Wednesday, April 7, 2010

எனக்குப் பிடித்த 10 பெண்கள்

தொடர் பதிவுகள்னாலே அதிகம் எழுதாமல் அப்படியே இருந்து விடுகிறது. எல்லாரும் எழுதி வாசித்து விட்ட அயற்சியா அல்லது ஒரு தலைப்பு கொடுத்து எழுத சொன்னால் அதைப் பற்றி எழுதத் தெரியவில்லையா எனப் புரியவில்லை. எப்படியோ இந்தத் தொடரை ஆரம்பித்த சர்ஃபுதீனும், தொடர்ந்து நண்பர் ரகுவும் அழைத்ததால் இதோ நானும் எழுதிட்டேன்.

எனக்குப் பிடித்த 10 பெண்கள். இன்னும் அதிகமானவர்களைப் பிடிக்குமென்றாலும் இப்போதைக்கு அதுல இருந்து 10 பேர் மட்டுமே. அடுத்த வருஷம் மீதி பேரை சேர்த்துக்கலாம்.

சரி, மக்களை எழுதுறதுக்கு முன்னாடி விதிகளைப் போட்டுடலாம். இல்லைன்னா சாமி கண்ணைக் குத்தும்.

1. உங்களுக்குப் பிடித்தவர்கள் உங்கள் சொந்தக்காரர்களாக இருக்கக் கூடாது.
2. வரிசை முக்கியமில்லை.
3. வெவ்வேறு துறையிலிருந்து 10 பெண்களை எழுதுங்கள்.

ஓகே, ஸ்டார்ட் ம்யூஸிக்.


“சே என்ன வாழ்க்கை இது” என சலித்துக் கொள்ளும் சராசரி மனுஷியான என்னை வாழ்வின் மீதான சலிப்பைப் போக்கித் தன்னம்பிக்கை தர வைத்தது இப்பெண்ணின் வைராக்கியமான வாழ்வு தான். நகைச்சுவை எழுத்துகளால் மட்டுமே கவர்ந்து கொண்டிருந்தவர் ஒரு தன்னம்பிக்கை மனுஷியாகவும் தன்னை நிரூபித்து எல்லாருக்கும் முன்மாதிரியாய் வாழ்பவர். ஐ லவ் யூ ரம்ஸ்.


உண்மையிலேயே நான் வியந்த துணிச்சல் இவரது. வீட்டை, நிர்வாகத்தை, அலுவலை, குழந்தைகளை, குடும்பத்தை என எல்லாத்தையும் ஒரு பெண் அணைத்துப் போகையில் அவளையும் அதே அரவணைப்பில் கொண்டு போக ஆட்கள் இருப்பர். ஆனால் யாரின் அணைப்பும், அரவணைப்பும் தேவையில்லையென தைரியத்தின் முழு வடிவாய் இருக்கும் விஜியை இன்னும் பிரம்மிப்புடனே தூர நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


எல்லாரும் மொக்கை போடுவதுண்டு. அந்த மொக்கையையே சீரியஸாகப் போட்டு நம்மை விழுந்து விழுந்து சிரிக்க 100% கியாரண்டி, வாரண்டி, கொட்டிக்க ஒரு கப் டீ எல்லாம் தருபவர் இவர். தவிர, ட்ரையான விஷயத்தையும் லேசாக சொல்லக் காரணம் இவரையும் அறியாமல் இவரின் மொக்கை கலந்திருப்பதே. நல்ல ரசனையான எழுத்து இவரது. இவர் எழுத்து மட்டும் தான் இப்படி என்றால் பேச்சும் மொக்கைகலந்தது தான். மனம் சோர்ந்த நேரங்களில் இப்பெண்ணுடன் கொஞ்சம் கதைத்தால் போதும்.


ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் உணர்வுதான். ஆனால் இவரைப் போல் ஒரு தாயாக இருக்க வேண்டும் என நினைக்க வைக்கும் தாய்மை இவரது. ஒரு குழந்தையை இவ்வளவு ரசித்து அதையும் ஒன்று விடாமல் பதிந்து வரும் இவரின் எழுத்துகளுக்கு ரசிகை நான். குழந்தைக்குத் தேவையான பாசம், கண்டிப்பு, தைரியம், ஊக்கம் கூடவே அப்பப்போ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என எல்லாம் உண்டு இவரிடம். குழந்தை வளர்வது தாயின் கையில் என்பார்கள். நிச்சயம் பப்பு பெரிய ஆளாக வருவாள் என்ற எண்ணம் இத்தாயைப் பார்க்கையில் தோன்றுகிறது. Happy Birthday Mullai.


ஜாலி பார்ட்டியான இவருக்குள் இருக்கும் ஆன்மீகத் தேடல் வியக்க வைக்கிறது. ஃபேஷன் டிசைனிங், மார்டன் லைஃபிற்கு நடுவே அவசியமான ஆன்மீக விஷயங்களை அலசுகிறார் இவர். பல சமஸ்கிருதக் கதைகளையும், நிகழ்வுகளையும் தமிழில் மொழிபெயர்த்து நம் அறிவில் ஏறுமாறு தரும் இவரைப் பார்த்தால் பெருமையாய் உள்ளது.


நெகிழ்த்தும் சிறுகதைகளுக்கு சொந்தக்காரர் இவர். இவரின் ஒவ்வொரு வரியும் அனுபவித்து, மிகவும் கவனிக்கப்பட்டுத் தீட்டப்பட்டிருக்கும். பல நேரங்களில் நம் மனம் கனத்துப் போகும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். மாஸ்டர் பீஸ் என்று இவருக்கு மட்டும் எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில் எழுதும் ஒவ்வொன்றையும் மாஸ்டர் பீஸாக செதுக்குபவர். அகலாக் கண்களுடன் நான் வியக்கும் பெண் இவர்.


எதாவது மனசு சரியில்லையா “திறந்திடு சீசே”ன்னு இவங்க வலைப்பக்கத்தைத் திறந்தால் போதும். அப்படியே அழுதிட்டிருந்த கண்ணு, சிரிச்சு நிறையும். நகைச்சுவை, மொக்கையோ மொக்கை இல்லாமல் இதுவரை இவர் எழுதியதில்லை என நினைக்கிறேன். நான் மிகவும் ரசித்துப் படிக்கும் எழுத்திற்கு உரிமையாளர். தொடரட்டும் உங்கள் மொக்கைப் பணி.


இவங்களை சில மாதங்களா தான் பார்க்கிறேன், ஆனால் எல்லா இடத்திலேயும் பார்க்கிறேன். எல்லார் தளங்களிலும் இவர் பின்னூட்டம் இருக்கும். ஊக்கம் கொடுப்பது அதுவும் நாம இருக்கும் அதே தளத்தில் நம்முடன் வருபவர்களுக்கு ஊக்கமளிப்பதென்பது நிஜமாவே பெரிய காரியம் தான். தொடர் ஊக்கங்களுக்கு நன்றி சித்ரா, எல்லார் சார்பிலும். இது மட்டுமில்லாம மேடம் வெட்டிப் பேச்சுன்னு தலைப்பு வெச்சிட்டு எவ்ளோ அவசியமான விஷயங்களையும் அலசுறாங்க.


சொட்டும் காதல் வரிகளுக்கு சொந்தமானவர். இவர் வேறென்ன எழுதினாலும் இவரின் காதல் கவிதைகளுக்கு தான் நான் ஃபேன். “சொட்டச் சொட்டக் காதல்”ன்னு சீக்கிரமே புக் போடுங்க ப்ரியா.


என்னை மாதிரி கத்துக்குட்டி சமையல்காரர்களுக்கெல்லாம் குல தெய்வம். என்ன ஈசியா ஒவ்வொரு உணவையும் படங்களோட கத்துத் தர்றாங்க. சமையல்ன்னாலே வெறுப்படையுறவங்க கூட இவங்க சமையல் ரெசிப்பிஸ் பார்த்தா தூள் கிளப்பிடலாம். என் ருசிகரத் தேர்வு இவர்.

இப்படி பல திறமைகளையும் வெச்சுக்கிட்டு, ஆணுக்கு நிகரல்ல அதுக்கு மேலேயே தான்னு சொல்ற இவங்க எல்லாருமே எனக்கு ரொம்பப் பிடிச்சவங்க.

40 comments:

செல்வேந்திரன் said...

என்னையும் ஒருத்தர் எழுதச் சொல்லி கேட்டார். எந்தச் சபையிலும் விட்டுக்கொடுக்காத பெண்ணே எனக்குப் பிடித்தவர் என்று சொன்னேன். விக்கியைத்தானேச் சொல்கிறீர்கள் என்றார் அவர்.

அதை விடு... விஜியைப் பற்றி எழுதும்போது கொஞ்சம் மனசாட்சிப்படி நடந்திருக்கலாம்.

Anonymous said...

எல்லாரும் பதிவர்களா போயிட்டாங்க.
பதிவர்கள்ல தேர்ந்தெடுத்திருந்தா இதில் இருக்கும் பெரும்பாலானோர் என் லிஸ்ட்லயும் இருந்திருப்பாங்க

Anonymous said...

am
the first
am
the first
am
the first
.....

butterfly Surya said...

கணிப்பும் எழுத்தும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துகள்.

செல்வா,, மதிய உணவு முடிந்ததா..??

ர‌கு said...

ந‌ல்ல‌ தேர்வு விக்கி, இந்த‌ லிஸ்ட்டில் என‌க்கும் சில‌ரை பிடிக்கும் :)

//என்னை மாதிரி கத்துக்குட்டி சமையல்காரர்களுக்கெல்லாம்//

ஓ, காபி போட‌ தெரிஞ்சுகிட்டாலே, க‌த்துக்குட்டின்னு சொல்லிக்க‌லாமா?....இது ந‌ல்லாருக்கே ;)

Anonymous said...

ஹ்ம்ம்
பதிவ எழுதறதுக்கும்
கண்டிசினா
நாட்டமை தீர்ப்ப மாத்தி சொல்லு...(சாரி contiona )

பத்து பேரு பதிவர்கள் தவிர
மத்தவங்கள பதியும் எழுதுங்க..

பத்து ப.வ பற்றி ஒரே இடத்தில
வாசித்ததில் மிக்க மகிழ்ச்சி

அனைவரது சங்கத்திலும்
எங்கள் சங்கம்
சேர்த்து கொள்ளும்
என்பதை
மகிழ்ச்சியோடு திரிவிதுகொல்கிறோம்...
சாரி கொள்கிறோம்

நன்றி வருத்தபடாத
வசிப்போர் சங்கம்
செயலாளர்
காம்ப்ளான் சூர்யா

SK said...

உங்க நடைல அழகா சொல்லி இருக்கீங்க..

விக்னேஷ்வரி said...

வாங்க செல்வா. எல்லாமே மனசாட்சிப்படி தான் எழுதிருக்கேன்.

வாங்க அம்மிணி. சரியா சொன்னீங்க.

வாங்க காம்ப்ளான் சூர்யா.

நன்றி பட்டர்ஃப்ளை சூர்யா.

நன்றி ரகு. ஹேய், ரொம்பப் பேசுனீங்கன்னா, சமைச்சுப் பார்சல் பண்ணீடுவேன் உங்களுக்கு.

பத்து பேர் தான் எழுதணும்னு சொல்லிட்டாங்க சூர்யா. மத்தவங்களை சீக்கிரமே எழுதலாம்.

நன்றி SK.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆஹா ! ஒரு முடிவோடத்தான் இருக்கீங்கபோல கலக்குங்க . ரசிக்கும் வகையில் இருந்தது . பகிர்வுக்கு நன்றி !

பா.ராஜாராம் said...

பிடித்த பத்து பெண்களில்,ஒரு பெண்ணிடமிருந்து, பத்து பெண்கள்!

ஒன்றை தொட்டுதானே ஒன்று,பத்து,நூறு...

அருமை ம.மகள்ஸ்!

உடல் நலம் தேவலையா? :-)

Mrs.Menagasathia said...

பிடித்த 10 பெண்களில் என்னையும் சேர்த்து சொல்லியதில் ரொம்ப சந்தோஷமா இருக்கு.நீங்க என் ப்ளாக் படிக்கிறீங்கன்னு தெரிந்துக்கொண்டேன்.மற்ற தேர்வுகளும் அருமை.உங்களின் எழுத்து நடையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.....

நேசமித்ரன் said...

ஆகாயத்தில் பறந்து விளக்குகளை எண்ணுவதை விட ஜன்னல் வழியே
பிடித்தவர் பெயர்சொல்லி நட்சத்திரமெண்ணுவது பிடித்திருக்கிற உங்களுக்கும் பட்டியலில் இருப்போர் அனைவருக்கும் வாழ்த்துகள்

Vidhoosh(விதூஷ்) said...

:)அட! நானும்தான் இருக்கிறேன். கொடுப்பினை என்றால் இதுதான்...

நேசன்: ஆ!

ராமலக்ஷ்மி said...

உங்களையும் சேர்த்து பதினொரு பேருக்கும் என் வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

இது நல்ல ஐடியா!!

//ஓ, காபி போட‌ தெரிஞ்சுகிட்டாலே, க‌த்துக்குட்டின்னு சொல்லிக்க‌லாமா?.//

அவங்க தயிர்சாதமும் செய்வாங்களாம், போன பதிவுல சொல்லிருக்காங்களே!!

;-)

SHARFUDEEN said...

:)

Anonymous said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

க்ரேட்! :)

வித்யா said...

ஐ நானும் இருக்கேன். நானும் இருக்கேன்.

சைக்கிள் கேப்புல என்ன மொக்கைன்னுட்டல்ல. இரு ஒரு ரொம்ப சிரீயஸ் பதிவெழுதி உன்ன அழவிடறேன். ஹி ஹி. சும்மா சொன்னேன். நன்றி விக்கி. மகிழ்ச்சியாய் இருக்கிறது:)

Chitra said...

அன்பு தோழி, How are you?
நெகிழ்ந்தேன். ஐந்து மாதங்களாக, பதிவுலகில் இருக்கும் எனக்கு மற்ற பதிவர்களின் நட்பும், ஊக்கமும் பெரிய விருதுகள். Thank you very much!
Best wishes to everyone!

Chitra said...

அன்பு தோழி, How are you?
நெகிழ்ந்தேன். ஐந்து மாதங்களாக, பதிவுலகில் இருக்கும் எனக்கு, மற்ற பதிவர்களின் நட்பும், ஊக்கமும் பெரிய விருதுகள். Thank you very much!
Best wishes to everyone!

Chitra said...
This comment has been removed by the author.
சுசி said...

அவ்வ்வ்..

விக்னேஷ்வரி.. கிட்டத்தட்ட எங்க வீட்லயும் உங்க நிலமையில ஒருத்தர் இருக்கார்..

இப்போ உங்களுக்கு உடம்பு எப்டி இருக்கு??

இதில நீங்க என்ன பத்திதான் எழுதி இருக்கீங்களானு இன்னமும் எனக்கு டவுட்டாவே இருக்கு.

இருந்தாலும் இது நம்ப சொல்லுது.
//வாங்க செல்வா. எல்லாமே மனசாட்சிப்படி தான் எழுதிருக்கேன்.//

ஆவ்வ்வ்வ்..

நாஞ்சில் பிரதாப் said...

உண்மையைச்சொல்லுங்க இந்தத பத்துபேருட்டேயிருந்து எத்தனை பொட்டி வாங்கனீங்க---?

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி

http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
################

தராசு said...

ம், சரி, இது பொம்பளைங்க ஏரியா, நம்ம எதுக்கு என்ட்ரி குடுக்கணும், அதனால மீ த எஸ்கேப்பு

Anonymous said...

நானும் இந்த தன்னம்பிக்கை பெண் ரம்யாவிடம் பேசும் போதெல்லாம் லவ் யூ சொல்ல தவறுவதில்லை...

விஜி...ஒரே ஒரு முறை இவரை சந்தித்து இருக்கிறேன்..அடுத்து இன்னும் பேசியதில்லை..ஆனால் இவரை பற்றி நீங்க சொன்னதை தான் நானும் இன்று வரை எல்லாரிடமும் சொல்லி வருகிறேன்..இவருடைய நம்பிக்கை துணிச்சல் திறமை எல்லாம் என்னை வியக்க வைத்தது உண்மையே...இன்னைக்கு எப்படியும் இவருக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்லிடறேன்...விஜி ஐ லவ் யூ...
மற்ற தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்...

Anonymous said...

Blogger செல்வேந்திரன் said...

என்னையும் ஒருத்தர் எழுதச் சொல்லி கேட்டார். எந்தச் சபையிலும் விட்டுக்கொடுக்காத பெண்ணே எனக்குப் பிடித்தவர் என்று சொன்னேன். விக்கியைத்தானேச் சொல்கிறீர்கள் என்றார் அவர்.

அதை விடு... விஜியைப் பற்றி எழுதும்போது கொஞ்சம் மனசாட்சிப்படி நடந்திருக்கலாம்.

விஜி பொருத்தது போதும் பொங்கி எழு...

Anonymous said...

விக்கி இதை மாம்ஸ்கிட்ட காட்டினேன், அவர் விக்கி இம்புட்டு அப்பாவியான்னு சொல்ல சொன்னார் :))

செல்வா உனக்கு பொறாமை :)

தாங்க்ஸ் விக்கி, கோவை வரும்போது பேசின படி கவனிச்சரேன் :)))))

சந்தனமுல்லை said...

தாங்ஸ் விக்கி... நான் சொன்ன மாதிரியே என்னைப் பத்தி எழுதினதுக்கு...:-) சென்னை வரும்போது சொல்லுங்க..விஜி மாதிரி நானும் கவனிச்சுடறேன்!:-))

மோகன் குமார் said...

எல்லாம் பதிவர்களாக எழுதிடீங்க.. வேற எந்த பெண்களும் பிடிக்காதா?
:))

அதிசயமா அடுத்தடுத்து தினம் பதிவு எழுதி அசத்துறீங்க!! எப்புடி??

priyamudan bala said...

hi fine
your blog verynice .please send your article for me balavelan.s@gmail.com if possible see priyamaibala.blogspot.com

priyamudan bala said...

hi fine
your blog verynice .please send your article for me balavelan.s@gmail.com if possible see priyamaibala.blogspot.com

arumugam senthilkumar said...

pls visit my blog www.ultraaanmeegam.blogspot.com

Priya said...

முதல சாரி விக்னேஷ்வரி இவ்வளவு லேட்டா வந்ததுக்கு. பிடித்த பெண்களில் நானும் இருப்ப‌தைப் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நானே ஏதோ கிறுக்கிட்டு கவிதைன்னு பேர் வச்சுக்கிறேன். அதை நீங்க எல்லாம் கவிதைன்னு ஏத்துக்கறதே பெரிய விஷயம்தான்.

//"சொட்டச் சொட்டக் காதல்"ன்னு சீக்கிரமே புக் போடுங்க ப்ரியா.//....போட்டுருவோம்:)

விக்னேஷ்வரி said...

நன்றி பனித்துளி சங்கர்.

நன்றி மாம்ஸ். சரியாகிட்டேன் மாம்ஸ்.

நன்றி மிஸஸ். மேனகாசதியா.

நன்றி நேசமித்திரன்.

வாங்க விதூஷ்.

நன்றி ராமலெக்ஷ்மி.

வாங்க ஹுஸைனம்மா. ம், அப்படித் தான் சப்போர்ட் பண்ணனும். ஹிஹிஹி...

வாங்க ஷர்ஃபுதீன்.

விக்னேஷ்வரி said...

நன்றி கடையம் ஆனந்த்.

நன்றி ஷங்கர்.

என்னா ஒரு சந்தோஷம் இந்த பச்சப் புள்ளைக்கு.
என்னை அழ வைக்கப் போறீங்களா வித்யா? அப்போ டாக்டரோட அடுத்தப் படத்துக்கு விமர்சனம் எழுதுங்க.

நான் நலம் சித்ரா. உங்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன் இவ்வளவு ஊக்கம் தர முடியுமா என.

வாங்க சுசி. மத்த டிபார்ட்மெண்ட்லயாவது போட்டிக்கு ஆள் இருக்காங்க. ஆனா உங்க டிபார்ட்மெண்ட்ல நீங்க தான் குயின்.

அதெல்லாம் சீக்ரெட் நாஞ்சில் பிரதாப்.

நன்றி ஜெய்லானி.

விக்னேஷ்வரி said...

ஓகே தராசு.

மகிழ்ச்சி தமிழரசி.
ம், அப்படி உசுப்பேத்துங்க தமிழரசி. :)

ஆங் விஜி, அது.

சந்தன முல்லை, கவனிப்பா... இதுக்கு என்ன அர்த்தம். பயம்மா இருக்கு...

பிடிச்ச பெண்கள் இங்கேயே இருக்கும் போது எங்கேயோ இருக்குறவங்களை ஏன் எழுதணும் மோகன் குமார்.
அப்பப்போ இது மாதிரி அதிசயங்கள் நிகழும். ;)

நன்றி பிரியமுடன் பாலா.

வாசிக்கிறேன் ஆறுமுகம் செந்தில் குமார்.

வாங்க ப்ரியா. நீங்க நல்லா எழுதுறீங்க ஆஃபிஸர். நம்புங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

haiiiiiii

idhellam eppa nadandhuchu!!!!!!!!!

thanks vignesh.

RAMYA said...

மிகவும் தாமதமாக இந்த இடுகையை படிக்க நேர்ந்தது. அளவில்லா ஆணிகளுடன் அலைவதால் விக்கி படிக்கவே மிக்க தாமதம் ஆகிவிட்டது.

படிக்க வைத்த தமிழுக்கு மிக்க நன்றி.

விக்கி, எனக்கு இவ்வளவு உயரிய ஒரு இடம் கொடுத்து... என்ன சொல்ல என்னோட தன்னம்பிக்கைதான் இங்கு எனக்கு ஒரு சிறப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது..

விக்கி உங்களை கவர்ந்த பெண்மணிகளில் நானும் ஒரு அங்கம் என நினைக்கும் போது மிக்க பெருமையாக இருக்கிறது.

ஐ டூ லவ் யூ விக்கி.... நன்றி விக்கி... என்றென்றும் உங்களன்பு ரம்ஸ்...