தனியே நடக்க ஆசைப்பட்டு, விழுந்து அழும் குழந்தை தேடும் தாயின் கரம், இவரது நட்பெனக்கு. நான் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் என் நண்பர். இவருடனான அரிதான தொலைபேசி உரையாடல்களும் ஏதாவதொரு கோபமின்றி, ஒரு எரிச்சலின்றி முடிந்ததில்லை. ஏனெனில் அவ்வளவு வித்தியாசக் கருத்துடையவர்கள் நாங்கள்.
இவரின் சாதாரண நடையிலான எழுத்து, அவரின் எழுத்துகளுடன் ஒரு அன்யோன்யத்தை ஏற்படுத்தியது. பலருக்கும் எழுத இவர் கொடுத்த ஊக்கம் கண்டு பொறாமையில்லாத இவர் குணத்தை வியந்திருக்கிறேன். ஒரு ஆச்சரியத்துடனும், மரியாதையுடனும் இவர் எழுத்துகளைத் தொடர்ந்ததாலேயே இவருக்கு மெயிலனுப்பவோ, சாட்டிப் பேசவோ ஒரு போதும் தோன்றவில்லை.
முதல் முறை இவரை சந்தித்த போது ரொம்ப இயல்பாகவே பேசினார். “பிரபலம்” என்ற பிம்பத்தை உடைத்தார். தொடர்ந்து என் வேலை, அதிலுள்ள விஷயங்கள் பற்றிப் பேசினார். எளிமையான, இயல்பான பேச்சிற்கு சொந்தக்காரர். இசை ரசிகன். நல்ல கலைஞன். ஆணவம், போலித்தனம், பொறாமை இல்லாதவர்.
முதல் சந்திப்பிற்குப் பின் பேச இருவருக்கும் நேரம் அமையவில்லை. ஒரு முறை ஒரு உதவிக்காகப் பேசினேன். எதிர்பார்த்ததை விட அதிகம் உதவினார், எந்த எதிர்பார்ப்புமின்றி. மகிழ்ச்சியாய் இருந்தது. பல நல்ல புத்தகங்களை வாங்கித் தந்தார். சிந்தை தெளிவுற உதவினார். அதன் பிறகு மறுபடியும் வேலைகள், வீடு... இருவரும் பேச முடியவில்லை.
அவரின் முதல் உதவிக்குப் பின், எப்போது என்னவொரு கஷ்டம் / குழப்பம் வந்தாலும் அழைப்பது அவரைத் தான். தெளிவாக “நீ செய்வது தவறு” என சொல்ல எப்போதும் தயங்காதவர். பெரும்பாலும் பிஸியாக இருந்தாலும் தேவையான நேரங்களில் தோள் கொடுக்கத் தவறியதில்லை. வேண்டும் நேரங்களில் தவறாமல் நட்பு அங்கிருக்கும் என அறிந்தேன் இவர் மூலம்.
கொஞ்சம் முற்போக்கு சிந்தனையாளர். ரொம்பவே கோபப்படுபவர் (நான் தான் கோபப்படுத்துறேனான்னு தெரில). கோபத்தை வார்த்தையிலும் வீசத் தெரிந்தவர். கொஞ்ச நேரத்திலேயே அதை உணர்ந்து மன்னிப்பும் கேட்பார். குடும்பத்தை நேசிப்பவர். மனைவியை சுவாசிப்பவர். நாங்களிருவருமே கோபத்தில் குறைந்தவர்களல்லர். பேசாமலே உர்ரென்று இருந்துவிட்டு அதற்கான காரணம் மறந்து மறுபடியும் பேசி சண்டையிட்டுக் கொள்வோம்.
நண்பனெனில் குறைகளும் உண்டு தானே. அனைவருக்கும் நல்லவர். ரொம்ப நல்லவர். எல்லாரையும் நம்புபவர். யாருக்கும் எந்த உதவியும் செய்யக் கூடியவர். “இப்படியெல்லாம் இருந்தா உங்களை ஏமாளின்னு சொல்லுவாங்க. வேண்டாம்ப்பா” என்றால் ஒரு சிரிப்பைப் பதிலாய் உதிர்ப்பவர்.
கொஞ்சம் டென்ஷனைக் குறைச்சுக்கோங்க நண்பா. ஆஃபிஸ் வேலைகள் அதிகம் தான். ஆனா வாழ்க்கையை விட்டுடாதீங்க. கொஞ்சமாவது வாழுங்கள். இயந்திரம் போல் ஓடாதீங்க. இன்னிக்கு ஜாலியா அம்மணியையும், குட்டீஸையும் கூட்டிட்டு ஜமாய்ங்க. பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் என் நண்பனாயிருக்க வேண்டுகோளும்.
(கிருஷ்ண குமார் என்ற பரிசல்காரனுக்கு.)
35 comments:
ஹே மீ தி
first
first
first....
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா
ஹே மீ தி
first
first
first....
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா
வாழ்வாங்கு வாழ்க என்று
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
வாழ்த்துகிறது ...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
திரு கிருஷ்ண குமார்...
வஞ்சனை இல்லாமல்
கோவங்கலயும்,
வாழ்த்துகளையும்
கூறிக்கொண்டு இருக்கும்
விக்கி என்ற
விக்கேய்நேஸ்வரிக்கும்
வாழ்த்துக்கள்
மனி மோர் ஹாப்பி பர்த்டே டூ யு.
கிருஷ்ண குமார்...
v.v.s sangam
காம்ப்ளான் சூர்யா
வாழ்த்துகள்
நண்பர்கள் இருவருக்கும் :)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா :))
விக்கி,
இது நான் எழுத நினைத்த இடுகை. என்னை முந்தி கொண்டு விட்டீர்கள். உங்களுக்காவது நேரில் பார்த்து பேசிய அனுபவம் உண்டு. நான் போனில் மட்டும்தான்.
நேற்று கூட போனில் பேசினேன். ஆனால், பிறந்த நாள் என்று தெரியாததால் நான் வாழ்த்தவில்லை.
நன்றி விக்கி.
வாழ்த்துக்கள் பரிசல். நண்பனுக்கு வாழ்த்து சொன்ன விக்கிக்கும் நன்றி
பிறந்த நாள் கொண்டாடுபவர்க்கும், அதனை அழகிய
எழுத்து நடையில் தெரிவித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி விக்கி!
நாங்களிருவருமே கோபத்தில் குறைந்தவர்களல்லர். பேசாமலே உர்ரென்று இருந்துவிட்டு அதற்கான காரணம் மறந்து மறுபடியும் பேசி சண்டையிட்டுக் கொள்வோம் //
அழகு!
இருவருக்கும் வாழ்த்துக்கள்
@@@சைவகொத்துப்பரோட்டா--//
பிறந்த நாள் கொண்டாடுபவர்க்கும், அதனை அழகிய
எழுத்து நடையில் தெரிவித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
பிறந்த நாள் வாழ்த்துகள் பரிசல் :)
இப்போ யார்கிட்ட முறைச்சுக்கிட்டு இப்படி கம்ம்னு உக்காந்திருக்காரோ தெரிலையே.. :(
எல்லாரும் ஒண்ணா குரல் கொடுங்க. "ஹாப்பி பர்த்டே கிருஷ்ணா
ஹாப்பி பர்த்டே கிருஷ்ணா
ஹாப்பி பர்த்டே ஹாப்பி பர்த்டே ஹா.......ப்பி பர்த்டே... கிருஷ்ணா"
வாழ்த்துக்கள் பரிசல்!
சக பதிவர் பரிசல் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தெரிவித்த விக்னேஷ்வரிக்கு நன்றி.
வெங்கட் நாகராஜ்
வாழ்த்துகள் பரிசல்.
விக்னேஷ்வரி, உங்கள் எழுத்து மிளிர்கிறது.
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். என்ன, நான் அவர ஃபொலொ பண்ணும் நாளில் இருந்து அவர் எழுதுறதேயே ரொம்ப குறைச்சிட்டார். ஏன் சார்?
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
//மனைவியை சுவாசிப்பவர். நாங்களிருவருமே கோபத்தில் குறைந்தவர்களல்லர். பேசாமலே உர்ரென்று இருந்துவிட்டு அதற்கான காரணம் மறந்து மறுபடியும் பேசி சண்டையிட்டுக் கொள்வோம்.//
:-)))
vikki, convey my best wishes to parisal... happy to both of you...
நட்பின்... சக்தி அப்படி.... இருவருக்கும் வாழ்த்துக்கள்.
பரிசல்காரருக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பரிசல்காரருக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஹலோ பரிசல், அங்க வண்டி வண்டியா வழ்த்து குவியுது, இங்க வந்து மிக்க நன்றியா? இருக்கட்டும் நைட்டு மட்டும் பீ-ல் ஆரம்பித்து ர்-ல் முடியும் குளிர்பானம் குடுத்து குளிர்விக்கலை... அப்புறம் இருக்கு சங்கதி.... :-))
நல்வாழ்த்துக்கள் பரிசல் கிருஷ்ணா சார்.
எனக்கு மிகவும் பிடித்த மனிதர்கள் என்றால், அதில் என் அண்ணன் தான் முதலில்.,!! ஆனால் எனது கருத்துகளுக்கும், வாழ்க்கை முறைகளிலும் மிகவும் வேறுப்பட்டு வாழ்பவன்., BUT I LOVE HIM.
உங்களின் எழுத்தும் அதனை போன்றே ஒரு கருத்தை பிரதிபலிக்கின்றது., உங்களின் நட்புக்கும், பரிசலின் பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
ஷர்புதீன்
\\
எல்லாரும் ஒண்ணா குரல் கொடுங்க. "ஹாப்பி பர்த்டே கிருஷ்ணா
ஹாப்பி பர்த்டே கிருஷ்ணா
ஹாப்பி பர்த்டே ஹாப்பி பர்த்டே ஹா.......ப்பி பர்த்டே... கிருஷ்ணா"\\
நன்றி விதூஷ்!இது மார்ச் 2 ம் தேதிக்கு எடுத்துக்கறேன்!:-))
விக்கி பரிசல் பிறந்த நாளுக்கான பதிவிலே இது நம்பர் 1! என் அன்பான வாழ்த்துக்கள் பரிசில் கிருஷ்ணா!
hearty wishes........:)
நட்புக்கு ஒரு சல்யூட்! இயல்பாய் அதை பதிவு செய்திருக்கிறீர்கள்..
என் பக்கம் வந்ததற்கு நன்றி.. அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை.. என்றது "பார்த்த முதல் நிமிடம்” பின்பு அடையாளம் புரிந்ததால் தானே பேசிவிட்டு திரும்புகிறேன். சொல்லாமல் சில நேரம் புரிந்து கொள்ளும் சக்தி நமக்கு உண்டுதானே..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பரிசல்....
வாழ்த்துக்கள் பரிசல். பகிர்ந்ததுக்கு நன்றி விக்னேஷ்வரி.
பரிசலுக்கு வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் பரிசல்.
அருமையான வாழ்த்து விக்னேஷ்வரி.
நல்ல நட்பு அமைவதும் வரம்தான்.
Great!Greetings from Norway!
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
Post a Comment