
கன்றின் பார்வையுடன்
நான் நானாக...
கன்றின் பார்வையுடன்
Fashion & Interior - இது தான் இந்த தொடர் பதிவில் அலசப் படப் போவது.உடனே பொண்ணுங்களுக்கான தொடர்ன்னு நினைச்சு ஓடும் ஆண்களே, ஒரு நிமிஷம். நீங்களும் உடுத்துறீங்க. ஒரு வீட்ல இருக்கீங்க. உங்களையும், உங்களின் இடத்தையும் அழகாக வைக்கும் யுத்திகள் உங்களுக்கும் தெரிந்திருக்கட்டும்.
இந்த வாரம் Fashion சார்ந்த சிறிய அறிமுகம் மட்டுமே.
ஆள் பாதி ஆடை பாதி என்பது எவ்வளவு உண்மையான விஷயம். எவ்வளவு சுமாரானவரையும் அழகாக்கும் ஆடைகள். எவ்வளவு அழகானவரையும் பொலிவிழக்கச் செய்பவையும் அவையே.
யாருக்கு எந்த மாதிரி ஆடைகள் அழகாக, சரியாக இருக்கும் என்பது பற்றிய பெண்களுக்கான டிப்ஸ் இங்கே.
பெண்களுக்கான முக்கியமான விஷயம் இந்த ஆடைகள். ஆண்களை விட பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை பல. ஏனெனில், அழகாய் இருக்கப் படைக்கப்பட்டவர்களே பெண்கள் என்பது என் கருத்து. அழகாக இருப்பது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விஷயமாகும். அது ஆடைகள் மூலம் சாத்தியமாவது மறுக்க முடியாதது.
* எப்போதும் பளிச்சென்ற நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். அவை உங்களை ரசனையானவரகவும் காட்டும்.
* ஆடைகளை சிக்கென அணியுங்கள். தளர்ச்சியான ஆடைகளைத் தவிர்த்தல் நல்லது.
* குள்ளமானவர்கள் நீளமான ஒல்லியான பேன்ட் அணியலாம்.அது உங்களின் உயரக் குறைபாட்டை மறைக்கும்.
* ஒரே நிற ஆடையாய் இல்லாமல் வண்ணங்கள் கலந்த மேலாடைகள் உங்களை உயரமாகவும் ஒல்லியாகவும் காண்பிக்கக் கூடியவை. ஆனால், கலந்திருக்கும் வண்ணங்கள் Monochromatic ஆக இருக்கட்டும்.
* நீளவாக்கில் டிசைன் செய்யப்பட்ட ஆடைகள் உங்களை ஒல்லியாகவும்,உயரமாகவும் காட்டும்.
* உயரமான, ஒல்லியானவர்கள் குறுக்கு வாக்கில் உள்ள டிசைன்களை அணிவது நல்லது. அது உங்களின் உயரத்தைக் குறைத்துக் காட்டக் கூடியது.
* அகன்ற கழுத்து கொண்ட ஆடைகள் பெண்களை ஒல்லியாகக் காட்டக்கூடியவை.
* நீளமான பாவாடைகளுடன் (Long skirts) டி-ஷர்ட் அணிவது உங்களை குண்டாகக் காட்டும். தவிர, நல்ல combination உம் இல்லை. எனவே அதைத் தவிர்ப்பது நல்லது. Long Skirt உடன் ஸ்லீவ்லெஸ் டாப் எடுப்பாகச் செல்லும்.
* எந்த ஆடை அணிந்தாலும் உங்கள் உள்ளாடைகள் வெளியில் தெரியா வண்ணம் அணியுங்கள். அது உங்களை விரசமாகக் காட்டாதிருக்கும்.
* கருப்பு நிற லிப்ஸ்டிக் தவிருங்கள்.
* பகல் நேரத்திற்கு அதிக மேக்கப் வேண்டாம். இயல்பான தோற்றம் நல்லது.
* உங்களிடம் இருக்கும் அனைத்து அணிகலன்களையும் ஒன்றாக எடுத்துப் போட வேண்டாம். உதாரணத்திற்கு எல்லா விரல்களிலும் மோதிரம் போடுவது அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சங்கிலிகள் அணிவதைத் தவிர்க்கலாம்.
* உங்கள் தோற்றத்தின் ப்ளஸ்ஸாக நீங்கள் நினைக்கும் விஷயம் தெரியும் விதமும், மைனசாக நினைக்கும் விஷயத்தை மறைக்கும் வகையிலும் ஆடைகளை உடுத்துங்கள்.
* அழகாகத் தெரிய வேண்டுமென்பதற்காக உங்களுக்கு சௌகரியமில்லாத ஆடைகளை அணிய வேண்டாம்.
* உங்கள் கால நிலைக்குத் தகுந்த உடைகளைத் தேர்ந்தெடுங்கள்.
* உங்கள் தலையலங்காரம் எப்போதும் உங்கள் உடைக்குப் பொருத்தமானதாக இருக்கட்டும்.
* வேலை பார்க்கும் இடத்தில் உங்களின் உடை உங்களின் ரசனையைக் காட்டுவதாகவும், உங்கள் மீதான மதிப்பைக் குறைக்கா வண்ணமும் இருக்கட்டும். தோள்கள், முதுகு, வயிற்றுப் பகுதிகளை முழுவதுமாக மறைப்பதாக இருக்கட்டும் உங்கள் ஆடைகள்.
* உங்களின் செருப்பு உங்கள் பாதம் முழுவதையும் உட்கொண்டிருக்கட்டும்.
பெண்களின் ஆடை அலமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10பொருட்கள்.
- இளநிற பளிச்சென்ற ஒரு காட்டன் புடவை / சுடிதார்.
- சரியாக ஃபிட்டாகும் ப்ரான்டெட் ஜீன் (Branded Jean).
- 'V' கழுத்து டாப்.
- வெள்ளை மற்றும் பிரவுன் நிற பெல்ட்.
- பட்டுப் புடவை அதற்கு ஒத்துப் போகும் அணிகலன்களுடன்.
- டிசைனர் புடவை அதற்கான அணிகலன்களுடன்.
- நெடியில்லாத பெர்ஃப்யூம்
- மேக்கப் கிட்.
- ஒரு வெள்ளை மற்றும் கருப்பு நிற உடை.
- குறைந்தது இரண்டு Hand Bgas.
இதெல்லாம் முடியுமான்னு யோசிக்காதீங்க. கொஞ்சம் கொஞ்சமா உங்க மேல அக்கறை எடுக்க ஆரம்பிங்க. உங்களுக்கே பிடிக்கும். கலக்குங்க லேடீஸ்
நம்ம ஊர் ஆண்கள் தான் உலகத்திலே அழகான ஆண்மக்களாக நான் நினைப்பவர்கள். ஆணுக்கு அழகு அவர்களின் மாநிறமே. ஆனால், இவ்வளவு அழகான நம்மூர்ப் பசங்க அணியும் ஆடைகளைப் பார்த்தால் கோபமா வரும். ஏன்பா உங்களுக்கு ரசனையே இல்ல? உங்களுக்கான டிப்ஸ் அடுத்த பதிவில். கொஞ்சமாவது ஸ்மார்ட்டா இருங்க பசங்களா...
லோடி தினத்தன்று இந்தப் பாடலைப் பாடி பெரியவர்களிடமிருந்து சிறியவர்கள் பணம் வாங்குவது வழக்கம்.(பாட்டெல்லாம் பாடாம கால்ல விழுந்தே கலெக்ஷன் கரெக்ட் பண்ணிட்டோம்ல நாம)
நம்மூர்ப் பொங்கலுக்கு சிறிதும் குறைவில்லாமல் போகும் கலாட்டாக்கள். முழுப் பஞ்சாபியாய் மாறி விட்ட பின் பொங்கல் சாப்பிட முடியலைன்னு மட்டும் வருத்தப்பட முடியுமா.
காலையில் பொங்கலும், கையில் கரும்புமாக பொங்கல் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Copyright 2009.விக்னேஷ்வரி Powered by Blogger
Blogger Templates created by Deluxe Templates
Images by Indeziner