சலித்துக் கொண்டே உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தவளிடம்
“வெறும் 15 நாள் தானா..
அங்கேயே ஒரு பையனாப் பாத்து செட்டிலாகிடேன்.
நான் நிம்மதியாயிருப்பேன்”
என்றாள் அறைத் தோழி.
“ச்சீ, மீசையில்லாத பையனை சைட்டடிக்க கூட மாட்டேன்”
டெல்லி வந்தாயிற்று.
“இந்த சௌத் இண்டியன்ஸ் எப்போவுமே
குளிக்காதவங்க மாதிரியே இருக்காங்களே ஏன்..”
அப்பாவியாய் அவர் கேட்கையில்
கோபத்தை மீறி சிரிப்பும் வந்தது.
வாழ்வின் சுழலில், சூழலில் காதல் கொண்டு
மனவயப்பட்ட காதல் மணவறை சென்று
இன்றோடு இரு வருடங்கள்
இனிதாய் நிறைவடைகின்றன.
அதிகாலைத் துயிலெழ விருப்பம் எனக்கு.
9 மணி அலாரத்தை 10 முறை அணைத்து எழுகிறாய் நீ.
காலையில் பழங்கள் மட்டுமே உணவாக நான்.
“பரோட்டா எங்கே?” - இது நீ.
சுஜாதா, வண்ணதாசன், லா.சா.ரா.,
பெரியார், வைரமுத்து, பாஸ்கர் சக்தி,
தமிழினி, கல்குதிரை, ஆனந்த விகடன்
என எதாயிருந்தாலும் குறைந்தது
ஒரு மாதம் வாசிக்கிறேன்.
சிட்னி ஷெல்டன், ஜான் க்ரிஷம்,
டேன் ப்ரௌன், ஜெஃப்ரி ஆர்சர்,
அகதா க்ரிஸ்டி, ஸ்டீக் லார்சன் என
யாவரின் எழுத்தையும் அதிகப்படியாக
இரண்டு நாட்களில் வாசித்து முடிக்கிறாய்.
எப்போதும் பாடல்களை மட்டுமே ரசிக்கிறேன் நான்.
பாடல்கள் எதுக்கு ஒரு படத்திலென
திரைப்படங்களை மட்டுமே விரும்புகிறாய் நீ.
என் உடைகளை நானே தீர்மானிக்கிறேன்.
உன் உடைகளை ஒரு போதும் நீ தீர்மானிப்பதில்லை.
“ரொம்ப நாளாச்சு. இன்னிக்கு அடை பண்ணட்டுமா?” கேட்கிறேன்.
“குல்சா பண்ணியும் ரொம்ப நாளாச்சுல்ல?” பதிலளிக்கிறாய்.
மனிதர்களை மறந்து வேலையில் மூழ்கிப் போகிறாய்.
எல்லா வேலைகளிலும் மனிதர்களைச் சுற்றியே வாழ்கிறேன் நான்.
வெகேஷனுக்கு மனாலி போகலாமென்கிறாய்.
அம்மா வீட்டிற்குப் போகலாமென்கிறேன் நான்.
செடிகளைத் தடவித் தழுவி வளர்க்கிறேன் நான்.
செயற்கைப் பூக்களை வீடெங்கும் வைத்து அழகு பார்க்கிறாய் நீ.
பெட் ரூமுக்கு பெயிண்ட்
பிங்க் கலர்?
ம், சன்செட் ஆரஞ்ச்?
இருவரின் எண்ணமும் வண்ணங்களாக.
“காஃபி தரட்டுமாப்பா”
“டீ கொடேண்டா”
ஹிந்தி படம் போவோம்ங்க.
ஆங்கிலப் படம் போகலாமே.
ஷாஹித் கபூர் அழகென்கையில்
ஆமோதித்து செல்லமாய் முறைக்கிறாய்.
சாலையில் அழகாய்ப் பெண் போனால்
உன்னை அழைத்துக் காண்பிப்பதை
விரும்புகிறேன் நான்.
“ஏதாச்சும் எழுதட்டுமா...”
“ என் கூட கொஞ்சம் நேரம் உட்காறேன்”
வெவ்வேறு திசைகள்,
இரு வேறு எண்ணங்கள்,
எதிரெதிர் ரசனைகள்,
வித்தியாச வண்ணங்கள்...
எல்லாமே ஒருமிக்கிறது
காதலென்னும் புள்ளியில்.
எந்த ஊடலுமின்றி
மனக்கசப்புமின்றி
அழகாய்
அமைதியாய்
சீராய்
ரசனையாய் பயணிக்கிறோம்
வாழ்க்கைப் படகில்.
உன் ரசனைகளை
உன்னுடன் சேர்த்து
நான் ரசித்தவாறும்
என் தினசரியை
எப்போதும் நீ பாராட்டியவாறும்.
வாழ்க்கை வரமெனக்கு.
73 comments:
வாழ்த்துக்கள் தோழி.. இன்று போல் என்றும் வாழ்க
திருமண நாள் வாழ்த்துக்கள்.ரொம்ப நல்லாயிருக்கு.
மணநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
திருமண நாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
சொல்லவே இல்லையே விக்கி!
(நான்தான் மறந்துட்டேன், எஸ்கேப்பு)
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
அதுசரி, லேபில் சூப்பருங்க.
எப்போ வந்தீங்க தலைநகருக்கு?
ஊருக்கு போய் மழை வராம செஞ்சுடீங்க போல!!!
வலைத் தோழிக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்...
அருமையான குறிப்பு...
நிறைவான வாழ்க்கை வாழவும் ரொம்ப தூரம் இதே சந்தோஷத்தில் பயணிக்கவும் கடவுளின் ஆசியை பிராத்திக்கிறேன்...
துருவங்கள் எதிர் எதிராய் இருக்கும் வரைக்கும்தான் ஈர்ப்பு
அணுவுக்கு பொருந்துவதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும்
பிணக்கற்ற வாழ்வு வரம் என்கிறீர்கள்
தவம் என்கிறேன் நான்
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்.
வெங்கட்.
திருமண நாள் வாழ்த்துக்கள் விக்கி அவர்களே !!!!!!!!
Wish You A Very Happy Anniversary
திருமண நாள் வாழ்த்துக்கள் விக்கி!..
வாழ்த்துக்கள் விக்கி...
வாழ்த்துக்கள்
inthaanga 15tha ennudaiya vaazthummmmmmmmmmmmm
புரிதலுடன் கூடிய உனது வாழ்க்கையை படிச்சு பிரமித்துப் போனேன் தோழி. நீ இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகிரேன் தோழி.
உனது ஒவ்வொரு வரிகளிலும் நீ வாழும் வாழ்க்கையை என்னால் உணர முடிகிறது.
நிறைய எழுத நினைக்கிறேன்.
ஆனால் முடியல.
வாழ்த்துக்கள் தோழி....
வாவ் உங்களுக்கும் இந்த மாதம் தான் திருமண நாளா....?! வாழ்த்துக்கள் தோழி.....! இந்த சந்தோசமும் ரசனைகளும் இதே போல் என்றும் தொடரட்டும்....
//வாழ்க்கை வரமெனக்கு//
மகிழ்கிறேன். :)))
Many more returns of the day :)
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் விக்கி!!
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..!
//உனக்கு பிடித்த சட்டை எனக்கு பிடித்த புடவை அடிக்கடி உடுத்தி கொள்ளும் தியாகம் தவிர்ப்போம். வெளியூர் புறப்படும் போது பதறி வந்து வழி அனுப்பாதே.
வாசல் படி வரை வந்து சொல்ல வேண்டாம். சமையல் அறையில் நின்று கொண்டே சொல். பிரிவின் துயர் குறைப்போம். இந்த கவிதை வரிகள் இப்போது போற்றப்படாவிட்டாலும் எதிர் காலத்தில் போற்றப்படும் என்பதை புரிந்து கொண்டேன்.//
kabilan vairamuthu's poem, quoted by kalagnr in his marriage.
மணநாள் நல்வாழ்த்துக்கள் தோழி... ஒரு வாரம் கூட வேலை இல்லாது (வெட்டியாய்) வீட்டில் இருக்க முடியவில்லை என்பதை, இந்த நீண்ட இடைவெளி உணர்த்துகிறது...
wah toooooooo romantic:))))
congrats!!!! keep rocking:)
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!
கவிதை பிரமாதம்.
மணநாள் வாழ்த்துக்கள்!!!
2 States கவிதையாப் படிச்ச உணர்வுங்க!
:)))
வாழ்க வளமுடன். :)
அன்பான வாழ்த்துக்கள்! வீட்டுக்கு வீடு வாசப்படி:-))
இனிய மணநாள் நல் வாழ்த்துக்கள்
//ஷாஹித் கபூர் அழகென்கையில்
ஆமோதித்து செல்லமாய் முறைக்கிறாய்.
சாலையில் அழகாய்ப் பெண் போனால்
உன்னை அழைத்துக் காண்பிப்பதை
விரும்புகிறேன் நான் //
கொஞ்சம் ஓவரா இருக்கே :-)))
இனிய மணநாள் வாழ்த்துக்கள்!
அருமையான பதிவு.
இங்கேயும் வாழ்த்துக்கள் விக்கி.
வாழ்த்துகள். இனிதே தொடருங்கள்.
Wishes vikky.
Very good and romantic post. But I dont likethe comedy label for this good post.
wishes to Yogi also.
வாழ்த்துக்கள் விக்கி :)
மணநாள் வாழ்த்துக்கள்
ஷாஹித் கபூர் அழகென்கையில்
ஆமோதித்து செல்லமாய் முறைக்கிறாய்.
சாலையில் அழகாய்ப் பெண் போனால்
உன்னை அழைத்துக் காண்பிப்பதை
விரும்புகிறேன் நான்.//
ஒரு மன வாழ்வில் காணும் சுகங்களை மேலுள்ளவரிகளை பார்க்கின்றேன்..உண்மைதான்..
மேலே அடைப்பிள் குறிப்பிட்ட வரிகள் எங்கள் வாழ்க்கையிலும்....
இந்த சந்தோஷத்துக்கு முக்கியகாரணம் எதிர் எதிர் டேஸ்ட் என்பதுதான் உண்மை...
என்னை அன்னையை விட என்னை அதிகம் கொண்டாடும் என் துணைவி முதலில் என்னை பொறுக்கி என்றாள்...
திருமணநாள் வாழ்த்துக்கள்
காதல்
வசப்பட்டால்
வாழ்க்கை வரமே!
வாழ்த்துகள்
திருமண நாள் வாழ்த்துக்கள் யோகி அண்ட் விக்கி..
( நாங்க இந்த ஊருக்காரங்களை தான் குளிக்காதவங்க பல்லு விளக்காதவன்க ந்னு சொல்வோம் ஹிஹி..)
வாழ்த்த்த்த்துக்க்க்க்க்க்க்க்க்கள் விக்கி அக்கா. அழகான கவிதை. உங்களைப் போலவே. (ஆனா ஒன்னு, இதெல்லாம் பண்ணமாட்டேன்னு சொல்றவங்க தான் முதல் வேலையா அதைப் பண்ணறாங்க இல்லே?: மீசை பத்தி நீங்க விட்ட ஸ்டேட்மென்டைப் பார்த்த உடனே நினைவுக்கு வருகிறது)
//
அழகாய்
அமைதியாய்
சீராய்
ரசனையாய் பயணிக்கிறோம்
வாழ்க்கைப் படகில்
//
ரொம்ப சந்தோசம்..... இதுவே தொடரவும் விருப்பம்.......... திருமண நாள் வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள்.
Vazthukal. . . . . . "Meesa vacha paiyan than marriage pannuven " kadisiyil aappa? Ennoda aim ennagurathu? Friends kitta enakum thozvi varuma!
Vazthukal. . . . . . "Meesa vacha paiyan than marriage pannuven " kadisiyil aappa? Ennoda aim ennagurathu? Friends kitta enakum thozvi varuma!
வாழ்த்துக்கள் தோழி
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் தோழி !!!!
அருமையான வரிகளில் அசத்தலான பதிவு!!!!
வாழ்க வளமுடன்!!!
super!
திருமண நாள் நல்வாழ்த்துக்கள்......... நீங்கள் இருவரும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் கோடியாண்டு இப்பூமியில் இன்றுபோல் என்றும் இணைந்து வாழ வாழ்த்துகிறேன்.
இனிய மணநாள் வாழ்த்துக்கள்
/வாழ்க்கை வரமெனக்கு.//
அந்த வாரம் நிலைக்க எனது பிரார்தனைகளுடன் மனம் நிறைந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!
உங்கள் திருமண நாளின் போது நல்ல ஒரு லவ் ஸ்டோரி எழுதிருந்தால் நல்ல இருந்திருக்கும்
காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்காகவே ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். அவசியம் படிக்கவும்.
http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_3286.html
//என் உடைகளை நானே தீர்மானிக்கிறேன்.
உன் உடைகளை ஒரு போதும் நீ தீர்மானிப்பதில்லை.//
ரொம்ப நல்லாயிருக்கு.
திருமண நாள் வாழ்த்துக்கள்.
ஹாய் விக்னேஷ்வரி....
அடடா.... கவிதை ரொம்ப அருமையா இருக்கேன்னு நெனச்சேன்... இதான் விஷயமா....
இந்தாருங்கள் பிடியுங்கள் ஒரு அழகான பொக்கே....
என் மனம் கனிந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்....
வாழ்வில் அனைத்து நலமும் பெற்று இன்று போல் என்றும் இனிதாய் வாழ
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்....
ஹாய் விக்னேஷ்வரி....
திருமண நாள் வாழ்த்துக்கள்!
திருமண நாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்...
//*எந்த ஊடலுமின்றி, மனக்கசப்புமின்றி**/
இதுக்கு ஒரு Spl வாழ்த்துக்கள்.
Disc:- காணாம போனவங்க லிஸ்ட்-ல வந்துடுவீங்களோன்னு நினச்சேன். அதுக்குள்ள ஒரு post போட்டுடீங்க. வீட்டுக்குள்ளயே அவ்ளோ Busyயா..?
திருமண நாள் வாழ்த்துக்கள........ sorry konjam late
நன்றி LK.
நன்றி கோவை2தில்லி.
நன்றி துளசிகோபால்.
நன்றி மோகன்.
நன்றி நடராஜன்.
நன்றி பாலகுமாரன், நான் போனதால தான் ஒரு நாள் ஊர்ல நல்ல மழைங்க. :)
நன்றி வினோத்.
நன்றி நேசமித்ரன்.
நன்றி வெங்கட்.
நன்றி இராயர் அமிர்தலிங்கம் அவர்களே!!!
நன்றி குணா.
நன்றி இர்ஷாத்.
நன்றி வினோ.
நன்றி செந்தில்.
நன்றி வினு.
நன்றி ரம்ஸ். :)
நன்றி கௌசல்யா. உங்களுக்குமா?
நன்றி தினேஷ்.
நன்றி மேனகா.
நன்றி உண்மைத் தமிழன்.
பகிர்தலுக்கு நன்றி மனசு.
நன்றி வித்தியாசமான கடவுள். இல்லைங்க, ஊருக்குப் போயிருந்தேன்.
வாங்க தமிழ்மாங்கனி. நன்றி.
நன்றி அன்பரசன்.
நன்றி கோபி.
நன்றி ஷங்கர்.
நன்றி அபிஅப்பா. :)
நன்றி ஜெய்லானி. ஏன்ன்ன்ன்ன்ன்ன்..... ஷாஹித்துக்கு என்னங்க குறைச்சல்..
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி சுசி.
நன்றி அக்பர்.
நன்றி கிருஷ்ணா. லேபிள் தான் உண்மை கிருஷ்ணா. ;)
நன்றி பாலாஜி.
நன்றி கலாநேசன்.
வாழ்க்கை அழகானது தான் ஜாக்கி சேகர். வாழ்த்திற்கு நன்றி.
நன்றி முத்துக்குமரன்.
நன்றி முத்துலெட்சுமி. நல்லா ரெண்டூர்க்காரங்களும் மாத்தி மாத்தி திட்டிக்க வேண்டியது தான். :)
நன்றி அனாமிகா. சரி தான். ;)
நன்றி யோகேஷ்.
நன்றி ஹூஸைனம்மா.
நன்றி மதார். எதுக்கும் கல்யாணம் வரைக்கும் வாயைத் திறக்காம இருக்கறதே நல்லது. :)
நன்றி நட்ராஜ்.
நன்றி சக்தி.
நன்றி வளர்பிறை.
மிக்க நன்றி கிருஷ்ணன்.
நன்றி ஸாதிகா.
நன்றி ப்ரின்ஸ்.
அடுத்த வருஷம் எழுதிடலாம் இராயர் அமிர்தலிங்கம்.
வாசித்தேன் கோபி. நீங்க பாவம். :)
பூங்கொத்திற்கு நன்றி கோபி, வாழ்த்திற்கும். :)
நன்றி ஜிஜி.
நன்றி விஜயஷங்கர்.
நன்றி செந்தில் மோகன். இல்லைங்க, அம்மா வீட்டுக்குப் போயிட்டேன் 15 நாள். அதான் இந்தப் பக்கம் வர முடியல.
நன்றி ஜானகி. பரவாயில்லைங்க, அடுத்த வருஷத்துக்கு அட்வான்ஸா எடுத்துக்கறேன். :)
happy anniversary
vigneswari & yogi ,
with prayers and wishes
'இல்லதன் இல்லவள் மாண்பானால்' என்ற குறள் வரிகள் நினைவுக்கு வந்தது . . .
நிறைவாய் வாழ்பவர்களால் தான் சுற்றியுள்ளோர்க்கு நிறைவை தர முடியும் . . .
உங்கள் வரிகள் இதனை மெய்ப்பிக்கின்றது . . .
இனிமை இனிதே தொடரட்டும்,
மகிழ்ச்சியை மற்றவர்க்கும் ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி
குறளில், ஏதேனும் தவறிருந்தால் பொறுத்தருள்க !
கிளைமாக்ஸைத் தவிர மற்றெதெல்லாம் என்னவோ நிஜம்தான். :-))
ரசனைப் பகிர்வு.
lovely!!!!!
vaazhtukkal!
கண்ணூ படப்பபோகிறது.மணநாள் வாழ்த்துகள்
மணநாள் வாழ்த்துக்கள்.
எப்ப வாழ்த்தினாலும் வாழ்த்துக்கு நாள் கணக்கு கிடையாது,லேட்டா வந்து வாழ்துகிறேன்.
அது என்னமோ தெரியல்லை எனக்கு என்னையும் மீறி ஒரு வித நட்பு தோன்றியது. எனக்கு உஙகளை போன்ற ஒரு தோழி இருந்தாள். சங்கீதா. இன்றைக்கு என் வலைபதிவில் உங்க பதிவை பார்த்ததும் முதலில் உங்களை தொடர்கிறேன் அடுத்து இங்கு.
ரொம்ப நல்லா எழுதறிங்க + உங்க வலைபதிவும் நன்றாக இருக்கு.
www.vijisvegkitchen.blogspot.com
நல்ல கவிதை. வாழ்த்துகள்
நல்ல கவிதை. வாழ்த்துகள்
Post a Comment