Wednesday, November 4, 2009

பல்பு மேல் பல்பு வாங்கி...


நண்பரின் பரிந்துரையின் பேரில் "2 States by Chetan Bhagat" நாவல் வாங்கி நூறு பக்கங்களுக்கு மேல் வாசித்தும் விட்டேன். முதல் முறை இந்திய ஆங்கில நாவல் படிக்கிறேன். ஆங்கிலம் ஓகே (நமக்கு புரியும்) அளவுக்கு இருக்கிறது. ரொம்ப எதிர்பார்த்து வாசிக்க ஆரம்பித்த நாவலிது. முதலில் என் வாழ்க்கையோடு பல விஷயங்கள் ஒத்துப் போவதால் படிக்க சுவாரசியமாக இருந்தது. ஆனால், இந்தி சீரியலும் தமிழ் சீரியலும் மாத்தி மாத்திப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படிப் போகிறது. எல்லாருக்கும் பிடிக்கும் என சொல்ல முடியாத நாவல். இருந்தாலும் இந்த கதை எனக்கு ஒரு வித்தியாச அனுபவத்தை, என் நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் இருப்பது மகிழ்ச்சி.
(தமிழ்ப் பொண்ணு, பஞ்சாபிப் பையன் இவர்களுக்கிடையேயான காதல், வீட்டின் மோதல், கடைசியில் கூடல் இது தான் கதை. ஒரு முறை வாசிக்கலாம்)

****************************************************************************************************

குழந்தைகளுக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி எப்போதும் ஒத்துப் போவதுண்டு. என் அக்கா குழந்தை என்னிடம் சீக்கிரமே ஒட்டி விட்டாள். அவளும் நானும் கடைகளுக்குப் போவது, அம்மாவிற்குத் தெரியாமல் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது, பிரிட்ஜில் இருக்கும் சாக்லேட்டுகளை யாருக்கும் தெரியாமல் ஆட்டையப் போடுவது என பல விஷயங்களில் கூட்டு சேர்ந்து என்ஜாய் செய்தோம். அவளுக்கு மேக்கப்பில் அதிக ஆர்வம். எனது மேக்கப் சாதனங்களை எடுத்து தனக்கு தோன்றிய வகையில் முகத்தில் அலங்கோலம் செய்வது தான் பிடித்த பொழுதுபோக்கு. அப்படி ஒருநாள் எடுத்தவள், "சித்தி, இது என்ன" என்றாள் எதையோ கையில் எடுத்தபடி.
"அது 'Body Wash' டா குட்டி" என்றேன்.
"எதுக்கு?"
"குளிக்க"
"அய்ய, நீங்க சோப் போட்டு குளிக்க மாட்டீங்களா" என்றாள் முகத்தை ஏதோ மாதிரி வைத்துக் கொண்டு.
"இதுவும் சோப்பு தான்டா. Liquid Soap. Like Shampoo"
"Body Wash......." என்று அதை கையில் எடுத்து வாசித்தவள், ஏதோ தெளிவடைந்தவள் போல்,
"நம்ம வீட்டுல Clothes Wash, Car Wash இருக்கே. அது மாதிரி இது Body Wash ஆ" என்றாள்.
என்ன சொல்ல?!?!?!?!?!?
(பல்பு வாங்குறதென்ன நமக்குப் புதுசா...)

****************************************************************************************************

பள்ளித் தோழியொருத்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு அழைத்திருந்தாள். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பினனர்
"இன்னிக்கு என்னடி சமைச்ச" - நான்.
"இன்னிக்கு நான் சமைக்கல. என் மாமியார் தான் சமைச்சாங்க. ஒரு வாரமா தினமும் நான் சமைக்கிறேன்னு இன்னிக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாங்க"
"ஐயோ பாவம், ஒரு நாளாவது நல்ல சாப்பாடு சாப்பிடனும்னு அவங்களுக்கு தோணாதா"
"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"
"அப்புறம் தீபாவளிக்கு என்ன ஸ்வீட் பண்ண" அவள்.
"நான் ஒன்னும் பண்ணல. கடைல இருந்து ரெண்டு ஸ்வீட் பாக்ஸ் வாங்கிட்டு வந்தேன். அவ்வளவு தான். நீ என்ன பண்ண?"
"இந்த முறை புதுசா ஒன்னு ட்ரை பண்ணேன்"
"ச்சே, அப்போ தீபாவளி ஹேப்பி தீபாவளியா இல்ல..."
"நீ என்கிட்டே அடி வாங்கப் போற. ஒருமுறை என் சமையல சாப்பிட்டுப் பாரு. அப்புறம் தெரியும் எப்படி இருக்குன்னு" என்றாள் பாவமாக.
"உன் சமையல சாப்பிட்டப்புறம் நான் இருப்பேன்னு நீ நினைக்கிறதே எனக்கு ஆச்சரியமா இருக்கு." என்றேன் அவளைப் போலவே நானும் பாவமாக.
அதற்கு மேலும் அவள் என்னிடம் பேசியிருப்பாளா என்ன...
(நல்ல வேளை, என் சமையல் பத்தின பேச்சு வரவில்லை)

****************************************************************************************************

போன மாதம் இந்நேரம் வெக்கையில் அவிந்து கொண்டிருந்தோம். ஒரு நிமிடம் கூட ஏ.சி. இல்லாமல் இருக்க முடியவில்லை. இன்று ஸ்வெட்டர் இல்லாமல் உட்கார முடியவில்லை. குளிர் பாடாய்ப் படுத்துகிறது. இந்த திடீர் காலநிலை மாற்றத்தால் ஒரு மாதம் விடாமல் வைரல் ஃபீவர் வேறு. மூன்று நாளைக்கொரு முறை டாக்டரைப் பார்த்து வருகிறேன். எல்லா டெஸ்ட் ரிசல்ட்டும் ஓகே. ஆனாலும், சரியாகவில்லை. எதிர்நீச்சல் படத்தில் வருகிற இருமல் தாத்தா தோத்துப் போகும் அளவுக்கு இருமிக் கொண்டிருக்கிறேன். (எப்படியோ வீட்டு வேலைகளிலிருந்து ஒரு மாதம் விடுமுறை)

****************************************************************************************************

போன வாரம் என் நாத்தனாரின் ஒன்றரை வயது குழந்தையுடன் மூன்று நாட்கள் கழித்தேன். குழந்தைகள் வளரும் போது அவர்கள் செய்யும் எல்லாமே பெற்றோருக்கும், தாத்தா பாட்டிக்கும் அழகு தான். அவன் மாடியிலிருந்து கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் கீழே தூக்கி எறிந்து விட்டு "கிர்கயா (விழுந்து விட்டது)" என சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அந்த வார்த்தையை சரியாகச் சொல்லி நினைவு வைத்துக் கொள்வதற்காகவே வீட்டிலிருக்கும் எல்லா சாமான்களையும் (அவனால் தூக்க முடிந்த) தூக்கிப் போட அனுமதிக்கப்பட்டான். குழந்தைகளின் மழலை மொழி செய்யும் மேஜிக் தான் என்ன...
(ஒவ்வொரு முறையும் கீழிருந்து பொருட்களை மேலே எடுத்து வந்து நல்ல எக்சர்சைஸ் தான் எனக்கு)

****************************************************************************************************

பனிரெண்டாம் வகுப்புப் படிக்கும் என் தங்கைக்கு காலை ஏழு மணியிலிருந்து மாலை எட்டு மணி வரை பள்ளியில் சிறப்பு வகுப்புகள் வைப்பதாக அம்மா கூறினார். ஐந்து மணிக்கு எழுந்து ஆறு மணிக்கு பஸ் பிடித்து ஏழு மணி வகுப்பில் சேரும் அவள், மாலை வகுப்பு முடிந்து வீடு வந்து சேர ஒன்பதாகிறது. வீட்டில் படிக்க முடியாமல் இப்படி வகுப்பெடுப்பதன் காரணம் எனக்கு விளங்கவேயில்லை. இதனால் குழந்தைகள் அசதியுறுவார்களே தவிர படிக்க மாட்டார்கள். பள்ளிகள் யோசிக்காதா...
(இந்த சைக்காலஜி தெரியாமல் இவர்களெல்லாம் குழந்தைகளை எப்படித் தான் ஹேண்டில் செய்கிறார்களோ..)

****************************************************************************************************

யோகி டைம்ஸ்

என்னவரின் தமழ் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. அதன் விளைவு சில காமெடிகளையும் நான் சந்திக்க வேண்டியுள்ளது. 'நாடோடிகள்' பட டிவிடி கிடைக்கவே அவரைப் படம் பார்க்க அழைத்தேன். படத்தின் பெயர் விளக்கம் கேட்டார்.
"ஊர் ஊராக சுற்றுபவர்கள் தான் நாடோடிகள்" என்றேன்.
"You mean Consultants?" என்றார்.
"!!????!!?!!!!?!?!??!?!?"
நாங்கள் ப்ராஜெக்ட் கன்சல்டன்ட்ஸ். வேலை விஷயமாக மாதத்தில் இருபது நாட்கள் ஊர் ஊராக அலைவது வழக்கம். அவர் நான் சொன்ன வார்த்தையை இப்படி புரிந்து கொள்வார் என நினைக்கவில்லை. :(

இதே போல 'அயன்' படம் பார்க்க போன போது அதற்கான பொருளைக் கேட்டார். எனக்குத் தெரியவில்லை. அவராகவே 'அயர்ன்' என்று அர்த்தம் கொண்டுவிட்டார். அவரின் தமிழ் வகுப்புகள் எனக்கு நல்ல பொழுதுபோக்காக உள்ளன. :) (ஆமா, அயனுக்கு அர்த்தம் என்னப்பா...)

41 comments:

கிருபாநந்தினி said...

அயன் தெரியாதா? அட, நம்ம அயன்ங்க! அயன் - அதாவது, பிரம்மா! மத்தபடி, குழந்தைகள் பற்றி எழுதியிருந்தது எனக்குப் பிடிச்சிருந்தது.

Cable சங்கர் said...

chetanநாவலை படிக்கலாம்னு சொல்றீங்க.. ஒன் நைட் அட் கால்செண்டர் எனக்கு பிடிச்சிருந்தது.

rajan said...

//(ஆமா, அயனுக்கு அர்த்தம் என்னப்பா...)//

i think its "god shiva"

Vidhya Chandrasekaran said...

:)
நைஸ் துணுக்ஸ்.

thiyaa said...

//
இதே போல 'அயன்' படம் பார்க்க போன போது அதற்கான பொருளைக் கேட்டார். எனக்குத் தெரியவில்லை. அவராகவே 'அயர்ன்' என்று அர்த்தம் கொண்டுவிட்டார். அவரின் தமிழ் வகுப்புகள் எனக்கு நல்ல பொழுதுபோக்காக உள்ளன. :) (ஆமா, அயனுக்கு அர்த்தம் என்னப்பா...)
//

அயன் - சூரியன்
ஆதவன் - சூரியன்

இரண்டும் ஒன்றுதான்

பதிவு அருமை

Prasanna said...

//பனிரெண்டாம் வகுப்புப் படிக்கும்//

இப்போ தான் கிண்டர் கார்டன்லயே டியூஷன் ஆரம்பித்து விட்டார்களே? 12th மாணவர்களை சும்மா விடுவார்களா என்ன :))

வினோத் கெளதம் said...

கலக்கலுங்கோ..

ஜெட்லி... said...

2 states மைண்ட்ல இருக்கு டைம்
கிடைக்கும் போது படிக்கிறேன்

kanagu said...

nalla pakirvugal vikneshwari.. naan rasithen :)

/*"ஊர் ஊராக சுற்றுபவர்கள் தான் நாடோடிகள்" என்றேன்.
"You mean Consultants?" என்றார்.*/

ha ha ha,..... :) :) neenga veedu, vaasal illama nu sethu solli irukkanum :) :)

apram 12-th.. nenachale enaku bayam than varum... nalla kalam en vazhkai la athu mudinjithu... :)

தினேஷ் said...

//(தமிழ்ப் பொண்ணு, பஞ்சாபிப் பையன் இவர்களுக்கிடையேயான காதல், வீட்டின் மோதல், கடைசியில் கூடல் இது தான் கதை. ஒரு முறை வாசிக்கலாம்)//

உங்க கதையா?

கார்க்கிபவா said...

உடம்பு சரியில்லன்னா எதுக்கு பதிவு??????????

நானும் கன்சல்டண்ட் தான்..இப்ப இல்ல :)))

Romeoboy said...

இந்த வாரம் விக்கியின் பல்பு வாரம் ...

சுசி said...

கலந்து கட்டல் சூப்பரா இருக்கு...

//என்னவரின் தமழ் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது//

தமழ் இலேயே புரியுது உங்க பொழுது நல்லா போகுதுன்னு...

Rajalakshmi Pakkirisamy said...

inga poi paarunga "http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/04/blog-post_29.html"
"அயன்" அப்டின்னா உண்மையான அர்த்தம் என்ன? nu theriyum

சூர்யா said...

The path through which the sun travels in the daytime is called 'Ayan'


In Tamil: 'Ayan' is the name of Brahma, the Creator.


'Ayan' also means Shepherd


'Ayan' is also a form of African drumming.


'Ayan' in Turkish, means "obviously" or "clearly"


'Ayan' [Urdu/Persian.] with the last 'n' not pronounced fully... but half i.e. nasal tone sound..)... means something that is open and clear /something like : "something vividly clear on the face of it" or prima-facie.


In Somalia 'Ayan' means "the lucky one". However, in Somali, 'Ayan' is the female form of the name, and 'Ayanle' is the male form.


AYAN: Somali female name meaning "bright."


In Sanskrit this also means "Speed" in English or "Gati" in Hindi.

சூர்யா said...

மேல கூறியவை இணையத்தில் சுட்டதே...போற்றுவார் போற்றதலும் தூற்றுவார் தூற்றதலும் போகட்டும் இட்டவருக்கே....

Anonymous said...

நல்ல கலவையா இருக்கு.
அயன் - பிரம்மான்னு அர்த்தம். ஆனா அதுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு தெரியலையே. ஒருவேளை கடத்தல்ல ரொம்ப க்ரியேடிவா இருக்காரு கதாநாயகன்னு அந்தப்பேர் வைச்சுருப்பாங்களோ.

Kumar.B said...

Come across this one which relates and kindles memories of early days
http://karaiyoorakanavugal.blogspot.com/2009/10/blog-post_29.html

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு இது. மிகவும் இரசித்தேன். குழந்தையின் கேள்வி அருமை. பல்பு வாங்கி பழக்கம் ஆகிடுச்சா இல்ல பல்பு கொடுத்து பழக்கம் ஆகிடுச்சானு புரியும்படி சொல்லுங்க. உங்க தோழியின் நிலையைப் பார்த்தால் உங்களுக்கு பல்பு பரமேஸ்வரி பட்டம் கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன். நன்றி.

FunScribbler said...

//குழந்தைகள் வளரும் போது அவர்கள் செய்யும் எல்லாமே பெற்றோருக்கும், தாத்தா பாட்டிக்கும் அழகு தான்//

குழந்தை இருக்கும்போது எல்லாம் அழகு தான் செய்வாங்க. வளந்தபிறகு, அதுங்க இம்சைகள் தாங்க முடியாது. அதுவும் பதின்ம வயதை அடைந்துவிட்டால் வயத்துல நெருப்பு தான் நமக்கு! வேணும்ன்னா எங்க அம்மாகிட்ட கேட்டு பாருங்க...ஹிஹிஹி...:)

//You mean Consultants?" என்றார்."!!????!!?!!!!?!?!??!?!?//

சத்தம் போட்டு சிரிச்சுட்டேன் யக்கா!! மாமாவுக்கு காமெடி சென்ஸ் அதிகமோ!

//அயனுக்கு அர்த்தம் என்னப்பா...)//

எல்லாத்தையும் தாங்க கூடிய சக்தி உடையவன்! 'ஆதவன்' பாருங்க...கண்டிப்பா 'அயன்'னா மாறிடுவீங்க!!

தராசு said...

2 states - என்ன "கர் ஜவாய்ங்" மாதிரி ஒரு காமெடியா இல்ல சீரியஸா???

பள்ளித்தோழிக்கு இப்படி எல்லாமா பல்பு ......

ஆமா, "அயன்" னா என்னங்க?????

GIYAPPAN said...

நல்லது. புரிந்த விஷயங்களும் புரியாத விஷயங்களும், நமக்குப் புரிந்த விஷயத்தை நமக்குப் புரிந்தது போலவே மற்றவர்க்கும் புரிய வேண்டும் என எதிர்பார்ப்பது, இவை எல்லாம் எல்லா வேலைகளிலும் சரி வருவதில்லை என புரிய வேண்டும். ஒரு விஷயம் ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்கும் கல்விக்கும் வளர்க்கப்பட்ட சூழலுக்கும் ஏற்றார்போல ஏற்றுக்கொள்ளப்படும். இதில் நமது விருப்புக்களை நுழைப்பது சரியல்ல. எனக்கு ஒருவாறாகப் புரியும் சமாசாரம் என் மனைவிக்கு ஒரு விதமாகவும், என் அம்மாவுக்கு வேறு விதமாகவும் அர்த்தமாவது இயல்பு. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது நாவல் படிப்பதாகட்டும், சினிமா பார்ப்ப்பதாகட்டும், கதை கேட்பதாகட்டும் எல்லாவற்றுக்கும் பொது.

நாஸியா said...

சமையலை பத்தி பேசுனாலே டென்ஷன் ஆவுது.. கொஞ்ச நாளா நான் தான் சமைக்கிறேன்!


ஒரு விளையாட்டுக்கு வாங்களேன்! விவரங்கள் என் பதிவில்!

Anonymous said...

உங்களை ஒரு தொடர் விளையாட்டுக்கு கூப்பிட்டிருக்கேன். விருப்பமிருந்தால் தொடருங்கள். இல்லாவிட்டால் No hard feelings :)

Romeoboy said...

பிடித்தது , பிடிக்காதது என்கிற தொடர் விளையாட்டில் ஆட உங்களை அழைத்து உள்ளேன், கண்டிப்பாக கலந்து கொள்ளவும் .

துபாய் ராஜா said...

தொகுப்பு நல்லாருக்குது விக்கி....

சுவரிருந்தால்தான் சித்திரம்... உடம்பை பார்த்துக்கோங்க பத்திரம்....

(நாங்க கேன்வாஸ்ல வரைவோம்.. பேப்பர்ல வரைவோம்..போர்டுல வரைவோம்ன்னு பல்பு கொடுக்கக்கூடாது...) :))

பா.ராஜாராம் said...

உங்களுக்கு ஒரு தொடர் அழைப்பு இருக்கு,நம் தளத்தில் மக்கா..

Raghu said...

ப‌ட‌த்த‌ பாக்கும்போது 'அய‌ன்'னா சூர்யா, அதுவே டெக்னிக்க‌லா பாத்தா 'அய‌ன்'னா கே.வி.ஆன‌ந்த், பாட்டு கேக்கும்போது 'அய‌ன்'னா ஹாரிஸ் ஜெய‌ராஜ்..அவ்ளோதான் மேட்ட‌ரு..

இதுக்கு போய் இவ்ளோ டென்ச‌னா 'கூகுள்'ளாமா..அய்யோ..அய்யோ.....

Raghu said...

உங்க‌ளுக்கு 'ப‌ல்பு ஸ்டார்'னு ஒரு ப‌ட்ட‌ம் குடுக்க‌லாம்னு இருக்கேன்

அடைமொழி வ‌ந்த‌ப்புற‌ம் ஒரு ப‌ஞ்ச் டய‌லாக் இல்லாம‌லா? அதுவும் ரெடி!

டி.ஆர் ஸ்டைல்ல‌ சொல்றீங்க‌, "டேய் என‌க்கு ப‌ல்பு வாங்கி ம‌ட்டுமில்ல‌டா, குடுத்தும் ப‌ழ‌க்க‌ம்தான்..(த‌லைமுடியை கோதிவிட்டு)அ ட‌க‌ட‌க‌ஜும்ஜும் ட‌க‌ட‌க‌ஜும்ஜும்" (எத்த‌னை நாளைக்குத்தான் ட‌ண்ட‌ண‌க்காவையே சொல்ற‌து)

தாரணி பிரியா said...

பல்பு பயங்கர பிரகாசமா இருக்கு விக்னேஷ்வரி

எம்.எம்.அப்துல்லா said...

என்ன விக்கி போறபோக்குல பல்பு ஃபேக்ட்டரி வச்சுருவீங்க போல :))

விக்னேஷ்வரி said...

நன்றி கிருபானந்தினி.

நான் இப்போ தான் அது படிக்க ஆரம்பிச்சிருக்கேன் சங்கர் சார். அதிலிருக்குற ஆங்கிலக் கொலையினால பத்து பக்கங்களுக்கு மேல படிக்க முடியாம திணறிட்டு இருக்கேன்.

இல்லைங்க ராஜன், பிரம்மாவாம். மேல சொல்லிட்டாங்க பாருங்க.

நன்றி வித்யா.

நன்றி தியாவின் பேனா.

ஆமா பிரசன்ன குமார்.

விக்னேஷ்வரி said...

நன்றி வினோத்கௌதம்

படிங்க ஜெட்லி. Interesting ஆ இருக்கும்.

நன்றி கனகு. சரியா சொன்னீங்க, அடுத்த முறை சேர்த்து சொல்லிப் புரிய வைக்கிறேன். :)

ஆமா சூரியன், எங்க கதையே தான்.

உடம்பு சரியில்லைனா, வேலை ஓடாது. வேலை இல்லைனா, பதிவு போடலாம். சரி தானே கார்க்கி.
இப்போ Job Consultant இல்லையா...

எப்படியெல்லாம் பேர் வைக்குறீங்க ரோமியோபாய். :O

விக்னேஷ்வரி said...

நன்றி சுசி. ஹிஹிஹி... அதெல்லாம் கண்டுக்க கூடாது.

சுட்டிக்கு நன்றி ராஜலெட்சுமி.

இவ்ளோ அர்த்தமா.... நான் தமிழ்ல மட்டும் தானே கேட்டேன் சூர்யா.
தகவலுக்கு நன்றிங்க.

ஓ, இப்படித் தான் நாமளா புரிஞ்சுக்கனுமா அம்மிணி. ரைட்டு.

சுட்டிக்கு நன்றி குமார்.

ரெண்டும் தான் பித்தனின் வாக்கு. இப்படி பலர் கிட்ட வாங்கின அனுபவத்தில சிலருக்காவது குடுக்க முடியுது :)

விக்னேஷ்வரி said...

சரி தான் தமிழ்மாங்கனி. எங்கம்மா, அப்பா பட்ட பாடும் தெரியும் :)
அவருக்கு என்னை காலை வாரற சென்ஸ் அதிகம். ;)
ஐயோ, வேண்டாம்ங்க. நான் ஆதவன் கிட்ட இருந்து எஸ்கேப்.

காமெடியும் இல்ல, சீரியசுமில்ல. நல்லா இருக்கு. ஒரு விறுவிறுப்பான இந்திய சீரியல் பார்த்த மாதிரி. அது காதலாக இருப்பது சுவாரசியம். முடிஞ்சா படிங்க தராசு.

ஒத்துக் கொள்கிறேன் ஐயப்பன் சார். ஆனால், சில இடங்களில் ஒரு சலிப்பு வருமளவும், பல இடங்களில் விறுவிறுப்பாகவும் உள்ளது நாவல். எல்லோருக்கும் பிடிக்கும்.

நீங்க சமைச்சு உங்களுக்கே இவ்வளவு டென்ஷன் ஆனா, சாப்பிடுற மத்தவங்க நிலைமைய நினைச்சுப் பார்த்தீங்களா நாஸியா...
விளையாட்டு தானே. இதோ வரேன்.

அம்மிணி கூப்பிட்டு தொடராமலா.... இதோ வந்திட்டேனுங்கோ.

நீங்களுமா ரோமியோபாய். நன்றி. அவசியம் எழுதுறேன்.

விக்னேஷ்வரி said...

நன்றி துபாய் ராஜா.
என்னது சித்திரம், பத்திரம்னு பஞ்ச் டயலாகெல்லாம் விடுறீங்க.
நோ பல்பு ஃபார் யூ. :)

இதோ வந்துர்றேன் மாக்கையா. நன்றி ராஜாராம்.

இப்படியெல்லாம் டெக்னிக்கா பார்க்காம, படம் பார்க்கப் போன நாம தான் அயன்னும் சொல்லலாம் தானே குறும்பன். :)
நமக்கு பட்டமும் வேணாம், பஞ்ச் டயலாகும் வேணாம். பல்பு மட்டும் போதும். :)

என்ன ஒரு சந்தோஷமா சொல்லிட்டுப் போறீங்க... இன்னும் பிரகாசமாவும் பல்பு வரும்.

ஆமா அப்துல்லா, பார்ட்னர்ஷிப்புக்கு உங்களைத் தான் கூப்பிடனும்னு நினச்சேன்.

உங்கள் தோழி கிருத்திகா said...

அயன்னா எனக்கும் தெரியல...இருந்தாலும் ஒரு கெஸ் ...அயன் அப்டின்னா யானைனு நெனைக்கரென்...சரியா??

Sengathir Selvan K said...

nice post... started remembering this post..

http://dheekshu.blogspot.com/2009/10/blog-post_26.html

விக்னேஷ்வரி said...

அயன்னா என்னனு நம்ம மக்கள் மேல சொல்லிட்டாங்க பாருங்க கிருத்திகா.

நன்றி செங்கதிர் செல்வன். நீங்கள் கொடுத்த சுட்டிக்கு நன்றி.

Unknown said...

can anyone tell me the meaning of the tamil name Packirisamy or Pakkirisamy

தமிழ் said...

கலக்கல்