Thursday, July 30, 2009

ஆட்கொல்லி விஷம்



நம் முதல் சந்திப்பு
அது ஒரு இனிய மாலை நேரம்.
உன் கையை நான் பிடித்த போது கூட
உனக்கு எதுவும் தோன்றவில்லையா!
நீ சென்ற பிறகே கேட்க முடிந்தது
உன் வாசம் சொல்லும் இதமான அணைப்பு,
நெற்றி நனைக்கும் முத்தம்,
கன்னம் சிவக்கும் தொடுதல்கள்
இவை எதையுமே உன் நினைவாய்
விட்டுச் செல்லவில்லையே ஏன் என்று.
இதற்காக காத்திருக்கும் ஏக்கத்தை
விட்டுச் சென்றது போதாதா என்றாய்.
ஏக்கம் கொடுத்து
என் உயிரை அநியாயத்திற்கு எடுக்கிறாய்.

**************************************

கனவில் உனைக்
காணலாமெனக்
கண்மூடக் கருதினேன்.
என் உறக்கம் கெடுத்து
கண்ணிமைகளிடையே
கள்வா நீ!

**************************************

உன்னை நான் நேசிப்பதை
உன்னிடம் சொல்லவில்லை.
நீ என்னைக் காதலிப்பதை நானறிந்தாலும்
நீ அதை சொல்ல வேண்டுமென்றும் எதிர்பார்க்கவில்லை.
காதலை சொல்லாமல் தவிக்கும்
இந்த தவிப்பின் சுகம்
அதை சொல்லி விட்டால் கிடைக்காதே.

**************************************

கண்கள் நோக்கி தவிர்த்த தருணங்கள்
ஒரு கோப்பை காஃபி
சில்லென்ற சாலையில் சில மணி நேர நடை
நீ பாராத நேரத்தில் உன் மீது விழும் நொடிப் பொழுது பார்வைகள்
என் துப்பட்டா வாசம்
உன்னுடனான என் நெருக்கம்
இவை எதுவுமே சொல்லவில்லையா
உன் மீதான என் காதலை!

**************************************

நீ எந்தப் பெண்ணைப் பார்த்தாலும்
எனக்கு கோபம் வருவதில்லை.
எனக்குத் தெரியும், உன்னால்
அவர்களை பார்க்க முடியும்
என் பார்வையை மட்டுமே தவிர்க்க முடியும்.
இது போதும் எனக்கு
உன் காதலை சொல்ல.

**************************************

உன் பெயரை மட்டுமே
எழுதினேன் காகிதத்தில்.
காகிதமே கவிதையாய் மாறிவிட்டதே!

**************************************

ஊரே
உறங்கிவிட்டது.
என்னுள்ளான
உன் நினைவுகளைத் தவிர.

35 comments:

iniyavan said...

//உன் பெயரை மட்டுமேஎழுதினேன் காகிதத்தில்.காகிதமே கவிதையாய் மாறிவிட்டதே! ஊரேஉறங்கிவிட்டது.என்னுள்ளானஉன் நினைவுகளைத் தவிர.//

எனக்கு பிடித்த வரிகள்.

நையாண்டி நைனா said...

அருமை அருமை

SK said...

ஆஹா வண்டி ஓட ஆரம்பிச்சுடிச்சா ?? ரைட்டு

நேசமித்ரன் said...

//எந்தப் பெண்ணைப் பார்த்தாலும்எனக்கு கோபம் வருவதில்லை.எனக்குத் தெரியும், உன்னால்அவர்களை பார்க்க முடியும்என் பார்வையைத் மட்டுமே தவிர்க்க முடியும்.//

அருமையான உணர்வின் வார்த்தைப்பாடு
மெல்லிய ஈரம் மிதக்கும் காற்றில் வரும் பவள மல்லி வாசத்துடன் எங்கோ ஒலிக்கும் மாலை நேர பாங்கு சத்தம்
கேட்கும் உணர்வைத் தருகிறது இந்த சொற்கள்

குறை ஒன்றும் இல்லை !!! said...

எட்டு கவிதைகளும் அருமைங்க...

Anonymous said...

விக்கி,

பசங்க படத்தில் வரும் மழை இன்று வருமா வருமா பாட்டுக் கேளுங்கள்.

அதில் வரும் “கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம், கூறு போட்டுக் கொல்லும் இன்பம்” என்ற வரிகள் உங்கள் கவிதைகளைப் பிரதிபலிக்கிறது.

நல்ல பாடல்.




ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னைக் களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் நேரம் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொல்லும் இன்பம்
பட பட படவெனவே துடித்துடித்திடும் மனமே
வர வர வர கரைத்தாண்டிடுமே

மேலும் சில காலம்
உன் குறும்பிலே நானே தூங்கிடுவேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்க்குள் பெண்மை இருக்கிறதே
கூந்தல் அழுத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
ஒரு வரி நான் சொல்ல
ஒரு வரி நீ சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்
(மழை இன்று..)

ஆ.. காற்றில் கலந்து நீ
என் முகத்தினை நீயும் மோதினாய்
பூ மரங்களில் நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்தப்பொழுதினிலே மரணம் எதிரினிலே
வழிகளில் ஊர்கோலம் இதுவரை நான் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே
(ஒரு வெட்கம்..)

விக்னேஷ்வரி said...

நன்றி உலகநாதன்.

நன்றி நையாண்டி நைனா.

வாங்க S.K.

கவிதைக்கே கவிதையா நேசமித்திரன். நன்றி.

நன்றி குறை ஒன்றும் இல்லை. எட்டு இல்ல, ஏழு தான்.

கேக்கிறேன் அண்ணாச்சி.

தினேஷ் said...

//ஏக்கம் கொடுத்து
என் உயிரை அநியாயத்திற்கு எடுக்கிறாய்.
////

அய்யோ எனக்கு அழுகையா இருக்கு ,, ஏந்தான் இப்படி நடக்குதோ .. இனி சந்திப்போ நினைக்கவோ கூடாது ..

தினேஷ் said...

/. எனக்குத் தெரியும், உன்னால் அவர்களை பார்க்க முடியும் என் பார்வையை மட்டுமே தவிர்க்க முடியும். இது போதும் எனக்கு உன் காதலை சொல்ல//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தினேஷ் said...

//ஊரேஉறங்கிவிட்டது. என்னுள்ளான உன் நினைவுகளைத் தவிர. //

அப்போ தூக்கமில்லா நினைவுகளா இல்ல கனவுகளா ?

முடியல ...

உண்மையில் ரொம்ப ரசித்தேன் ..

துபாய் ராஜா said...

//உன் பெயரை மட்டுமே
எழுதினேன் காகிதத்தில்.
காகிதமே கவிதையாய் மாறிவிட்டதே!//

சான்ஸே இல்லீங்க.

//கனவில் உனைக் காணலாமெனக் கண்மூடக் கருதினேன். என் உறக்கம் கெடுத்து கண்ணிமைகளிடையே கள்வா நீ! //

அருமை.அருமை.ஆத்துக்காரருக்கு படித்து காண்பித்தீர்கள் என்றால் ஆடிக்கழிவில் நிச்சயம் ஒரு புடவை உண்டு.


//நம் முதல் சந்திப்புஅது ஒரு இனிய மாலை நேரம். உன் கையை நான் பிடித்த போது கூட உனக்கு எதுவும் தோன்றவில்லையா! நீ சென்ற பிறகே கேட்க முடிந்தது உன் வாசம் சொல்லும் இதமான அணைப்பு, நெற்றி நனைக்கும் முத்தம், கன்னம் சிவக்கும் தொடுதல்கள் இவை எதையுமே உன் நினைவாய் விட்டுச் செல்லவில்லையே ஏன் என்று. இதற்காக காத்திருக்கும் ஏக்கத்தை விட்டுச் சென்றது போதாதா என்றாய். ஏக்கம் கொடுத்து என் உயிரை அநியாயத்திற்கு எடுக்கிறாய்.//

அட்டகாசம்.

//உன்னை நான் நேசிப்பதை உன்னிடம் சொல்லவில்லை. நீ என்னைக் காதலிப்பதை நானறிந்தாலும் நீ அதை சொல்ல வேண்டுமென்றும் எதிர்பார்க்கவில்லை. காதலை சொல்லாமல் தவிக்கும் இந்த தவிப்பின் சுகம் அதை சொல்லி விட்டால் கிடைக்காதே//

தூள்.

//ஊரேஉறங்கிவிட்டது. என்னுள்ளான உன் நினைவுகளைத் தவிர.//

நல்லா ஃபீல் பண்ணி கூவிறிக்கறீங்க... :))

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நன்றி குறை ஒன்றும் இல்லை. எட்டு இல்ல, ஏழு தான்.//

நான் படத்தையும் சேர்த்து சொன்னேங்க...

*இயற்கை ராஜி* said...

//ஊரே
உறங்கிவிட்டது.
என்னுள்ளான
உன் நினைவுகளைத் தவிர.


//

onnum sollika mudiyala..
seekiram oorukku pongap pa:-))

ஈரோடு கதிர் said...

//சில்லென்ற சாலையில் சில மணி நேர நடை
நீ பாராத நேரத்தில் உன் மீது விழும் நொடிப் பொழுது பார்வைகள்
என் துப்பட்டா வாசம்
உன்னுடனான என் நெருக்கம் //


ஆஹா.... நெகிழ்ச்சி

லோகு said...

அருமை... எல்லா கவிதையிலும் காதல் வழிகிறது...

கவிக்கிழவன் said...

ரசித்தேன் ஊமை ஆனது மொழி
மௌனம் ஆனது மனம்
இலங்கையில் இருந்து யாதவன்

நாடோடி இலக்கியன் said...

//உன்னால் அவர்களை பார்க்க முடியும் என் பார்வையை மட்டுமே தவிர்க்க முடியும். //

இவ்வரிகளை மிகவும் ரசித்தேன்.

//ஊரேஉறங்கிவிட்டது. என்னுள்ளான உன் நினைவுகளைத் தவிர. //

மெல்ல திறந்தது கதவில் ஒரு பாட்டு வருமே அந்த ஞாபகம் வந்தது இதை படித்த போது.

வாழ்த்துகள் சகோதரி.

சம்பத் said...

எல்லாக்கவிதைகளும் அருமை....இன்று முதல் உங்கள் கவிதைகளை துரத்துகிறேன்... :-)

அரங்கப்பெருமாள் said...

//காத்திருக்கும் ஏக்கத்தை
விட்டுச் சென்றது போதாதா என்றாய்//

//தவிப்பின் சுகம் அதை சொல்லி விட்டால் கிடைக்காதே.//

//என் பார்வையை மட்டுமே தவிர்க்க முடியும்//

என்ன சொல்லுரதுன்னே புரியல.. மனச படிச்ச மாதிரி இருக்கு... ரொம்ப அருமை..

//உன் பெயரை மட்டுமே எழுதினேன் காகிதத்தில். காகிதமே கவிதையாய் மாறிவிட்டதே!//

இதையே நான் இப்பிடி எழுதினேன்...

(உனக்கு மட்டும் எப்படி கவிதையாய் ஒரு பெயரென வியந்ததுண்டு - ,மரம் தேடும் மழைத்துளி.
)

என் வலைப்பூவில் படித்து(நேரம் கிடைப்பின்) பாருங்கள்..

Prabhu said...

:)

விக்னேஷ்வரி said...

வாங்க சூரியன், உங்களுக்கு இந்த அனுபவங்களெல்லாம் உண்டா..... ;)

வாங்க துபாய் ராஜா. டெல்லில ஆடிக் கழிவெல்லாம் இல்லைங்க.

நன்றி குறை ஒன்றும் இல்லை.

வாங்க இயற்கை.

வாங்க கதிர்.

நன்றி லோகு.

நன்றி நாடோடி இலக்கியன்.

நன்றி சம்பத்.

நன்றி அரங்க பெருமாள். கட்டாயம் படிக்கிறேன்.

வாங்க பப்பு.

கார்க்கிபவா said...

எதுவும் சொல்றதுக்கில்ல.. அதான் எல்லாருமே சொல்லிட்டாஙக்ளே...

சீக்கிரம் டெல்லிக்கு போங்க மேடம்.. :)))))

ப்ரியமுடன் வசந்த் said...

//நீ எந்தப் பெண்ணைப் பார்த்தாலும்
எனக்கு கோபம் வருவதில்லை.
எனக்குத் தெரியும், உன்னால்
அவர்களை பார்க்க முடியும்
என் பார்வையை மட்டுமே தவிர்க்க முடியும்.
இது போதும் எனக்கு
உன் காதலை சொல்ல.//

இயல்பை கூறும் வரிகள்

Kumar.B said...

உன் பெயரை மட்டுமே
எழுதினேன் காகிதத்தில்.
காகிதமே கவிதையாய் மாறிவிட்டதே!

best out of the lot.

Unknown said...

உன்னை நான் நேசிப்பதை
உன்னிடம் சொல்லவில்லை.
நீ என்னைக் காதலிப்பதை நானறிந்தாலும்
நீ அதை சொல்ல வேண்டுமென்றும் எதிர்பார்க்கவில்லை.
காதலை சொல்லாமல் தவிக்கும்
இந்த தவிப்பின் சுகம்
அதை சொல்லி விட்டால் கிடைக்காதே. //

super

ingu karuthu irukum nu vantha kadhal kavidhai iruku...

pengal unarvu unga idam irunthu arinththukonden
nandri...
By NithiChellam

தினேஷ் said...

//வாங்க சூரியன், உங்களுக்கு இந்த அனுபவங்களெல்லாம் உண்டா..... ;)//

ம்ம்ம் , அதான் இந்த பீலிங்க்ஸ் ஆப் இண்டியா..

dsfs said...

அம்மா.....என்ன ஒரு கவிதை.
நேர்த்தியான அழகான கவிதை.
மிகவும் ரசித்தேன் தோழி.

சிவக்குமரன் said...

மிகவும் ரசித்தேன்

விக்னேஷ்வரி said...

ஆமா கார்க்கி, சீக்கிரமே டெல்லிக்கு பேக்கப் ஆகணும் :)))

வாங்க வசந்த்.

நன்றி குமார்.

வாங்க நிதி.

நல்லது தானே சூரியன். இதெல்லாம் இருந்தா தான் வாழ்க்கை சுவாரசியம்.

நன்றி பொன்மலர்.

நன்றி சிவக்குமரன்.

Anonymous said...

கவிதை அழகு...
அதில் பதிந்த உணர்வுகள் இதம்..
அதை சொன்ன வரிகள் அருமை...

மீண்டும் மீண்டும் படித்தேன் உங்கள் கவிதையை...
படித்த ஒவ்வொரு முறையும் ரசித்தேன்...

ஒரே ஒரு சந்தேகம்...
நீங்கள் காதலில் இருப்பவரா??
இல்லை அதில் விழப்போரவரா?

Bharathiselvan said...

//உன்னை நான் நேசிப்பதை உன்னிடம் சொல்லவில்லை. நீ என்னைக் காதலிப்பதை நானறிந்தாலும் நீ அதை சொல்ல வேண்டுமென்றும் எதிர்பார்க்கவில்லை. காதலை சொல்லாமல் தவிக்கும் இந்த தவிப்பின் சுகம் அதை சொல்லி விட்டால் கிடைக்காதே. //

காதலின் தவிப்பில் உள்ள சுகத்தை உங்களில் கவிதையில் காண்கிறேன்..

விக்னேஷ்வரி said...

நன்றி balasrini.
நான் எப்போதும் காதலில் வாழ்பவள். :)

வாங்க பாரதி செல்வன்.

தாரணி பிரியா said...

கவிதையெல்லாம் அழகுங்க விக்னேஷ்வரி

சாந்தி நேசக்கரம் said...

காதலாகிக் கசிந்த கவிதைகள் நன்று விக்னேஷ்வரி.

சாந்தி

Prasanna said...

//எனக்குத் தெரியும், உன்னால்
அவர்களை பார்க்க முடியும்
என் பார்வையை மட்டுமே தவிர்க்க முடியும். //

நம்பாதீங்க நம்பாதீங்க :)