Monday, January 5, 2015

ப்ரியத்தின் செங்கனல்



உனக்கான நேரமே இல்லாமல் 
தினசரிகளில் தொலைந்து
சோர்ந்திருக்கும் நேரம்
உன் பெயர் கேட்டதும்
அகமலர்ந்து
கண்கள் அகல விரிய
உன் பிடித்தமான
தெற்றுப் பல் தெரிய
இதழ் விரித்து சிரிக்கையில்
இருக்கும் மகிழ்ச்சி தான்
இந்த உறவுக்கான
தனித்தன்மை

                      

பெருமழை நாளிலோ
சிறு தூரல் போதிலோ
இதழ் தொடும்
தேனீர் வெம்மை
உன்னை
நினைவுபடுத்தும்

                      

பேரன்பு
பெருங்கடலென்றெல்லாம்
ஏதேதோ
விளங்கா மொழி பேசுகிறாய்.
பிரியும் நொடியின்
ஒற்றைக் கண்ணீர்த்துளி தான்
உனக்கான என் காதல்

                      

காதல் பெண்ணின்
மொழி
காதலன் மேல் கொண்ட
காமத்தின்
வேட்கை மிச்சம்

                      

எழுத ஆயத்தமாகி
யாருமில்லா தனிமை தேடி
உனை நினைத்து நினைத்து
உருகி மருகிக்
கவிதையாக்கினேன்.
சிறப்பாயில்லை -
எல்லாம் கிழித்தெறிந்து
போனேன்.
ஒரு துயில் காலைப் பொழுதில்
பனி கொட்டும் மார்கழியில்
உன் நினைவு புணர
கருவாகிப்
பிரசவிக்கின்றது
என் கவிதைக் குழந்தை

                      

உனக்கான தீ
தகிக்கிறது.
அதன் பொறியோ
சிறு வெளிச்சமோ
தெரியாமலிருக்கலாம்
ஆனால்
அதன் ஆதாரக் கனல்
அடியாழத்தில்
கனன்று கொண்டேதானிருக்கிறது

6 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதைகள் அருமை...

ஸ்ரீவி சிவா said...

காதல் திணை! :-))

ஒன்று, மூன்று, ஆறாவது.. நல்லாருக்கு.

//ஆதாரக் கனல்
அடியாழத்தில்
கனன்று கொண்டேதானிருக்கிறது//
ம்ம்ம்ம்! :)

சதீஷ் குமார் said...

அருமையான கவி வரிகள். உள்ள உணர்வை ஒட்டுமொத்தமாக கொட்டி வைத்த வார்த்தைகள். அழகு.

இராயர் said...

madam,
we missed blog writing since four years
welcome back

all are superb

rajasundararajan said...

ஆக, எழுதுறீங்க! :)))

commomeega said...

கவிதைகள் அருமை.