Thursday, April 8, 2010

எங்கு இருக்கிறோம் நாம்?

நேற்று காலை டீ, நிதானமாக தொண்டையில் இறங்கவில்லை. காரணம் செய்தித் தாளில் வாசித்த 2 செய்திகள். அதைப் பற்றி என்னவரிடமும், தொடர்ந்து அலுவலகத்திலும் பேசிக் கொண்டிருந்தோம். டெல்லியில் நேற்று முன் தினம் நிகழ்ந்த இந்த இரு சம்பவங்களும் வாழ்க்கையின் மீதான பிடிப்பை, மனிதர்களின் மீதான நம்பிக்கையை உடைக்கச் செய்கின்றன. நீங்களும் வாசித்திருக்கலாம். இல்லையெனில் இங்கே.

செய்தி 1 : டெல்லி யூனிவர்சிட்டி மாணவி ஒருவர் கல்லூரி முடிந்து பேருந்திற்காகக் காத்திருந்த வேளையில் அவர் வீட்டருகே வசிக்கும் கொஞ்சம் பழகியவர் லிஃப்ட் கொடுத்திருக்கிறார். முதலில் தயங்கினாலும், தெரிந்தவர் என்பதால் அப்பெண்ணும் அந்நபருடன் காரில் சென்றுள்ளார். வழியில் இரண்டு நிமிட வேலை இருப்பதாகச் சொல்லி அப்பெண்ணை அழைத்துக் கொண்டு போனவர் அங்கிருக்கும் தன் நண்பர்களுடன் சேர்ந்து இப்பெண்ணை ஒரு கும்பலே தொடர்ந்து 6 மணி நேரம் பலாத்காரம் செய்திருக்கின்ற்னர். :(

செய்தி 2: டெல்லி கீதா காலனியில் உள்ள தாபா ஒன்றில் 10 ரூபாய்க்கு தால் வாங்கி வரச் சொல்லி மகனை அனுப்பியுள்ளார் ஓருவர். வாங்கி வந்த தாலில் தண்ணீர் அதிகமாக இருக்கவே கணவன், மனைவி இருவரும் சிறுவன் வாங்கி வாங்கி வந்த தாலை எடுத்துக் கொண்டு தாபாவில் சென்று சண்டையிட்டுள்ளனர். இதனால் கோபமுற்ற தாபாவாலா அருகிலிருந்த கல்லை எடுத்து அவர் மண்டையில் எறிந்து கொன்று விட்டு தலைமறைவாகிவிட்டார். :(

அக்கம் பக்கமிருப்பவர், வீட்டிற்குத் தெரிந்தவர் என ஒரு மனிதனை நம்பி லிஃப்ட் பெற்றது மாணவியின் குற்றமா அல்லது ஒரு பொருளின் தரம் சரியில்லையென வாதாடி 10 ரூபாய்க்காக உயிரை விட்டது கொடுமையா...

எங்கிருக்கிறோம் நாம்... எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது நம் வாழ்க்கை.... ஒவ்வொரு மனிதனையும் சந்தேகக் கண் கொண்டு நோக்கி, ஒரு உள்ளூரப் பயத்துடனே தான் நகர்த்த வேண்டியிருக்கிறது நாட்களை.

மனிதன் மிருகத்திலிருந்து வந்தான் எனும் டார்வின் தியரியை மனிதன் மிக அழகாகவே நிரூபித்துக் கொண்டிருக்கிறான் ஒவ்வொரு நாளும். சோம்பல் முறித்து உதிரும் பறவையின் மெல்லிய சிறகு மேலே விழும் போது கூட கண்களில் ஒரு பயத்துடனே கடந்து செல்கிறோம். வாழ்வை எப்படி ரசித்து வாழ?

40 comments:

வெங்கட் நாகராஜ் said...

சோகமான விஷயங்கள் நம்மைச் சுற்றி அனுதினமும் நடந்து கொண்டே இருப்பது வேதனையானது. பல மனிதர்கள் பசுத்தோல் போர்த்திய புலியாக இருக்கிறார்கள். :(

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

சுசி said...

இரண்டு செய்திகளுமே இப்போதான் படிக்கிறேன்..

என் பயமும் அதுதான்.. மிருகமா மாறிக் கொண்டிருக்கிற இந்த மனிதர்களுக்கு மத்தியில

//வாழ்வை எப்படி ரசித்து வாழ?//

janaki said...

kekave kodumaya irukuthu ulagam enga pothune therila

trdhasan said...

வாழ்வை எப்படி ரசித்து வாழ? //

பயமாத்தான் இருக்கு ரசித்து வாழ!(எங்கம்மா அடிக்கடி கேட்பாங்க நீயெல்லாம் எப்படி பொழைக்க போறே இந்த உலகத்துலன்னு கேட்பாங்க. எனக்கு பொழைக்க தெரியாதும்மா நா வாழ ஆசப்பர்றேன்னு சொல்வேன். ஆனா நடக்கறதெல்லாம் பாக்கும்போது நா எப்டி வாழப்போறேன்னு தெரியல)


வாழ்றதா? பொழைக்கறதா?ன்னு தெரியல......

Raghu said...

என்னை கேட்டா பெண்க‌ள் துப்பாக்கி (லைச‌ன்ஸ்டா இல்லாட்டாலும்) வெச்சுக்க‌ற‌து ரொம்ப‌ ந‌ல்ல‌து விக்கி. ஜோக் இல்ல‌, சீரிய‌ஸாவே சொல்றேன். அந்த‌ பெண் ம‌ன‌த‌ள‌விலும் மீண்டு வ‌ர‌ணும்.

அந்த‌ ஆறு ______ங்க‌ளையும் க‌டுமையா சித்ர‌வ‌தை ப‌ண்ணி சாக‌‌டிச்சாகூட‌ த‌ப்பில்ல‌, அப்போதான் இந்த‌ எண்ண‌ம் இருக்கும் ம‌த்த‌ _____ங்க‌ளுக்கு ஒரு ப‌ய‌ம் இருக்கும்.

ந‌ம்மால் முடிந்த‌து, த‌ர‌மில்லை என‌த் தெரிந்த‌வுட‌ன் இதுபோன்ற‌ ஹோட்ட‌ல்க‌ளை நிராக‌ரிப்ப‌து ஒன்றே. நாம் ச‌ண்டையிடுவ‌தால் அவ‌ர்க‌ள் மாற‌ப்போவ‌தில்லை. மேலும் ப‌ப்ளிக் ச‌ப்போர்ட்டும் ந‌ம‌க்கு கிடைக்காது. சாம்பார்ல‌ உப்பே இல்ல‌ங்க‌ என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கும்போது, ப‌க்க‌த்து டேபிளில் இருப்ப‌வ‌ர், இன்னொரு க‌ப் சாம்பார் குடுப்பா என்று கேட்பார். இந்த‌ மாதிரி ஹோட்ட‌ல்கார‌ர்க‌ளையெல்லாம் "உங்க‌ளுக்குலாம் கும்பீபாக‌ம்தாண்டா" என்று சாப‌ம் விட்டு போக‌வேண்டிய‌துதான் :(

//மனிதன் விலங்கிலிருந்து வந்தான் எனும் டார்வின் தியரியை மனிதன் மிக அழகாகவே நிரூபித்துக் கொண்டிருக்கிறான் //

ம‌ன‌த‌ள‌வில் இன்னும் ப‌ல‌ர் ஆர‌ம்ப‌ நிலையில்தான் இருக்கின்ற‌ன‌ர் :(

Dr.Rudhran said...

sharing your concern.. deaf ears will start heating

தராசு said...

வேதனை...,

மாறிவரும் வாழ்வியல் நெறிகளில் மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சி மிருகமனம் கொண்டவனாக்கி விடுமோ என் பயமாய் உள்ளது.

வால்பையன் said...

மனிதனுக்குள் மிருகம் என்பது உண்மையாகிறது!

பனித்துளி சங்கர் said...

இதுபோன்ற அரக்கர்கள் மத்தியில் நாமும் வாழ்வதை நினைத்து வேக்கப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை

பித்தனின் வாக்கு said...

சோகமான விஷயங்கள். ஓ இதுக்கு பேருதான் மாநரக வாழ்க்கையா?. என்ன செய்வது மனிதர்களில் இத்தனை விதங்கள்.

Anonymous said...

அட கொடுமையே. யாரைத் தான் நம்புவதோ என்று பயமாக இருக்கிறது. எப்படீங்க மனிதனால் இப்படி எல்லாம் நடக்க முடிகிறது. வாசிக்கும் போதே கை நடுங்குகிறது. தாத்தா 5 வயது பேத்தியை தவறாக நடத்தினாராம், குடிச்சிட்டு வந்த அப்பா மகளை தவறாக நடத்தினாராம் என்று வாசிக்கும் போதே சீ என்கிறது. எப்படீங்க தாத்தா, அப்பாவால் எல்லாம் இப்படி முடிகிறது. கொலை செய்தவனை கூட மன்னிக்கலாம் ஆனால் இப்படி பட்ட ஆண்களை கண்டிப்பாக ரகு சார் சொன்னமாதிரி தான் தண்டிக்கவேண்டும்.

Anonymous said...

கேக்கவே கொடுமையா இருக்குங்க விக்கி

Prathap Kumar S. said...

அடப்பபாவமே... இப்பல்லாம் கூடவா நடக்குது.... மனிதனுக்குள் இரக்கும் மிருகம் விழித்துக்கொள்ளும்போதான் இந்த மாதிரி பிரச்சனைல்லாம் நடக்குது...

Vidhya Chandrasekaran said...

:(

CS. Mohan Kumar said...

முதல் விஷயம் ரொம்ப வருத்தமா இருக்கு; அடுத்ததும் தவறு எனினும் முதல் விஷயத்தில் அந்த பெண்ணின் மீது எந்த தவறும் இல்லை.

உங்களது கடைசி வரிகள்?? வண்ண நிலவன் ஒரு கவிதையில் சொல்லுவார்: இந்த உலகை நான் பெரிதும் நேசிக்கிறேன்.. அதன் அழகோடும் குரூரதொடும் என.. அது தான் நினைவுக்கு வருகிறது

நேசமித்ரன் said...

:(

mightymaverick said...

நம்ம ஊரு பக்கம் "காய் அடிக்கிறது"-னு (கொஞ்சம் மோசமான வார்த்தை தான்... ஆனால் இங்கு இதனை சொல்லாமல் என் கருத்தை சொல்ல முடியாது.) ஒரு சொலவடை உண்டு... இப்போதெல்லாம் அதை கேக்குறது ரொம்ப அரிதாக இருக்கிறது... குளிர் காலம் ஆரம்பிக்கும் போது ஆண் தெரு நாய்களை மாநகராட்சியினர் பிடித்துப் போய், அதன் வாயை கட்டிப்போட்டு அதன் விரைப்பையின் (testicle) கீழே ஒரு கல்லினை வைத்து ஒரு கட்டையால் ஓங்கி ஒரே போடு... செலவே இல்லாத ஒரு குடும்பக்கட்டுப்பாடு... அப்படி ஒரு தண்டனையை இவர்களுக்கு போது மக்கள் மத்தியில் கொடுத்தால் என்ன என்று தான் எனக்கு தோன்றுகிறது... இப்படி தண்டனை கொடுக்கப்பட்டவர்கள் முகத்தில் இவன் ஒழுக்கம் கெட்டவன் என்று பச்சை குத்தி விட்டு, இவர்களுக்கு மருத்துவ உதவி செய்யக்கூடாதென்று ஒரு சட்டம் போட்டு விட்டால், எல்லார் வாலும் ______ம் தன்னால் சுருங்கிக்கொள்ளும்...

ஷர்புதீன் said...

:(

Anonymous said...

எத்தனை முன்னேற்றம் கண்டும் என்ன பயன்? மனிதன் இன்னும் மிருகமாகவே இப்படியும் சொல்லக்கூடாது மிருகத்துக்கு ஐந்தறிவு தானே...சூழ் நிலை தான் மனிதனை அறிவிலியாகவும் குற்றவாளியாகவும் மாற்றுகிறது...வருந்தமட்டுமே செய்யமுடியும் நம்மால்....

Anonymous said...

:(

Menaga Sathia said...

படித்து முடித்ததும் கனம் கனத்தது.மனிதனுக்குள் மிருகம் இருப்பது உண்மைதான் போல்....

நாடோடித்தோழன் said...

//மனிதன் மிருகத்திலிருந்து வந்தான் எனும் டார்வின் தியரியை மனிதன் மிக அழகாகவே நிரூபித்துக் கொண்டிருக்கிறான் //

மிருகத்தனத்திலிருந்து மனிதன் எப்போதும் வெளியே வந்ததாக தெரியவில்லை..
ஆனால் என்ன.. சில மனிதர்கள் மானாகவும் சில மனிதர்கள் வெறி கொண்ட நாயாகவும் இருக்கின்றனர்..
மிருகத்தனத்திலிருந்து மனிதன் எப்போதும் வெளியே வந்ததாக தெரியவில்லை..
ஆனால் என்ன.. சில மனிதர்கள் மானாகவும் சில மனிதர்கள் வெறி கொண்ட நாயாகவும் இருக்கின்றனர்..
கருத்து சிதறலுக்கு வந்ததற்கு நன்றி..

pichaikaaran said...

மனிதன் என்பவன், தெய்வம் ஆகலாம்.... மிருகமும் ஆகலாம்

'பரிவை' சே.குமார் said...

வாழ்வை ரசித்து வாழ பயமாத்தான் இருக்கிறது. என்ன செய்ய? வாழ்ந்துதானே ஆகவேண்டும்.

நல்ல இடுகை.

Anonymous said...

:(

Chitra said...

மனித நேயம் என்றால் என்ன? :-(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒவ்வொரு மனிதனையும் சந்தேகக் கண் கொண்டு நோக்கி, ஒரு உள்ளூரப் பயத்துடனே தான் நகர்த்த வேண்டியிருக்கிறது நாட்களை.//

hm.. :(

Vidhoosh said...

தலைநகர் தில்லியில் நிகழ்கிறது மீடியா மூலம் வெளி வந்தே விடுகிறது. மற்ற இடங்களில்(லும்) நிகழ்வது??? :(

மீண்டும் சொல்லிக் கொள்கிறேன், இங்கும், யாராக இருந்தாலும், எப்போதும் தனியாக வாகனங்களில் லிப்டில் போக வேண்டாம். :(( ரொம்ப வருத்தமாக இருக்கிறதுங்க.

அவங்களுக்கு இன்னும் ஆறேழு வருஷம் சட்டப் போராட்டம் நிகழ்த்தி தண்டனை வாங்கி கொடுத்தே விட்டாலும், இந்தப் பெண்ணுக்கு உண்டாகிய மன அழுத்தத்திலிருந்து விடுதலை என்று கிடைக்கும்?

ஜாக்கிரதை பெண்களே!! வேறென்ன சொல்ல??

ஜெய்லானி said...

அரபு உலக தண்டனை இங்கு வந்தால் மட்டுமே விடிவு காலம் பிறக்கும்.

Anbu said...

;-((

ஸ்ரீவி சிவா said...

மனித மனம் எவ்வளவு குரூரமும் வன்முறையும் நிரம்பியது!!
அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது.
:((

VISA said...

சுருக்கமா சொல்லியிருந்தாலும் நச் நச் நச்!!!
:(

Radhakrishnan said...

வருத்தம் தரக்கூடிய நிகழ்வுகள்.

ரோஸ்விக் said...

இரண்டுமே கொடுமையான நிகழ்வுகள்.

சக மனிதனை சந்தேகித்தேவா வாழ்கை நடத்தமுடியும்? ஆனால், அப்படித் தான் செய்யவேண்டுமோ??

Unknown said...

இப்படித்தான் போகிறது தலைநகர வாழ்க்கை

விக்னேஷ்வரி said...

ஆமா வெங்கட் நாகராஜ்.

அதே தான் சுசி.

வாங்க இரசிகை.

ரொம்ப வருத்தமாவும் இருக்கு ஜானகி.

எல்லாமே கஷ்டம் தான் டி.ஆர்.தாசன்.

துப்பாக்கி வெச்சுக்குறதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை ரகு. 10 ஆண்களுக்கு நடுவே ஒரு துப்பாக்கி வைத்துக் கொண்டு பெண் என்ன செய்ய முடியும். அவளிடமிருந்து அதைப் பிடுங்கி எறிவது என்ன அத்தனை கஷ்டமா...
கருத்துகளுக்கு நன்றி ரகு.

வாங்க ருத்ரன் சார்.

ஆக்கிவிடுமோ இல்லை தராசு. ஆக்கிடுச்சுங்குறது தான் உண்மை.

ஆமா வால்.

விக்னேஷ்வரி said...

ஆமாங்க சங்கர். ஆனால் வெட்கப்படுவதால் மட்டுமே பிரச்சனைகள் தீரப் போவதில்லையே

மாநகரங்களில் மட்டுமில்லை பித்தனின் வாக்கு, எல்லா இடங்களிலுமே இருக்கின்றன. இங்கே நடப்பவை எளிதில் வெளிவருகின்றன. அவ்வளவே.

செய்திகள் வாசிக்கையில் மனம் கனக்கத் தான் செய்கிறது அனாமிகா.

ஆமா அம்மிணி.

ஆமா நாஞ்சில் பிரதாப்.

வாங்க வித்யா.

இந்தளவு குரூரத்துடன் நேசிக்க முடியவில்லை மோகன் குமார்.

வாங்க நேசமித்திரன்.

வாங்க வித்தியாசமான கடவுள். (அடுத்த முறை கொஞ்சம் வார்த்தைகளை யோசித்து எழுதுங்கள் என்பது என் சிறு வேண்டுகோள்)

விக்னேஷ்வரி said...

வாங்க ஷர்ஃபுதீன்.

முதல் விஷயத்தில் உள்ளவர்கள் சூழ்நிலைக் குற்றவாளிகள் இல்லை தமிழரசி. இவர்களுக்கு கொடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால் மட்டுமே மற்றவர்களுக்குப் பயம் வரும்.

வாங்க சூர்யா.

வாங்க மிஸஸ். மேனகாசதியா.

வாங்க துபாய் ராஜா.

உங்கள் கருத்தை ஏற்கிறேன் நாடோடித் தமிழன்.

வாங்க இராமசாமி கண்ணன்.

வாங்க பார்வையாளன்.

என்ன செய்யன்னு ஒரு சலிப்போடு தான் வாழ வேண்டியுள்ளது சே.குமார். ரசனையோடு அல்ல.

விக்னேஷ்வரி said...

வாங்க மயில்.

அப்படி ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை சித்ரா. :(

டெல்லி வாழ்க்கை உங்களுக்குத் தெரியும் தானே முத்துலெட்சுமி.

சரி தான் ஜெய்லானி.

வாங்க அன்பு.

ஆமா சிவா

வாங்க விசா.

வாங்க ராதாகிருஷ்ணன்.

ஆமா ரோஸ்விக். கொடுமையான வாழ்க்கை வாழ வரம் வாங்கி வந்திருக்கிறோம் நாம்.

தலைநகர வாழ்க்கை அதிகம் தெரிகிறது. மற்றவை வெளியே வருவதில்லை. அவ்வளவு தான் கலாநேசன்.

Unknown said...

நல்ல பண்புள்ள தாய்க்கு பிறக்கும் குழந்தைகள் தவறு செய்யும் வாய்ப்பு மிகவும் குறைவு. வளர்ப்பில் உள்ள கோளாறுதான் இந்த கேவலமான காரியத்திற்கு காரணம். நல்ல பண்பையும் தெய்வ நம்பிக்கையும் ஊட்டி வளர்க்கும் குழந்தைகள் தவறு செய்யும் வாய்ப்பு அதிகம் இல்லை. தாயின் வளர்ப்பு சரியில்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது தாயே சரி இல்லாமல் இருக்க வேண்டும்.