சனிக்கிழமை கரோல்பாகின் நீண்ட பஜாரில் ஷாப்பிங். இரவு வீடு திரும்பி, சமைத்து, சாப்பிட்டு, பேக் செய்து, அவருக்கு ஒரு வாரத்திற்கு சமைத்து வைத்து, காலையில் நான்கு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி விமான நிலையம் சென்று அயர்ந்த கண்களுடன் ஏர் இந்தியா ஆன்ட்டிகளின் வணக்கம் ஏற்று ஜன்னலோர இருக்கையைத் தேடி அமர்ந்த அடுத்த நிமிடத்தில் தூங்கிப் போன அசதியுடன் கோவை வந்திறங்கினேன். கோவையிலிருந்து திருப்பூருக்கான ஒரு மணி நேரப் பயணம் மிகுந்த அயற்சியைத் தந்தது. ஆனால், அந்த அலுப்பே தெரியா வண்ணம் அந்த இள மாலைப் பொழுதைப் பொன் மாலையாய் மாற்றிய பதிவ நண்பர்களுக்கு மிகப் பெரிய நன்றியைப் பகிர்ந்து பதிவைத் தொடங்குகிறேன்.
"ஞாயிற்றுக் கிழமை மதியம் திருப்பூர் வருகிறேன் பதிவர்களை சந்திக்க முடியுமா" என்று கேட்டதற்கு, தலைவர் இல்லாத நேரத்தில் எப்படி என யோசித்தாலும் தலைவரே மகிழும் அளவிற்கு பிரமாதமாக நடத்தி விட்டார் "திருப்பூர் பதிவர் பேரவைப் பொருளாளர்" சுவாமிநாதன். (நீங்க வாங்கிக் குடுத்த சாப்பாட்டிற்கு பட்டம் போதுமா...)
உண்மையிலேயே எதிர்பாரா வண்ணம் பல நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சியே.
கோவையிலிருந்து விஜி, தாரணிப் பிரியா, வடகரை வேலன் வர, கதவு திறந்து வரவேற்ற என்னைப் பார்த்து கொஞ்சம் பயந்து போனாலும் சுதாரித்து சிரித்ததற்கு நன்றி. (தூங்கிட்டிருக்கும் போது எழுப்பினா என்ன பண்ண...)
முதல் அரை மணி நேரம் மூன்று பெண்களின் பாக்கியத்தால் வடகரை வேலன், "அண்ணாச்சி"யிலிருந்து பதவி உயர்வு பெற்று "சித்தப்பு"வானார். (இன்னும் எத்தனை நாளைக்கு தான் வயசு கேட்டா பேச்சை மாத்துவீங்க சித்தப்பு...)
விஜியின் கைப்பக்குவத்தில் சாம்பார் சாதம் அருமை. (ராம்க்கு நல்ல ட்ரைனிங் குடுத்திருக்கீங்க விஜி.)
அமைதியாக இருந்தாலும் தேவைப்படும் நேரங்களில் அரட்டையடிக்கவும், கலாய்க்கவும் மறக்கவில்லை தாரணி. அவரின் ஒன்னாம் தேதி சபதம் வெற்றியடைய வாழ்த்துக்கள். (அது உண்மையிலேயே நடந்தா சொல்லுங்க தாரணி.)
அடுத்ததாய் உள்நுழைந்தார் பொருளாளர் சுவாமிநாதன். திருப்பூர் வரும் பதிவர்களைக் கவனித்தே அவர் இளைத்து விட்டதை உணர முடிந்தது. "ஆமா, அறை எண் 308 தான்" என அவர் மற்ற பதிவர்களுக்கு கைபேசியில் வழி சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், சித்தப்பு "அறை என 308 இல் பிசாசு" என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டது அவரின் எளிமையைக் காட்டுகிறது.
அடுத்ததாக ராமன் வந்தார். விஜி அவரை கலாய்க்கிறார் என்று கூட தெரியாமல் அவரின் நக்கல்களுக்கும் பொறுமையாய் பதில் சொல்லிக் கொண்டிருந்த நல்லவர் அவர். அவர் டயட்டீசியன் என அவர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பார்த்தாலே தெரிந்தது. (உங்க கம்பெனிக்கு நீங்க தாங்க மாடல்)
இவர்களின் சுவாரசியக் காலாய்த்தல்களுக்கு நடுவே அறையில் நுழைந்தார் ஒரு ஐயப்ப சாமி. நம் முரளிகுமார் பத்மநாபன். கொஞ்ச நேரம் எல்லார் பேசுவதையும் உட்கிரகித்து விட்டு பின் பேச ஆரம்பித்தவர் பல விஷயங்களைப் பேசினாலும், மற்றவர் கருத்துகளை ஆமோதித்தும், பேச விட்டும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் ஹீரோவான எஸ்.ரா.வைப் பற்றிய பேச்சும், அவர் மீதான பதிவர்களின் பார்வையும் வித்தியாசமானது. அதையடுத்து, சித்தப்புவிடம் "இலக்கியம் என்றால் என்ன" என்றெல்லாம் கேள்விகளை அவர் ஆரம்பித்த நேரத்தில் மகளிரணி அறையை விட்டு வெளிநடப்பு செய்தது. (இலக்கியமா..... பைத்தியக்காரன் கிட்ட போய் கேளுங்க முரளி. ஒரு பட்டறை போட்டு விளக்குவார்).
விஜி வெளியேறிய போது ராமன் கொடுத்த எபெக்ட் தான் அந்த நாளின் டாப் ஆக்ஷன். (ஆனால் அவர் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை என்பது அவரின் தனிப்பட்ட சோகம்)
இதனிடையே ஓஷோவைப் பற்றி பேச அடுத்ததாக அறைப் பிரவேசம் செய்தார் பேரரசன். எல்லோரையும் அழ வைத்த விஜி, இவரையும் விடவில்லை. ஆனாலும் கன்னக் குழி சிரிப்புடனும், "உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா...." என்ற ஒரே பிரம்மாஸ்திரத்தாலும் (ஏன் இந்த நடிப்பு பேரரசன்?) விஜியின் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றப்பட்டார். ஆனால், என்னை தமிழச்சி என இவர் நம்ப மறுத்தது தான் சோகம். (உங்களுக்கு வரும் மனைவியின் தமிழ் உச்சரிப்புகள் தாறுமாறாகப் போக என சபிக்கப்படுகிறீர்கள் என்னால் :) )
Last but not Least என்ற தலைவரின் வசனப்படி தலைவரின் ரசிகர் கிருஷ்ண குமார் (பரிசல்காரன்) குடும்பத்தோடு வந்தது அன்றைய போனஸ். லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தது போல் வித்தியாசமாக வந்தார் நண்பர். அவரின் குட்டீஸ் அவரைப் போலல்லாமல் ரொம்ப ஸ்வீட். ஏங்க கிருஷ்ண குமார், சாயங்காலம் ஏழு மணிக்கு மேல கார்ல போறதுக்கு எதுக்குங்க தொப்பி? (என்னா அலும்பலு.... )
ஒரு வழியாக வெளியில் சாப்பிட செல்லலாமென அனைவரும் அவரவர் வாகனங்களில் கிளம்பினர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்த அதே திருப்பூர். பெரிதாக எந்த மாற்றமும் நிகழவில்லை. அதே உடைந்த ரோடுகள், நெரிசலான போக்குவரத்து, போக்குவரத்து விதிகள் என்றால் என்ன எனக் கேட்கும் திருப்பூர்வாசிகள். ஒரு வேளை இது தான் திருப்பூருக்கு அழகோ?
நல்ல தென்னிந்திய சாப்பாடு வேண்டுமென்றதால் தேர்வானது ரமணாஸ். அங்கேயும் யாரும் பேசுவதை நிறுத்தவில்லை. எங்களுக்கு உணவு பரிமாறியவர் ஒரு விதமாக முழித்தது தனி கதை. ரமணாசில் காத்திருந்தது அடுத்த மகிழ்ச்சி: சுவாமிநாதனின் மனைவியும், குழந்தையும். முதலில் அம்மாவைப் போல் அடக்கமாக அமைதியாக இருந்த குழந்தை, அடுத்த டேபிளுக்கு ஒரு சக வயது சிறுவன் வந்ததும் என்னா லுக்கு, சைட்டு.... இந்த டேபிளிருந்து அங்கு தாவி விழாத குறை. "சுவாமி, பொண்ணுக்கும் இப்போவே ட்ரைனிங்கா" என்றதைக் கேட்டு அவர் அசடு வழிந்தது ஒரு புறம்.
சாப்பிட்டு வெளியில் வந்தால் எங்களைப் போலவே மகிழ்ச்சியாய், மலர்ச்சியாய்த் தெரிந்தது வானம். லேசான தூறலுடன் திருப்பூருக்கு வித்தியாசமான காலநிலை. அனைவரும் அதே புன்னகையுடன் விடை கொடுத்துப் பிரிந்தோம். அனைவர் மனதிலும் ஒரு அழகான பொழுதிற்கான நாளேடுக் குறிப்பு எழுதப்பட்டிருந்தது.
குறிப்பு: புகைப்படங்களை சீக்கிரமே தலைவரோ, செயலாளரோ, பொருளாளரோ வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம் :) .
59 comments:
அப்படியே சென்னை வந்தா ஒரு எட்டு எங்க எல்லாரையும் பார்த்துட்டு போங்க்..
பரிசல் வந்தாரா..? என்ன ஆச்சர்யம்.. ?
அவரின் குட்டீஸ் அவரைப் போலல்லாமல் ரொம்ப ஸ்வீ//
கிருஷணா ஸ்வீட்ஸ்????
தமிழகத்தில் புயல்ன்னு டிவில சொன்னப்ப நமபல. இப்ப நம்பறேன்.
சமைத்து சாப்பிடு, பேக் செய்து அவருக்கு ஒரு வாரத்திற்கு சமைத்து” எப்படிங்க? ஒரு வேளை கூட வெளில சாப்புட கூடாதா?
nice
வணக்கம், அன்றைய நிகழ்வுகளை நேரடியாக வர்ணனை செய்ததுபோல இருக்கிறது, உங்கள் பதிவு.
//ஒரு வழியாக வெளியில் சாப்பிட செல்லலாமென அனைவரும் அவரவர் வாகனங்களில் கிளம்பினர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்த அதே திருப்பூர். பெரிதாக எந்த மாற்றமும் நிகழவில்லை. அதே உடைந்த ரோடுகள், நெரிசலான போக்குவரத்து, போக்குவரத்து விதிகள் என்றால் என்ன எனக் கேட்கும் திருப்பூர்வாசிகள். ஒரு வேளை இது தான் திருப்பூருக்கு அழகோ?//
போச்சு போச்சு மானம் போச்சு, மரியாதை போச்சு, ஏங்க இப்படீயா எழுதி வைப்பிங்க. இருங்க அடுத்தமுறை திருப்பூர் வரும்போது.....திருப்பூர் வரும்போது.....எதையாவது சரி பண்ணபார்க்கிறோம். :-(
ஆமா, நீங்க கொடுத்த எள் அல்வாவை பத்தி ஒண்ணுமே சொல்லலையே, நீங்க? என்னா ஒரு தன்னடக்கம்(வில்லத்தனம்)?
//விஜியின் கைப்பக்குவத்தில் சாம்பார் சாதம் அருமை. //
சேவையெல்லாம் நல்லா செய்வாங்களே விஜி. இப்ப அதையும் ராம்தான் செய்யறார் போலிருக்கு.
அண்ணாச்சிக்கு சித்தப்புவா பதவி உயர்வா, நடக்கட்டும் :)
//ஆனால், என்னை தமிழச்சி என இவர் நம்ப மறுத்தது தான் சோகம்//
டீவீல எல்லாம் பேசுவாங்களே. அது மாதிரி பேசுங்க. தமிழச்சின்னு நம்பிடுவாங்க :)
யக்கா...
நீலம் எல்லாம் டாப்பு!!
நல்லா enjoy பண்ணிருக்கீங்க போல:)
திருப்பூர்ரை ஒரு கலக்கு கலக்கீட்ங்க போல.............
மீ தி பஸ்ட் ,,,
(உங்களுக்கு வரும் மனைவியின் தமிழ் உச்சரிப்புகள் தாறுமாறாகப் போக என சபிக்கப்படுகிறீர்கள் என்னால் :) )
என்னவோபோங்க ,உங்க நேடிவ் நோய்டாவா...?
ஆனால், என்னை தமிழச்சி என இவர் நம்ப மறுத்தது தான் சோகம். (உங்களுக்கு வரும் மனைவியின் தமிழ் உச்சரிப்புகள் தாறுமாறாகப் போக என சபிக்கப்படுகிறீர்கள் என்னால் :) ) ///
எவன் நம்புவான்... பஞ்சாப்கார பொண்ணு மாதிரி இருகீங்க!
ஹை நான் தான் ஃபஸ்ட்.. சந்திப்பை தித்திப்பாய் பகிர்ந்தளித்துள்ளீர்கள்..
தமிழகம் வந்துவிட்டு வழக்கம்போல் சொல்லாமல் சென்றதற்கு வாழ்த்துகள்
:)
:) :) :)
//ஏர் இந்தியா ஆன்ட்டிகளின் வணக்கம் ஏற்று//.. அட பாவமே.. வேற flight இல்லையா?
கோயம்பத்தூர் போனோன அந்த ஊர் குசும்பு தெரியுது எழுத்தில.. நல்லா சாப்பிட்டுட்டு (அது உங்களுக்கு சொல்லியா தரனும்?) வாங்கி தந்தவங்க எல்லாரையும் நக்கல் பண்றீங்க.. ம்ம்ம் ???
Murali said:
//நீங்க கொடுத்த எள் அல்வாவை பத்தி ஒண்ணுமே சொல்லலையே//ஆகா அல்வா வேற குடுத்தீங்களா??
Perarasan said:
//என்னவோபோங்க ,உங்க நேடிவ் நோய்டாவா...?// ஹா ஹா சூப்பர்
ஒரு வாரம் உங்களுக்கு சமைப்பதிலிருந்து விடுதலை. So be happy!!
ஆனா யோகியை மட்டும் மிஸ் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன். ஆனா அவரு ரொம்ப happy-ஆ இருப்பார் (என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா...)
இதனால் அறியப்படும் நீதி யாதெனில், திருப்பூருக்கு வருகை தரும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் எமது சங்கத்தின் சார்பாக செம கவனிப்பு நிச்சயம்...!!!
நான் ஊர்ல இல்லாத நேரம் வந்து எங்க ஆளுங்கள கலாய்ச்சிருக்கீங்க.
இருந்தாலும், எங்க பொருளாளர் சாமிநாதனுக்கு பட்டம் கொடுத்ததால தப்பிச்சீங்க ஆமா! :)
மிகவும் நன்றாக எழுதி உள்ளீர்கள்... அவங நேர்ல கலாய்ச்சா நீங்க எழுதி கலாய்க்கிறீங்க... அது சரி... காய்ச்சல் எப்படி இருக்கு..
// ஏர் இந்தியா ஆன்ட்டிகளின் வணக்கம் //
என்ன இது சின்னபுள்ள தனமா?
இந்த நெறியாள்கை நாங்க பயன்படுத்த வேண்டும்.
ஈர வெங்காயம் has left a new comment on the post "திருப்பூரில் பதிவர் சந்திப்பு":
இதனால் அறியப்படும் நீதி யாதெனில், திருப்பூருக்கு வருகை தரும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் எமது சங்கத்தின் சார்பாக செம கவனிப்பு நிச்சயம்...!!!
ரிப்ப்பிட்டேய்...!
கண்டிப்பா சென்னை வந்தா பார்க்கலாம் கேபிள் சார்.
ஏன், பரிசல் வந்ததுல என்ன ஆச்சரியம்?
கிருஷணா ஸ்வீட்ஸ்???? //
ஐ, நல்லாருக்கே கார்க்கி.
தமிழகத்தில் புயல்ன்னு டிவில சொன்னப்ப நமபல. இப்ப நம்பறேன். //
கிர்ர்ர்ர்
வெளில சாப்பிடலாம் அண்ணாமலையான். ஆனா, அதைக் குறைக்கலாமேனு நான் தானே அக்கறை எடுத்துக்கணும்.
வாங்க சூர்யா.
நன்றி முரளிகுமார்.
அடுத்தமுறை திருப்பூர் வரும்போது.....எதையாவது சரி பண்ணபார்க்கிறோம். :-( //
நீங்களே ரோடு போடப் போறீங்களா....
ஆமா, நீங்க கொடுத்த எள் அல்வாவை பத்தி ஒண்ணுமே சொல்லலையே, நீங்க? என்னா ஒரு தன்னடக்கம்(வில்லத்தனம்)? //
எனக்குத் தற்புகழ்ச்சி பிடிக்காதுங்க. (எப்படியெல்லாம் தப்பிக்க வேண்டியிருக்கு)
ம்...ம்... நடத்துங்க நடத்துங்க
அப்படியே எங்க ஊருக்கு வர திட்டம் ஏதாவது இருக்கா? நாட்டியாஞ்சலிக்கு வாங்க...
என்ன ஹோட்டலிலா தங்குனீங்க ?
இப்படி தமிழ்நாட்டு பண்பாடு கொண்டாடும் நீங்கள், எப்படிங்க நார்திலே வாழ்க்கையை நடத்துறீங்க?
உங்க கணவர் தமிழ்நாட்டிலே படிச்சவரா?
ஆமாங்க அம்மிணி, மாமா செஞ்ச சாம்பார் சாதம் கொண்டு வந்தவங்க மாமாவைக் கூட்டிட்டு வரல :(
என் பேச்சு நல்லா தான் இருக்குங்க அம்மிணி. இவங்களுக்கு கலாய்க்க வேறெதுவும் கிடைக்கல போல.
நன்றி கலையரசன்.
ஆமா வித்யா. கொங்கு மக்கள் நல்லவர்கள். அதனால் கொண்டாட்டத்திற்குக் குறைவிருக்காது.
கொஞ்சம் தான் சங்கவி.
நீங்க ஃபர்ஸ்ட்டா.... கணக்கு தெரியாதாப்பா உங்களுக்கு....
என்னவோபோங்க ,உங்க நேடிவ் நோய்டாவா...? //
இருங்க உங்களுக்கு என் நேடிவ்ல இருந்து பொண்ணு பிடிச்சிட்டு வரேன்.
எவன் நம்புவான்... பஞ்சாப்கார பொண்ணு மாதிரி இருகீங்க! //
நீங்களுமா பப்பு....
வாங்க மலிக்கா
இன்னும் போகலைங்க அப்துல்லா. போகும் போது டாட்டா சொல்லிட்டுப் போறேன் உங்களுக்கு.
இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் ராஜி....
வாங்க மோகன்.
ஏங்க, இந்தியன் ஏர்லைன்ஸ் நல்ல பிளைட் தானுங்க.
நல்லா சாப்பிட்டேன்னு வாங்கித் தந்தவங்களுக்குத் தெரியனுமில்ல. அதான் நக்கல். சரியா சாப்பிடலைனா விக்கல்.
அல்வா இல்லைங்க. அது Til Bhugga.
யோகி எப்போதும் மகிழ்ச்சியானவர், நான் இருந்தாலும், இல்லைனாலும்.
இதனால் அறியப்படும் நீதி யாதெனில், திருப்பூருக்கு வருகை தரும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் எமது சங்கத்தின் சார்பாக செம கவனிப்பு நிச்சயம்...!!! //
இதில் எதுவும் உள்குத்து இல்லையென நம்புகிறேன் சாமி.
வெயிலான் மிரட்டாதீங்க. பயமா இருக்கு.
வாங்க ராமன். காய்ச்சல் சரியாகிடுச்சுங்க.
ஏங்க பாலகுமாரன், அவங்க எனக்கும் ஆன்ட்டிஸ் தான்.
மறுபடியும் பயமுறுத்தாதீங்க பேரரசன்.
வாங்க தராசு.
உங்க ஊர் எதுங்க அண்ணாமலையான்...
ஆமாங்க, ஹோட்டல் தான் வினிதா.
வடக்கிலிருக்க சிரமமாகத் தான் உள்ளது. அதான் இங்கே அடிக்கடி வந்துர்றேன்.
அவருக்கும் தமிழ்நாட்டிற்கும் மாப்பிளை உறவைத் தவிர வேறெந்த சம்பந்தமுமில்லை. :)
:) நீல நிறமெல்லாம் டாப்பு!
உங்க பேச்சு தமிழை விட எழுத்து ரொம்ப நல்லா இருக்கு...
பிரியம் நிறைந்த வெளியில் உலவ
ஆசிர்வதிக்கப் பெற்றிருக்கிறீர்கள்
கொங்கு மண்ணின் பாசம் வழிய குறும்பு மிளிர ஒரு நிகழ்வை பதிவு செய்திருக்கிறீர்கள்
நண்பர்களுக்கு என் அன்பு ...!!
பின்குரலில் ஒலிக்கும் நீல நிற வாசகஙகளின் குறும்பில் இடுகை சுவாரஸ்யம் பெறுகிறது
//சேவையெல்லாம் நல்லா செய்வாங்களே விஜி. இப்ப அதையும் ராம்தான் செய்யறார் போலிருக்கு.//
சின்னம்மினி இன்னும் மறக்கலையா நீங்க? aaaaaaaaavvvvvvvvvvv
நேரம் வரும்.. ஒரு வார்த்தைக் கூட சொல்லலை.. :(
மூனுவருசம் முந்தி ரோடுருந்ததுக்கு இப்ப எவ்வளவோ தேவலைங்க.சும்மா சூப்பரா இருக்குன்னே சொல்லாம்ங்க.
// திருப்பூருக்கு வருகை தரும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் எமது சங்கத்தின் சார்பாக செம கவனிப்பு நிச்சயம்...!!! //
உங்க ஆப்பீஸ்ல குடுத்த
லெமன் டீய மறக்கவே முடியாதுங்க.
என்னங்க நாட்டிய உடையில இருக்கீங்க, நாட்டியாஞ்சலி எந்த ஊருல நடக்கும்னு தெரியலியா? சிதம்பரம்தான்.. ஃபெப்ரவரி/மார்ச்ல நடக்கும்..
நல்ல தொகுப்பு. உங்க ஜாலி comments touch oda சூப்பர்!
கலக்கல்ங்க விக்னேஷ்வரி,
நல்லா சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க.
பயனுள்ள பயணம். நல்லதொரு பகிர்வு.
வாழ்த்துக்கள் நண்பர்கள் அனைவருக்கும்.
நல்லாவே சந்திப்பு நடந்ததில சந்தோஷம்.
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.
//அவருக்கு ஒரு வாரத்திற்கு சமைத்து வைத்து, //
சூப்பர்..
விக்னேஷ்வரி, அப்படியே அட்லாண்டா பக்கம் வந்துட்டு போங்க ஒரு தடவை..
//Cable Sankar said...
அப்படியே சென்னை வந்தா ஒரு எட்டு எங்க எல்லாரையும் பார்த்துட்டு போங்க
//
ரிப்பீட்டு....
:-)))))))))
உங்களை எப்போது சந்திக்கப் போகிறோமோ என்ற ஏக்கத்தை ஏற் படித்தியது பதிவு.
அன்புடன்
சூர்யா.
விக்னேஸ்வரி,
ரொம்ப நல்ல ஃப்ளோல எழுதி இருக்கீங்க.
//Last but not Least என்ற தலைவரின் வசனப்படி தலைவரின் ரசிகர் கிருஷ்ண குமார் (பரிசல்காரன்) குடும்பத்தோடு வந்தது அன்றைய போனஸ்//
உண்மையிலேயே போனஸ்தான். ;)-
வாங்க ஆதவன்.
எழுத்தை விட பேச்சு நல்லா இல்லைங்குறதை நாசூக்கா சொன்னதுக்கு நன்றி ராமன். :)
நேசமித்திரன், உங்களுக்குப் பேச்சே கவிதையா தான் வருமா?
விஜி, அம்மிணிக்கும் சேவை செஞ்சிருக்கீங்களா நீங்க.
என்னது சொல்லலையா... ஏங்க சஞ்சய், நீங்க தானங்க ஊருக்குப் போறேன் வர முடியாதுன்னு சொன்னீங்க.
கார்த்திக், அவங்க எனக்கு லெமன் டீ குடுக்கல. :(
நீங்க சிதம்பரமா அண்ணாமலையான்... பேரைப் பார்த்தே புரிஞ்சிருக்கனும் நான்.
நன்றி சித்ரா.
நன்றி நாடோடி இலக்கியன். ஆனா, இந்த முறை நீங்க இல்லாதது குறையா தான் இருந்தது.
வாங்க துபாய் ராஜா.
நன்றி சுசி.
நீங்க கூப்பிட்டு வராமலா.... வந்திட்டா போச்சு கோபி.
சென்னை எனக்கு கொஞ்சம் அலர்ஜிங்க புலிகேசி.
வாங்க மகா.
இத்தினி பேரு பின்னூட்டம் இட்ட பின்னர் நான் சொல்ல என்ன உள்ளது. எதோ எனக்குத் தெரிந்த உண்மைகள் சில :
// கதவு திறந்து வரவேற்ற என்னைப் பார்த்து கொஞ்சம் பயந்து போனாலும் சுதாரித்து சிரித்ததற்கு நன்றி. (தூங்கிட்டிருக்கும் போது எழுப்பினா என்ன பண்ண...) //
நல்லா மந்திரிக்கச் சொல்லுங்க, பாவம் ஜொரம் வந்துடப்போகுது.
// அதே திருப்பூர். பெரிதாக எந்த மாற்றமும் நிகழவில்லை. அதே உடைந்த ரோடுகள், //
நீங்க நடந்தா ரோடு எப்படி இருக்கும், டயட்ல இருக்கச் சொன்னா கேட்டாதான
சரி இனி நான் உதை வாங்க தயாரில்லை. இத்துடன் முடித்துக் கொள்கின்றேன். நன்றி.
//ஏங்க கிருஷ்ண குமார், சாயங்காலம் ஏழு மணிக்கு மேல கார்ல போறதுக்கு எதுக்குங்க தொப்பி?//
கலைஞர் எப்போதுமே கண்ணாடியோட இருப்பாருல்ல, அதுமாதிரி இது பரிசல் ட்ரேட்மார்க்!
நீங்க பதிவர் சந்திப்புக்கு பதிவர்களை சந்திக்கப்போனீங்களா... இல்ல கலாயக்கப்போனீங்களா??? ஒரே கலயாத்தல் மயமாருக்கு...
விக்கினேசு.....உங்களப்பார்க்கமுடியலேயேன்னு வருத்தமா இருக்குது. ....
வாங்க சூர்யா.
நன்றி நர்சிம்.அய்யனார் கம்மா எங்கங்க கிடைக்குது?
வந்த காரியம் முடிஞ்சதா பித்தனின் வாக்கு. நன்றி.
ரெண்டுமே பயமுறுத்துற மாதிரி இருக்கு வால்.
கலாய்க்காம என்னங்க சந்திப்பு?
வருத்தப்படாதீங்க வாத்துக் கோழி. இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம்.
விக்னேஷ்வரி தங்களின் வருகை குறித்து, சங்க பொருளாளரும், தலைவரும் எனக்கு தகவல் கொடுத்திருந்தனர்.
சற்று பணி அழுத்தம் காரணமாக சந்திக்க முடியவில்லை..
அடுத்தமுறை சந்திப்போம்
நன்றி வாழ்த்துகள்
:-))
அற்புதமான பகிர்வு விக்னேஷ்!மற்றொரு சிச்சர்!
வாழ்த்துகள்
ஹா ஹா சூப்பர் விக்னேஷ்வரி.
அப்புறம் ஒண்ணாந்தேதி சபதம் கண்டிப்பா இந்த ஒண்ணாந்தேதியிலருந்து அமுலுக்கு வருதுங்க :)
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
சரி , 15 நாட்களாப் பதிவு ஒண்ணுமே காணாம்.. என்னாச்சு, ஆணி அதிகமோ !!!
// சனிக்கிழமை கரோல்பாகின் நீண்ட பஜாரில் ஷாப்பிங். இரவு வீடு திரும்பி, சமைத்து, சாப்பிட்டு, பேக் செய்து, அவருக்கு ஒரு வாரத்திற்கு சமைத்து வைத்து, காலையில் நான்கு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி விமான நிலையம் சென்று அயர்ந்த கண்களுடன் ஏர் இந்தியா ஆன்ட்டிகளின் வணக்கம் ஏற்று ஜன்னலோர இருக்கையைத் தேடி அமர்ந்த அடுத்த நிமிடத்தில் தூங்கிப் போன அசதியுடன் கோவை வந்திறங்கினேன்.//
யப்பா... இந்த வார்த்தையை படித்து முடிக்கும் முன் மூச்சு வாங்கினேன்... எப்படி இவ்ளோ பெரிய வார்த்தை, அதுவும் ஒரு ஃபுல் ஸ்டாப் இல்லாம..... யப்பா.......
//Last but not Least என்ற தலைவரின் வசனப்படி//
அட நம்மாளா, நீங்க.... தெரியாம போச்சே இவ்ளோ நாளா!!!!
ஸோ, ஒரு சூப்பர் பதிவர் கூட்டம் நடந்ததுன்னு சொல்லுங்க.....
வாழ்த்துக்கள் விக்னேஷ்வரி
அடுத்த முறை சிக்கணும்னு உங்க தலைல எழுதியிருந்தா பார்ப்போம் நிகழ்காலத்தில். :)
பா.ரா. நீங்க ஒவ்வொரு பதிவுலேயும் பாராட்டுறதைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு.
நன்றி தியாவின் பேனா.
தாரிணி. இதையே அடுத்த மாசமும் சொல்வீங்கன்னு தெரியும்.
என்ன குழப்பம் ராஜி.
நன்றி ராமன். உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிவு போட்டாச்சுங்க ராமன்.
வாங்க கோபி. நன்றி.
Post a Comment