அஜ்மல் கசாப் - கடந்த 10 நாட்களாக செய்தித் தாள்களின் தலைப்புச் செய்தியில் இடம் பெற்றிருக்கும் பெயர்.
இவர் யார், இவர் செய்த குற்றமென்ன என்பது எந்தவொரு இந்தியருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நவம்பர் 26, 2008 இல் இந்தியாவையே உலுக்கிப் போட்ட தீவிரவாத சதியில் மும்பையில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்தனர். 200 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அந்த நாள் மும்பையின்/இந்தியாவின் வரலாற்றில் பெரும் சோக முத்திரையைக் குத்திச் சென்றுள்ளது.
போன வாரம் இக்குற்றவாளியின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் படி மனு தாக்கல் செய்துள்ளார் அவர் தரப்பு வக்கீல். இவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாதென்றும், அவர் வயதைக் கருத்தில் கொண்டும், மனித நேயத்துடனும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அஜ்மல் கசாப் தனது முதல் நீதிமன்ற ஆஜரில் சொன்னதை எத்தனை பேர் அறிவரோ. அவர் சொன்னது: “நான் நடந்தவற்றிற்கு மிக வருந்துகிறேன். என்னால் இன்னும் பலரைக் கொன்றிருக்க முடியும். ஆனால் அதற்குள் போலீஸ் வந்து எங்களுக்குத் தொந்தரவு செய்து விட்டனர். இன்னும் என் மனதுள் இருக்கும் நீங்கா வருத்தம் என்னால் இன்னும் பல இந்தியர்களைக் கொல்ல முடியாமல் போனது தான்”. இதற்கு மேலும் ஒரு இந்திய வக்கீல் பணத்திற்காக அவரைக் காக்கத் துடிக்கிறார் என்றால் தலையில் அடித்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இப்பிரச்சனையைப் பற்றி நண்பரொருவரிடம் சேட்டிக் கொண்டிருக்கையில் சொன்னார், “சண்டியர்ல கமலஹாசன் மட்டும் தூக்குத் தண்டனை கூடாதுன்னு சொன்னா ரசிச்சுப் பார்க்குறீங்க. நிஜத்துல ஒரு உயிரின் மதிப்பு உங்களுக்குத் தெரியவில்லையே!” இது அடுத்த அவலம். இந்தியப் படங்கள் பார்த்து நம்ம மக்கள் ரொம்பக் கெட்டுப் போயிருக்காங்க. இப்படிக் கமலஹாசன் சொன்ன பேச்செல்லாம் கேக்கணும்னா அடுத்ததா ஒரு லேப்டாப்பை எடுத்துக்கிட்டு ஒரு மொட்டை மாடில உக்காந்து தீவிரவாதிகளை அழிக்க சதி பண்ணனுமா.. என்ன இது சின்னப் புள்ளத் தனமா...
நிச்சயம் ஒருவர் உயிரைக் கொல்லும் உரிமை மற்றவருக்கில்லை என்பதை நான் ஏற்கிறேன். அதே நேரத்தில் இந்திய நாட்டில் வாழும் நம்மைக் காக்கும் உரிமை நம் அரசுக்கு உண்டென்பதால் தூக்கு என்பதே சரியான தீர்ப்பாக அமையும். படம் எடுத்து உங்களைக் கொல்ல வரும் பாம்பிற்கு முன் மண்டியிட்டு “வேண்டாம் பாம்பே. என்னை விட்டுடு. நான் உன்னை அடிச்சா உனக்கு வலிக்கும். அதுனால நீயும் இங்கேயிருந்து போயிடு” என சமரசம் பேசிக் கொண்டிருப்பீர்களா? இல்லை தானே. அதே போல இவரும் இல்லை இதுவும் ஒரு விஷக் கிருமி. இதை நம் நாட்டில் இத்தனை நாட்கள் வைத்திருந்ததே பாவத்திற்குரிய செயல். சீக்கிரமே தூக்கிலிடுவதே முறை.
இவரை சிறையில் வைக்க இந்திய அரசு நாளொன்றுக்கு லட்சக் கணக்கில் செலவிட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவருக்காக செலவழிக்கப்பட்ட காவல் துறையினர், பொருட்செலவு, இவருக்கான பந்தோபஸ்துப் பணிகள் என நம் மக்களின் வரிப்பணம் அல்லோலகல்லோலப்பட்டுள்ளது. இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கும் படி பரிந்துரை செய்யும் நல்லவருக்கு ஒரு விஷயம் “நாளை நீங்களோ உங்கள் உறவினரோ பயணப்படும் விமானத்தை ஹை-ஜாக் செய்து இந்தத் தியாகியை விடுதலை செய்யச் சொல்லி வரும் மிரட்டலுக்குத் தயார் என்றால் இவரைக் காப்பாற்றுங்கள்”. ஏனெனில் இது தானே எப்போதும் இவர்களால் நமக்குக் கிடைக்கும் நன்மை. நடு வான் சாகசத்தில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு மரணப் போராட்டத்திற்குத் தயாராவோம் காமன் மென்.
அழகான அரண்மனையில் நால்வரைக் கொன்ற பாம்பைக் கண்டால் சமாதானம் பேச மாட்டோம். அடித்துக் கொன்று விடுவோம். ஆனால் அது மனிதன் எனும் போது மட்டும் இத்தனை அவலங்கள். இதெல்லாம் அரேபிய நாடுகளில் நடக்குமா... நம் நாட்டில் மட்டும் தான். ஏனெனில் நம் தாய்த்திரு நாடு இந்தியா.
40 comments:
ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க விக்கி...இந்த மாதிரி ஆளுங்களை சித்ரவதை செய்து சாகடிச்சா கூட தப்பில்ல!
அமெரிக்கா, அண்டார்டிகாலாம் விடுங்க...முதல்ல அரேபிய நாடுகளிடமிருந்து நாம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு...
மேலும் இந்த விஷயத்தில் மீடியா கீழ்த்தரமாக நடந்துகொண்டதை பற்றியும் விரிவாக சொல்லியிருக்கலாம். அவன் சிக்கன் பிரியாணி கேட்டான் என்ற, நாட்டுக்கு முக்கியமான விஷயத்தையெல்லாம் சொல்லி, தங்கள் கடமையை ஆத்து ஆத்துன்னு ஆற்றினர்.
இதில் ரொம்பவும் எரிச்சல் மூட்டியவர் ராஜ்தீப் சர்தேசாய்...
evanai thukil pottal than sari varum illai entral sattam methu payam illamal poi vidum
அடடா
நம் தாய்த்திருநாடு இந்தியா!
வாழ்க! (வேறென்ன சொல்ல?)
நச்ச்!!!
//நம் நாட்டில் மட்டும் தான். ஏனெனில் நம் தாய்த்திரு நாடு இந்தியா.//....இதிலே விடை இருக்குபோது நாம் என்னதான் சொல்வது, செய்வது?
இதுல நான் உங்க கச்சி...
தவறுக்கு தகுந்த தண்டனை ... அதற்கு தான் நீதிஎன்று போரு. அன்று செத்தவங்க வரிசையில் நீதியையும் சேர்க்க கூடாது.
சில சைக்கோக்களுக்கு மரண தண்டனை அவசியமே. இவ்ளோ நாள் வைச்சு என்ன விசாரிக்கிறாங்களாம்.
மீடியா பத்தி பேசாதீங்க. டென்ஷன் தான் மிச்சம். அதுவும் தமிழ் பத்திரிகைகளைப் பத்தி சொல்லவே வேண்டாம். ஒரு வாட்டி ஒரு புத்தகத்தின் அட்டையில் நடிகர் அஜித் "எந்த நாயும் என்னைப்பத்தி பேச முடியாது" அப்படீன்ற மாதிரி எழுதி இருந்தாங்க. உள்ள இருந்த அவரோட பேட்டியை 10 வாட்டி படிச்சிருப்பேன். எவனுக்கும் உரிமை இல்லை என்று ஒருமையில் கூட அவர் சொல்லவில்லை.
எந்த சஞ்சிகைகளை எடுத்தாலும், கமலோட ஃபேவரிட் கலர் என்ன? த்ரிஷாவோட ஃபேவரிட் உணவென்ன என்ற அதி முக்கியமான விஷயங்கள் தான் இருக்கு. Sigh
இந்தியா ஜனநாயக நாடாம் விக்கி அதனால எதிரியையும் மன்னிக்கணுமாம். துரோகிகளை காப்பத்தணுமாம் :(. தூக்கு தண்டனை குடுத்து இருக்காங்க. ஆனா அவனை இவங்க யோசிச்சு தூக்குல போடறதுக்கு முன்னாடி அவனுக்கு இயல்பான மரணமே வந்துரும். அது வரைக்கும் அவனை வசதியா செளகரியமா வெச்சு பத்திரமா பாத்துக்க வேண்டிய கடமை வேற நமக்கு இருக்கு
சரியாக சொல்லியுள்ளீர்கள் விக்னேஷ்வரி...
\\இன்னும் என் மனதுள் இருக்கும் நீங்கா வருத்தம் என்னால் இன்னும் பல இந்தியர்களைக் கொல்ல முடியாமல் போனது தான்\\
சொன்ன அன்னிக்கே இவரையெல்லாம் தூக்குல போட்டிருக்கனும்.....இப்ப இவளோ செலவு பண்ணி.....
\\இதற்கு மேலும் ஒரு இந்திய வக்கீல் பணத்திற்காக அவரைக் காக்கத் துடிக்கிறார் என்றால் தலையில் அடித்துக் கொள்ள வேண்டியுள்ளது.\\
தலையில் அடித்து கொல்ல வேண்டும்....
\\இதெல்லாம் அரேபிய நாடுகளில் நடக்குமா... நம் நாட்டில் மட்டும் தான். ஏனெனில் நம் தாய்த்திரு நாடு இந்தியா.\\
Jai ho!!!!!!!!
தூக்கு தண்டனை கூடாது என்று சொல்லும் மனித உரிமைப் போராளிகளின் கருத்தை நானும் ஆதரிக்கின்றேன்.
ஆனால் மனித உரிமை மனிதனுக்குத்தானே?? இந்த மிருகத்துக்கு எதுக்கு???
:((((
தவறுக்களுக்கேற்ற தண்டனை அவசியமே!
//போன வாரம் இக்குற்றவாளியின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் படி மனு தாக்கல் செய்துள்ளார் அவர் தரப்பு வக்கீல்.//
முதல்ல அந்த வக்கீல தூக்குல போடணும்.....
//போன வாரம் இக்குற்றவாளியின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் படி மனு தாக்கல் செய்துள்ளார் அவர் தரப்பு வக்கீல்.//
முதல்ல அந்த வக்கீல தூக்குல போடணும்.....
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... எத்துனை ராணுவ வீரர்களை பாகிஸ்தான் சிறையில் சித்திரவதை செய்து கொன்று அனுப்பி இருப்பார்கள்... அவர்களைப்பற்றி எல்லாம் பேசாத அரசாங்கமா, இந்த உயிர்கள் போனதைப்பற்றி கவலைப்படப் போகின்றது... அவர்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கவலை... அவர்களுக்கு நம்மைப்பற்றி எல்லாம் கவலைப்பட நேரம் இல்லை... இது எப்போது மாறுகிறதோ அப்போது தான் நாம் கவலைப்படாமல் இருக்க முடியும்...
எந்த பாம்பும் நம்மைக் கொல்ல வருவதில்லை என்பதை பணிவுடன் தெரித்துக் கொள்கிறேன்.. தன்னைத் தற்காத்துக் கொள்ளவே விஷத்தை பயன்படுத்தும்.. இவனை பாம்புடன் கம்பேர் செய்வது சரியல்ல என நினைக்கிறேன்..
அப்துல்லா மாமன் சொல்வது போல் தான் நானும்.. தூக்கு தண்டனை தேவை இல்லை என்பது, மனதில் கொஞ்சமாவது மனிதாபிமானம் இருப்பவருக்குத் தான்.. இவனுக்கு அதெல்லாம் பார்க்கக் கூடாது..
இவனுக்காக வாதாடிய வக்கிலை குறை சொல்வது சரி அல்ல. அவரால் தான் இவ்வளவு விரைவில் வழக்கு முடிந்தது. குற்றவாளிக்கு யாரும் ஆஜராகவில்லை என்றால் வழக்கு நடைபெறாது..இவனை விடுவிக்க வேண்டிய அவசியம் கூட வந்திருக்கலாம்.. நீதி மன்றமே ஒரு வக்கிலை நியமிக்க வேண்டிய சூழல் வந்தது. அவர் விலகிய பின் தான் வேறு வக்கில் வந்தார்.. குற்றத்தையும் நிரூபிக்கும் வாய்ப்புக் கிடைத்தது..
ஏன் எதற்கெடுத்தாலும் இந்தியாவை குறை சொல்கிறார்கள் எனப் புரியவில்லை.. சட்ட நடைமுறைகளைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.. சட்டத்தை பின்பற்றலைனாலும் திட்றிங்க ( ஞாயம் தான்).. பின்பற்றினாலும் திட்றிங்க.. பொல்லாத உலமகய்யா..
/கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவருக்காக செலவழிக்கப்பட்ட காவல் துறையினர், பொருட்செலவு, இவருக்கான பந்தோபஸ்துப் பணிகள் என நம் மக்களின் வரிப்பணம் அல்லோலகல்லோலப்பட்டுள்ளது/
அந்தக் கொடூரமான சம்பவத்தில் காயப்பட்டவர்கள் சிகிச்சைக்கு வழியின்றி அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.:(
கசாப் சார்ந்த மதத்தில் குற்றங்களுக்கு என்ன தண்டனை தருவார்களோ .. அந்த தண்டனையை கொடுக்கலாம்.,
அரசியல் குற்றங்கள் புரிவோரை எப்படி தண்டிக்க போறார்கள் என்றுதான் தெரியவில்லை., கேப்டன் பிரபாகரன் படத்தில் கிளைமாக்ஸ் வசனங்கள்தான் நினைவுக்கு வருகிறது., "காட்டுக்குள் ஒளிந்து வாழும் வீரப்பனுக்கு எதுக்கு சார் பணம் தேவை" என்று ஆரம்பிக்குமே .... அதனை கொஞ்சம் எண்ணி பார்த்தால் நல்லது....)
இன்னும் நிறைய விவாதிக்கவேண்டிய விஷயம் இது. நீங்க உங்கள் கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.
பாவத்தின் சம்பளம் மரணம். கரக்டா சொல்லீருக்கீங்க.
//நம் நாட்டில் மட்டும் தான். ஏனெனில் நம் தாய்த்திரு நாடு இந்தியா.//....இதிலே விடை இருக்குபோது நாம் என்னதான் சொல்வது, செய்வது? //
வழிமொழிகிறேன்...
சரியான கருத்து....
இவ்வளவு நாள் தாமதம்
செய்தது
தவறு
பார்த்த உடனே
என்குண்டேர்ல போட்டு இருக்க வேணும்...
@@@ தாரணி பிரியா--//இந்தியா ஜனநாயக நாடாம் விக்கி அதனால எதிரியையும் மன்னிக்கணுமாம். துரோகிகளை காப்பத்தணுமாம் :(. தூக்கு தண்டனை குடுத்து இருக்காங்க. ஆனா அவனை இவங்க யோசிச்சு தூக்குல போடறதுக்கு முன்னாடி அவனுக்கு இயல்பான மரணமே வந்துரும். அது வரைக்கும் அவனை வசதியா செளகரியமா வெச்சு பத்திரமா பாத்துக்க வேண்டிய கடமை வேற நமக்கு இருக்கு //
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்
எந்த ஒரு குற்றவாளிக்கும் வக்கீல் வாதாடித்தான் ஆகவேண்டும்.. அது ஒன்றும் செய்யமுடியாது . ஆனால் அவனுக்காக செலவும்.. நாளை அவனை வைத்து ஹைஜாக்கும் நடைபெறாமல் இருக்க .. வேறு வழியே இல்லை..
சஞ்சய் காந்தி இனி நீ சாதாரண சஞ்சய்காந்தி இல்லை மகாத்மா காந்தி!
புள்ள என்ன கோவமா பதிவு போட்டிருக்கு கசாப்கடைக்கு அவனை அனுப்பனும்னு அதுக்கு சப்போர்ட் பண்ணாம ...............
பை தி பை விக்கி! நாம ராணுவ ஆட்சியிலயா இருக்கோம். அவன் உடனே செத்தா ஒன்னுமே இருக்காது. தூக்கு உறுதியாகிடுச்சு. தினம் தினம் அதை நினைத்து சாவானே அதான் பெரிய தண்டனை!!!கூல் கூல்..
//படம் எடுத்து உங்களைக் கொல்ல வரும் பாம்பிற்கு முன் மண்டியிட்டு “வேண்டாம் பாம்பே. என்னை விட்டுடு. நான் உன்னை அடிச்சா உனக்கு வலிக்கும். அதுனால நீயும் இங்கேயிருந்து போயிடு” என சமரசம் பேசிக் கொண்டிருப்பீர்களா?//
ARUMAIYANA KELVI
Today is the first i visit your blog its nice
m......
vethanaikkuriyathuthaan:(
Jai Hind! mmmmm.....
தூக்கு தண்டனை விதித்தது சரியா தவறா, தூக்கு தண்டனை விதிதாயிற்று இனி என்ன ? தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாமா என்பன போன்ற விவாதங்கள் தேவையற்றவை. முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். கசாப்பை சிறைப்படுத்தி , அதிக செலவில் காவல் காத்து , வழக்குகள் நடத்தியது அவன் குற்றத்தை நிரூபிப்பதற்காக மட்டுமல்ல. இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுடைய பங்கு இன்னது என்று உலகுக்கு எடுத்துக்காட்டவே. அது நிரூபிக்கப்பட்டாலும் பாகிஸ்தான் தனது நிலையில் நின்று மாறவில்லை . அவன் கூட்டாளிகளையும் , இந்த கொடூர செயலை திட்டமிட்டு வழிநடதியவர்களையும் இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது. நாற்காலியை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கும் நம் அரசியல் தலிவர்கலும் , எதைப் போட்டால் பணம் பார்க்கலாம் என்றிருக்கிற மீடியாவும் சிக்கலை மேலும் சிக்கலாக்குகிரார்கள். அரபு நாடுகளைப் பார்த்து நாம் ஒன்றும் கற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. தூக்கிலிடுவதை விரைவாகினால் அதுவே போதும். சட்டத்தை குறைகூறுவதை விடுத்தது அதனை இயங்க விடாமல் தடுக்கும் அரசியல் பிசாசுகளை இனம்கண்டு வேப்பிலை அடித்தால் போதும்.
தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்
//ஆனால் மனித உரிமை மனிதனுக்குத்தானே?? இந்த மிருகத்துக்கு எதுக்கு??/
அண்ணே அபோ ப்ளு கிராஸ்..
மொக்கை கமெண்ட்டுக்கு மன்னிக்க... தூக்குல போட வேண்டுமென்பதே என் கருத்தும் :)
தூக்குல போடனும். ஆனா கருணை மனு கொடுத்து ஆயுள் தண்டனை ஆக்கிருவாங்க. கஸாப் வெறும் அம்பு மட்டுமே. தூக்குல போட்டுட்டாலும் பெருசா பயம் வந்து மத்தவங்க தப்பு செய்ய பயப்படுவாங்கன்னும் தோணல. எதுவும் பண்ணாம இருக்கறதுக்கு எதாவது பண்ணலாம். :-))
நம் நாடு இந்தியா. ஆகவே நம்மை காக்கும் அரசுக்கு தெரியும் வலியும் வேதனையும் நிச்சயம் தூக்குத்தண்டனை தான். இல்லையெனில் கல்லால் அடித்துகொல்வோம் கோர்டு விட்டு வெளியேறும் போது.
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
சட்டம் பாகுபாடு பாக்காமல் இருக்கும்வரை நன்மையே.
பாபர் மசூதிப் பிரச்சினையில் திரி கிள்ளிவிட்டு, கசாப் கூட்டத்தையும்விட அதிக கொலைகள் ஏற்படக்காரணமானவர்களுக்கும் சட்டம் சரியான தீர்ப்பு வழங்கியிருக்குமானால் இன்னும் நன்றாக இருக்கும்.
கசாப் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டியவனே... அத்தோடு...!!!
Post a Comment