திடீரென படிக்க வேண்டும் என ஆர்வம் வந்தது. அதுவும் டெல்லி nift இல். இந்தியாவின் நம்பர் 1 Fashion Designing Institute டெல்லியில் இருக்கும் போது அங்கு மாஸ்டர்ஸ் படிக்கும் வாய்ப்பைத் தவற விடலாமா.... அவரிடம் கேட்டேன். படிக்க சொன்னார். எல்லா தகவல்களையும் சேகரிக்க ஆரம்பித்தேன். வேலையை விட்டு விட்டு Entrance Exam ற்கு தயாராக சொன்னார். எல்லாம் சரியென மகிழ்ந்த வேளையில், Graduation முடிச்சுட்டியா எனக் கேட்டார். அப்போது தான் விட்டு விட்ட இரண்டு செமஸ்டர் ப்ராக்டிகல் தேர்வுகள் நினைவிற்கு வந்தன. திரு திருவென முழித்த என்னை கோவை அனுப்பி எக்ஸாம் முடிக்க சொன்னார். ஒருபக்கம் கணவர் துரத்த, மறுபக்கம் nift building கனவில் வந்து அழைக்க, ஒரு வழியாய் ப்ராக்டிகல்ஸை மூன்று வருடங்களுக்குப் பிறகு முடித்து விட்டேன். இனி அப்துல் கலாம் சொன்னது போல் கனவு காணுங்கள் தான். வேறென்ன, nift கனவு தான். ( கனவு மெய்ப்பட வேண்டும் )
**************************************************
ப்ராக்டிகல் தேர்விற்கு செல்ல வேண்டிய அன்று வழக்கம் போல் தாமதமாக எழுந்ததால் நேரமாகி விட்டது. கோவை டாக்ஸிகாரர்கள் எவ்வளவு நல்லவர்கள் என அன்று தான் அறிந்தேன். ஒரு டாக்ஸியும் இருபது நிமிடத்திற்குள் வருவதாய் இல்லை. பஸ்ஸில் சென்றால் தேர்வறைக்குள் நுழைய முடியாதென்பது உறுதியானதால் தோழியின் கணவரின் Discover ஐ எடுத்துச் சென்று விட்டேன்.
நேரத்திற்குப் போய் விட்டேன். நண்பனின் அழைப்பு தொலைபேசியில்.
"விக்கி, இன்னிக்கு உனக்கு எக்ஸாம் இல்ல, All the Best"
"அடப்பாவி, மூணு வருஷம் முன்னாடி எழுத வேண்டியத இப்போ எழுதுறேன். இதுக்கு வாழ்த்து வேறையா...."
"நான் "All the Best" சொன்னது உன் Examiner க்கு."
".............."
"ஆமா, எப்படி நேரத்துல போய் சேர்ந்த... நீ காலேஜ் டைம்லேயே பர்ஸ்ட் ஹவர் முடிஞ்சப்புறம் தான வருவ"
"இன்னிக்கும் லேட் ஆகிடுச்சு தான். Friend Husband கிட்ட Discover Bike வாங்கிட்டு வந்திட்டேன்"
"ஐயோ பாவம், சாயங்காலம் அவர் அவரோட பைக்க Discover பண்ண வேண்டி இருக்கும்."
"ரொம்ப டேமேஜ் பண்ணிட்ட. பை."
லைனைக் கட் பண்ணிவிட்டு மனதில் நினைத்தேன்.
"இவனுக்கு நான் ஏன் கார்க்கி ப்ளாக் பத்தி சொன்னேன்...."
( ப்ளாக படிச்சவன் மொக்கையயே தாங்க முடியல.......... )
**************************************************
பதிவுலக எச்சரிக்கைகளை மீறி கந்தசாமி படம் போனது எவ்வளவு பெரிய தவறு என உணர்ந்தேன். முதல் பத்து நிமிடம் ஒழுங்காய்ப் போய்க் கொண்டிருந்த படம் அடுத்த பதினைத்து நிமிடங்களுக்கு ஒரு சத்தமுமில்லாமல் போனது. பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினாலே தியேட்டரை ரணகளம் பண்ணும் நம்மூர்ப் பசங்க நூற்றி ஐம்பது ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி சவுண்டு இல்லாம படம் காட்டினா விடுவாங்களா... எழுந்து ஆபரேட்டரை தூய தமிழில் திட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஏதோ இங்கே உள்ளவனுக்கு புரியல, நம்ம பசங்க தப்பிச்சாங்க. எல்லாரும் சேர்ந்து பேசி படத்தை மறுபடியும் போட சொன்னார்கள். முதல் சண்டைக் காட்சியை (!!!!) இரண்டாம் முறை பார்க்கும் துர்பாக்கியசாலி ஆனேன். முதல் காட்சியிலேயே முறைத்த என்னவர், படம் முடிந்த பின்பு "இனி தமிழ்ப் படத்துக்கு கூப்பிடு. உன்னைக் கவனிச்சுக்குறேன்" ங்குற மாதிரி ஒரு லுக் விட்டார். ஒன்னும் பேசாமல் வீடு வந்து சேர்ந்தேன். ( விக்ரம், ஏன் இப்படி.... :( )
**************************************************
தோழியின் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்.
"ஆன்ட்டி, வாங்க நாம அனிமல்ஸ் வெச்சு சண்ட போடலாம்" அவனுடைய அனிமல் செட் பொம்மையை வைத்துக் கொண்டு கொஞ்சினான்.
"சண்டை வேண்டாம். நாம எல்லாத்தையும் சமாதானம் பண்ணி வச்சுடலாம்" என்றேன்.
"ஐயோ, வேணாம். சண்டை போட்டா தான் நல்லா இருக்கும். ஜெடிக்ஸ்ல சண்டை தான் போடுவாங்க."
"இல்ல தம்பி, நான் உனக்கு சொல்லித் தரேன். அனிமல்ஸ் இப்போ சண்டை போடாது. நாம எல்லாத்துக்கும் கட்டி பிடிச்சு சமாதானம் பண்ணி வைக்கலாம்"
"கட்டிப் பிடிச்சா சமாதானமா. அப்புறம் ஏன் படத்துல இந்த ரெண்டு அங்கிளும் (ஹீரோவும், வில்லனும்) கட்டி பிடிக்காம கத்தி பிடிக்குறாங்க"
"அவங்களுக்கு அவங்க ஆன்ட்டி சொல்லி தந்திருக்க மாட்டாங்க. நான் உனக்கு சொல்லி தரேன்ல. சரி விடு அனிமல்ஸ் வேண்டாம். நீ உன் பியானோ எடுத்திட்டு வந்து எனக்கு வாசிச்சுக் காமி" என பிளேட்டை மாத்தினேன். ( அவன் ஏதாவது பாடல் காட்சி பார்த்து விட்டு அந்த அங்கிளும் அக்காவும் சமாதானம் பண்றாங்களானு கேக்குறதுக்கு முன்னாடி எஸ்கேப். )
**************************************************
திருமணம் நிச்சயமான தோழி ஒருத்திக்கு அவளது நண்பனின் மீது ஒரு தலைக் காதல். திருமணத்தை நிறுத்தவும் முடியாமல் காதலை கட்டுப்படுத்தவும் முடியாமல் திணறியவள் என்னையும் இன்னொரு தோழியையும் பார்க்க வந்தாள். அவளுக்கு என்ன சொல்வது எனத் தெரியாமல் நான் தவிக்க உடனிருந்த மற்றொரு தோழி அவளை தேற்றிய விதம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். அவள் சொன்ன டயலாக் சாதாரணம் எனினும் தோழி தெளிவாக எங்களிடமிருந்து விடை பெற்று சென்றாள். அவள் சொன்னது ஒரே வாக்கியம். "Taj Mahal to Taj Mahal hai. Apni gar, apni gar hai"
"தாஜ்மஹல் எல்லோரும் பார்த்து வியக்கும், பிரம்மிக்கும் அழகு தான். ஆனாலும் நம்மால் அதற்குள் வசிக்க முடியாது. அப்படியே அங்கிருப்பதானால் ஒரு வேலையாளாக இருக்க மட்டுமே முடியும். அதன் அழகை ரசிக்க வருடமொருமுறை பார்த்து வரலாம். ஆனாலும், நம் வீட்டில் ராணியாய் இருக்கும் நிம்மதி தினமும் தாஜ்மகாலில் தங்குவதால் வந்து விடாது. அது போல் நல்ல விஷயங்கள் நம்மை சுற்றி தினமும் நடக்கும். நமக்குப் பிடித்தவர்கள் ஆயிரம் பேர் வருவர். எல்லோரும் அழகு, எனக்கென விதிக்கப்பட்டவன் தான் என்னவன், என் வீடு போன்ற நிம்மதி தருபவன் என்ற எண்ணம் வேண்டும்." என்றாள். மிகவும் ரசித்தேன். ( தோழிகளைப் போல் சிறந்த ஆலோசகர் யாருமுண்டா... )
**************************************************
நண்பரிடம் இன்னிக்கு துணுக்ஸுக்கு செய்தி ஒன்றும் இல்லை என்றேன். அவர் சொன்னார், "செய்தி தான் எல்லா இடத்திலேயும் இருக்கே. நிகழ்வுகளையும், அனுபவங்களையும் விட சிறந்த பகிர்தல்கள் இருக்க முடியுமா. அதையே எழுது." எழுதிட்டேன். அவர் சொன்னது சரியா? ( சரியில்லைனா நண்பர் நம்பர் தரேன் :) என்னைத் திட்டாதீங்க )
41 comments:
நல்லாயிருக்குங்க.
/விக்கி, இன்னிக்கு உனக்கு எக்ஸாம் இல்ல, All the Best//
எக்ஸாம் இல்லாததற்க்கு எதற்கு All the Best
/ நூற்றி ஐம்பது ரூபாய்க்கு//
ஹை நானாச்சும் 70 ரூபாய்தான் வேஸ்ட் செய்தேன்..ஆனா ஒண்ணு நான் தூங்கிட்டேன் அந்த இரைச்சல்லயும்..
அனுபவப் பகிர்தல்கள் அம்சம்!
/*கனவு மெய்ப்பட வேண்டும்*/
nichayamaaka meipadum.. :))
/*ஐயோ பாவம், சாயங்காலம் அவர் அவரோட பைக்க Discover பண்ண வேண்டி இருக்கும்."*/
LOL.. :))
/*"இனி தமிழ்ப் படத்துக்கு கூப்பிடு. உன்னைக் கவனிச்சுக்குறேன்" */
echarikkaiyai merinaal thandikkapaduveerkal :P :P
avlo vimarsanam paathutu poi irukeengale..
naanum pone.. book panniache nu ponen..
/*அவன் ஏதாவது பாடல் காட்சி பார்த்து விட்டு அந்த அங்கிளும் அக்காவும் சமாதானம் பண்றாங்களானு கேக்குறதுக்கு முன்னாடி எஸ்கேப்.*/
LOL.. :)
/*"செய்தி தான் எல்லா இடத்திலேயும் இருக்கே. நிகழ்வுகளையும், அனுபவங்களையும் விட சிறந்த பகிர்தல்கள் இருக்க முடியுமா. அதையே எழுது." */
unmai.. unmai... :))
nalla padhivunga :)
வந்துட்டு போயாச்சா? என்னா தைரியம். ஏன் எங்களுக்கு சொல்லலை? உங்க கூட காகக்கக்க ( டூ விட்டேன்)
தொடரட்டும் அருமையான பகிர்தல்கள் .
"Taj Mahal to Taj Mahal hai. Apni gar, apni gar hai"
simply suuuuuuuuuuuppppppar
ISO certified.
நல்ல மொக்கை.
mmm..:-)
நல்ல பகிர்தல்
100வது ஃபாலோவர் ஆனதுக்கு நன்றிகள் விக்கி
கந்தசாமி, ஹி ஹி ஹி ..
வாழ்த்துக்கள் பிரச்டிகால்ஸ் முடிச்சதுக்கு
கார்க்கிய இப்படி டாமேஜ் பண்ணிடீங்களே..
தாஜ் மகால தத்துவமும் எதோ சொல்றீங்கன்னு தெரியுது.. ஆனா என்னன்னு தெரியலை.. :)
தாஜ்மஹால் கதை அருமை.
நன்றி.
நல்ல நகைச்சுவையான இடுகை.. நல்லா இருக்குங்க..ஆமா பாஸ் பண்ணீடுவீங்களா? எங்கே படிச்சீங்க? நம்ம ஊர்ல படிச்சிருக்கீங்களேன்னு கேட்டேன்!!
நிஃப்ட் .... ஹ்ம்.. வாழ்த்துக்கள்..
அது ஒரு நாள் என் கனவா இருந்தது..
பகிர்தல் ரொம்ப நல்லா இருக்கு ..
வாங்க நாடோடி இலக்கியன். நன்றி.
ஆரம்பிச்சுட்டீங்களா சூரியன். :) இங்கே தியேட்டர்குள்ள இருக்குற சவுண்ட் எபெக்ட்ல தூங்கவும் முடியாது. :(
நன்றி வெயிலான்.
வாழ்த்துக்கு நன்றி கனகு. நான் ஞாயிற்றுக் கிழமை போனேன். அதிக விமர்சனங்கள் படிக்காமல் போய் விட்டேன். :(
மறுபடியும் நன்றி கனகு.
மயில் உங்க கான்டாக்ட் நம்பர் இல்ல. இருந்திருந்தா கண்டிப்பா பார்த்திட்டு தான் வந்திருப்பேன். டூவெல்லாம் வேண்டாம்பா. அடுத்த முறை கண்டிப்பா சந்திப்போம்.
நன்றி துபாய் ராஜா.
நன்றி புலிகேசி.
வாங்க மனசு.
வாங்க இயற்கை.
வாங்க வசந்த். 100 followers சேர்ந்ததுக்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாங்க SK. வாழ்த்துகளுக்கு நன்றிகள்.
கார்க்கிய நான் என்னங்க டேமேஜ் பண்ணேன். உண்மைய தானே சொல்றேன்.
புரியலைனா இன்னொரு முறை படிங்க. புரியும்.
நன்றி T.V.R.
வாங்க சுவாமிநாதன். நன்றி.
நன்றி குறை ஒன்றும் இல்லை. பாஸ் பண்ணாம என்ன. கோவைல படிச்சேங்க.
Do you ride bike?!
//ஐயோ பாவம், சாயங்காலம் அவர் அவரோட பைக்க Discover பண்ண வேண்டி இருக்கும்//
-கலக்கல்!!!
// ( கனவு மெய்ப்பட வேண்டும் )//
கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.
நம்ம ஊரு தம்பி முதல் நாள் பாத்துட்டு சொல்றானேன்னு ஒரு நினைப்பு இருந்தா போயிருக்க மாட்டீங்க! முதல் நாளே சொன்னேன்!
விதி வலியதுங்கோ!
ஆனால், எனக்காவது பரவாயில்லை ஸ்ரேயாவ பாத்துட்டு வந்துட்டேன்!
பேசாமல் kamineyபோயிருக்கலாம்! நல்லாருக்காம்!
இன்னைக்கு டேஸ்ட் தூக்கல். பதிவு அருமை..
என் பேரு வருவதால்ன்னு யாராவது சொன்னா நம்பாதிங்க.. நிஜமா நல்லா இருக்குங்க
நல்லாயிருக்குங்க
நல்லாயிருக்குங்க
எனக்கும் கனவா தான் இருக்கு முத்துலெட்சுமி அக்கா. வாழ்த்துக்கு நன்றி.
Yes Nats, I do.
வாங்க கார்ல்ஸ்பெர்க்.
நன்றி சின்ன அம்மிணி.
ஆமா பப்பு, தப்பு பண்ணிட்டேன். Kaminey தலைவலி வர்ற மாதிரி தான் இருக்காம்.
நன்றி கார்க்கி.
என் பேரு வருவதால்ன்னு யாராவது சொன்னா நம்பாதிங்க.. //
நீங்களே இப்படி சொல்லிட்டா தான் உண்டு. :P
நன்றி நந்து.
நல்லாயிருக்குங்க.
கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்
good. kandasamy parthu nondasamy!!!!!!
நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?
அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 9444024947. மின்னஞ்சல்: kolamcinema@gmail.com
நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.
வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!
கனவு மெய்ப்பட வாழ்த்துகள்.
அந்த ப்ராக்டிகல் எக்ஸாம் எழுதின லட்சனம் தான் தெரியுமே :))
கந்தசாமி பார்த்து நீங்களும் நொந்தசாமியா? முடிஞ்சா என் ப்ளாக் பாருங்க.. நான் நொந்த கதை இருக்கு :)
வணக்கம். கந்தசாமி ஒரு மசாலா சினிமா. தனது வணிகத்தை விரிவாக்கிக் கொள்ள விக்ரம் தற்பொழுது மலேசியாவில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் இழிவான முறையில்.
//அதுவும் டெல்லி nift இல். இந்தியாவின் நம்பர் 1 Fashion Designing Institute டெல்லியில் இருக்கும் போது அங்கு மாஸ்டர்ஸ் படிக்கும் வாய்ப்பைத் தவற விடலாமா//
நானும் சென்னை nift காம்பஸ் பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டுருக்கேன்... உங்கள் கனவாவது பலிக்க வாழ்த்துக்கள்.
//நான் "All the Best" சொன்னது உன் Examiner க்கு//
Examinar-ஐ விடுங்க... எக்ஸாம் சென்டேரோட தலைமை கண்காணிப்பாலருக்குள்ள"All the Best" சொல்லி இருக்கணும்
//"இனி தமிழ்ப் படத்துக்கு கூப்பிடு. உன்னைக் கவனிச்சுக்குறேன்"//
நல்ல வேளை நான் படம் பார்க்காமல் உங்களை மாதிரி மாட்டிக்கிட்ட ஆட்கள்மூலமா தப்பிச்சிகிட்டேன். ஆனாலும் அங்கே ஹிந்தியிலேயும் "krrish" ன்னு ஒருபடம் எடுத்தாங்க... அதுக்கு முந்தி "koi... mil gaya" ன்னு ஒன்னு வந்தது. அப்புறம் "Drona" வந்தது. அதை எல்லாம் விட இது பெரிய மொக்கையாய் இருக்காதுன்னுநினைக்கிறேன்... எல்லா இடத்துலயும் மொக்கைஇருக்குமுன்னு உங்க ஊட்டுகாரருக்கு சொல்லுங்க...
தாங்கள் என்னால்இங்கேஅழைக்கப்பட்டுள்ளீர்கள். இந்தத் தொடரோட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கிறேன். நன்றி
ரொம்ப அருமையா எழுத ஆரம்பிச்சுட்டீங்க விக்கி.
வாழ்த்துகள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி நேசமித்திரன்.
வாங்க குமார்.
கண்டிப்பாக தங்கமணி பிரபு.
நன்றி சஞ்சய். அதான் எழுதியாச்சே. இப்போ ஏன் அந்த கதை? நீங்க நொந்த கதைய படிச்சேன்.
வாங்க பாலமுருகன். படம் பார்த்து தலைவலி வந்தது தான் மிச்சம்.
நன்றி Mighty Maverick. ஹிந்தி படங்கள் பார்க்க நாங்க நாற்பது கிலோ மீட்டர் தூரம் போறதில்லையே. அதுனால அது நல்லா இல்லைனாலும் ஓகே. ஆனா, தமிழ்ப் படம் பார்க்க ரொம்ப சிரமப்பட்டுப் போய் அது நல்லா இல்லைனா தானே தகராறு.
நன்றி அரங்கப் பெருமாள். வர்றேன்.
நன்றி உலகநாதன்.
விக்கி, நெடுநாட்களுக்குப் பிறகு உன் வலைப்பக்கம் வருகிறேன். நம்ம விக்கியா இது என ஆச்சர்யப்படும் அளவிற்கு உரைநடையில் நீ வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எழுத்துப்பிழைகள்...?! அது காலப்போக்கில் மாறும்.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்
நல்லா இருக்கு விக்கி பகிர்தல்கள், அழகாவும்!! வாழ்த்துகள்!!
//அவன் ஏதாவது பாடல் காட்சி பார்த்து விட்டு அந்த அங்கிளும் அக்காவும் சமாதானம் பண்றாங்களானு
//
haa..haa...haa...
<-- நமக்குப் பிடித்தவர்கள் ஆயிரம் பேர் வருவர். எல்லோரும் அழகு, எனக்கென விதிக்கப்பட்டவன் தான் என்னவன், என் வீடு போன்ற நிம்மதி தருபவன் என்ற எண்ணம் வேண்டும்.-->
Extremely well said...
உன் அன்பிற்கு நன்றி செல்வா.
நன்றி முல்லை.
வாங்க அப்துல்லா.
Thanks Purush Anna
அழைப்பிதல்
நிகழ்ச்சி : மூன்றாம்பிறை
நாள் : உங்கள் நாள்
நேரம்: உங்களின் நேரம்
வரவேற்பு : கவிதைகள்
அன்புடன்,
சந்தான சங்கர்.
(மொய் எழுதவேண்டாம்
மெய் எழுதிவிட்டு செல்லுங்கள்.)
Post a Comment