முதல் பகுதி இங்கே.
கடைசியா எங்கே விட்டோம், ஆங்... கிங் ஃபிஷர்ல ஏறி ஏற்கனவே உக்காந்திருந்த ரெண்டு அங்கிளையும் எழுப்பி ஜன்னலோர சீட்ல துண்டைப் போட்டு உக்காந்தாச்சு. முதல்ல கிங் ஃபிஷர் அக்கா வந்து ஹெட் செட் குடுத்துட்டுப் போச்சு. ஒரு 3 வருஷம் முன்னாடி அவங்க குடுத்ததுக்கும், இப்போ குடுக்குறதுக்கும் தரத்துல உள்ள வித்தியாசம் ரொம்ப மோசம். தவிர, முன்னாடி இருந்த சர்வீஸ், ஹாஸ்பிடாலிட்டி இது எதுவுமே இப்போ இல்லாத மாதிரி இருக்கு.
அடுத்தது சாப்பிட சாம்பார் இட்லி குடுத்தாங்க. நான்-வெஜ் ஆப்ஷனே இல்ல. பாவம் நான்-வெஜ் விரும்பிகள். அதையும் குடுத்த விதம் நம்ம ரெய்ல்வேஸ் மாதிரியே இருந்தது. யூஸ் அண்ட் த்ரோ வகை டப்பாக்களில். ஒரு ஸ்வீட் டிஷ் இல்ல, கூல் ட்ரிங்க்ஸ் இல்ல. அட, சாக்லேட் கூட குடுக்கலைங்க. :( முன்னாடி அவங்க சாப்பாடு லீ மெரிடியன்ல (Le Meridien) இருந்து வரும். இப்போ அவங்களே வெச்சிருக்குற ஹோட்டல்ஸ்ல இருந்து வருது போல. ஆனாலும் டிக்கெட் விலை மட்டும் குறைக்கல. அதே மாதிரி ரொம்ப நல்லா இருந்த இன் ஃப்ளைட் மேகசின் (In Flight Magazine) போய் இப்போ சினிமா க்ளிட்ஸ் புத்தகம் வெச்சிருக்காங்க. அதுல இந்த பாலிவுட் கிசுகிசு தவிர வேறொன்னுமில்லை. “ச்சே”ன்னு அலுப்பாகி, டி.வியும் பார்க்கப் பிடிக்காம தூங்கிட்டேன். ஒரு வழியா புனே வந்தாச்சு. லேண்டிங்ல அநியாய ஜெர்க். காது வலியோட புனேல லேண்ட் ஆகி கார்ல ஏறி உக்காந்தாச்சு. அடுத்து 5 மணி நேர சாலைப் பயணம் கோலாப்பூருக்கு, அதுவும் இண்டிகால.
புனே மட்டுமல்ல மஹாராஷ்டிராவுக்கு என் முதல் பயணம் இது. நல்லா பராக்கு பார்த்துக்கிட்டே போனேன். புனே ஏர்போர்ட் ரொம்பச் சின்னது. நம்ம கோயம்புத்தூர் ஏர்போர்ட் மாதிரி தான் இருக்கு. அதுக்குக் காரணம் பக்கத்துலேயே மும்பை ஏர்போர்ட் இருக்கறதுதானாம். பெரும்பாலும் எல்லாரும் மும்பைல இருந்து பயணிக்கிறாங்க. புனேவின் ரோடுகள் நல்லாவே இருந்தாலும் சாலையில் திணறடிக்கும் போக்குவரத்து நெரிசல். புனேவை விட்டு வெளியேறவே 1 மணி நேரமாச்சு. அப்புறம் பயணித்த வழியெல்லாம் அத்தனை அழகு.
ஒரு மலை வாசஸ்தலம் போவது போன்ற சந்தோஷம். நெளிவான, ஏற்றமான சாலைகள், சாலையின் இருபுறமும் மலையும், மரங்களும். பயணக் களைப்பைத் தூங்கித் தீர்க்க விடாத அழகு. எல்லா ஊர்களிலேயும் மாறாத ஒரு விஷயம், பின் சீட்டில் முகத்தை துப்பட்டாவால் மறைத்து இருவர் ஒருவராய் பைக்கில் பயணிக்கும் காதல் ஜோடிகள். நிச்சயம் புனே காதலர்கள் சுற்றிலும் அழகான இடங்கள் வாய்க்கப் பெற்றவர்கள்.
வாகன ஓட்டுனர் என்னைப் பஞ்சாபி என நினைத்து அங்குள்ள விஷயங்களை தில்லி மற்றும் பஞ்சாபிலிருக்கும் விஷயங்களோடு ஒப்பிட்டுக் கூறிக் கொண்டே வந்தார். அருகிலிருக்கும் இடங்கள், அந்த ஊரின் சிறப்புகள், அங்கு ஸ்பெஷலான உணவு வகைகள், அங்கிருந்த மன்னர்கள் என அடுத்த ஒரு மணி நேரப் பயணம் மிகவும் உபயோகமாய், அந்த இடத்தைப் பற்றி அறியும் வகையில் இருந்தது. பயணங்களில் பேசாமல் அமைதியாய் ரசிப்பது எனக்கு மிகப் பிடித்தம். ஆனாலும் தெரியாத ஊரில் அந்த ஊரின் சிறப்புகளை அங்கிருப்பவரே சொல்லக் கேட்டுப் பயணிப்பது புது அனுபவமாக நன்றாகவே இருந்தது.
ஏற்கனவே அங்கு பயணித்து வந்த என் மேலாளர் என்னிடம் கிட்டத்தட்ட 6 முறை சொல்லியனுப்பியிருந்தார். என்னவா... அங்கிருக்கும் “ஜோஷி வடைவாலா” பற்றி தான். அது நெடுஞ்சாலையிலிருக்கும் ஒரு மஹாராஷ்ட்ரியன் தாபா. வெறும் 14 ரூபாய்க்கு 1 ப்ளேட் வடாபாவ். யம்மி டேஸ்ட்டில். கூடவே டக்கரான டீ. வயிறு நிறைய அங்கிருந்து கிளம்பினோம். 20 ரூபாய்க்குள் மதிய உணவை சுவையாக முடித்து விட்டது மிகுந்த ஆச்சரியமாயிருந்தது. தில்லியில் மிகக் குறைந்த மதிய உணவு 40 ரூபாய்க்குக் கிடைக்கும்.
இதற்கு மேல் இந்த ஓட்டுனர் பேசினால் கேட்கும் மூடில் இல்லை நான். எரிகின்ற வெயிலில் ஏ.சி.யை ஆன் செய்து விட்டு, வயிறு நிறைந்ததை அறிவிக்கும் வண்ணம் விழிகள் மூடின. 1 மணி நேரம் நல்ல தூக்கம். மறுபடியும் அழகான சாலைகள். இப்படியாக 5 மணி நேரப் பயணம் முடிந்து மாலை 4 மணிக்கு கோலாப்பூர் கெஸ்ட் ஹவுஸ் அடைந்தாயிற்று. காரில் தொடங்கிய தூக்கத்தைத் தொடர்ந்து விட்டு வருகிறேன். அடுத்த பதிவு கோலாப்பூர் ஸ்பெஷல்.
18 comments:
பதிவு லேட்டா வந்தாலும் தப்பில்லை, வராமலே இருப்பது தான் தப்பு. அதுனால தொடருங்க... படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்... : )
தூங்கும் போதும் பதிவு போடும் எண்ணம் இல்லையா? :-))
இப்படிலாம் சொல்றிங்கன்னுதான் இப்ப ஜெட் ஏர் மதுரை-சென்னை ரூட்ல எதுமே கொடுக்கிறதில்ல.
இன்னும், மதுரை வந்திருச்சு எறங்கு எறங்குன்னு சவுண்ட கொடுக்கிறது தான் பாக்கி.
//ஜன்னலோர சீட்ல துண்டைப் போட்டு உக்காந்தாச்சு//
கோயம்பேடு பழக்கம் கிங்ஃபிஷர் வரை :))
//ஒரு ஸ்வீட் டிஷ் இல்ல, கூல் ட்ரிங்க்ஸ் இல்ல. அட, சாக்லேட் கூட குடுக்கலைங்க//
ஹலோ, நீங்க என்ன கல்யாணத்துக்கா போனீங்க?
//என் மேலாளர் என்னிடம் கிட்டத்தட்ட 6 முறை சொல்லியனுப்பியிருந்தார். என்னவா... அங்கிருக்கும் “ஜோஷி வடைவாலா” பற்றி தான்//
இவரல்லவோ மேலாளர்!
//காரில் தொடங்கிய தூக்கத்தைத் தொடர்ந்து விட்டு வருகிறேன். அடுத்த பதிவு கோலாப்பூர் ஸ்பெஷல்.//
ஹுக்கும்! எப்படியும் ரெண்டு மூணு வாரமாவது ஆகும்
வாகன ஓட்டுனர் என்னைப் பஞ்சாபி என நினைத்து அங்குள்ள விஷயங்களை தில்லி மற்றும் பஞ்சாபிலிருக்கும் விஷயங்களோடு ஒப்பிட்டுக் கூறிக் கொண்டே வந்தார். // இதுஎல்லா ஊரு ட்ரைவருக்கும் பழக்கம் போல.. யார் என்று ஊகித்து அதுக்கேத்தமாதிரி பேசுவது.. ஆனா பாவம் உன்னை சரியாக தப்பா நினைச்சுட்டாரே..
அடுத்தது சாப்பிட சாம்பார் இட்லி குடுத்தாங்க. நான்-வெஜ் ஆப்ஷனே இல்ல. பாவம் நான்-வெஜ் விரும்பிகள். அதையும் குடுத்த விதம் நம்ம ரெய்ல்வேஸ் மாதிரியே இருந்தது. யூஸ் அண்ட் த்ரோ வகை டப்பாக்களில். ஒரு ஸ்வீட் டிஷ் இல்ல, கூல் ட்ரிங்க்ஸ் இல்ல. அட, சாக்லேட் கூட குடுக்கலைங்க//
இதாவது பரவாயில்லைங்க.... இன்னோரு... எர்லைன்ஸ்ல புளிசோறும்... நேந்திரன் ஜிப்ஸ்ம் கொடுத்தாங்க.... ஒன்னு விக்குது... இன்னோன்னு சிக்குது.
பயணம் இனிதாய் தொடரட்டும்.
//என் மேலாளர் என்னிடம் கிட்டத்தட்ட 6 முறை சொல்லியனுப்பியிருந்தார். என்னவா... அங்கிருக்கும் “ஜோஷி வடைவாலா” பற்றி தான்//
அவுரு பேரு யோகியா?????
சரி.. நானும் தூங்கி எந்திரிச்சு வரேன் கோலாப்பூர் பார்க்க.. கூடவே பயணம் செய்தது டயர்டா இருக்கு..
free ya tour போன மாதிரி இருக்கு.... அவுங்க காசுக்கு கொடுக்கிறத நீங்க free ya கேட்டா பாவம் என்ன பன்னுவாங்க....
உங்கள் விமான + 5 மணி நேர ரோடு பயணம் படிச்சால் பாவமா தான் இருக்கு
லேண்டிங்ல அநியாய ஜெர்க்.
டவுன் பஸ் அப்படிதான் இருக்கும்!
ஹிஹி!!!
நல்லா இருக்குங்க. தொடருங்க.
entry
:)
Did u taste chicken kolapuri?
at kolapur
:-)
ஒரு மணி நேரம் தூங்கும் போது வந்த கனவ பத்தி சொல்லவேயில்ல
அட அசத்தலா ஆரம்பிச்சு இருக்கீங்க.கொல்லாப்பூர் பயண அனுபவம் காண வெயிட்டிங்.
//லேண்டிங்ல அநியாய ஜெர்க்.//
உங்களுக்கும் அதே அனுபவமா?
எங்க ஊர்ல, சிட்டி-ய விட்டு வெளிய போனா..எல்லாம் greenமயம்தான்.
"கோலி வாடா பாவ -No 1" கூட நல்லாதான் இருக்கும்.
next time மீசல் பாவ் ட்ரை பண்ணுங்க அக்கா..
Post a Comment