயில்பீஸ் நக்கல் நல்லா இருக்கு ரைட்டிங் ஸ்டைலும்
//விகடனில் நாலு வரிக்கு நாம சொன்ன விஷயம் வந்ததுக்கே என்ன ஒரு ரெஸ்பான்ஸ். அது தான் விகடன் ரீச். ரொம்ப மகிழ்வாகவும், நெகிழ்வாகவுமிருந்தது. என் மனதிலிருந்து இதற்காக நான் நன்றி சொல்ல வேண்டுமெனில்
அது பரிசல் கிருஷ்ணாவிற்குத் தான். ரொம்ப தேங்க்ஸ் கிருஷ்ணா. //
வாழ்த்துகள் :))
யோகி டைம்ஸ் நைஸ் ரொமான்ஸ் மிக்ஸ்
விகடன் விக்னேஷ்வரி நீங்கதானா \
வாழ்த்துக்கள்.
சித்திரம் பேசுதடியில் பல ரசங்களும் நிறைந்திருக்கின்றன.
வாழ்த்துக்கள்
நேர்ல எல்லாரும் ஒண்ணு சேர்ந்து பொங்கச் சோறு வெச்சு சாப்பிட்டக் காலமெல்லாம் போய் மெயிலில் ஹாய் எனத் தொடரும் மாற்றங்கள்
எல்லாம் காலமாற்றம் தான்
விகடனில் சுஜாதாவையும், எஸ்.ரா.வையும் பார்த்து மிரண்டிருக்கிறேன். அதில் நானுமா.. இன்னும் நம்ப முடியவில்லை
வாழ்த்துக்கள் விக்கி
குடும்பவரைபட விபரம் நல்லா இருந்துச்சி...
vikki.. இண்ட்ரஸ்டிங்கான தொகுப்பு.. இந்தி படங்கள் போல தமிழ் படங்களுக்கு பே- பர்-வியூவில் மார்கெட் இல்லை.. அதிலும் நம் சவுத் இண்டியன்ஸ் ரொம்பவே கன்சர்வேடிவ்.. ஒரு விஷயம் புதுசா வந்தா அதை ஏத்துக்கவே மாட்டாங்க..
இதை பத்தி இன்னும் தெரிஞ்சிக்க.. படியுங்கள் சினிமா வியாபாரம்.
அப்புறம் சித்திட்ட பேசிட்டீங்களா?
Congrats for coming in Vikatan. Ginger hotel??Hmm..I too can consider???
விகடனில் வந்ததற்கு வாழ்த்துகள்!
நல்ல Variety தொகுப்பு...
விகடன் பார்த்தேன் விக்னேஷ்வரி.
வாழ்த்துக்கள்.
ரசித்து வாசிக்கும்படியாக ஒரு பதிவு. அருமை.
விகடனில் வந்ததற்கு வாழ்த்துகள்.
தினமும் ஒரு பதிவுன்னு சொல்லிட்டு, சும்மா கலக்கல இருக்கு விக்கி... மூச்சு வாங்குது படிச்சு முடிக்கிறப்ப :)
குடும்ப வரைபடம் மிக நன்றாக இருகிறது, நான் இதுவரை ppt- தான் வைத்திருந்தேன். நன்றி
குடும்ப வரைபடம் மிக நன்றாக இருகிறது, நான் இதுவரை ppt- தான் வைத்திருந்தேன். நன்றி
வழக்கமா படிக்கும் ஆ மு கி, சுரேஷ் கண்ணன், குசும்பு அண்ணன்கள் வரிசையில் உங்கள் blog ம் சேர்ந்துவிட்டது அக்கா.
வாழ்த்துக்கள்.
yogi times, geni மற்றும் எல்லாமே அருமை
தமிழ்ப்படம் பார்க்கணும்னு சொல்லிட்டு சித்திரம் பேசுதடி ஏன் வாங்கிட்டு வந்தீங்க?
ஜின்ஜெரும் ஜெனியும் புதிய தகவல்கள். நன்றி
//
யோகியைத் தனியாக விட்டுப் போவதை எண்ணிக் கூட வருந்தாமல் அப்பெண்ணைப் போட்டுத் தள்ளிவிட்டு கம்பி எண்ணப் போயிருப்பேன்
//
En intha kolai veri???????
Geni பகிர்வுக்கு நன்றி
யோகி டைம்ஸ் தனி பதிவா வந்தா இன்னும் நல்லா இருக்கும்!!!
குடும்ப வரைபடம் வித்தியாசமான எண்ணம். வாழ்த்துகள். நன்றி.
வாங்க LK
நன்றி ஸ்ரீ.
நன்றி விமல்.
ஓ, எந்த சேனல்ல கிருஷ்ணா..
ஊருவிட்டு ஊரு வந்ததுக்கு அர்த்தம் வேண்டாமா ரகு ;)
ஓ, அதுனால தான் சுறா ஊத்திக்கிச்சா..
வித்யா, ஏன் இந்தக் கொலைவெறி..
நன்றி அம்மணி.
நன்றி ஜெய். அய்யோ டாப் டென் நிகழ்ச்சி கொடுமை தான் போங்க.
ஜிஞ்சர்னு கூகிள்ல தேசுங்க பெஞ்சு. ஐயா, நீங்க எத்தினி சங்கத்துல இருக்கீங்கோ... கண்ணக் கட்டுது சாமி.
லின்க் மெயிலறேன் ஜெய்.
எவ்ளோ வேணும்னாலும் நல்லது பண்ணட்டும். ஆனா தப்பு தப்புதானே சித்.
நல்ல விளக்கம் சித். இதை அப்படியே அவர்கிட்ட காமிச்சிடறேன்.
நன்றி வெங்கட்.
நன்றி நேசமித்ரன்.
பேரே விகடன் விக்னேஷ்வரியாகிடுச்சா.. :|
நன்றி ஆதவா.
ஆமா சக்தி. நன்றிங்க.
நன்றி ஜாக்கி சேகர்.
நன்றி கேபிள். படிச்சிடுவோம் எழுத்தாளரே. :)
நன்றி மோகன். ஆமாங்க. ஆன்லைன்ல செக் பண்ணிப் பாருங்க.
நன்றி ரவிச்சந்திரன்.
நன்றி அமைதிச்சாரல். உங்களுக்கும் தேவதைக்கு வாழ்த்துகள்.
நன்றி சரவணக் குமார்.
நன்றி வினோ. :)
நல்லது கிருஷ்ணா. இனி நீங்களும் கெனி அக்கவுண்ட் ஓபன் பண்ண வேண்டியது தான்.
நன்றி KKPSK.
கார்க்கி, நீங்க இப்படி கேள்வி கேக்கணும்னு தான்.
வாங்க கலாநேசன்.
நீங்க அந்த லின்க்ல போய் வீடியோ பார்த்தீங்களா யோகேஷ்...
வாங்க பாலமுருகன். தனிப் பதிவாப் போட்டா போரடிச்சிடும்ங்க.
வாங்க சந்தோஷி.
@ginger. சாப்பாடு மெனு ரொம்ப போர்.
4 நாட்களுக்கு மேலே சாப்பிட முடியாது. coffee maker, kutti fridge,water bottle in every room also good features.
அப்ப நான் அனுப்பின லிங்க இருந்த பாட்ட கேக்கலியா .. அவ்வ்வ்வவ் ..., எனக்கு அழுகையா வருது .. :( ,
உங்களுக்குகாக தேடி அனுப்பினேன் ..அந்த பாட்டும் அவங்க பாடினதுதான் ...
Susheela Raman - Ye Meera Divanapan Hai!
http://www.youtube.com/watch?v=L331Kih7yt0&feature=ரேலடேத்
டைம் இருந்தா கேட்டு பாருங்க ..
சித்திரம் பேசுதடி மேட்டர் சூப்பர், பாவம் சரவணன்..
நான் நியூசில இருக்கும்போது சித்திரம் பேசுதடி படம் பாத்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சுது. நீங்க பாத்துட்டு ஒரு விமர்சனம் போடுங்க விக்கி.
Vanakkam Viki, I have been reading your blog for some time. Though I do not agree with all of your thoughts, i often like to read your blog in the week ends. May be, i have time only in the week end to read. i have to say that your comment on the Velava song by Kamala and Shshela is irrational. I shall drop a mail to you in this regard.
உங்களது வலைப்பூ வில் அதிகம் கருத்துக்கள் காணப்படுகின்றன. எனக்கு குழப்பம் தரும் சில சொற்றொடர்களும் ஆங்காங்கே இருப்பதால் திணறுகின்றேன்.
மறுபடியும் முயற்சிக்கின்றேன்
நன்றி
Post a Comment