Tuesday, November 3, 2009

பேச்சு எனும் கலை

பேச்சு என்பது ஒரு கலை. ஒருவரின் பேச்சு அடுத்தவரை மயக்கும், மகிழ்ச்சிப்படுத்தும் அல்லது எரிச்சலூட்டும் அளவுக்கு சக்தி உடையது. அத்தகைய கலையை எங்கிருந்து கற்பது.... நம் வாழ்விலிருந்து தான். நான் இப்போதெல்லாம் பேசுவது மிகவும் குறைந்து விட்டது. அதிகம் கேட்கவே விரும்புகிறேன். இதனால் பல நல்ல, கெட்ட விஷயங்களை அறிய, ஆராய முடிகிறது.

எனக்கு மந்திர மற்றும் தந்திர வார்த்தைகளாகப் படும் சில இங்கே.

I love you

இந்த வார்த்தைகளுக்குத் தான் எவ்வளவு சக்தி. இதை உங்களால் யாரிடமெல்லாம் சொல்ல உரிமை உள்ளதோ அவர்களிடம் அன்பான அவசியமான நேரங்களில் சொல்லிப் பாருங்கள், பிறகு தெரியும். (அதற்காக பாக்குற பொண்ணுங்க கிட்டேயெல்லாம் சொல்லி பசங்க அடி வாங்கினா நான் பொறுப்பில்ல)

அம்மா, அப்பா, உடன் பிறந்தோர், வாழ்க்கைத் துணை, குழந்தை இன்னும் யாரிடமெல்லாம் சொல்லலாமோ அவர்களிடம் நீங்கள் சொல்லும் நேரத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனியுங்கள். அடடா... எத்தனை அற்புதம்.

பாராட்டுங்கள் (பாராட்டு வார்த்தைகள்)

எப்போதும் எல்லாரும் விரும்பும் ஒரு விஷயம் பாராட்டு. அதை அளிக்க எப்போதும் தயங்காதீர்கள். ஒரு கெட்ட விஷயத்தைக் கூட நல்ல விதமாகப் பாராட்டிப் பாருங்கள். நீங்கள் பாராட்டுபவருக்கும் உங்களுக்கும் ஒரு அன்யோன்யம் வரும். பாராட்டுங்கள். அதிகமாகப் புகழாதீர்கள்.

ஒருவரின் செயலில் அவரது முயற்சி, நேரம், உழைப்பு எல்லாம் உள்ளது. அதனால் அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். நான் எப்போதும் என் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணைக் கூட பாராட்டுவது வழக்கம். அவளின் வேலை பாத்திரங்களை சுத்தம் செய்வது. அதற்காக அவள் பணம் பெறுகிறாள். இதில் பாராட்டுதல் எதற்கு என்ற எண்ணம் வேண்டாம்.

"அடடே, இன்னிக்கு எல்லா வேலையும் இவ்வளவு சீக்கிரம் முடிச்சுட்டியே."
"இன்னிக்கு பாத்திரமெல்லாம் பளபளன்னு இருக்கு. குட்."

உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் எப்போதாவது புது உடை அணிந்து வந்தால்
"Your dress is nice" என்றோ,
"You look great in this" என்றோ,
"There is a change in you which makes you bright today" என்றோ சொல்லுங்கள்.
அதனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி உங்களிடம் அவர்களின் சிநேகத்தைக் கூட்டும்.

நன்றி

இந்த வார்த்தையைப் பலரும் உபயோகிக்க வேண்டாம் என சொல்லுவது ஏன் எனத் தெரியவில்லை. இதை வெறும் ஃபார்மாலிடி வார்த்தையாகப் பார்க்காமல் ஒருவர் உங்களுக்கு அளிக்கும் சன்மானம் எனக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு விஷயத்தை செய்யும் போது அடுத்தவர் மனம் உகந்து சொல்லும் வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

ஆபிசில் உங்களுக்கு டீ கொண்டு வரும் பியூனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களுக்கு வேண்டிய சிறு பொருளை எடுத்து உங்களைத் தேடி வரும் குழந்தைக்கு நன்றி சொல்லுங்கள். அதுவும் உங்களிடமிருந்து அந்த பழக்கத்தைக் கற்றுக் கொள்ளும்.

எப்போதெல்லாம் உங்கள் மனம் பிறரின் செய்கைகளால், வார்த்தைகளால் மகிழ்கிறதோ அப்போது நன்றி சொல்லத் தவறாதீர்கள். இது தவிர எப்போதும் அழகை மிகைக்காத ஒரு புன்னகை, தெவிட்டாத வார்த்தைகள் என ஒரு நாள் இருந்து பாருங்கள். கண்டிப்பாக நீங்கள் அந்த நாளை புது ஊக்கத்தோடு எதிர்கொள்வீர்கள். வார்த்தைகள் செய்யும் மந்திரங்கள் அழகானவை. நீங்கள் போடாத மந்திரங்களை அவை போடும்.
****************************************************************************************************

உங்களிடம் பேசும் யாரும், "ச்சே, என் நேரமெல்லாம் இந்த ஆள் கிட்ட பேசி விரயமாகிடுச்சு" என்றோ, "இவ கிட்ட பேசினாலே எரிச்சல் தான் வருது. அது என்ன தேவையில்லாத வார்த்தை" என்றோ
சொல்லாமல் இருக்க வேண்டுமானால் முடிந்தவரை கீழேயுள்ள வார்த்தைகளைத் தவிருங்கள்.

Brother / Sister

என்னால் எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாத வார்த்தைகள் இவை. ஒருவரைப் பார்த்தவுடன் (சில நேரங்களில் பார்க்காமலே) எப்படி இந்த சகோதரப் பாசம் பொங்குகிறது எனத் தெரியவில்லை. ஒருவரை நம்ப வேண்டுமானால் அல்லது நம்ப வைக்க வேண்டுமானால் அது இவ்வார்த்தைகளால் தான் முடியும் என எண்ணாதீர்கள். பல நேரங்களில் அது ஒருவர் மீது மற்றவருக்கு இல்லாத நம்பிக்கையையே காட்டுகிறது.

எப்படி உங்களால் ஒருவரைப் பார்த்தவுடன் 'அன்பே' என விளிக்க முடியாதோ அதே போல் 'அண்ணா' என்றும் சொல்லக் கூடாது. ஒருவரைப் பற்றிய அந்த உறவின் உணர்வு வராமலே மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் பயன்படுத்தப்படும் இந்த வார்த்தைகளை நான் எப்போதும் வெறுக்கிறேன்.

என்னை யாராவது சிஸ்டர் அல்லது சகோதரி என்றால் அவருடன் பேசுவதை நான் விரும்புவதில்லை. ஒரு ஆணை ஒரு பெண் இந்த வார்த்தைகளால் தான் நம்ப வேண்டுமெனில் அந்த கீழ்த் தரமான செயலை நான் முழுவதும் எதிர்க்கிறேன். அந்த வார்த்தைகளை வெறும் கவசமாகவே கொண்டு பல தவறு செய்பவர்கள் இருக்கும் போது வெறும் வார்த்தைகளில் போலித் தனம் எதற்கு?

Sorry

தேவைப்படும் இடங்களில் மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டிய வார்த்தை இது. ஒரு வரைமுறை இல்லாது இவ்வார்த்தை எப்போதும் உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தால் ஒரு சலிப்பையே தருகிறது. தவறுகள் செய்து விட்டு ஸாரி சொல்வதைத் தவிர்த்து அதை செய்யாமல் இருக்க முயற்சிக்கலாம் என்பது என் அபிப்பிராயம். தவிர, எப்போதும் ஸாரி சொல்லும் ஒருவரின் மதிப்பும் குறைந்து போவது உண்மை.

இப்போதெல்லாம் ஆங்கிலத்தில் அசிங்கமாகத் திட்டினால் அது ஒரு ஃபேஷன் என ஆகி விட்டது. ஆனால் அதை உங்களால் உங்கள் பெற்றோர் முன்னோ, குழந்தை முன்னோ பேச முடியுமா என யோசித்துப் பாருங்கள். அவர்கள் முன் பேசும் அளவுக்கு அவ்வார்த்தைக்கான தகுதி இல்லையெனில் அது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியது.

இது தவிர உங்களிடம் மற்றவர் உபயோகிக்கும் எந்த வார்த்தைகள் உங்களுக்குப் பிடிக்கவில்லையோ அவைகளை நீங்களும் தவிருங்கள். மற்றவர் நேசிக்கும்படி உங்கள் வார்த்தைகள் அமைய வாழ்த்துக்கள்.

37 comments:

Prabu M said...

Really Nice..
Just saw your blog.. Interesting ... so started following it :)
Keep going....

GIYAPPAN said...

Sorry. My Indic tranliteration hangs like it will never work. Anyway, here are some more manthira vaarthai that I have been accustomed to when I was a kid.
"Appa varaar" will put me on my feet any moment. The mention of my father will send me to my study. But he was so loveing. I could understand only when I miss him.

rajan said...

//உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் எப்போதாவது புது உடை அணிந்து வந்தால்
"Your dress is nice" என்றோ,
"You look great in this" என்றோ,
"There is a change in you which makes you bright today" என்றோ சொல்லுங்கள்.//

"உங்க dress நல்லா இருக்குனு" கூட சொல்லலாமில்லையா?

ஏன்னா எனக்கு english அவ்வளவா வராது!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கார்க்கிபவா said...

ம்ம்.. சரிதான்

தராசு said...

இல்லை விக்கி,

ஒரு கருத்தில் நான் வேறுபடுகிறேன்.

ஒரு பெண்ணை சகோதரி என்று அழைப்பதில் அர்த்தம் இல்லை என்று சொல்லாதீர்கள். நமது பேச்சு வழக்கில் முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் பேசும்பொழுது அக்கா, வாங்கக்கா என்று சொல்கிறோம். இதையே வடக்கில், "பெஹன் ஜி" என்று சொல்லுவார்கள். இப்படி ஒரு வார்த்தை சொன்னவுடன் நான் ஒரு பெண்ணிடம் சகோதர உறவு கொண்டாடுகிறேன் என்று அர்த்தமில்லை. ஆனால், ஒரு முன்பின் தெரியாத ஒரு பெண்ணை அழைப்பதற்கு இதைத் தவிர வேறு சரியான வார்த்தைகள் இல்லை என நினைக்கிறேன்.

ஆயில்யன் said...

//(அதற்காக பாக்குற பொண்ணுங்க கிட்டேயெல்லாம் சொல்லி பசங்க அடி வாங்கினா நான் பொறுப்பில்ல)

//


பாக்குறவங்ககிட்ட சொல்லாம பாக்கம போறவங்ககிட்ட சொன்னாத்தான் போற வர்றவனெல்லாம் போட்டு கும்முவாங்க !

ஜஸ்ட் ஃபார் இன்பர்மேஷன் :)

ஆயில்யன் said...

குட் போஸ்ட்டூ :)

ungalrasigan.blogspot.com said...

\\அடடே, இன்னிக்கு எல்லா வேலையும் இவ்வளவு சீக்கிரம் முடிச்சுட்டியே.// “அடடே, இன்னிக்குப் போட்ட பதிவு மத்த எல்லா பதிவுகளை விடவும் சூப்பரா இருக்கே!” காமெடிக்கு இல்லை; நிஜமான பாராட்டுத்தான் இது!

வால்பையன் said...

நீங்க நன்றி சொல்ல சொல்றிங்க!

ஒருத்தர்

“நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு”ன்னு பாட்டு பாடுறார்!

சரி எப்படி தான் சொல்விங்கன்னு கேட்டா பளீர்னு கன்னத்துல ஒண்ணு கொடுக்குறார்!

அவ்வ்வ்வ்வ்வ்!

ஜெட்லி... said...

//என்னை யாராவது சிஸ்டர் அல்லது சகோதரி என்றால் அவருடன் பேசுவதை நான் விரும்புவதில்லை. ஒரு ஆணை ஒரு பெண் இந்த வார்த்தைகளால் தான் நம்ப வேண்டுமெனில் அந்த கீழ்த் தரமான செயலை நான் முழுவதும் எதிர்க்கிறேன்//


நல்லா சொன்னிங்க....நிறைய பேரு ஊருக்குள்ள இது மாதிரி
சுத்திட்டு திரியிறாங்க.......

கவி அழகன் said...

short and sweet with massage keep it up.
அலட்டல் இல்லாத அறிவு படைப்பு

எம்.எம்.அப்துல்லா said...

//Brother / Sister
என்னால் எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாத வார்த்தைகள் இவை. ஒருவரைப் பார்த்தவுடன் (சில நேரங்களில் பார்க்காமலே) எப்படி இந்த சகோதரப் பாசம் பொங்குகிறது எனத் தெரியவில்லை //

பார்த்தவுடன் யாருக்கும் யார் மேலும் சகோதர பாசம் வர வாய்ப்பே இல்லை என்பதை நான் 100% ஒத்துக்கொள்கின்றேன். ஆனால் அதே நேரத்தில் இது சிலருக்கு எந்த உள்நோக்கமுமற்ற மேனரிசமாகவும் உள்ளது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகின்றேன்

:)

Rajalakshmi Pakkirisamy said...

Really very nice :)

thiyaa said...

///
எப்போதும் எல்லாரும் விரும்பும் ஒரு விஷயம் பாராட்டு. அதை அளிக்க எப்போதும் தயங்காதீர்கள். ஒரு கெட்ட விஷயத்தைக் கூட நல்ல விதமாகப் பாராட்டிப் பாருங்கள். நீங்கள் பாராட்டுபவருக்கும் உங்களுக்கும் ஒரு அன்யோன்யம் வரும். பாராட்டுங்கள். அதிகமாகப் புகழாதீர்கள்.
///


நல்ல விஷயங்களைச் சேர்த்து தொகுத்து தந்தமைக்கு நன்றி
நல்ல படைப்பு

kanagu said...

nalla irundhunga indha padhivu...

siriya vishayangal... vaazhkaikku mukkiyamaanavai :)

Romeoboy said...

personality development கோர்ஸ்க்கு என்ன தேவையோ அது இங்கு இருக்கிறது ..

ஹ்ம்ம் நடத்துங்க நடத்துங்க .

Prabhu said...

I Love You
இந்த வார்த்தைகளுக்குத் தான் எவ்வளவு சக்தி. இதை உங்களால் யாரிடமெல்லாம் சொல்ல உரிமை உள்ளதோ அவர்களிடம் அன்பான அவசியமான நேரங்களில் சொல்லிப் பாருங்கள், பிறகு தெரியும். (////

நான் சொன்னா சிரிக்கிறாங்கப்பா.. எல்லா பொண்ணுங்களும்!

M.S.R. கோபிநாத் said...

/**பாராட்டுங்கள் (பாராட்டு வார்த்தைகள்) **/

/** நன்றி **/

இந்த மாதிரி தலைப்பை தேர்ந்தெடுத்தற்காக உங்களுக்கு எனது பாராட்டுக்களும், நன்றிகளும்.

/**பிரதெர் / ஸிச்டெர் **/

வயசில மூத்தவங்களை /சின்னவங்களை பின்ன எப்படிங்க கூப்பிடறது?

/** சாரி **/
இந்தியாவில் தான் தப்பு செய்தாலும் "சாரி", தவறு செய்தாலும் "சாரி". மற்ற நாடுகளில் தப்பு செய்தால்தான் "சாரி". தவறு செய்தால் "எக்ஸ்க்யுஸ்மி" தான்.

சுசி said...

நிஜமாவே மந்திர, தந்திர வார்த்தைகள்தான்.

//உங்களிடம் மற்றவர் உபயோகிக்கும் எந்த வார்த்தைகள் உங்களுக்குப் பிடிக்கவில்லையோ அவைகளை நீங்களும் தவிருங்கள்//

இத எக்கச்சக்கமா வழிமொழிகிறேன் :)))

ப்ரியமுடன் வசந்த் said...

இன்னிலேருந்து இந்த வழக்கத்தை பின்பற்ற ப்ழகுறேன் நன்றிகள்

Vidhoosh said...

http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html

Please accept this gift from me with deep appreciation for your blog.

-vidhya

பித்தனின் வாக்கு said...

// ஒரு கெட்ட விஷயத்தைக் கூட நல்ல விதமாகப் பாராட்டிப் பாருங்கள். ///
நானும் பாரட்டுகின்றேன். பரவாயில்லை நல்லா பிளாக் எழுதுகின்றீர்கள். இன்னும் இப்படிதான் எழுதனும் (அய்யே அடிக்காதிங்க) ஹி ஹி.

அப்பா ஜ லவ் யூ,அம்மா ஜ லவ் யூ இது என்ன போலி நாகரீகம். ஒரு கண் துடித்தால் மறுகண் துடிப்பதைப் போல குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நலம் கொட்டால் நாம் காட்டும் அதீத அன்பும், அக்கரையும் அனைவரையும் நம் அன்பில் கட்டிப் போடாதா?

// ஒரு ஆணை ஒரு பெண் இந்த வார்த்தைகளால் தான் நம்ப வேண்டுமெனில் அந்த கீழ்த் தரமான செயலை நான் முழுவதும் எதிர்க்கிறேன். அந்த வார்த்தைகளை வெறும் கவசமாகவே கொண்டு பல தவறு செய்பவர்கள் இருக்கும் போது வெறும் வார்த்தைகளில் போலித் தனம் எதற்கு? //
எனக்கு இந்த கருத்தில் உடன்பாடு இல்லை. நான் இதை எதிர்க்கின்றேன். நான் பழகும் பெண்களில், விரும்பும் பெண்களைத் தவிர மற்ற அனைவரையும் சகோதரி என்றுதான் அழைக்கின்றேன். அப்படியானால் நான் கீழ்த்தரமானவனா?
தவறாக எடுக்க வேண்டாம். தங்களின் கருத்துக்கள் போல என் எண்ணங்களை கூறியிருக்கின்றேன். இது மறுத்தலே அல்லது உடண்படாமை அல்ல.

மற்றபடி அனைத்தும் அருமை. நல்ல பதிவு. நன்றி.

Vidhya Chandrasekaran said...

ம்ம். அந்த நன்றி சொல்ற மேட்டரை நான் ரொம்ப வருஷமா ஃபாலோ செய்றேன். நல்ல பதிவு.

trdhasan said...

ஒரு முன்பின் தெரியாத ஒரு பெண்ணை அழைப்பதற்கு இதைத் தவிர வேறு சரியான வார்த்தைகள் இல்லை என நினைக்கிறேன்.
//

அதுக்குத்தான் தமிழ் ல "வாங்க", "போங்க" ன்னு இருக்கே.!

.......................

நல்ல விசயம்தான் விக்கி!

விக்னேஷ்வரி said...

நன்றி பிரபு.எம்.

வாங்க ஐயப்பன் சார்.

நீங்க சொல்லலாம் ராஜன். நான் இங்கே அப்படி சொன்னா ஏதோ அவங்கள திட்டுற மாதிரி பார்ப்பாங்க. :)

வாங்க கார்க்கி.

ஒரு முன்பின் தெரியாத ஒரு பெண்ணை அழைப்பதற்கு இதைத் தவிர வேறு சரியான வார்த்தைகள் இல்லை என நினைக்கிறேன் //
உங்கள் கருத்துக்கு நன்றி தராசு. எல்லாருக்கும் ஒரு பெயர் உள்ளது தானே. முடிகின்ற நேரங்களில் அவர்களின் பெயராலும், இயலாத நிலையில் மேடம்/சார் என்றோ அழைப்பது சகோதரி என்ற வார்த்தையை விட சிறந்தது என்றே நினைக்கிறேன்.

இப்படி ஒரு வார்த்தை சொன்னவுடன் நான் ஒரு பெண்ணிடம் சகோதர உறவு கொண்டாடுகிறேன் என்று அர்த்தமில்லை //
அதே தான். உறவுக்கு சொல்லப்படும் ஒரு வார்த்தையை உறவே இல்லாமல் ஒரு டம்மி வார்த்தையாகப் பயன்படுத்த வேண்டாம் என்பதே என் கருத்து. வாதம் அல்ல.

விக்னேஷ்வரி said...

குட் இன்பர்மேஷன் ஆயில்யன். பாக்குற பொண்ணு கிட்ட சொல்லுங்க. பாக்குற பொண்ணுங்க கிட்டேயெல்லாம் சொல்லாதீங்க. :)
நன்றி ஆயில்யன்.

காமெடியோ, நிஜமோ நன்றி ரவிபிரகாஷ். :)

உங்களைப் பார்த்தா எனக்குப் பாவமா இருக்கு வால். நீங்க இவ்ளோ நல்லவரா...

வாங்க ஜெட்லி.

நன்றி கவிக்கிழவன்.

விக்னேஷ்வரி said...

மேனரிசம் என்பது சரிதான். ஆனால் தவிர்க்கப்பட வேண்டிய மேனரிசம் என்றே நினைக்கிறேன் அப்துல்லா. யாராவது எல்லாரையும் 'டார்லிங்' என அழைப்பது தான் மேனரிசம் என்றால் நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா... மாட்டீங்க தானே. அப்படித் தான் இதுவும் என்பது என் எண்ணம்.

நன்றி ராஜலெட்சுமி.

நன்றி தியாவின் பேனா.

நன்றி கனகு.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் Personality Development தேவை தானே ரோமியோபாய்.

அடிக்காம சிரிக்குறாங்களேன்னு சந்தோஷப்படுங்க பப்பு.

நன்றி கோபிநாத்.
வயசில மூத்தவங்களை /சின்னவங்களை பின்ன எப்படிங்க கூப்பிடறது? //
மூத்தவங்க சின்னவங்கங்குறது வயசுல இல்லை என்பது என் கருத்து. யாரா இருந்தாலும் மேடம் / பெயர் சொல்லி அழைக்கலாமே. பெண்கள் பெரும்பாலும் பெயர் சொல்லி அழைப்பதையே விரும்புகின்றனர். உங்களுக்கு அது சிரமமா இருந்தா வெறும் 'ங்க' கூட போதும்னு நினைக்கிறேன்.

விக்னேஷ்வரி said...

நன்றி சுசி.

வாங்க வசந்த்.

நன்றி வித்யா.

// ஒரு கெட்ட விஷயத்தைக் கூட நல்ல விதமாகப் பாராட்டிப் பாருங்கள். ///
நானும் பாரட்டுகின்றேன். பரவாயில்லை நல்லா பிளாக் எழுதுகின்றீர்கள். இன்னும் இப்படிதான் எழுதனும் //
ரைட்டு பித்தனின் வாக்கு. நடத்துங்க.

அப்பா ஜ லவ் யூ,அம்மா ஜ லவ் யூ இது என்ன போலி நாகரீகம். ஒரு கண் துடித்தால் மறுகண் துடிப்பதைப் போல குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நலம் கொட்டால் நாம் காட்டும் அதீத அன்பும், அக்கரையும் அனைவரையும் நம் அன்பில் கட்டிப் போடாதா? //
அப்போ உங்க அன்பை ஒருத்தர் தெரிஞ்சக்கனும்னா அவங்க உடம்பு சரியில்லாம தான் போகனுமா... ;)
போலி நாகரீகம் இல்லை. அன்பின் வெளிப்பாடு.
"டைனிங் டேபிள்ல சாப்பாடு இருக்கு. எடுத்துப் போட்டு சாப்பிடு"ன்னு அம்மா சொல்றதுக்கும், அவங்களே பக்கத்துல உக்காந்து பரிமார்றதுக்கும் உள்ள வித்யாசம் தான் அன்பை சொல்லாமல் இருப்பதும், வார்த்தைகளில் வெளிக்காட்டுவதும்.

நான் பழகும் பெண்களில், விரும்பும் பெண்களைத் தவிர மற்ற அனைவரையும் சகோதரி என்றுதான் அழைக்கின்றேன். அப்படியானால் நான் கீழ்த்தரமானவனா? //
நான் அப்படி அழைப்பவர்களைக் கீழ்த்தரமானவர்கள் என்று சொல்லவில்லை பித்தனின் வாக்கு. இந்த வார்த்தைகளால் தான் ஒரு பெண் ஒரு ஆணை நம்ப வேண்டும் என்னும் எண்ணத்தைக் கீழ்த்தரமானது என்கிறேன். நீங்கள் சகோதரி என அழைக்கும் அனைத்துப் பெண்கள் மீதும் உங்களுக்கு சகோதரப் பாசம் உள்ளதா என்பதே என் கேள்வி.

இருக்கும் அன்பை வார்த்தைகளில் வெளிப்படுத்தத் தேவையில்லை என்பதும், இல்லாத சகோதரப் பாசத்தை வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்பதும் என்னால் ஏற்க முடியாத விஷயங்கள். அவ்வளவு தான். உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

நன்றி வித்யா.
அந்த நன்றி சொல்ற மேட்டரை நான் ரொம்ப வருஷமா ஃபாலோ செய்றேன். //
உங்க பின்னூட்டங்கள்ல தெரியுதுங்கோ. :)

நன்றி டி.ஆர்.தாசன்.

Kumar.B said...

இது தவிர உங்களிடம் மற்றவர் உபயோகிக்கும் எந்த வார்த்தைகள் உங்களுக்குப் பிடிக்கவில்லையோ அவைகளை நீங்களும் தவிருங்கள். மற்றவர் நேசிக்கும்படி உங்கள் வார்த்தைகள் அமைய வாழ்த்துக்கள்.
-well said but very difficult as we have to intract with many people from relatives to professional friends. v r been forced not to use nice words because of professional compulsions.

பா.ராஜாராம் said...

அடிச்சு ஆடிருக்கீங்க விக்னேஷ்வரி.அருமையான பதிவு!

//என்னால் எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாத வார்த்தைகள் இவை. ஒருவரைப் பார்த்தவுடன் (சில நேரங்களில் பார்க்காமலே) எப்படி இந்த சகோதரப் பாசம் பொங்குகிறது எனத் தெரியவில்லை. ஒருவரை நம்ப வேண்டுமானால் அல்லது நம்ப வைக்க வேண்டுமானால் அது இவ்வார்த்தைகளால் தான் முடியும் என எண்ணாதீர்கள். பல நேரங்களில் அது ஒருவர் மீது மற்றவருக்கு இல்லாத நம்பிக்கையையே காட்டுகிறது.
எப்படி உங்களால் ஒருவரைப் பார்த்தவுடன் 'அன்பே' என விளிக்க முடியாதோ அதே போல் 'அண்ணா' என்றும் சொல்லக் கூடாது. ஒருவரைப் பற்றிய அந்த உறவின் உணர்வு வராமலே மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் பயன்படுத்தப்படும் இந்த வார்த்தைகளை நான் எப்போதும் வெறுக்கிறேன்.
என்னை யாராவது சிஸ்டர் அல்லது சகோதரி என்றால் அவருடன் பேசுவதை நான் விரும்புவதில்லை. ஒரு ஆணை ஒரு பெண் இந்த வார்த்தைகளால் தான் நம்ப வேண்டுமெனில் அந்த கீழ்த் தரமான செயலை நான் முழுவதும் எதிர்க்கிறேன். அந்த வார்த்தைகளை வெறும் கவசமாகவே கொண்டு பல தவறு செய்பவர்கள் இருக்கும் போது வெறும் வார்த்தைகளில் போலித் தனம் எதற்கு?//

பாசாங்கற்ற நேர்மையான பார்வை!wonderful!

நாடோடி இலக்கியன் said...

சகோதரி என்று அழைப்பதில் எனக்கு வேறு கருத்து இருப்பினும் உங்கள் பார்வையையும் மதிக்கிறேன்.

rajan said...

ungala thodar pathivukku koopitu irukken. visit my blog

Priya said...

நீங்கள் சொன்ன அத்தனை மந்திர தந்திர வார்த்தைகளையும் நானும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன்... ஒன்றை தவிர, brother & sister.

Mystic said...

nenga sonathellam sari than annal oru prichinai errukirathu,,,

Nan nanban enru nenaithu antha nalla varthai pesinal ..avarkal kadhalaka reply seikirarkal...

seri vidu.... sister/brother enru antha nalla varthai pesinal ... Nanban engirarkal...


seri athyum vidu.... Kadhali eval thane enru nenaithu antha nalla varthai pesinal sister/brthr enru reply seikirarkal....

Yenna tension pa... Udanae nan oru mudivukku vanthane ,,,

Usage of antha nalla varthai in percentage :)

Mother/Father/Husband/wife - 100 %
Lover - 70%
Sister/Brother - 50 %
Friend - 30 %
Unknown friend - 20 %
:) Now i am fine with these percentages in my life :)

I love maths ;)

CS. Mohan Kumar said...

Nice. I agree with many of the points especially what you have written on "Brother- sister". I have seen in college days that some people start like that and then become lovers (!?) also. One such couple are now happily married having 2 kids.

It is better to be a friend with opposite gender than a brother or sister.

***

I differ with you on saying "Sorry". It is better to say sorry than not saying it. (Agreed that we should not create more situations for saying sorry; yet some people for ego do not even say sorry & tell that it is not necessary in close relationships)

ப்ரியமுடன் வசந்த் said...

http://blogintamil.blogspot.com/2009/12/blog-post_10.html

வாருங்கள் இங்கே

commomeega said...

நல்ல பதிவு. அண்ணா,அக்கா என்று மூத்தவர்களை ஒரு மரியாதைக்காகவும் அழைப்பர்.