எனது இந்த வெறுப்பை அறிந்தும் அம்மா தொடர்ந்து ஒரு வருடமாக “குமுதம்-சிநேகிதி” வாசிக்க சொன்னார். வேண்டா வெறுப்போடும், அம்மாவின் மீதான மரியாதையின் காரணமாகவும் போன வாரம் வாங்கி வந்தேன். வாங்கி வந்ததற்கு உள்ளே என்ன தான் இருக்கிறதெனப் பார்க்கலாமெனப் புரட்டினேன். முடித்து விட்டுத் தான் கீழே வைத்தேன். நான் அபத்தம் என நினைக்கும் விஷயங்கள் இல்லை. தவிர பயனுள்ள பல விஷயங்கள். ரொம்பவே பிடித்து விட்டது. அம்மாவிற்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன்.
சரி, சிநேகிதிக்கு வரலாம். நான் வாசித்தது மார்ச் 1-15 வரையிலான இதழ். வாங்கும் போது 30 வகை ரொட்டி என இலவச இணைப்பைக் கடை பையன் நீட்ட, வேண்டாம் என மறுத்து விட்டு வந்தேன். புத்தகத்தில் தரம் இருப்பதாக நம்புபவர்களுக்கு எதற்கு இந்த இலவச இணைப்புகள் என்பதென் எண்ணம். பெண்கள் சிறப்பு இதழென்பதால் முதல் இருபது பக்கங்களுக்கு வெவ்வேறு துறைப் பெண்கள் பற்றிய ஒரு/இரு பக்கக் கட்டுரைகள். போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி, கலெக்டர், கோவில் கருவூலத்தில் இருக்கும் பெண், காய்கறி விற்று மருத்துவமனை கட்டிய பெண், பாடகி, புல்லாங்குழல் இசைக்கும் பெண், ஒரு குடியிருப்பில் விட்டு வேலை செய்யும் அம்மா என வித்தியாசமான பெண்கள் பற்றிய தொகுப்பு சுவாரசியம்.
உள்ளே சமையல் குறிப்பில்லை; பதிலாக அத்தியாவசிய உணவுப் பழக்க வழக்கங்கள். காஸ்மெடிக் அழகுக் குறிப்பில்லை; மாறாக உணவால் அழகாவது எப்படி. அழும், ஆறுதல் சொல்லும் சோகக் கதைகள் இல்லை; பெண்களே கருத்து சொல்லும் விவாத மேடை. இத்துடன் டாக்டர்.ஷாலினியின் அவசியமான கட்டுரை ஒன்று. வாசித்து முடித்து விட்டு அம்மாவை அழைத்து நன்றி சொன்னேன். தங்கையையும் ரெகுலராக வாசிக்க சொன்னேன். சிநேகிதியில் கொஞ்சம் அலுப்பான வுஷயம் சுய விளம்பரம். ஒருவரைப் பற்றி எழுதும் போது கூடவே “இவரும் நம் வாசகி” என சொல்வது சலிப்பாக உள்ளது. மற்றபடி ரொம்பவும் நல்லாருக்கு. (இது வெறும் புகழ்ச்சி அல்ல. 20 ரூபாய் வீணாகாததன் மகிழ்ச்சி)
*************************************************************************************************************
போன முறை திருப்பூர் சென்றிருந்த பொழுது நான் இருந்த கான்ஃபரன்ஸ் ஹாலில் மெல்லிய பாட்டு சத்தம் கேட்டது. அங்கிருந்தவரை அழைத்து விபரம் கேட்க, இது HR பாலிஸிகளில் ஒன்று. இது போல் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்வதால் தொழிலாளர்களுக்கு அயற்சி ஏற்படாமல் இருப்பதாகவும், வேலை செய்ய ஆர்வம் அதிகமாவதாகவும் தெரிவித்தார். அங்கிருந்த ஒரு கன்சல்டண்டைக் கேட்ட போது அது உண்மைதானென உறுதி செய்தார். எனக்கும் நன்றாகவே இருந்தது. ஆனால் இது அட்மினிஸ்ட்ரேடிவ் ப்ளாக்கில் மட்டும் இருப்பதாக சொன்னார்கள். மனதிற்குள் ஒன்று நினைத்துக் கொண்டு சொல்லாமல் வந்து விட்டேன். (வேலை செய்பவர்களுக்காகப் பாடலென்றால் அவசியம் ஷாப் ஃப்ளோரில் தானே இருக்க வேண்டும். நாற்காலியில் கம்ப்யூட்டரை வெறித்துக் கொண்டு தூங்குபவர்களுக்கு எதற்கு)
*************************************************************************************************************
ஆடிட்டர் நண்பரொருவர் மார்ச் மாதம் வருட இறுதி, வேலை அதிகமென அழாத குறையாகச் சொன்னார். ”ச்சே என்ன வாழ்க்கை இது ஒரே டென்ஷனா... ஒரு சேஞ்சே இல்ல” என்றார்.
நான் அவரிடம், “ஒரு சேஞ்சுக்கு வேலை பாருங்களேன்” என்றால் முறைக்கிறார்.(உண்மையை சொன்னா முறைக்கிறாங்க.. என்ன உலகமடா இது!)
*************************************************************************************************************
வண்ணதாசனை சமீபத்தில் தான் வாசிக்க ஆரம்பித்தேன். அவர் எழுத்தின் அடர்த்தி கண்டு வியந்து நிற்கிறேன். பல இடங்களில் கிராமத்துத் தமிழ் புரியாமல் அம்மாவிடமோ, நண்பர்களிடமோ அர்த்தம் கேட்டுக் கொள்கிறேன். இப்போது தான் புரிகிறது தமிழின் தொன்மையும், மொழியின் வளமையும். (நாம பேசுறதையும் தமிழ்ன்னு ஏத்துக்குறவங்க பெரியாளுங்க தான்)
*************************************************************************************************************
சமீபத்தில் பதிவுலகத் தோழி ஒருவரிடம் பதிவுலக அரசியல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். ஒருவரின் கருத்துக்கு மாறாக பேசும் போது, எழுதும் போது கருத்துக்களை மட்டுமே விமர்சியுங்கள்; தனிமனிதர்களையல்ல. தவிர, உங்களின் எழுத்து எதிர்ப் பதிவாக இருக்க வேண்டுமேயொழிய எதிர் வாதமாக இரு குழுக்களாக நண்பர்களைப் பிரிப்பதாக வேண்டாமே. நாம் இயங்குவது ஒரு பொதுத் தளத்தில். இங்கு அனைவரின் எழுத்துகளும் ஒரு வித மதிப்போடு வாசிக்கப்படுகிறது. அப்படியிருக்கையில் வார்த்தைத் தேர்வுகளில் கவனம் அதிகம் தேவை. எதிர்ப் பதிவுகளை ஒதுக்கும் எனக்கு சமீபத்தில் ஒரு எதிர்ப் பதிவு அதிக கவனத்தை ஈர்த்து வியக்க வைத்தது. நீங்களும் இதை வாசித்துப் பாருங்களேன். (நம்மளையெல்லாம் எதிர்த்து எழுதினா அங்கேயும் போய் சூப்பருன்னு கும்மியடிக்குற ஆளாச்சே நாம. ஹிஹிஹி)
*************************************************************************************************************
யோகி டைம்ஸ்
போன வாரத்தில் ஒரு நாள் சோகமாக யோகியிடம் சொன்னேன் “ஜி, 3 இடியட்ஸ் படத்துல அமிர்கான் ரோல்ல லல்லு* (விஜய்க்கு என்னவர் வைத்திருக்கும் செல்லப் பெயர்) நடிக்கிறாராம்”
நிஜமாகவே எது நடந்து விடக் கூடாது என அஞ்சினேனோ அது நடந்து விட்ட சோகம்.
ரொம்பக் கூலாக சொன்னார் “இதுக்கெதுக்கு இவ்ளோ ஃபீல் பண்ற, அந்தப் பட டைட்டிலுக்கு அவரை விடப் பொருத்தமான ஆள் யாரா இருக்க முடியும்”
சோகம் மறந்து சிரிச்சுட்டேன். (டாக்டர்.விஜய் அவர்கள் என்ஜீனியர் காலேஜ் ஸ்டூடண்ட்டா வர்ற கொடுமையை நாம சகிச்சிக்கணும்னு தலைல எழுதிருக்கும் போது நாமென்ன பண்ண முடியும்?)
* இந்த ஹிந்தி வார்த்தையின் அர்த்தம் அறிந்து மகிழ்பவர்கள் மகிழ்வீராக. தூற்றுபவர்கள் தூற்றுவார்களாக. ;)
42 comments:
//உங்கள் பிரதேசத்தில் கிடைக்கும் ஒரு வகை நம்கீனில் எல்லா சுவையும் இருக்கும் காரம் இனிப்பு புளிப்பு துவர்ப்பு இந்த இடுகையும் அப்படித்தான் இருக்கிறது //
ஆமா பிகானேர் கடைல கிடைக்கும்!
வண்ணதாசனை வாசிப்பது ஒரு வித ஒன்பதாம் மேக மிதப்புதான்
உங்கள் பிரதேசத்தில் கிடைக்கும் ஒரு வகை நம்கீனில் எல்லா சுவையும் இருக்கும் காரம் இனிப்பு புளிப்பு துவர்ப்பு இந்த இடுகையும் அப்படித்தான் இருக்கிறது
தொழில் நிகழும் தளத்தில் பாடல் ஒலித்தால் கேட்கும் என்றா நினைக்கிறீர்கள் எங்கள் தொழில் அப்படி
:)
சுட்டி கொடுத்தமைக்கு நன்றிகள்
//(வேலை செய்பவர்களுக்காகப் பாடலென்றால் அவசியம் ஷாப் ஃப்ளோரில் தானே இருக்க வேண்டும். நாற்காலியில் கம்ப்யூட்டரை வெறித்துக் கொண்டு தூங்குபவர்களுக்கு எதற்கு)//
இது மட்டுமல்ல; பல வசதிகள் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து வெட்டி நியாயம் பேசுபவர்களுக்கு தான் கிடைக்கிறது... தொழிலாளிகளுக்கு கிடைப்பதில்லை...
//“ஒரு சேஞ்சுக்கு வேலை பாருங்களேன்” என்றால் முறைக்கிறார்.(உண்மையை சொன்னா முறைக்கிறாங்க.. என்ன உலகமடா இது!)//
ஹிஹிஹி...சங்கத்து ரகசியங்களை வெளியே சொன்னா முறைக்க தான் செய்வாங்க...
//(நம்மளையெல்லாம் எதிர்த்து எழுதினா அங்கேயும் போய் சூப்பருன்னு கும்மியடிக்குற ஆளாச்சே நாம. ஹிஹிஹி)//
நம்ம ரசனை கொஞ்சம் குறைஞ்சு போயிடுச்சோ???
//(டாக்டர்.விஜய் அவர்கள் என்ஜீனியர் காலேஜ் ஸ்டூடண்ட்டா வர்ற கொடுமையை நாம சகிச்சிக்கணும்னு தலைல எழுதிருக்கும் போது நாமென்ன பண்ண முடியும்?)//
முரளின்னு ஒரு நடிகர் இருந்தார்... அவர் 50 வயதிலும் மருத்துவக்கல்லூரி மாணவராக நடித்தார்... இவருக்கு துணையாக சின்னி ஜெயந்த்தும் நடித்தார்... அத்தோட எனக்கு பின்னாடி இருக்க விஜய் ரசிகர், அஜித்தே கல்லூரி மாணவராக (ஏகன்) நடித்திருக்கும் போது விஜய் ஏன் நடிக்கக் கூடாதென்று காதில் புகை விட்டார்...
//பல இடங்களில் கிராமத்துத் தமிழ் புரியாமல் அம்மாவிடமோ, நண்பர்களிடமோ அர்த்தம் கேட்டுக் கொள்கிறேன்.//
அது கிராமத்து தமிழ் இல்லங்க... இன்னிக்கும் நகரத்தில் இருப்பவர்களில் சிலரும் இந்த வகையில் பேசக்கூடியவர்களே... ஆனால், வீட்டிற்குள் மட்டுமே இருக்கும். வெளியில் வந்தால் கொச்சை தமிழ் தான்.
//(நாம பேசுறதையும் தமிழ்ன்னு ஏத்துக்குறவங்க பெரியாளுங்க தான்)//
உங்களுக்கு தமிழ் பேச தெரியுமுன்னு எங்களுக்கு இப்போ தான் தெரியும் (அட உண்மையிலேயே)
கொஞ்சம் கூல் டவுன் மேடம், ஏன் ஏன் இப்படி எல்லா பத்திரிகையையும் சாட்டை எடுத்து விளாசறீங்க.
வேலை நேரத்துல இசை என்பது பல அலுவலகங்களில் உண்டே. நான் எனது கணினியில், ஹரி பிரஸாத் சௌராஸியா, ரவிஷங்கர் என யாராவது ஒருவரின் இசையை எனக்கு மட்டும் கேட்குமளவுக்கு ஓட விட்டிருப்பேன். To be honest, this keeps me away from getting fatigue.
லல்லு - aur koyi naam nahi mila kya. karki ko agar sahi mathlab maalum chalegaa tho maaregaa.
கலக்கல் கதம்பம்.
வண்ணதாசனின் நெல்லைத் தமிழ் ரொம்ப அருமையாயிருக்கும்.
ஒருவரின் கருத்துக்கு மாறாக பேசும் போது, எழுதும் போது கருத்துக்களை மட்டுமே விமர்சியுங்கள்; தனிமனிதர்களையல்ல. தவிர, உங்களின் எழுத்து எதிர்ப் பதிவாக இருக்க வேண்டுமேயொழிய எதிர் வாதமாக இரு குழுக்களாக நண்பர்களைப் பிரிப்பதாக வேண்டாமே.
ஒருவரின் கருத்துக்கு மாறாக பேசும் போது, எழுதும் போது கருத்துக்களை மட்டுமே விமர்சியுங்கள்; தனிமனிதர்களையல்ல. தவிர, உங்களின் எழுத்து எதிர்ப் பதிவாக இருக்க வேண்டுமேயொழிய எதிர் வாதமாக இரு குழுக்களாக நண்பர்களைப் பிரிப்பதாக வேண்டாமே.
ஒருவரின் கருத்துக்கு மாறாக பேசும் போது, எழுதும் போது கருத்துக்களை மட்டுமே விமர்சியுங்கள்; தனிமனிதர்களையல்ல. தவிர, உங்களின் எழுத்து எதிர்ப் பதிவாக இருக்க வேண்டுமேயொழிய எதிர் வாதமாக இரு குழுக்களாக நண்பர்களைப் பிரிப்பதாக வேண்டாமே.
ஒருவரின் கருத்துக்கு மாறாக பேசும் போது, எழுதும் போது கருத்துக்களை மட்டுமே விமர்சியுங்கள்; தனிமனிதர்களையல்ல. தவிர, உங்களின் எழுத்து எதிர்ப் பதிவாக இருக்க வேண்டுமேயொழிய எதிர் வாதமாக இரு குழுக்களாக நண்பர்களைப் பிரிப்பதாக வேண்டாமே.
ஒருவரின் கருத்துக்கு மாறாக பேசும் போது, எழுதும் போது கருத்துக்களை மட்டுமே விமர்சியுங்கள்; தனிமனிதர்களையல்ல. தவிர, உங்களின் எழுத்து எதிர்ப் பதிவாக இருக்க வேண்டுமேயொழிய எதிர் வாதமாக இரு குழுக்களாக நண்பர்களைப் பிரிப்பதாக வேண்டாமே.
ஒருவரின் கருத்துக்கு மாறாக பேசும் போது, எழுதும் போது கருத்துக்களை மட்டுமே விமர்சியுங்கள்; தனிமனிதர்களையல்ல. தவிர, உங்களின் எழுத்து எதிர்ப் பதிவாக இருக்க வேண்டுமேயொழிய எதிர் வாதமாக இரு குழுக்களாக நண்பர்களைப் பிரிப்பதாக வேண்டாமே. ஒருவரின் கருத்துக்கு மாறாக பேசும் போது, எழுதும் போது கருத்துக்களை மட்டுமே விமர்சியுங்கள்.தனி மனிதர்களையல்ல. தவிர, உங்களின் எழுத்து எதிர்ப் பதிவாக இருக்க வேண்டுமேயொழிய எதிர் வாதமாக இரு குழுக்களாக நண்பர்களைப் பிரிப்பதாக வேண்டாமே.
நல்லதொரு பதிவு தொகுப்பு - சினிமாவில் இருந்து பதிவுலக அரசியல் வரை எல்லாமே இருக்கு. :-)
இப்படியெல்லாம் கமென்ட் போடலாம்னு ஐடியா கொடுத்த "அப்துல்லாவுக்கு ஒரு சலாம்".
மிகவும் நன்றாக இருந்தது. நல்லதொரு கருத்துகள் எப்போதும் வரவேற்கபடும். இலவசம் உங்களுக்குத் தேவையில்லாததாக இருக்கலாம், இருப்பினும் அதை வாங்கி வேறு ஒருவருக்கு பயன்படும்படி தந்து இருக்கலாம்.
நல்லதொரு பதிவு.
:))))
கருத்து சொல்பவரை பிரித்து கருத்தை மட்டும் எதிர்க்க வேண்டுமென்ற கருத்தில் உடன்படுகிறேன். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமாக எனக்கு தோன்றவில்லை.
நமக்கு ஒவ்வாத ஆட்களோடு ஏன் நேசம் பாராட்ட வேண்டும்? உலகம் ரொம்ப பெருசுங்க :)))
விஜய்க்கு நடிக்க வராது. ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் கல்லூரி மாணவனாக நடிப்பதில் என்ன பிரச்சினை? சச்சினில் எப்படி இருந்தார்? வேறு யாரு சரியா இருப்பாங்க?
ஆமீர்கானே வயதானவராக த்தான் இருந்தார். நல்ல நடிப்பு என்பது வேறு விஷயம்
பின்ன எப்படி சொல்றது !! பதிவு மிக்ஸ் சூப்பர்!!!!!!!!!!!!!!
//கல்லூரிப் பெண்கள் என்றாலே கடி ஜோக் சொல்ல மட்டுமே லாயக்கு என்னுமளவுக்கு வெறுப்பூட்டும் கல்லூரிப் பக்கங்கள்//
அவங்களுக்கு, கல்லூரி பெண்கள் படம் போட்டு, ஆண்களையும் பெண்கள் பத்திரிக்கையை வாங்கவைக்கணும். அதுக்காகத்தான், கொஞ்சம் கடி ஜோக்கை போட்டுட்டு, கல்லூரி பெண்கள் படத்தை அரை பக்கத்துக்கு போட்டுடுவாங்க விக்கி
எங்க ஆஃபிஸ்லயும் முதல்ல இந்த பாட்டு சிஸ்டம் இருந்தது. ஆனா பிரச்னை என்னன்னா, ஒரு டீம்ல இருந்து ஒருத்தர் புது பாடல்களின் சிடி கொண்டுபோய் கொடுத்து ப்ளே பண்ண சொல்வார், இன்னொரு டீம்ல இருந்து இன்னொருத்தர் எம்.எஸ்.வி ஹிட்ஸ் சிடி கொடுத்து ப்ளே பண்ண சொல்வார். இந்த பிரச்னையை தவிர்க்க நிர்வாகம், கொஞ்ச நாள் வெறும் இன்ஸ்ட்ருமெண்டல் சிடியை போட்டு, அலுவலகத்தை ஒரு சரவணா ஸ்டோர்ஸ் எஃபெக்ட்டுக்கு கொண்டு வந்து, கடைசியில அந்த ஐடியாவையே ட்ராப் பண்ணிட்டாங்க :(
//ஒருவரின் கருத்துக்கு மாறாக பேசும் போது, எழுதும் போது கருத்துக்களை மட்டுமே விமர்சியுங்கள்; தனிமனிதர்களையல்ல//
ஹுக்கும்...சொன்னா யாரு கேக்கப்போறாங்க?... :(
//டாக்டர்.விஜய் அவர்கள் என்ஜீனியர் காலேஜ் ஸ்டூடண்ட்டா வர்ற கொடுமையை நாம சகிச்சிக்கணும்னு தலைல எழுதிருக்கும் போது நாமென்ன பண்ண முடியும்?)//
இந்த அநியாயத்தை தட்டி கேக்க யாருமில்லையா?????.......யாரது, இப்படி கண்கள் சிவக்க கோபத்தோட வர்றது, கேப்டனா?.....ஓ நீங்களா? என்னன்னு கேளுங்க சகா ;))
45 வயசுல அமீர்கான் காலேஜ் ஸ்டூடண்டா நடிச்சா ஏத்துப்பீங்க, 35 வயசுல விஜய் நடிச்சார்னா......ஸாரி, நடிக்க ட்ரை பண்ணார்னா ஏத்துக்க மாட்டீங்களா?.... :)
//யோகி எனக்கு ஏதாவது செய்ய நினைத்து தமிழகத்தில் தெரிந்தவர்களிடம் விபரம் கேட்டு முன்னணி (விற்பனையில்) தமிழ் பெண்கள் இதழொன்றை சப்ஸ்க்ரைப் செய்திருந்தார். ஒருமுறை அதைப் பார்த்ததோடு சரி. அதற்குப் பின் ஒரு வருடத்திற்கு அப்புத்தகங்கள் வீணாக எங்கள் புத்தக அலமாரியை அடைத்துக் கொண்டிருந்தன.//
//எனது இந்த வெறுப்பை அறிந்தும் அம்மா தொடர்ந்து ஒரு வருடமாக “குமுதம்-சிநேகிதி” வாசிக்க சொன்னார். வேண்டா வெறுப்போடும், அம்மாவின் மீதான மரியாதையின் காரணமாகவும் போன வாரம் வாங்கி வந்தேன். வாங்கி வந்ததற்கு உள்ளே என்ன தான் இருக்கிறதெனப் பார்க்கலாமெனப் புரட்டினேன். முடித்து விட்டுத் தான் கீழே வைத்தேன். நான் அபத்தம் என நினைக்கும் விஷயங்கள் இல்லை. தவிர பயனுள்ள பல விஷயங்கள். ரொம்பவே பிடித்து விட்டது.//
போன இடத்திலும் அம்மாவையே நினைத்து கொண்டு இருக்கிறீர்களா மக்கா..
அம்மாவிற்கு உங்கள் ரசனை,விருப்பு தெரியும்.யோகியைவிட அம்மா உங்களுடன் கூடுதலாக இருந்ததால்.இதில் எனக்கு வியப்பு ஒன்றுமில்லை.இங்கு யோகியின் அன்புதான் மிக நெகிழ வைப்பதாக இருக்கிறது.சந்தோசமாக இருக்கிறது.
hats off mr.yogi!
//எனக்கு சமீபத்தில் ஒரு எதிர்ப் பதிவு அதிக கவனத்தை ஈர்த்து வியக்க வைத்தது//
சுட்டி கொடுக்காவிட்டாலும்,அது நேசன் என யூகம்.
வண்ணதாசன்-அம்மா தேர்ந்த குமுதம் சினேகிதி போல்.வாசித்து கொண்டே இருப்பீர்கள்.
//நிஜமாகவே எது நடந்து விடக் கூடாது என அஞ்சினேனோ அது நடந்து விட்ட சோகம்.//
கார்க்கியின் பின்னூட்டம் நாளை பார்ப்பது வரையில் என்னை பிழைக்க வைடா கடவுளே. :-)
hi
am the 10th....
(sorry na pakumpothu 9commentsthane eruntchu...)
enaku vanathasan tamil vida
unga tamilthan rumba pidikum...
evlo oru thilivana padivu..
therkkamana varigal..
tholiathora parvai...
eppadi eagapathu entha padivila eruku..
ice ellam vaikala chinatha oru poi.but whatever above is true.
(konjam englishla weeku..)
nandri
valga valamudan.
v.v.s.
Complan surya
நீங்கள் சொன்ன வன்னதாசனின் "கடிகாரம் எண்ணிக் கொண்டிருக்கிறது" தேடிக் கொண்டிருக்கிறேன்.. இந்த வார பதிவர் சந்திப்பில் டிஸ்கவரி புக்லேன்டில் கிடைக்கும் என நினைக்கிறேன்.
யோகிய சீக்கிரமே நம்ம கிளப் மெம்பரா சேரச் சொல்லுங்க.
இப்படிக்கு
வகை தொகையின்றி டாக்டர்ர்ர்ரை கலாய்ப்போர் சங்கம்:)
மனதிற்குள் ஒன்று நினைத்துக் கொண்டு சொல்லாமல் வந்து விட்டேன். (வேலை செய்பவர்களுக்காகப் பாடலென்றால் அவசியம் ஷாப் ஃப்ளோரில் தானே இருக்க வேண்டும். நாற்காலியில் கம்ப்யூட்டரை வெறித்துக் கொண்டு தூங்குபவர்களுக்கு எதற்கு)
நீங்களும் அந்த ரகம் தான . அதான் சொல்லாம மனசில நினச்சிட்டிங்க ............
////////////V.Radhakrishnan said...
மிகவும் நன்றாக இருந்தது. நல்லதொரு கருத்துகள் எப்போதும் வரவேற்கபடும். இலவசம் உங்களுக்குத் தேவையில்லாததாக இருக்கலாம், இருப்பினும் அதை வாங்கி வேறு ஒருவருக்கு பயன்படும்படி தந்து இருக்கலாம். /////////////
சரியாக சொல்லியிருக்கீங்க . இது அனைவரும் சற்று சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் . இலவசம் என்ற ஒன்றை நாம் வாங்காமல் மறுப்பதால் யாரும் அதை நிறுத்திவிடப் போவதில்லை . நாம் வாங்காத அந்த இலவசத்தை யாரேனும் ஒருவர் நிச்சயம் வாங்கியே தீருவார் . தங்களுக்கு இலவசத்தின் மீது விருப்பம் இல்லை என்றாலும் எத்தனையோ பெருக்கு அந்த இலவசம் மட்டுமே அவர்களின் வாழ்க்கையின் உயிர் நாடியாக உள்ளது இன்றும் . என்ன பண்ணுவது நாம் இருப்பது இந்தியதிருநாடாச்சே !
பல விசயங்களை பற்றி நிறைய சொல்லி இருக்கீங்க .
பகிர்வுக்கு நன்றி !
நல்ல தொகுப்பு. வண்ண தாசன் பத்தி எழுதும் பாராவில் உங்கள் தமிழே கொஞ்சம் இலக்கிய தரமா போகுது!!
நல்ல HR பாலிஸி. கண்டிப்பாய் பலனிருக்கும் என நினைக்கிறேன்.
நான் கொஞ்சம் ரிவர்ஸ். வண்ணதாசனை அவருடைய கவிதை தொகுப்பு வழியாய் படிக்க ஆரம்பித்தேன். அவருடைய கதைகளை படிக்கும் ஆவலை தூண்டுறீங்க விக்கி. :)
நல்லதொரு தொகுப்பு
//வாங்கும் போது 30 வகை ரொட்டி என இலவச இணைப்பைக் கடை பையன் நீட்ட, வேண்டாம் என மறுத்து விட்டு வந்தேன்//
அட.. ரொட்டி போச்சே :-)
//புத்தகத்தில் தரம் இருப்பதாக நம்புபவர்களுக்கு எதற்கு இந்த இலவச இணைப்புகள் என்பதென் எண்ணம். //
போட்டி நிறைந்த உலகில், இதுபோன்ற இலவசம் தேவைப்படத்தானே செய்கிறது.
நல்ல தொகுப்பு.
///@கார்க்கி........,,,,,,
விஜய்க்கு நடிக்க வராது////
என்ன தளபதி நீங்களே இப்படி சொல்லிபுட்டீங்க..
\\\கல்லூரி மாணவனாக நடிப்பதில் என்ன பிரச்சினை? சச்சினில் எப்படி இருந்தார்? வேறு யாரு சரியா இருப்பாங்க?\\\
ஆமா அண்ணே..அந்த படத்துல வடிவேலு கூட கல்லூரி மாணவனாக அசத்தி இருப்பார்..
:-)))
கலக்கல்
// நாற்காலியில் கம்ப்யூட்டரை வெறித்துக் கொண்டு தூங்குபவர்களுக்கு எதற்கு //
அப்பப்போ உங்களப் பத்தின உண்மைய வேற எழுதிடறீங்க..
வாங்க சிபி. இங்கே எல்லா கடைகளிலும் கிடைக்கும்ங்க. ஆமா, உங்க பின்னூட்டம் எப்படி நேசமித்திரன் பின்னூட்டத்துக்கு முன்னாடி போச்சு?
ஆமா நேசமித்திரன். நல்லதொரு வாசிப்பு அனுபவம் அது. நன்றி.
சரியா சொன்னீங்க வித்தியாசமான கடவுள்.
என்ன ரகசியங்களோ போங்க.
நமக்கேதுங்க ரசனையெல்லாம்...
இதுவும் பாயிண்ட்டு. பலரையும் சகிச்சிட்டோம். கூடவே டாக்டரையும் சகிப்போம்.
ஆஹா, என் தமிழைக் குறி வெச்சுட்டீங்களா...
விளாசவெல்லாம் இல்லைங்க தராசு. உண்மையைச் சொன்னேன்.
இல்லைங்க, நான் கேட்ட இடத்தில் இருந்தது வானொலி.
கார்க்கிக்கெல்லாம் பயந்து தொழில் நடத்த முடியுமா...
வாங்க துபாய் ராஜா. ரொம்ப நாளா ஆளைக் காணோம். எப்படி இருக்கீங்க.
ஆமா வெயிலான். மூழ்கிக் கொண்டிருக்கிறேன் அவர் எழுத்தில்.
அப்துல்லா, என்னங்க பின்னூட்டம் இது. நன்றி.
நன்றி சித்ரா.
வாங்க ஜெரி.
நன்றி ராதாகிருஷ்ணன். இலவசம் என்பதல்ல என் கேள்வி. பெண்கள் என்றாலே சமையல் குறிப்பு கொடுப்பது தான் வெறுப்பாக உள்ளது.
நன்றி சுசி.
உங்களுக்கு எளிதல்ல தான் கார்க்கி.
ஒவ்வாத ஆட்கள்ன்னு ஏன் இருக்க வேண்டும். நேசம் உலகத்தை விடப் பெருசுங்க.
சச்சின் 4 வருஷத்துக்கு முன்னாடி. படம் வரட்டும். அப்புறம் பார்ப்போம்.
அமீர் கூட விஜய் கம்பேரிசனெல்லாம் வேண்டாம்ங்க. எந்த விஷயத்திலேயும் ஒத்துப் போகாது.
நன்றி ஜெய்லானி.
ஓ, தொழில் யுத்தியா ரகு...
அதுக்குத் தான் நான் கேட்ட இடத்தில் கே.எல்.ரேடியோ ஒலிபரப்பினார்கள்.
கேக்கலைன்னாலும் சொல்றது நம்ம கடமை. ஓட்டுப் போடுற மாதிரி.
ரகு, சகா உங்களை வந்து நாலு சாத்தப் போறார்.
நடிச்சா ஏத்துக்கலாம் ரகு. ஆனா அவர் எங்கே அதைப் பண்றார்...
எனக்கும் யோகியை நினைத்து மகிழ்ச்சியும் பெருமையும் தான் மாம்ஸ்.
உங்களுக்கு நேசன் எனத் தெரியாவிட்டால் எப்படி...
ஆமாம் மாம்ஸ், வண்ணதாசன் இதமாக மனம் தொட்டுச் செல்கிறார்.
ஆஹா... கார்க்கிக்கு இவ்ளோ பயமா...
நன்றி சூர்யா.
கடிகாரம் எண்ணிக் கொண்டிருக்கிறது - அ.முத்துலிங்கம் எழுதியது புலிகேசி. எளிதாய்க் கிடைக்குமே.
சேர்த்துக்கோங்க வித்யா. டெல்லி கிளைல.
இருக்கலாம் தங்கோ.
இலவசம் என்ற கருத்திற்கு நான் வரவில்லை சங்கர். பெண்களை சமையல் என முடித்து விடுவது தவறு என்று தான் சொல்ல வந்தேன்.
நன்றி சங்கர்.
நன்றி மோகன் குமார்.
ஆமா சிவா. பலனிருக்காம்.
அவசியம் வாசிங்க சிவா. தொலைஞ்சு போய்டுவீங்க கதைகளுக்குள்.
நன்றி அமித்து அம்மா.
வாங்க உழவன்.
இருக்கலாம் உழவன். இதுவும் ஒரு வியாபார யுக்தி தானே. நன்றி.
அந்த படத்துல வடிவேலு கூட கல்லூரி மாணவனாக அசத்தி இருப்பார்.. //
அன்பு.... :)
நன்றி குமார்.
நான் தூங்க மாட்டேன் சாமி. வெறிச்சுட்டு வேணும்னா உக்காந்திருப்பேன்.
//நிஜமாகவே எது நடந்து விடக் கூடாது என அஞ்சினேனோ அது நடந்து விட்ட சோகம்.//
நானும் கேள்விப்பட்டேன். என்ன கொடுமை நடந்தாலும் நாம அந்தப்படமெல்லாம் பாக்கத்தானே செய்யறோம் விக்கி :)
அப்படியே தேவதை இதழையும் வாசியுங்கள்... நீங்கள் எழுதினால் சர்குலேஷன் எகிறும் போலத் தெரிகிறது...
தொகுப்பு அருமை.
நல்லதொரு தொகுப்பு! நைஸ்!!!
ஆரம்பிச்சிட்டிங்க. இனிமேல்
பெண்கள்பத்திரிக்கைகளை
நிறுத்தமுடியாது.
அலுவலகத்தில் இசை.
ஆனால் எல்லாருக்கும்
பிடித்த இசை இனிமேல்தான்
உருவாக்கப் படவேண்டும்.
year ending tension
அனுபவித்தால் தான் தெரியும்.
வண்ணதாசன் கூட
கல்யாண்ஜியும் வாசிங்க.
பதிவுலக golden rule
சொல்லிருக்கீங்க.
மத்த 2 Idiots யார்யார்?
மிக அழகாய் சொல்லியிருக்கின்றீர்கள். வேலை டென்சன் குறித்த கருத்துக்கள் அட்டகாசம். இப்படி பிலிம் காட்டுற பார்ட்டிகள் ஏராளம். நன்றி
முதல் பகுதியின் முதல் பாராவுக்கு ஆமாம் போடுவதற்குள் அதே பகுதியில் டிவிஸ்டாக 'சிநேகிதி'யை புகழ்ந்துவைத்திருக்கிறீர்கள். :-)
வண்ணதாசன் ஒரு பிரமிப்பு.
நீங்கள் மறைமுகமாக குறிப்பிடும் பெண் பத்திரிகையில் பெண்கள் சுயமாக வாழ,தன்னம்பிகை தரும் கட்டுரைகளும் ,கவர் ஸ்டோரி,நேர்காணல்களும் எத்தனை வந்துள்ளன தெரியுமா உங்களுக்கு?
ரகு said...
//கல்லூரிப் பெண்கள் என்றாலே கடி ஜோக் சொல்ல மட்டுமே லாயக்கு என்னுமளவுக்கு வெறுப்பூட்டும் கல்லூரிப் பக்கங்கள்//
//அவங்களுக்கு, கல்லூரி பெண்கள் படம் போட்டு, ஆண்களையும் பெண்கள் பத்திரிக்கையை வாங்கவைக்கணும். அதுக்காகத்தான், கொஞ்சம் கடி ஜோக்கை போட்டுட்டு, கல்லூரி பெண்கள் படத்தை அரை பக்கத்துக்கு போட்டுடுவாங்க விக்கி//
அவர்கள் கல்லூரி பெண்களின் அரைகுறை டிரஸ் உடன் படம் போடுவதில்லை . வெறும் கடி ஜோக் மட்டும் போடுவதில்லை . அனைத்து talent
வெளிபடுத்தும் வண்ணமாக ஒரு களமாக அப்பத்திரிக்கை இருக்கிறது
Post a Comment