Tuesday, April 6, 2010

நல்லாத் தானே போய்க்கிட்டு இருந்துச்சு...


ஹாய் ஹாய் ஹாய்.... ரொம்ப நாளைக்கப்புறம் மறுபடியும் வந்துட்டேன். இந்த 10 நாளா என்னைத் தேடினவங்கள்லாம் (அப்படி யாராவது இருந்தா) இனிமே புயல் கிளம்பிடுச்சுன்னு சூதானமா இருந்துக்கோங்க.

போன வாரம் 3 நாட்கள் யோகி ஊர்ல இல்ல. பயங்கர குஷி. ஏன்னா அவர் இல்லைன்னா நோ சமையல், இஷ்டத்துக்கு டி.வி பார்க்கலாம், தமிழ்ப் படங்கள் பார்க்கலாம். தவிர, அவரோட க்ரெடிட் கார்டை எடுத்துக்கிட்டு ஜாலியா ஊர் சுத்தலாம். இந்த முறை அவர் வெளியூர் போனது வீக்கெண்டா அமைய தோழியை வர சொல்லி ஷாப்பிங் ப்ளான் போட்டோம். வெள்ளிக் கிழமை ஒரு நாள் ஆஃபிஸ். அடுத்து 2 நாள் லீவ். நல்லா சுத்தலாம்னு முடிவு பண்ணி, லிஸ்டெல்லாம் போட்டாச்சு. டெல்லியின் பெஸ்ட் 3 மார்க்கெட்ஸ் போறதுன்னும் டிஸைட் பண்ணியாச்சு. வெள்ளிக் கிழமை ஃப்ரிட்ஜ்ல இருக்குற மிச்சம் மீதியை ஸ்டாக் க்ளியரன்ஸ் பண்ணியாச்சு.

சனிக்கிழமை லீவுன்னு சொல்லியிருந்தவ, வெள்ளிக் கிழமை சாயங்காலம் வந்து “நாளைக்கு வொர்க்கிங் விக்கி”ன்னதும் முதல் ஷாப்பிங் ப்ளான் கேன்சல். இருந்தும் எல்லாத்தையும் சண்டே ஒரே நாள்ல கவர் பண்ண திட்டம் போட்டோம். சனிக் கிழமை அவளுக்குத் தானே ஆஃபிஸ் நமக்கில்லையேன்னு வெள்ளிக் கிழமை ராத்திரி 3 படம் பார்த்தேன். Death at a Funeral (Comedy Story), விண்ணைத் தாண்டி வருவாயா ரெண்டும் பார்த்து முடிச்சிட்டுப் போதும்ன்னு நினைச்சப்போ எல்லாரும் நல்லாருக்குன்னு சொன்னாங்களேன்னு நம்ம்ம்ம்பி “தமிழ்ப்படம்” பார்த்தேன். :( மொக்கை தாங்க முடியல.

காலைல 5 மணிக்கு தலை வலியோட தூங்கப் போனா 6 மணிக்கு அலாரம் அடிக்குது. சரின்னு எழுந்து அவளுக்கு லஞ்ச் செய்து பேக் பண்ணிக் குடுத்து அனுப்பிட்டுப் படுத்தா, மறுபடியும் மணி அடிக்குது. தூக்கக் கலக்கத்துல அலாரத்துத் தலைல தட்டி கைல அடி. அப்புறம் தான் தெரிஞ்சது அடிச்சது அலாரமில்ல, காலிங் பெல். வீட்டுல வேலை பாக்குறவங்க வந்தாச்சு. எழுந்து அவங்க போற வரை உக்காந்திருந்தேன். மணி 10 ஆச்சு. சரி, சாப்பிட்டுத் தூங்கலாம்ன்னு ஒரு ப்ரெட் டோஸ்ட்டைப் போட்டுத் தின்னுட்டுப் படுத்தேன். மறுபடியும் காலிங் பெல். அயர்ன் துணி கேட்டு அயர்ன் பண்றவர். அவர்கிட்ட துணி குடுத்திட்டு கொஞ்ச நேரம் நெட்ல மேயலாம்னு சிஸ்டத்தைத் திறந்தா சமையல் குறிப்பு கேக்குறா ஃப்ரெண்ட் ஒருத்தி. நோ சமையல் டே அன்னிக்கு நோ ரெசிப்பீஸ் டூன்னு சொல்லிட்டு சிஸ்டத்தைக் க்ளோஸ் பண்ணிட்டு மறுபடியும் பெட் ரூம் போனேன்.

கண்ணசந்த அஞ்சாவது நிமிஷத்துல “ டெலிஃபோன் மணி போல் சிரிப்பவள் இவளா”ன்னு தங்கை கால். அவகிட்ட ராத்திரி படம் பார்த்த சோகக் கதையை சொல்லிக் கெஞ்சிக் கூத்தாடி தூங்கப் பெர்மிஷன் கேட்டு ஒரு மணி நேரம் தூங்கினேன். மணி 3 ஆகிடுச்சு. பசி. கிச்சன் பக்கம் போய் அலமாரியைக் குடைஞ்சதுல மேகி ஒண்ணு கிடைச்சது. அதை வெந்தும் வேகாம தின்னுட்டு டி.வியை ஆன் பண்ணா கொடுமைக்கு கேப்டன் ஆடிக்கிட்டிருக்கார். அதைப் பார்த்து சிரிச்சுப் புரையேறி மேகி சிதறினது தான் மிச்சம்.

ஒரு மனசா குளிக்க முடிவு பண்ணி ஷவரைத் திறந்தா வெந்நீர் கொட்டுது. அதுல குளிச்சுட்டு வந்து ஏ.சி.யை ஆன் பண்ணா கரண்ட் போயிடுச்சு. ஒரு வழியா ஃபேன்லையே சமாளிச்சு உக்காந்திருந்தேன். சாயங்காலம் ஃப்ரெண்ட் வந்ததும் அன்னிக்கு முழுக்க தூங்க முடியாம போன சோகத்தை சொல்லி டின்னருக்கு வெளிய போய் சாப்பிடலாம்னு முடிவாச்சு.

ஓகே, மறுபடியும் சைனீஸ். இந்த முறை Bercos. டெல்லி, நொய்டால ரொம்ப ஃபேமஸ் ரெஸ்டாரண்ட்டாம். அடிச்சுப் பிடிச்சு சீட் போட்டு போய் டேபிள்ல உக்காந்திட்டு ஒரு வீர சிரிப்பு சிரிச்சேன். ஃப்ரெண்ட் கேவலமா ஒரு லுக் விட்டா. அடுத்ததா ஆர்டர் எடுக்க வந்தவன் நம்மள மதிக்காம பின்னாடி இருக்குற டி.வி.ல ஐ.பி.எல்லைப் பார்த்துக்கிட்டே தண்ணியை டேபிள்ல கொட்டினப்போவே எழுந்து வந்திருக்கணும். ஃப்ரெண்ட் அமைதி காக்கச் சொன்னதால பொருளை எடுக்கல.

ஆர்டர் பண்ண 5 நிமிஷத்துல எல்லாமே வந்தாச்சு. எல்லாம் வெஜ் தான். சாப்பிட்டு அங்கே கேஸினோ வாசிச்சிட்டிருந்தவரை ரசிச்சுக்கிட்டே யோகிக்கு ஃபோன் பண்ணி உங்க பெர்த் டே ட்ரீட் இங்கே தான்னு சொன்னேன். அவர் வயிறெரிஞ்ச புகைச்சல் வாசனை எனக்கு வந்ததும், ஃபோனை வெச்சுட்டேன்.

நைட் வீட்டுக்கு வர்ற வழில 2 ஐஸ் க்ரீம் ஃப்ரெண்ட் ஸ்பான்சர் பண்ணா. வீட்ல வந்து ஃப்ரீசர்ல இருந்த பிஸ்தா பாரையும் விடாம சாப்பிட்டு முடிச்சிட்டு அந்த நாள் முழுக்க வேலை செய்த களைப்புல (கண்டுக்காதீங்க மக்கள்ஸ்) கவுந்தாச்சு.

காலைல எழுந்திருக்கும் போதே வயிறு ஒரு மாதிரி இருந்தது. “வெளில சாப்பிடும் போது வயிற்றுப் பிரச்சனையெல்லாம் ஜகஜம்”ன்னு வடிவேலு மாதிரி எனக்கு நானே சமாதானம் சொல்லிட்டு, காலை ஷாப்பிங் ப்ளானை அவகிட்ட கெஞ்சி சாயாங்காலத்துக்கு மாத்தினேன். நம்மூர் தயிர் சாதம் என்னவோ ரொம்ப காம்ப்ளிகேடட் டிஷ் மாதிரி நினைச்சுக்கிட்டு “விக்கி எனக்கு தயிர் சாதம் பண்ணக் கத்துக்குடு”ன்னா ஃப்ரெண்ட். ஓகே. வேலை மிச்சம்னு ரெண்டு பேரும் தயிர் சாதம் பண்ணி சாப்பிட்டு மறுபடியும் தூங்கிட்டோம்.

சாயங்காலம் எழுந்தா தலை தரைலேயும் கால் ஃபேனுக்குப் பக்கத்திலேயும் போயிட்ட மாதிரி ஒரு ஃபீல். வயித்துக்குள்ள சுனாமியே வந்த மாதிரி இருக்கு. அலறியடிச்சிட்டு டாக்டர் கிட்ட போனா, எல்லா டெஸ்ட்டும் பண்ணிட்டு, கொஞ்சம் பெரிய நோட்டுகளையும் பிடுங்கிகிட்டு “உங்களுக்கு ஃபுட் பாய்ஸன் ஆகியிருக்கு. ஸோ நோ சாலிட் ஃபுட் ஃபார் அ வீக்” அப்படின்னுட்டார். அங்கேயே உஜாலா சிஸ்டர் ஒருத்தரைக் கூப்பிட்டு “டேக் கேர் ஆஃப் ஹெர். ஷி இஸ் இன் வெரி பிட்டி கண்டிஷன்” அப்படின்னார். கண்ணுல ஜலம் கட்டிடுத்து. யோகி வேற இன்னும் வரல.

அந்த சேச்சியும் படுக்கைல படுக்க வெச்சு குளுக்கோஸ் பாட்டிலை தலைகீழாத் தொங்க விட்டு “டேக் கேர் மேடம்”ன்னு சொல்லிட்டுப் போயிடுச்சு. ஒரு வாரத்துக்கு ஏதோ ஜூஸாக் குடுத்து தேத்திக் காப்பாத்திட்டாங்க. யோகி, புதுப் பொண்டாட்டி கிடைக்கும்ன்னு நினைச்ச சந்தோஷத்துக்குக் குழி பறிச்சாச்சு. ;)


ஊட்டுக்காரர் ஊட்டுல இல்லைன்னு வெளில போய் சாப்பிட்டது ஒரு குத்தமா... அதுக்கு ஒரு வாரம் பெட்டா... என்ன கொடுமை இது. இதுனால இனிமே ஆணியே பிடுங்க வேண்டாம்ன்னு வெளில சாப்பிடுறதையே விட்டுடலாம்ன்னு நினைச்சப்போ புது ரெஸ்டாரண்ட் மெனு கார்ட் ஒண்ணு கைல வந்தது. விடவா முடியும்.... மறுபடியும் ஃபுட் பாய்ஸன் ஆனா, அதே சேச்சி காப்பாற்றும். :)

எதுக்கு இந்த மொக்கைப் பதிவுன்னு குமுறுபவர்களுக்கு: என்ன ஆனாலும் என் மொக்கைல இருந்து மட்டும் தப்பிக்க முடியாது நீங்க. ஆங்ங்ங்ங்..

47 comments:

மங்குனி அமைச்சர் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........................

Chitra said...

:-)

Anonymous said...

hahaha....

hio hio....

erunga again vaasithuvitu varukiren...

Anonymous said...

அடிப்பாவி இம்புட்டு நடந்துபோச்சா? இப்ப ஓக்கேவா? அப்படின்ன திருப்பூர் ப்ரொக்ராம்? :((

Jerry Eshananda said...

போட்டோ போட்டு புரூப் வேறயா? நம்புறோம் எசமான் நம்புறோம்.

'பரிவை' சே.குமார் said...

ippa eppadi irukku...

Anonymous said...

முன்னமே
சொன்னேன்ல
கேட்டியா
கேட்டியா ..(என்ன நானே கேட்டுகிட்டேங்க)
ரெம்ப நாள் கழிச்சு வந்து இருக்காங்க
கொஞ்சம் கவனமா இருக்கணும் சொன்னேன்
கேக்கல..கேகம ஆர்வ கோளார்ல விக்கியோட பதிவு படிச்சா எப்படித்தான் :))))))

இப்போ பாரு பதிவ படிச்சுபுட்டு
லூசு போல சிரிச்சுகிட்டு இருக்க வேண்டியதஇருக்கு...

sari paravalai.
healtha பாத்துகோங்க..

நன்றி
வாழ்க வளமுடன்
வருத்த படாத வசிப்போர்
சங்க செயலாளர்
காம்ப்ளான் சூர்யா

தராசு said...

எம்பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு ஜனகராஜ் கத்திகிட்டு சந்தோஷப் படுவாரே, அதுதான் ஞாபகத்துக்கு வருது. யோகி ஊருக்கு போனா இத்தனை கும்மாளமா?????

Anonymous said...

ennada ethu..

kastapattu

tamila type pannom..

innum varla....

மன்னார்குடி said...

சரியான உல்டா தங்கமணி கதையால்ல இருக்கு.?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அடடா..:(
இவ்ளோ நடந்திருக்கா..

தாதா வுக்கு ஒன்னுமாகலைன்னா என்ன அர்த்தம்.. வெளியே போய் சாப்பிடறதுக்கு முன்ன நீயாக வீட்டில் சாப்பிட்ட எதோ தான்.. ஹிஹி..

ஹுஸைனம்மா said...

வாவ்!! உங்க ஊர்ல ஹாஸ்பிடல்ல இவ்வளவு அழகா டிஸைன் போட்ட பெட்ஷீட்லாம் விரிப்பாங்களா? ;-)

Raghu said...

//வெள்ளிக் கிழமை ஒரு நாள் ஆஃபிஸ். அடுத்து 2 நாள் லீவ்//

இந்த‌ க‌ண்டுபிடிப்புக்கு காப்பிரைட் வாங்கி வெச்சுக்கோங்க‌. உங்க‌ளுக்கு நோப‌ல் ப‌ரிசு கிடைக்க‌ற‌துக்கான‌ வாய்ப்பு பிரகாச‌மா இருக்கு :))))

//அவரோட க்ரெடிட் கார்டை எடுத்துக்கிட்டு ஜாலியா ஊர் சுத்தலாம்//

உங்க‌ ஹாண்ட்பேக்ல‌ ப‌ர்ஸுங்க‌ற‌ ஒரு பொருளே இருக்காதா ;)

த‌மிழ்ப்ப‌ட‌ம் தியேட்ட‌ர்ல‌ பார்க்க‌ணும், இல்ல‌ன்னா நால‌ஞ்சு ந‌ண்ப‌ர்க‌ளோட‌ பார்க்க‌ணும். த‌னியா பார்த்தா கொஞ்ச‌ம் மொக்கையாதான் இருக்கும்.

//கேப்டன் ஆடிக்கிட்டிருக்கார்//

இந்த‌ வ‌ய‌சுல‌யும் ஹ்ரித்திக் மாதிரி ஆடுறாரே, அத‌ பாராட்டுவீங்க‌ளா, அத‌ விட்டுட்டு....:(

க்ளுக்கோஸ் ஏறும்போதும் போட்டோ எடுத்துருக்கீங்க‌ளே, ப‌திவுல‌க‌த்துக்கான‌ உங்க‌ அர்ப்ப‌ணிப்பை பாராட்டாம‌ இருக்க‌ முடிய‌ல‌. அப்ப‌டியே அந்த‌ சேச்சி போட்டோவும் போட்டிருந்தீங்க‌ன்னா, வ‌ரலாற்றுல‌யோ, வேதியிய‌ல்லியோ உங்க‌ பேர் ப‌திஞ்சிருக்கும், மிஸ் ப‌ண்ணிட்டீங்க‌

//யோகி, புதுப் பொண்டாட்டி கிடைக்கும்ன்னு நினைச்ச சந்தோஷத்துக்குக் குழி பறிச்சாச்சு//

பெட்ட‌ர் ல‌க் நெக்ஸ்ட் டைம் யோகி, முய‌ற்சித‌ன் மெய்வ‌ருத்த‌க் கூலித‌ரும் ;)))

கயல்விழி நடனம் said...

உங்களுக்கு இன்னொரு டைம் இப்படி ஆக கூடாதுன்னு நான் வேண்டிகிறேன்... இதே மாதிரி இன்னொரு மொக்கைய நாடு தாங்காது.. :)

ப்ரியமுடன் வசந்த் said...

போன சைனீஸ் யோ போஸ்ட்ல சாப்ட்ட பதார்த்தம் எல்லாம் படமா போட்ருந்தீக தாயி இந்த வாட்டி காணோம்?

சீக்கிரம் சரியாயிடும் யோகி பண்ணுன புண்ணியம்தான் உங்கள காப்பாத்திருக்கு..

Ahamed irshad said...

தேர்தெடுத்த மொக்கை..

Vidhoosh said...

ரெண்டு டஜன் கண்ணாடி வளையல்கள் அனுப்பி இருந்தேனே.. பொம்பளையா இருந்துக்கிட்டு இப்டி கைல வளையல் போடாமையா இருக்கிறது? எல்லாம் என்னத்துக்கு ஆகிறது? :))
=========


take care vikki.

Anonymous said...

சே! போட்ட ப்ளானெல்லாம் இப்படி க்ளூக்கோஸா கரஞ்சிட்டே!!

இப்ப பரவால்லயா? உடம்ப பாத்துக்கோங்க..

ராமலக்ஷ்மி said...

சீக்கிரமா தேறி வந்து அடுத்த பதிவு போடுங்க:))!

☼ வெயிலான் said...

ஓஹோ! நல்ல வேளை யோகி தப்பிச்சார்.

பனித்துளி சங்கர் said...

//////ஹாய் ஹாய் ஹாய்.... ரொம்ப நாளைக்கப்புறம் மறுபடியும் வந்துட்டேன். இந்த 10 நாளா என்னைத் தேடினவங்கள்லாம் (அப்படி யாராவது இருந்தா) இனிமே புயல் கிளம்பிடுச்சுன்னு சூதானமா இருந்துக்கோங்க./////////


ஆஹா ! சுனாமிக்கே அறிமுகமா ? ம்ம் கலக்குறீங்க

creativemani said...

அடப் பாவமே.. Get Well Soon.. Take care!

Anonymous said...

//அவர் இல்லைன்னா நோ சமையல் //

இருந்தா மட்டும்.

ஹைய்யோ ஹைய்யோ

Anonymous said...

ஹாஸ்பிடல்ல என்ன சாப்பாடு?

CS. Mohan Kumar said...

Take care; hope you are allright now

Vidhya Chandrasekaran said...

ஹுஸைனம்மா & சின்ன அம்மிணி :))

உன்னையும் நம்பி ஒருத்தி ரெசிப்பி கேட்ருக்காளே. அவ(ங்க)ள சொல்லனும். ஹுக்கும்.

Prathap Kumar S. said...

ஆவ்வ்வ்வ்.... தூக்கம் வராம கஷ்டப்பட்டேன்...முதல் ரெண்டு பாராவே படிச்சதுமே தூ(து)க்கம் வந்துடுச்சு...தாங்கஸ்... முடில...படு மொக்கையா இருக்கு....

mightymaverick said...

//ஏன்னா அவர் இல்லைன்னா நோ சமையல், இஷ்டத்துக்கு டி.வி பார்க்கலாம், தமிழ்ப் படங்கள் பார்க்கலாம்.//

என்னிக்கு சமையல் எல்லாம் பண்ணி இருக்கோம்... இன்னிக்கு பண்ண... அப்புறம் யோகியும் நிறைய தமிழ் படம் பார்ப்பார்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்... பாவம் அவர்... இப்படியா பழிக்கிறது...

//அங்கே கேஸினோ வாசிச்சிட்டிருந்தவரை ரசிச்சுக்கிட்டே யோகிக்கு ஃபோன் பண்ணி உங்க பெர்த் டே ட்ரீட் இங்கே தான்னு சொன்னேன். அவர் வயிறெரிஞ்ச புகைச்சல் வாசனை எனக்கு வந்ததும், ஃபோனை வெச்சுட்டேன்.//

அவருக்கு வயிறு புகைஞ்சது... உங்களுக்கு வயிறு வெந்துடுச்சு... இதுக்கு தான் இப்படி அவரை விட்டுட்டு கட்டு கட்டுன்னு வெளியே சாப்பாட்டை கட்டக்கூடாதுன்னு சொல்லுறது...

//சாயங்காலம் எழுந்தா தலை தரைலேயும் கால் ஃபேனுக்குப் பக்கத்திலேயும் போயிட்ட மாதிரி ஒரு ஃபீல். வயித்துக்குள்ள சுனாமியே வந்த மாதிரி இருக்கு.//

புயலையே சுனாமி புரட்டி போட்டு தலை கீழாக நிக்க வச்சிடுச்சா??? எல்லாம் யோகியை விட்டுட்டு போய் சாப்பிட்டது தான் காரணம்...


//யோகி, புதுப் பொண்டாட்டி கிடைக்கும்ன்னு நினைச்ச சந்தோஷத்துக்குக் குழி பறிச்சாச்சு. ;)//

யோகி பாவம்...


//மறுபடியும் ஃபுட் பாய்ஸன் ஆனா, அதே சேச்சி காப்பாற்றும். :)//


சேச்சி பாவம்...

Prabhu said...

நல்லாதானே ‘போய்’கிட்டு இருந்துச்சு ..../// ஹி.. ஹி..

எல் கே said...

//. என்ன கொடுமை இது. இதுனால இனிமே ஆணியே பிடுங்க வேண்டாம்ன்னு வெளில சாப்பிடுறதையே விட்டுடலாம்ன்னு நினைச்சப்போ புது ரெஸ்டாரண்ட் மெனு கார்ட் ஒண்ணு கைல வந்தது. விடவா முடியும்.... மறுபடியும் ஃபுட் பாய்ஸன் ஆனா, அதே சேச்சி காப்பாற்றும். :)/

Rangamani paavam
ippadiku appavi Rangamanigal sangam

துபாய் ராஜா said...

:((

"உழவன்" "Uzhavan" said...

அட பாவமே..

க ரா said...

:)

நாளும் நலமே விளையட்டும் said...

எல்லாம் ஜகஜம்! ஆகிறவரை உடம்பைப் பார்த்துக்குங்க!
அது என்ன எல்லா நர்சும் சேச்சியாவே?
இருந்தாலும் நீங்க அவ்வளவு ஐஸ் க்ரீம் சாப்பிட்டு இருக்க கூடாது!

உங்க ரெசிபி! நல்லா இருக்குமா?

சுசி said...

உடம்ப பாத்துக்கோங்க விக்னேஷ்வரி.. :((

Madumitha said...
This comment has been removed by the author.
Rangan Kandaswamy said...

Take care.

Anonymous said...

ரெண்டு டஜன் கண்ணாடி வளையல்கள் அனுப்பி இருந்தேனே.. பொம்பளையா இருந்துக்கிட்டு இப்டி கைல வளையல் போடாமையா இருக்கிறது? எல்லாம் என்னத்துக்கு ஆகிறது? :))

========= paaruda naney avangalku udambu sari ellieyenu kavalapadtukitu eruken..oru nalla padivugal varama poidumonu...

evanga kavalai..வளையல் ..

ennatha cholla..

butterfly Surya said...

Get well soon..

மொக்கையும் நல்லாதான் இருக்கு..

விக்னேஷ்வரி said...

வாங்க மங்குனி.

வாங்க சித்ரா.

வாங்க சூர்யா.

ஆமா விஜி. திருப்பூர் ப்ரோக்ராம் தள்ளிப் போச்சு. இப்போ பூனா போறேன். :)

ஹிஹிஹி... வாங்க ஜெரி.

நல்லா இருக்கேன் குமார். நன்றி.

நன்றி சூர்யா.

ஹிஹிஹி... அப்படித் தான் தராசு.

விக்னேஷ்வரி said...

வாங்க கனிமொழி.

ஸாரி, சூர்யா. கொஞ்சம் நேரமாகிடுச்சு.

ஆமா மன்னார்குடி, எங்களுக்கும் அப்படித் தான். :)

ஆமா முத்தக்கா. தாதா ரொம்ப ஸ்ட்ராங்க. நான் இல்லை.

ஹூஸைனம்மா, நானும் ட்ரிப்ஸ் ஏறிக்கிட்டிருக்கும் போது யோகியைக் கூப்பிட்டு பெட் ஷீட் நல்லாருக்குன்னு சொன்னேன். :)

எனக்கு நோபல் பரிசு கிடைக்கும்னு தெரியும் ரகு. நன்றி. ;)
பர்ஸ் பேக்ல வெச்சுக்குறதுக்குத் தான். வெளிய எடுத்து செலவு பண்ண இல்ல.
எப்படிப் பார்த்தாலும் மொக்கை தான் ரகு.
இருங்க, கேப்டன் ஆடுற சாங்க்ஸ் எல்லாம் ரைட் பண்ணி அனுப்பி வைக்கிறேன்.
சேச்சி ஃபோட்டோவுக்கு அலையாதீங்க.
யோகி தலையெழுத்தை மாத்த முடியாது. :)

ம், அந்த பயம் இருக்கட்டும் கயல். ;)

ஹிஹிஹி.... நன்றி வசந்த்.

விக்னேஷ்வரி said...

வாங்க அஹமத்.

கைல ட்ரிப்ஸ் போடும் போது சேச்சி தான் வளையலைக் கழட்டிடுச்சு விதூஷ்.

ஆமா நாஸியா. ஒரே சோகம். ம், இப்போ சரியாகிட்டேன். நன்றி.

தேறி வந்து அடுத்தப் பதிவு போட்டாச்சு ராமலக்‌ஷ்மி. :)

சாப்பாட்டுல இருந்து தான் தப்பிச்சார் வெயிலான். என்கிட்ட இருந்து இல்ல :)

வாங்க சங்கர்.

நன்றி மணிகண்டன்.

அண்ணாச்சி சிங்கத்தின் குகைக்குள்ளே வந்து பிழைச்சுப் போனதுக்கப்புறம் சிங்கத்தைப் பார்த்து சிரிப்பா....

விக்னேஷ்வரி said...

ஒரு சாப்பாடுமில்ல அம்மிணி, ஒரே ஜூஸும் தண்ணியுமா குடுத்துப் படுத்திட்டாங்க. :(

நன்றி மோகன். சரியாகிட்டேன்.

வித்யா சிரிக்கக் கூட்டு சேர்றீங்களா? நடக்கட்டும்.
சரி, விடுங்க. அடுத்த ரெசிபி உங்களுக்குத் தான்.

ம், அது பிரதாப். நல்லா தூங்குங்க.

பழிக்கலை வித்தியாசமான கடவுள். இருந்தாலும் இல்லாதப்போ இருக்குற சுதந்திரம் தனி தானே.
இனிமே எங்கே சாப்பிடப் போனாலும் யோகியைக் கூட்டிட்டுப் போறேன்.
நாம இருக்கும் போது சுத்தி இருக்குற எல்லாருமே பாவம் தான். :)

பப்பு, இருக்கட்டும் கவனிச்சுக்குறேன்.

ரொம்ப அப்பாவி தான் நீங்க LK.

வாங்க துபாய் ராஜா. பதிவு வாசிச்சுட்டெல்லாம் அழக் கூடாது.

விக்னேஷ்வரி said...

சரியாகிட்டேன் உழவன்.

வாங்க இராமசாமி கண்ணன்.

வாங்க நாளும் நலமே. சரி விடுங்க, அதான் ஐஸ்க்ரீமெல்லாம் கரைஞ்சு போச்சே.
ஹிஹிஹி... ரெசிபி.......

தேங்க்யூ சுசி.

நன்றி ரங்கன் கந்தசாமி.

இன்னிக்கு வேலை இல்லையா காம்ப்ளான் சூர்யா.... ;)

நன்றி பட்டர்ஃப்ளை சூர்யா.

Priya said...

இதுக்குதான் அவர் இல்லாதப்ப பாத்து நல்ல பொண்ணா நடந்திருக்கனும்.இப்ப பாத்திங்களா என்னாச்சுன்னு:)

இப்போ எப்படி இருக்கு உங்க உடல் நிலை? Take care.

சாந்தி மாரியப்பன் said...

//மறுபடியும் ஃபுட் பாய்ஸன் ஆனா, அதே சேச்சி காப்பாற்றும்//

இந்த தன்னம்பிக்கைதான் முக்கியம்..எதுக்கும் ஹாஸ்பிட்டல்ல பெட் ரிசர்வ் செஞ்சுட்டு அப்புறமா சாப்பிடப்போங்க :-))

விக்னேஷ்வரி said...

ஆமா ப்ரியா. இனி கவனமா இருக்கேன்.
I am alright now. Thank you.

ஹிஹிஹி... நல்ல ஐடியா அமைதிச்சாரல். அப்படியே செய்றேன்.