கேலியான, மாறுதலான, வாழ்வின் அசடுகள் நிறைந்த, தைரியமான, தயக்கமான, கேனைத்தனமான இந்த பதின்ம வயது அனைவர் வாழ்விலும் அழியாக் கோலமிட்டிருக்கிறது. என் பதின்ம வயது டைரிக் குறிப்புகளில் நிரம்பி வழிந்தவை நட்புகளும், நட்புகளின் காதல்களுமே. தவிர சில தேவதாஸ்களை உருவாக்கிய சாகசமும் உண்டு. ;)
பதின்ம வயதில் எனக்கு வந்த முதல் காதல் கடிதம் நான் ஏழாம் வகுப்பில் இருந்த போது. ஆனால் அது தவறுதலாக அம்மா கையில் போய்விட அம்மாவும், அப்பாவும் நன்றாகவே கவ்னித்தார்கள் அவனை. இது எனக்குத் தெரிந்தது பதின்ம வயதின் இறுதியில். அறிந்தபோது ரொம்பவே காமெடியாக இருந்தது. அதற்குப் பின் கொடுத்தவனைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றி கேட்காமலேயே விட்டு விட்டேன் “எங்கம்மாவுக்கு லெட்டர் கொடுத்தா எங்கப்பா சும்மா விடுவாரா?”
என் குழந்தைப் பிராயத்திலிருந்தே என் நல்ல நண்பன் என் மாமன் மகன். என்னை விட மூன்று வயது பெரியவன். அவனுக்கும் எனக்கும் இருந்த சினேகம் அழகானது. பதின்ம வயதில் என் எல்லா சேட்டைகளிலும், தவறுகளிலுமிருந்து என்னை அவன் தான் காத்தான். சேட்டைன்னா உங்கூட்டு சேட்டை இல்ல, என்கூட்டு சேட்டை இல்ல. உலக சேட்டை. அப்படித் தான் எங்கூட்ல சொல்லுவாங்க. எங்கம்மா, அப்பா ரெண்டு பேருமே எப்போவுமே தங்களுக்கு ஆண்மகனில்லை என வருந்தியதில்லை. நான் வருத்தப்பட விட்டதில்லை. :)
ஒரு முறை பள்ளி வந்து கொண்டிருந்த தோழியை மறித்து என் மீதான காதலை ஒருவன் சொல்லி அவளைத் தூது போக சொல்ல அவள் பயந்து போய் அழுது விட்டாள். மாலை வீட்டிற்குப் போய் அம்மாவை உடனழைத்துக் கொண்டு அந்தப் பையன்கள் இருக்கும் இடத்திற்கு சென்றவள் அவன் என்னிடம் அதிகம் பேசவும் அறைந்து விட்டேன். அம்மா ரொம்பவே பயந்து விட்டாள். அவன் கன்னம் வீங்கி, காது கேட்காமல் போய், என் அம்மா அவனை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவ செலவுக்குப் பணம் கொடுத்து வந்தார். இதனால் மற்ற பசங்களுக்குப் பயமிருந்து அந்த நேரத்தில் ஒதுங்கி விட்டாலும், அதற்குப் பின் எங்கள் தெருவில் இரவு நேரங்களில் வந்து கத்துவது, மொட்டை மாடியில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது கேலி செய்வது எனத் தொடர்ந்தனர். அப்போவும் அவர்களுடன் நான் வம்பிழுக்கப் போக, பயந்த அம்மா என் கஸினை அழைத்து விபரம் சொல்ல அவன் தான் தன் நண்பர்களுடன் சென்று பிரச்சனையைத் தீர்த்து வந்தான். இப்போது என் கஸின் எங்கு, எப்படி இருக்கிறான் எனத் தெரியாது. ஒரு குடும்ப மனஸ்தாபத்தில் இரு வீட்டுக்கும் பேச்சு நின்று போனது. என் பதின்ம வயதின் மிகப் பெரிய இழப்பு அவன் நட்பு.
அடுத்ததாய் காதல் ரோமியோக்கள். காலை 6 மணிக்கு ஃபிஸிக்ஸ் டியூசன் ஆரம்பித்து இரவு 9 மணிக்கு மேத்ஸ் டியூசன் முடித்து வரும் வரை ஒவ்வொரு முறை நான் கடக்கும் போதும் காத்திருந்து எழுந்து தன் இருப்பைக், காத்திருப்பைக் காட்டிக் காதலித்த ஒருவன், மேத்ஸ் டியூசனில் நேரே சொல்லத் துணிவில்லாமல் நண்பர்கள் மூலம் சொல்லிக் காதலித்தவன், ஒரு முறை வீட்டிற்கு வந்து என் அம்மாவிடமே சொல்லி அனுமதி கேட்டவன், பஸ்ஸில் பாட்டுப் பாடி காதல் சொன்னவன், சைக்கிளில் உடன் வந்து விருப்பம் சொன்னவன், தெருவில் கடக்கும் போது பாட்டுப் போட்டுக் காதல் தெரிவித்தவன், ஒரு பெரிய அசைன்மெண்ட் அளவிற்குக் காதல் கடிதம் தீட்டிக் கையில் தந்தவன், ஃபோனில் அழைத்துக் காதல் சொன்னவன், கல்லூரியில் சிட்டை எழுதித் தூக்கியெறிந்தவன், கண்ணைப் பார்த்து காதல் சொன்னவன், மழையில் நனைந்து கொண்டே சொன்னவன் என ஒரு பெரிய லிஸ்டே உள்ளது. ஆனால் இவர்களிடம் என்னால் காதலையன்றி காமெடியையே பார்க்க முடிந்தது. ஒருவழியாக எல்லாரும் தப்பித்து விட்டார்கள். யோகி மாட்டிக் கொண்டார். சரி, அந்த சோகக் கதை இப்போதெதற்கு...
என் பதின்மத்தில் கிடைத்த நட்புகளே என் நெஞ்சம் நிறைந்து, இப்போதும் தொடர்பவை. ஏப்ரல் மாதத்தில் படம் பார்த்து விட்டுத் தோழியைத் தேடி சென்று அழுத அனுபவமெல்லாம் உண்டு. :)
கேனைத் தனமாய் கவிதை முயற்சித்த பள்ளிக் கடைசி நாள் பிரிவு டைரிகள், கவிதைகளாய் நிரப்பித் தந்த தோழிகளின் காதல் கடிதங்கள், அழகாய்க் கடக்கும் பசங்களுக்கெல்லாம் கூட்டாய்ப் போட்ட மதிப்பெண்கள், க்ரூப் ஸ்டடியில் அடித்த லூட்டிகள், ஒன்றிரெண்டாய் அமைந்து விட்ட பள்ளி நாள் திரைப்படங்கள், பால்கோவா வாசமும், தீப்பெட்டி வாசமும், புழுதி வாசமும், நூலுக்கேற்றப்படும் சாய வாசனையும், மஞ்சள், குங்கும வாசனையும் கலந்து சுவாசிக்கக் கொடுத்தத் தெருக்கள், தோழிகளின் காதலுக்கு ஒப்புவித்த அறிவுரைகள், பதுங்கும் நேரங்களில் அமைந்து விட்ட ஆசிரியரின் கேள்விகள், அதற்காய்த் தலை குனிந்து நிற்கும் நேரத்திலும் விலகாத புன்னகைகள், நேராய் இருந்தும் சரி செய்யப்பட்ட தாவணித் தலைப்புகள், முழுதாய்த் தெரியாமல் முயற்சித்து பால் குக்கர் போல் முடிந்து விட்ட விசிலுடனான படங்கள், நட்பின் காதலுக்காய் கட்டிய கைகளுடன் உதடுகளும் ஒட்டிப் போன என்கொயரிகள், சைக்கிள் சக்கரம் தேய அளக்கப்பட்ட ஊரின் புழுதிச் சாலைகள், ஆசிரியரின் மீதான பயத்துடனே வரிசையில் போய் வந்த சுற்றுலாத் தளங்கள், வாய்க்குள் செல்லும் சாப்பாடு எதுவென்றே தெரியாமல் முடிந்த தோழமைக் கைகள், கிறிஸுதுமஸுக்கும் பொங்கலுக்கும் காத்திருந்து அனுபவித்த விடுமுறை தினங்கள், கணினியை முதன் முதலாய்த் தொட்டுப் பார்த்து சிலிர்த்த விரல்கள், இம்போசிஷன் நாட்களில் வரும் பொய்க் காய்ச்சல்கள், ஒரு ஊசிக்காக டாக்டரை சுற்றிலும் ஓட விட்ட மருத்துவமனை வராண்டாக்கள், ஒரு பக்க ஜடையை இருபக்க ஜடையாய் மாற்றி இருபக்கப் பூவை ஒரு பக்கப் பூவாய் மாற்றிய அலங்காரங்கள் என கலவையானது பதின்ம நினைவுகள்.
இதை நினைக்கையில் மீண்டும் அந்நாட்களுக்குத் திரும்ப மனது கெஞ்சுகிறது. ஆனால் அவ்வயதில் வாசித்த கதையில் வரும் டைம் மெஷின் என்னிடம் இல்லையே :(
இதைத் தொடர அதே ஊரின் தெருக்களில் வலம் வந்த ஸ்ரீவி சிவாவையும், குறும்பு நண்பர் ரகுவையும் அழைக்கிறேன்.
65 comments:
am the first
am the first
am the first
nandri
valga valamudan
v.v.s group.
என்னே ஒரு அறுபுதமான படைப்பு
நிசமா பொய் சொல்லைங்க
அழகான ஆறு போல நினைவுகளை
தண்ணீராய் சும்மந்தபடி
சிலு சிலுன்னு இருக்குங்க..
எவ்ளோ தடவதான் நல்ல இருக்குன்னு சொன்னலும்
அதற்கு தகும்.
நன்றி
வாழ்க வளமுடன்
வருத்தபடாத வசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா
//ஒவ்வொரு முறை நான் கடக்கும் போதும் காத்திருந்து எழுந்து தன் இருப்பைக், காத்திருப்பைக் காட்டிக் காதலித்த ஒருவன், மேத்ஸ் டியூசனில் நேரே சொல்லத் துணிவில்லாமல் நண்பர்கள் மூலம் சொல்லிக் காதலித்தவன், ஒரு முறை வீட்டிற்கு வந்து என் அம்மாவிடமே சொல்லி அனுமதி கேட்டவன், பஸ்ஸில் பாட்டுப் பாடி காதல் சொன்னவன், சைக்கிளில் உடன் வந்து விருப்பம் சொன்னவன், தெருவில் கடக்கும் போது பாட்டுப் போட்டுக் காதல் தெரிவித்தவன், ஒரு பெரிய அசைன்மெண்ட் அளவிற்குக் காதல் கடிதம் தீட்டிக் கையில் தந்தவன், ஃபோனில் அழைத்துக் காதல் சொன்னவன், கல்லூரியில் சிட்டை எழுதித் தூக்கியெறிந்தவன், கண்ணைப் பார்த்து காதல் சொன்னவன், மழையில் நனைந்து கொண்டே சொன்னவன்//
ஏன் விக்கி, ஊர்ல இவ்ளோ பேருக்கா கண்ணு தெரியாது?
//கேனைத் தனமாய் கவிதை முயற்சித்த//
ஹமாம் :)
//யோகி மாட்டிக் கொண்டார்//
அப்பாவியா வளர்ந்துட்டார், என்ன பண்றது?...:(
அழைத்ததற்கு நன்றி, அவசியம் தொடர்கிறேன் :)
ஒரு சில வரிகள்
“எங்கம்மாவுக்கு லெட்டர் கொடுத்தா எங்கப்பா சும்மா விடுவாரா?”
செயற்கை தெரிந்தாலும்
மிக மிக நேர்த்தியக
பதிவை கொடுத்து இருக்கிங்க.
நன்றி
v.v.s
//அவன் என்னிடம் அதிகம் பேசவும் அறைந்து விட்டேன். அம்மா ரொம்பவே பயந்து விட்டாள். அவன் கன்னம் வீங்கி, காது கேட்காமல் போய்,//
வீர மங்கை பட்டம் உங்களூக்கு தான்!
தற்பொழுது வீட்டில் கோபம் வந்தாலும் இதே போல் சத்தம் கேட்குமா!?
இனிமையான நினைவுகள்!!!
நீங்க சொன்ன காதல் ரோமியோக்கள் போலவே காத்திருப்பைக் காட்டிக் காதலித்ததில் இருந்து கண்ணைப் பார்த்து காதல் சொன்னது வரை எனக்கும் நடந்து இருக்கு. நல்ல வேளை அவங்கெல்லாம் தப்பித்து என் சேவி மாட்டிக்கொண்டாடர்,உங்க யோகி மாட்டிக் கிட்டத போல.
//ஒரு பக்க ஜடையை இருபக்க ஜடையாய் மாற்றி இருபக்கப் பூவை ஒரு பக்கப் பூவாய் மாற்றிய அலங்காரங்க//.... மிகவும் ரசித்தேன்.
nallaayirukku.........:)
சிறு வயது நிகழ்வுகளை நினைப்பதிலே ஒரு தனி சுகம். அதை மற்றவர்களுடன் பகிர்வதில் அப்படி ஒரு ஆனந்தம். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
வெங்கட் நாகராஜ்.
அழகான நாட்குறிப்புக்களை வேகவேகமாய் டைட்டில் கார்ட் போடுவதுபோல இருந்தாலும், உங்கள் எழுத்தில் எப்போதும் அணுக்கமாய் இருக்கும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். என்னன்னு புரியலை.
ரகு said....
ஏன் விக்கி, ஊர்ல இவ்ளோ பேருக்கா கண்ணு தெரியாது?
:)))))
விக்னேஷ்வரி..
அழகான நினைவுகள்.. ரசனையா எழுதி இருக்கீங்க..
//கேலியான, மாறுதலான, வாழ்வின் அசடுகள் நிறைந்த, தைரியமான, தயக்கமான, கேனைத்தனமான இந்த பதின்ம வயது அனைவர் வாழ்விலும் அழியாக் கோலமிட்டிருக்கிறது. //
:))))))
சுலபமான முறையில் அருமையான பதார்த்தம். நன்று
ரகுவின் கமெண்ட் ....
:-)))
ரெண்டாவது தடவையா பார்த்த அவன் ஃப்ரெண்டு, ஒரு தடவை திரும்பி பார்த்தாலே அவள் காதலின்னு நினைச்சி வளர்ந்ததால இது ஒண்ணும் பெருசா தெரியலை.
ஹி ஹி ஹி
ரைட்டு,
இந்த நாஸ்டால்ஜியா வியாதிங்கறது இருக்கு பாருங்க.... அது வந்துங்க....
சரி வேணாம் விடுங்க
ரைட்டு,
இந்த நாஸ்டால்ஜியா வியாதிங்கறது இருக்கு பாருங்க.... அது வந்துங்க....
சரி வேணாம் விடுங்க
:)
இவ்ளோ அட்டகாசம் பண்ணிட்டு.. ரைட்டு..
உங்க POVல காமெடியா தெரியுது. அவனவன் போருக்குத் தயாராவது போல இதுக்கு தயாராகிறான். திருவிளையாடல் ஆரம்பம்ல தனுஷ் சொல்ற மாதிரி, ‘எங்க கதைய கேட்டா நாய் கூட கண்ணீர் வடிக்கும் பாஸ்’
:D
////ஒவ்வொரு முறை நான் கடக்கும் போதும் காத்திருந்து எழுந்து தன் இருப்பைக், காத்திருப்பைக் காட்டிக் காதலித்த ஒருவன், மேத்ஸ் டியூசனில் நேரே சொல்லத் துணிவில்லாமல் நண்பர்கள் மூலம் சொல்லிக் காதலித்தவன், ஒரு முறை வீட்டிற்கு வந்து என் அம்மாவிடமே சொல்லி அனுமதி கேட்டவன், பஸ்ஸில் பாட்டுப் பாடி காதல் சொன்னவன், சைக்கிளில் உடன் வந்து விருப்பம் சொன்னவன், தெருவில் கடக்கும் போது பாட்டுப் போட்டுக் காதல் தெரிவித்தவன், ஒரு பெரிய அசைன்மெண்ட் அளவிற்குக் காதல் கடிதம் தீட்டிக் கையில் தந்தவன், ஃபோனில் அழைத்துக் காதல் சொன்னவன், கல்லூரியில் சிட்டை எழுதித் தூக்கியெறிந்தவன், கண்ணைப் பார்த்து காதல் சொன்னவன், மழையில் நனைந்து கொண்டே சொன்னவன்//
ஏன் விக்கி, ஊர்ல இவ்ளோ பேருக்கா கண்ணு தெரியாது?//ஹா ஹா
அழகான நினைவுகள்...செம ரகளை பண்ணிருக்கிங்க...
சிறப்பாக பதிவு செய்து இருக்கீங்க பதின்ம வயது டைரிக் நினைவுகளை . வாழ்த்துக்கள் . தொடருங்கள் .
மீண்டும் வருவேன்
//Vidhoosh(விதூஷ்) said...
அழகான நாட்குறிப்புக்களை வேகவேகமாய் டைட்டில் கார்ட் போடுவதுபோல இருந்தாலும், உங்கள் எழுத்தில் எப்போதும் அணுக்கமாய் இருக்கும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். என்னன்னு புரியலை.
//
நூறு சதம் வழி மொழிகிறேன்
படிக்கவே இவ்வளவு ஜாலியாக இருக்குதே...... உங்களுக்கு? ஹி,ஹி,ஹி.....
நல்ல கதையாவுல இருக்கு..."நம்பி படமெடுக்கலாம்."
//பால்கோவா வாசமும்//
மொத்தச் சுருளிலும் நம்பகத் தன்மைக்கு முத்திரை பொறிக்கும் மண்வாசனை.
இதை படித்ததும் வைரமுத்துவின் வரிகள் தான் நியாபகம் வருகிறது."உன்பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்', காக்கை கூட உன்னை கவனிக்காது ஆனால் உலகமே உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்"
ஆத்தாடி... வி"க்னேஸ்"வரி -ய இனிமே "ஸ்னேக்"வரின்னு தான் கூப்பிடனும் போல.
என்ன இருந்தாலும் அந்த வாழ்கை திரும்ப கிடைக்காதுங்க... :-)
//“எங்கம்மாவுக்கு லெட்டர் கொடுத்தா எங்கப்பா சும்மா விடுவாரா?”//
//சேட்டைன்னா உங்கூட்டு சேட்டை இல்ல, என்கூட்டு சேட்டை இல்ல. உலக சேட்டை. //
// அவன் கன்னம் வீங்கி, காது கேட்காமல் போய், என் அம்மா அவனை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவ செலவுக்குப் பணம் கொடுத்து வந்தார். //
செம டெர்ரர்ங்க..:))))
விக்கி, காதல் கடிதங்கள் கொடுக்கும் அத்துனை ஆண்களும் பெண்களீன் கண்களூக்கு காமெடியாய் மட்டுமே தெரிவது ஏன்?:)
very very intresting...
mano
சந்தோசமா செல்கிறது ஒவ்வொரு வரிகளும்...
சுவாரஸ்யமான டைரிக் குறிப்பு:)!
அருமையான பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள் சகோதரி, வாழ்த்துக்கள்.
very nice. what a remarkable memory
“எங்கம்மாவுக்கு லெட்டர் கொடுத்தா எங்கப்பா சும்மா விடுவாரா?”
great !!!!
அழகாய்க் கடக்கும் பசங்களுக்கெல்லாம் கூட்டாய்ப் போட்ட மதிப்பெண்கள்- is it???
சிறப்பாக பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள் .
அருமையான டைரிக் குறிப்புகள்.
/கன்னம் வீங்கி, காது கேட்காமல் போய்//
ஆஹா ஊர்ல பல பேர் காது கேக்காம சுத்தினாங்க போல இருக்கே ?
யோகி எப்படி ? காது கேக்கும அவருக்கு
//ஆனால் இவர்களிடம் என்னால் காதலையன்றி காமெடியையே பார்க்க முடிந்தது//
இதாங்க காமெடி?
//ஏப்ரல் மாதத்தில் படம் பார்த்து விட்டுத் தோழியைத் தேடி சென்று அழுத அனுபவமெல்லாம் உண்டு. :) //
இதுதாங்க செம காமெடி :-)
பதிவின் நேர்மையில் "பதின்ம வயது டைரிக் குறிப்பு" அழகாய் உள்ளது. வாழ்த்துக்கள்.
அன்புடன்
சந்துரு
so many 'autographs'! hahaha i like it:))
akka, what is ur email id?
இவ்ளோ பேர் தப்பிச்சி கடைசில யோகி மாட்டிகிட்டாரே:(
அப்போவே ரவுடியா நீங்க?
very intersting article
sankar
chennai
நிறைய விஷயங்கள். கோர்வையாய் சொல்லியிருக்கீங்க.
நல்லா இருக்கு விக்கி.
பதிவுலகில் இப்போ தான் ரெண்டாங்கிளாஸ் படிக்கிற என்னையும் தொடர் பதிவுக்கு அழைத்த 'சீனியர்' விக்கிக்கு நன்றி. ஒரு நாள் 'பதின்ம வயது' கொசுவர்த்தி சுத்துறேன். :)
வாங்க சூர்யா. நன்றி.
மிக்க நன்றி சூர்யா.
ஹிஹிஹி... என்ன செய்ய ரகு...
நன்றி ரகு.
மறுபடியும் நன்றி சூர்யா.
வால் ஹிஹிஹி...
அப்போ உங்களுக்கும் நிறைய ஆட்டோகிராஃப் இருக்கா ப்ரியா...
நன்றி ப்ரியா.
நன்றி இரசிகை.
நன்றி வெங்கட் நாகராஜ்.
ஆஃபிஸ்ல மூணு பாஸஸ் மூச்சுத் திணற கொடுக்கும் வேலைகளுக்கு நடுவில் எழுதினால் அப்படித் தானே விதூஷ். கவனத்தில் கொள்கிறேன்.
வெயிலான், சந்தோஷமாய்யா... நல்லாருங்க. :)
நன்றி சுசி.
நன்றி சே.குமார்.
திருப்பூர்க்காரங்களெல்லாம் ஒரு க்ரூப்பாத் தான் இருக்கீங்க முரளி. நடத்துங்க.
வாங்க தராசு.
வாங்க ஷர்ஃபுதீன்.
வாங்க வித்யா. ஹிஹிஹி....
பப்பு, நல்ல அனுபவம் போல. நீங்க எழுதிட்டீங்களா இந்தப் பதிவு?
நன்றி மிஸஸ். மேனகாசதியா. (உங்க பேர் சரியா?)
நன்றி பனித்துளி சங்கர்.
அவங்களுக்குக் கொடுத்த பதிலை நானும் வழிமொழிகிறேன் நேசமித்திரன் :)
சித்ரா ஹிஹிஹி...
வாங்க ஜெரி.
வாங்க கடையம் ஆனந்த்.
வாங்க ராஜா சுந்தரராஜன்.
விடுங்க ப்ரின்ஸ். இதெல்லாம் ஜகஜம்.
ரோஸ்விக் பதிவுலகத்துல இது எனக்கு எத்தனாவது பேரு?
ஆமாங்க ரோஸ்விக். வீ மிஸ் டைம் மெஷின். :)
நன்றி ஷங்கர்.
அத்துனை ஆண்களும் இல்லை கேபிள். மீசை கூட முளைக்காம இருக்குற வயசில கொடுக்கும் போது காமெடி தானே. அவங்களுக்கு வடிவேலு மாதிரி மீசை வரைஞ்சு விட்டா எப்படி இருக்கும்னு யோசிச்சே சிரிச்சிருக்கேன். :)
நன்றி மனோ.
நன்றி சங்கவி.
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி அபாரசித்தன்.
நன்றி பொன்னுசாமி.
வாங்க குமார்.B.
ஹிஹிஹி... ஆமாங்க.
நன்றி ப்ரபாதாமு.
நன்றி துபாய்ராஜா.
LK ஹிஹிஹி...
வாங்க உழவன். ரெண்டுமே காமெடி தான்.
நன்றி சந்துரு.
வாங்க தமிழ்மாங்கனி. ரொம்ப நாளா எங்கே போய்ட்டீங்க. எக்ஸாம்ஸ்ல பிஸியா.
என் மெய்ல் ஐ.டி. என் ப்ரொஃபைல்ல இருக்கு பாருங்க.
விடுங்க ராஜி, அவர் தலையெழுத்தை யாரால மாத்த முடியும்...
ரவுடியா... அப்படின்னா என்ன அர்த்தம்?
நன்றி சங்கர் குமார்.
நன்றி சிவா. தொடருங்கள் உங்கள் கொசுவத்தியை.
சரி, அந்த சோகக் கதை இப்போதெதற்கு.. :(
யோகி பாவம்னு , நான் சொல்லலை நீங்க....!
உங்க நேர்மை ...எனக்கு பிடிச்சிருக்கு...
அவங்கல்லாம் ஒருவேளை இப்ப மறந்துட்டாலும், நீங்க ஒருத்தரையும் மறக்காம ஒவ்வொருத்தரா விவரிச்சுச் சொல்லிருக்கதுலருந்தே, நீங்க பதின்மத்தை எவ்வளவு ரசிச்சுருக்கீங்கன்னு தெரியுது. :-)
//எப்போவுமே தங்களுக்கு ஆண்மகனில்லை என வருந்தியதில்லை. நான் வருத்தப்பட விட்டதில்லை.//
:-))) நீங்க ஒரே பொண்ணா?
wow!!!!!!!!!!!!!!!!!!!!!!!
last para semma touching.
பதின்ம வயது அனைவர் வாழ்விலும் அழியாக் கோலமிட்டிருக்கிறது.
நினைவுகள் வாழ்வின் மிக பெரிய கொடை.அதுவும் பதின் பருவ நினைவு விலை மதிப்பு இல்லாத சொத்து . உங்கள் பதிவு நினைவில் நிற்கும் .
நான் வந்திட்டேன்
உங்கள் ஆக்கங்களை
உடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட
தினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.
நலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
//*இப்போது என் கஸின் எங்கு, எப்படி இருக்கிறான் எனத் தெரியாது. ஒரு குடும்ப மனஸ்தாபத்தில் இரு வீட்டுக்கும் பேச்சு நின்று போனது.**/
இன்னைக்கு தேதி 2010 ஏப்ரல் 16. Facebook, Orkut, Twitter என்று உலகினை Mobile மூலமாகக் கைக்குள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மேற்கண்ட வரிகளைப் படித்த பொழுது, ஏதோ பத்து, பதினைந்து வருடங்கள் பின்தங்கியிருப்பது போன்ற ஒரு மாயை. பதின்ம வயதில் கணிணியினைத் தொட்ட ஒருவர் இப்படி இருக்கலாமா? அதுவும் சொந்தக்காரர் தானே.
இல்லை குடும்பப் பிரச்சினையால் இப்போதைக்கு தேடல் தேவையில்லை என்று நினைத்துவிட்டீர்களா? உங்கள் வரிகளினைப் படிக்கும் பொழுது நிச்சயம் அப்படித் தோன்றவில்லை.
கமெண்ட் எழுதவே எனக்கு பயம்மா இருக்கு, முத வாட்டி உங்க ஏரியா வுள்ள வந்த டேர்ரர்ர் ரா இருக்கு...
பதின்ம வயதில நீங்க உட்ட அறைக்கே அவனுக்கு செவில் அவுலாயுடுச்சு...பாவம் ங்க Mr.Yogi....
ஆண்கள் வதை தடுப்புச் சட்டம் இன்று முதல் இனிதே ஆரம்பிக்கப்பட்டது...
தலைவர் அகில உலக பிரபல பதிவர் திரு.பருப்பு
ஓ அப்பவே ரவுடிதானா :)
// வாய்க்குள் செல்லும் சாப்பாடு எதுவென்றே தெரியாமல் முடிந்த தோழமைக் கைகள் //
ஒரு கவிதை படித்து முடித்த உணர்வு இந்த கட்டுரையில் கிடைத்தது!
நிறைய தேவதாஸ்கள் உருவானதைப்பார்த்தால், அந்தக்காலத்தில் கொஞ்சம் அழகாய் கிழகாய் இருந்துத் தொலைத்திருப்பீர்களாயிருக்கும்.! ஹிஹி..
PUTHUSA PATHIVU POTTAN NALLA IRUKUM
நீங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிட்டிசன்னா? நான் ராஜபாளையம் மாநகரம்...ரொம்ப சந்தோசம் நம்ம ஊரு ஆளப் பார்த்ததில...
நன்றி!!
hai vicky என் பதின்ம வயதின் மிகப் பெரிய இழப்பு அவன் நட்பு.. i like ts line வாய்க்குள் செல்லும் சாப்பாடு எதுவென்றே தெரியாமல் முடிந்த தோழமைக் கைகள் i felt ts experiance
உங்கள் வழக்கமான கிண்டல்கள் ஆங்காங்கே.. ரொம்ப நாளா பதிவு காணும்? நம்ம ப்ளாக் பக்கமும் ஆளை காணும்? ரொம்ப பிஸியா
:)
Post a Comment