Wednesday, September 22, 2010

நண்பேன்டா!


அரை கவுன் போட்டு, தலையில் ஒற்றைக்குடுமியுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கீழே விழுந்து அழுகையில் முட்டியில் வரும் ரத்தத்தை எச்சிலால் துடைத்துக் கண்ணீரைத் தன் சட்டையால் ஒற்றியெடுக்கும் நட்பு எப்படி இதமாயிருக்கும் அப்படியிருக்கிறது எனக்கு இவன் நட்பு.

இவன் என் நண்பன் எனச் சொல்வதில் பெருமை உண்டா என்றால் நிச்சயம் அது மட்டுமில்லை. பெருமையைத் தாண்டி, ஒரு தாய்க்குருவி குஞ்சுகளுக்குக் கொடுக்கும் அணைப்பின் உஷ்ணம் உண்டு இந்த நட்பில். “ஹலோ, ஹாய்ங்க. எப்படி இருக்கீங்க.. விக்னேஷ்வரி பேசறேன்” என்று ஆரம்பித்த உரையாடலின் பதிலாய் “சொல்லுங்க விக்கி” என ஆரம்பித்த நட்பு, பழகிய ஒரு வருடத்திற்குள்ளேயே “டேய், போடா, என்னடா, லூசு, ஃப்ராடு...” என்றெல்லாம் வயது வித்தியாசமின்றி, எந்தத் தயக்கமுமின்றி ஒரு ஆரோக்கிய வழியில் எடுத்துச் சென்றது பாக்கியமே.

இவன் பலாப்பழம் போன்றவன். அட, இவன் தொப்பையை வெச்சு சொல்லலைங்க. வெளியே மிகவும் கரடுமுரடாக, சண்டைக்காரனாகத் தெரியலாம். ஆனால் பழகிப் பார்க்கும் நண்பர்களுக்கே தெரியும் இவன் இனிமை. நட்பிற்கு இவன் தரும் மரியாதையும், அதில் கொண்டிருக்கும் கண்ணியமும் “இவன் என் நண்பேன்டா”ன்னு சொல்ல வைக்கும். பழகிய பெண்கள் யாரும் இவனைத் தவறாகக் கூற மாட்டார்கள் என்பதை என்னால் அடித்துக் கூற முடியும்.

இவன் தோழி அப்டேட்ஸ் எழுதறானேன்னு “யாருடா உன் தோழின்னு” கேட்டா, நடிகர் திலகம் ரேஞ்சுக்குக் கண் துடிக்க “யாரும்மா இருக்கா.. எனக்கு யாரிருக்கா..”ன்னு சீன் போடுவான். (குறும்பட நடிகராயிட்டாராமாம்!)

பேசுகையில் நிமிடத்திற்கொரு முறை மொக்கையில்லாமல் பேச சொல்லுங்களேன் இவனை. “டேய், நீ இப்படியே பேசிட்டு இருந்தா நான் ஃபோனை வெக்கறேன் போ. சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேன்”
“சரி போ, எனக்கும் வேலையிருக்கு” என்பான். எந்த விஷயத்திலும் ஒரு சீரியஸ்னெஸ்ஸே இல்லாதவன்.

எல்லாருக்கும் நல்லவர் பட்டம் கொடுத்து விடுவான் எளிதாக. எல்லாரிடமும் சட்டெனப் பழகிவிடுவான். இசை வெறியன். ரசனையானவன். இப்போது தான் கறந்த சூடான பால் போல் ரொம்ப நல்லவன். அளவில்லா ப்ரியமானவன். கூட நடக்கையில் எங்களை நட்பாய்ப் பார்க்கத் தெரியாத கண்கள் பாவம் செய்தவை.

இவன் நட்பை நான் எதனுடனாவது ஒப்பிட வேண்டுமென்றால் அது மிக சிரமம். தாய்ப்பாலை எதனுடனாவது ஒப்பிட முடியுமா.. அதன் தூய்மையும், உண்மையும் போல் தான் இவன் நட்பு. எனக்குப் பொக்கிஷம் அது.

நடிகராகக் களத்திலிறங்கிவிட்ட இவருக்குக் கடும் போட்டியாக இருப்பவர் நடிகர் சத்யராஜ். ரெண்டு மண்டையும் ஒண்ணு. அய்யோ, அவ்ளோ அறிவாளின்னு சொல்ல வந்தேங்க. சீக்கிரமே தோழி அப்டேட்ஸ் தங்கமணி அப்டேட்ஸாக வாழ்த்தி இந்தப் பிறந்த நாளில் எல்லா நலமும் பெற்றுச் சிறக்க வாழ்த்துகிறேன் நண்பா.

கார்க்கி “நீ என் நண்பேண்டா” - பெருமையா சொல்றேன்.

ம், அதே... ஸ்டார்ட் ம்யூஸிக், ஸ்டார்ட் கும்மி.

43 comments:

க ரா said...

Happy Birthday Karki..

'பரிவை' சே.குமார் said...

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா.

அன்பரசன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வினோ said...

நல்லா இருக்குங்க உங்க வாழ்த்து..
கார்கிக்கும் என் வாழ்துதுக்கள்..

சுசி said...

இங்கேயும் வாழ்த்துக்கள் கார்க்கி.

ILA (a) இளா said...

Music Started

நேசமித்ரன் said...

//தாய்ப்பாலை எதனுடனாவது ஒப்பிட முடியுமா.. அதன் தூய்மையும், உண்மையும் போல் தான் இவன் நட்பு. //

:)

வாழ்த்துகள்

R. Gopi said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி.

\\இப்போது தான் கறந்த சூடான பால் போல் ரொம்ப நல்லவன்.\\

கிழக்கு வாசல் படத்துல ஜனகராஜ் சொல்றது தானே இது?

Jegan said...

Karki happy birthday

ப்ரியமுடன் வசந்த் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் சகா!

Anonymous said...

வாழ்த்துக்கள் உங்க நண்பருக்கு....

தராசு said...

வாழ்த்துக்கள் கார்க்கி,

கலக்கல் பதிவு விக்கி.

தினேஷ் said...

வாழ்த்துக்கள் கார்க்கி

S Maharajan said...

கார்க்கிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகளையும் சொல்லிடுங்க
விக்கி

அன்பேசிவம் said...

அட்ராசக்கை, அட்ராசக்கை, அட்ராராரா ச க் கை.....,

எழுதியதைப் பார்த்தா சகாவை விட்டுட்டு உங்களை கும்மனும்போல இருக்கு.... :-)

வாழ்த்துகள்

radhika said...

Happy b'day to karki.

Goos post.

http://radhika-ram.blogspot.com/2010/09/happy-bday-karki.html

thiyaa said...

நல்ல பதிவு, அருமை

Senthilmohan said...

நடிப்பு சூறாவளி,
வசன பீரங்கி,
குறும்பட தளபதி,
இளைய தளபதியின் இணைய தளபதி,
எங்கள் ஆருயிர் பெரியண்ணன் கார்க்கி
அவர்கள் மென்மேலும் பல குறும்படங்கள் நடித்து
குறும்பட நாயகனுக்கான ஆஸ்கர் வாங்க வாழ்த்துகிறோம்.

Anonymous said...

add subscribe via email gadget for your blog so that readers will receive your new posts in their email inbox

http://ramasamydemo.blogspot.com/2010/09/add-subscribe-via-email-gadget-for-your.html

Sen22 said...

me the first....

Happy birthday Karki....

Sen22 said...

//இவன் பலாப்பழம் போன்றவன். அட, இவன் தொப்பையை வெச்சு சொல்லலைங்க.//

:))))))) lol,,,

செ.சரவணக்குமார் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கார்க்கி.

குசும்பன் said...

என்னங்க எம்.எஸ். பாஸ்கர் ரேஞ்சுக்கு கார்க்கிய நினைச்சிக்கிட்டு இருக்கோம், நீங்க என்னடான்னா சத்தியராஜ் அளவுக்கு குறுக்கிட்டிங்களே!!:((

வாழ்த்துக்கள் கார்க்கி!

குசும்பன் said...

//ம், அதே... ஸ்டார்ட் ம்யூஸிக், ஸ்டார்ட் கும்மி.
//

கமெண்ட் மாடுரேசன் போட்டு வெச்சிட்டு பேச்ச பாரு:((

கார்க்கிபவா said...

ஆவ்வ்வ்

நன்றி விக்கி..

மக்கா.. அனைவருக்கும் நன்றி..

Unknown said...

நட்பின் ஆழம், அன்பு, நம்பிக்கை இவற்றை காட்டுகிறது தங்கள் பதிவு...

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் விக்கி...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி...

Unknown said...

நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து வித்தியாசமாகவும், அருமையாகவும் இருந்தது. உங்களது நண்பனுக்கு எனது
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எஸ்.கே said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

எல் கே said...

happy birthday kaargi

கவி அழகன் said...

அருமை பின்னி பெடல் எடுதிடிங்க

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

வாழ்த்துக்கள் சகா.

நான் தான் ஏழு பேசுறேன்!!!
இப்போ எந்த ஐடி இருக்கீங்க?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

கமெண்ட் மாடுரேசன் போட்டு வெச்சிட்டு பேச்ச பாரு:((
நானும் கேட்டுட்டேன்!!!
அவுக ஆன்லைன்ல இருக்காக!!!

சௌந்தர் said...

“ஹலோ, ஹாய்ங்க. எப்படி இருக்கீங்க.. விக்னேஷ்வரி பேசறேன்” என்று ஆரம்பித்த உரையாடலின் பதிலாய் “சொல்லுங்க விக்கி” என ஆரம்பித்த நட்பு, பழகிய ஒரு வருடத்திற்குள்ளேயே “டேய், போடா, என்னடா, லூசு, ஃப்ராடு...”////

உங்கள் நடபு வளரட்டும்... பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி

Kousalya Raj said...

நட்பிற்கு வாழ்த்துகள...உங்கள் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி :)

commomeega said...

வாழ்த்துக்கள்.

Thamira said...

நட்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ், பூட்டு, சாவி, கதவு, சாளரம்.? ஹிஹி..

Joseph said...

என் நண்பணுக்கு வாழ்த்துக்கள்.

Iyappan Krishnan said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கார்க்கி. உன் தொப்பை வளர்ந்துட்டு போற வேகத்தைப் பாத்தா உனக்கு முன்னாடி அது தான் நிக்குது. அதுக்கு எதாச்சும் ஒரு ஸ்டேண்ட் வாங்கு

இராகவன் நைஜிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கார்க்கி

மதுரை சரவணன் said...

நட்பு பால் போல் தூய்மை அதுவும் தாய்ப்பால் போல் போசாக்குடன்தூய்மை... அசத்தல் ... வாழ்த்துக்கள்

logu.. said...

Nanbenda..

Vidhya Chandrasekaran said...

தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_09.html