சைனீஸ் உணவுகளை நல்ல சைனீஸ் ரெஸ்டாரண்ட்டில் சுவைத்திருக்கிறீர்களா...
ஆம் எனில் நிச்சயம் நீங்கள் சைனீஸ் காதலராக இருக்க வேண்டும். என் ஆல் டைம் ஃபேவரிட் சைனீஸ் தான். உலகின் டாப் 10 உணவுகளில் ஒன்றாக இருக்கும் சைனீஸ் ஃபுட்டை போதுமான அளவில் சப்புக் கொட்டும் சுவையில் அளிக்கும் Yo!China (யோ சைனா) தான் இந்த மாத ரெஸ்டாரண்ட். ரொம்ப நாளா பலரின் (குறிப்பாக கார்க்கி மற்றும் S.K.(குமார்)) வயித்தெரிச்சலால் நின்று போன இப்பதிவு இனி ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக வரும். நல்ல சாப்பாடை அடையாளம் காட்டாம நாம மட்டும் கொட்டிக்குறது நல்லதில்ல. :)
இது பொதுவாக டெல்லியின் பெரிய மால்களிலும் முக்கிய ஷாப்பிங் ஏரியாக்களிலும் அமைக்கப்பட்டிருப்பதால் உணவுப் பிரியர்கள் கூட்டம் எப்போதும் உண்டு. வார நாட்களில் எளிதாகவும், வாரயிறுதி நாட்களில் அரை மணி நேர காத்திருப்பிற்குப் பின்னும் உள்ளே இடம் கிடைக்கும்.
எப்போது நீங்கள் இங்கு முதல் முறை செல்கிறீர்களோ அப்போது முழு சாப்பாடும் (சைனீஸ் சாப்பாடு), அடுத்தடுத்த முறைகளில் வெவ்வேறு அயிட்டங்களும் முயற்சிக்கலாம். உங்கள் ஆர்டர் வரும் வரை பக்கத்து டேபிளைப் பார்த்து ஜொள்ளு விடக் கூடாது. ;)
இனி மெனு.
இது முதலில் நானும் யோகியும் மட்டும் போன போது கொட்டிக்கிட்டது.
Starter - ஹனி சில்லி பொடேடோ (Honey Chilli Potato)
இதை நீங்கள் வேறு இடங்களிலும் சுவைத்திருக்கலாம். ஆனால் யோ சைனாவின் ஹனி சில்லி பொடேடோவின் முதல் பீஸை வாயில் வைக்கும் போது “வாவ்” என சொல்வதை மறுக்க முடியாது.
Main Course - வெஜ் சாப்ஸி (Veg Chopusey)
குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவாக இது நிச்சயம் அமையும். லேசான புளிப்பு கலந்த இனிப்புடன் கூடிய சாஸுடன் மொறுமொறுப்பான சாப்ஸியை ஃபோர்க்கால் எடுத்து சாப்பிடுவதே ஒரு கலை தான். இதில் நான் சாப் ஸ்டிக்ஸ் (Chopsticks) வைத்து வேறு முயற்சித்தேன்.
Main Course - சைனீஸ் வெஜ் மீல் (Chinese Veg Meal)
வயிறு நிறையுமளவான யம்மி சாப்பாடு இது. ஸ்டார்ட்டரில் ஆரம்பித்து, நூடுல்ஸ், வெஜ் ஃப்ரைட் ரைஸ் எனத் தொடர்ந்து இறுதியாக கூல்ட்ரிங்க் வரை பரிமாறப்படுகிறது.
ஸ்டார்ட்டர் (Starter) - 1 வெஜ் திம்ஸம், 1 சிறிய வெஜ் ரோலுடன். (1 Veg. Dimsam and a small Veg. Roll)
மெயின் கோர்ஸ் (Main Course) - வெஜ் ஃப்ரைட் ரைஸ் வித் வெஜ் மன்சூரியன் அண்ட் வெஜ் நூடுல்ஸ் வித் சாஸ். (Veg. Fried Rice with Veg. Manchurian and Veg. Noodles with Sauce)
பிவரேஜ் (Beverage) - கோக் (Coke).
மீல்ஸை சாப் ஸ்டிக்ஸால் முயற்சிக்கும் யோகி.
அடுத்த முறை அம்மா, அப்பா, யோகி மற்றும் என் தோழியுடன் போன போது மொக்கிக்கிட்டவை கீழே.
Veg. Schezwan Mushroom Dimsum
இந்த முறை ஸ்டார்ட்டரில் வெஜ் திம்ஸமிர்க்குப் பதிலாக வெஜ் ஸ்கூஸ்வன் மஷ்ரூம் திம்ஸம். கண்ணிலும் நாவிலும் நீர் வர வைக்குமளவு காரத்துடன் சூப்பர் சுவை. இது முடித்ததும் எப்போவும் சாப்பிடும் வெஜ் திம்ஸமும் நினைவு வர இதைத் தொடர்ந்து அதுவும்.
Veg. Dimsum and Honey Chilli Potato (All Time Favourites)
ஒரு அசட்டு சிரிப்புடன் ரெகுலர் அயிட்டங்களான வெஜ் திம்ஸம், ஹனி சில்லி பொடேடோ கேட்க யோகியால் ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்டது.
Veg. Fried Rice
ஸ்டார்ட்டர் முடிக்கும் முன் மெயின் கோர்ஸும் வந்தது. அன்று நூடுல்ஸ் சாப்பிடும் மூட் இல்லாததால் நேரே வெஜ். ஃப்ரைட் ரைஸ்.
Veg. Manchurian
யோ சைனா போய் வெஜ்.மன்சூரியன் சாப்பிடாமல் வந்தால் பாவம் என்பதால் ரைஸுடன் வெஜ். மன்சூரியன். ஆஹா... நினைக்கும் போதே நீர் ஊறுகிறது நாவில். அவ்வளவு சுவை. சாஃப்ட் மன்சூரியன் பால்ஸ். இந்த மன்சூரியன் பால்ஸ் சரியாக வெந்தும், கருகிவிடாமலும் இருப்பது கலை. அந்தக் கலை எப்போதும் கைவரப் பெற்றவர்கள் யோ சைனா குக்குகள்.
Mix Vegetable Curry
ஹிஹிஹி.... கடைசியா இது பேரு மட்டும் மறந்து போச்சு. இருநூறு ரூபாய்க்கு அளவு ரொம்பக் குறைவு என யோகி குறை பட்டுக் கொண்டார். நமக்கெதுக்கு அந்தக் கவலையெல்லாம். நான் நல்லா மொக்கினேன். இதுவும் செம டேஸ்ட். பேபி கார்ன், பீன்ஸ், கேப்ஸிகமெல்லாம் அரை வேக்காட்டில் சமைக்கப்பட்டு சைனீஸ் மசாலாக்கள் தூவப்பட்டுப் பறிமாரப்பட்ட இதை விலையை மறந்து உண்டால் நிச்சயம் ரசிக்கலாம். சிஸ்லர் டேஸ்டில் இருந்தது.
இவ்வளவும் சாப்பிட்டு விட்டுக் கடைசியாக டெசர்ட்டிற்கு (Dessert) வயிற்றில் இடமில்லாததால் அதை அடுத்த நாள் கோட்டாவிற்கு யோகியிடம் பேசி சரி பண்ணிவிட்டு வந்துவிட்டேன்.
ரெஸ்டாரண்ட் நல்ல சுத்தமாகவும், உணவுகள் நல்ல சுகாதாரமாகவும் உள்ளன. ஒரு ரெஸ்டாரண்டில் முக்கிய விஷயம் கிச்சன் மணம் வாடிக்கையாளர் மூக்கைத் தொடாமலிருப்பது தான். அந்த வகையில் யோ சைனாவின் சுத்தத்திற்கு 90% தாராளமாகத் தரலாம்.
இன்னும் தமிழ்நாட்டில் யோ சைனா வரவில்லை. வெளியில் இருக்கும் நம் மக்கள் அவசியம் ஒரு முறை சென்று வாருங்கள். கண்டிப்பாக எனக்கு நன்றி கூறுவீர்கள். ;) மாத முதல் நாள் தவிர மற்ற நாட்களில் பார்ட்டிக்கு இங்கே செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
நானும் யோகியும் மட்டும் சென்ற பொழுது 600 ரூபாயும், அடுத்த முறை சென்ற போது 800 ரூபாயும் பில் ஆகியது.
சைனீஸ் பார்த்து வயிறெரிஞ்சவங்க, கொட்டிக்கிட்டவங்க, கொட்டிக்கப் ப்ளான் பண்ணவங்க எல்லாரும் அப்படியே ஒரு ‘யூ’ டர்ன் எடுத்து இந்தப் பக்கமும் போய் பஞ்சாபி சாப்பாடை வாசனை பிடிச்சிட்டு வாங்க. வித்யாவின் சாப்பாட்டுப் பரிந்துரைகள் எப்போதுமே தவறியதில்லை. விரலை சப்புக் கொட்டிக்கிட்டு இருந்தப்போ ஃபோன் பண்ணா கூட எடுக்க மாட்டேங்குறாங்க. அவ்வளவு டேஸ்டாம் தேசி ரசோயில்.
51 comments:
மைக் டெஸ்டிங்..மைக் டெஸ்டிங்...
விக்ணேஷ்வரியின் டயட் கன்சல்டண்ட் ராமன் குட்டி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...
சைனீஸ் வகை எல்லாமே அரை வேக்காடா இருக்குமே..
ஒரு கவிதை தோணுது.. வேணாம் விட்டுடலாம்
ம்ம் நாங்க எல்லாம் நைஜீரியாவில் இருந்து மெனு போட ஆரம்பிச்சா பூமி தாங்காதுங்க... ( வயித்தெரிச்சலை எப்டி எல்லாம் தீர்த்துக்க வேண்டி இருக்கு பா.ரா அண்ணே :( )
ருசித்து எழுதி இருக்கிறீர்கள் இடு பொருட்கள் பற்றி விவரித்தால் மக்களுக்கு இன்னும் உபயோகமாக இருக்கலாம்
நல்ல அறிமுகங்கள்
பார்த்திபன் கவிதை தானே கார்க்கி..?
சீன ரெஸ்டாரண்டில் மண் சட்டியில் சமைத்த, (சூடான) வெஜ் கறி ஐட்டம் ஒன்னு (பேரு மறந்து போச்) சாப்பிட்டிருக்கேன்.......ருசியாக இருக்கும்.
கவிதையோனு நினைச்சு பயந்துட்டே வந்தேன்..... :)
தண்ணியும், உப்பும் கலந்த பழைய சோற்றின் சுவைக்கு இந்தப் பாண்டிய நாடே அடிமை.
// Yo!China (யோ சைனா)//
மேடம் உண்மையா சொல்லுங்க எவ்வளவு துட்டு வாங்கினிங்க
படங்களுடன் ருசித்து எழுதியது நல்லா இருக்கு. நானும் என்னவரும் வெளியில் சாப்பிட தோன்றினால் அதிகம் நாடுவது, சைனீஸ் ரெஸ்டாரண்தான். உண்மையிலே உலக மக்கள் அதிகம்விரும்பி சாப்பிடுவது சைனீஸ் சாப்பாட்டைதான்.
வெஜ் திம்ஸமிர்க்குப் பதிலாக வெஜ் ஸ்கூஸ்வன் மஷ்ரூம் திம்ஸம்
சாஃப்ட் மன்சூரியன் பால்ஸ்.//
வாய்ல நுழையிற அயிட்டத்துக்கெல்லாம் இப்பிடி வாய்ல நுழையாத பேர் வச்சுருக்கானுங்க...
ஆமா சைனிஸ் ரெஸ்ட்டாரண்ட் போயி வெஜ் சாப்பிட்டே இப்படியின்னா நான்வெஜ் பத்தி இன்னா சொல்லறது. நாங்களும் பெங்களூரு Yo!China போயி பர்ஸ் இளச்சு வந்தமுங்கோ.
rightu..
//தமிழ்நாட்டில் யோ சைனா வரவில்லை.//
கர்நாடகாவுக்கு:)?
அடிக்கடி சைனீஸ் ரெஸ்ட்ராண்ட் போவதுண்டு. ஆனால் ஹனி சில்லி பொடேடோ இப்பதான் கேள்விப் படுகிறேன்.
சைனீஸாஆ.. அடுத்த தடவை மறக்காம என்னையும் கூட்டிட்டுப் போங்க விக்னேஷ்வரி :)))))
Very nice review..... Enjoy!
mmm... pasikutheee:-(
குட் ரிவ்யூ:)
பசி கொண்ட வேளையில்...
தாளிக்கும் சத்தம் சங்கீதம்!
ஹலோஓ..
என்னது இது.. சாப்பிட்ட மட்டும் பரவ இல்லை... இதுல படம் வேற..
எனக்கு எப்போதுமே வெஜ் நூட்லஸ் அதுவும் இந்த சீனா நூடுல் ரொம்ப புடிக்கும். அப்போ அப்போ அது தான் எனக்கு சாப்பாடும் கூட.
ரொம்ப நல்லா இருக்கு.. ஆன இதுக்கு நிச்சயம் ஒரு எதிர் வினை வரும் அம்புடுதேன். :)
ithula koottu sathi vera .. nadakattum
அப்டி பார்சல் பண்ணீருங்க அம்மிணி....
நைனா ...யோ நைனா...சீ ....யோ சீனா இட்டுகினு போ....
//மீல்ஸை சாப் ஸ்டிக்ஸால் முயற்சிக்கும் யோகி.//
பக்கத்துல ஒரு ஸ்டீல் துதிக்கை வந்து விழுதே...அது உங்களோடது தானே?
நல்லாருங்கையா...யோவ்.
வேற என்ன செய்யட்டும்,நேசா? :-)
ஏங்க... என்னாங்க...
கடுப்பேத்துரான் my lord...
சைனா என்னதான் நம்ம கிட்ட வம்புக்கு நின்னாலும் நமக்கு பக்கத்து நாடு. இப்டி யோ சைனா அப்டின்னு கூப்புடுறது நல்லதில்ல.
அப்பறம் ஒரு முக்கியமான விசயம். இந்தியால சைனீஸ் உணவுண்ணு சொல்றதயெல்லாம் சாப்புட்டுட்டு அதுதான் சைனீஸ் உணவுகள் அப்டின்னு ஒரு தப்பான முடிவுக்கு வந்துறாதிங்க. அது சைனீஸ் ஃபுட்ஸோட இண்டியன் வெர்ஷன்.
தென்கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து இங்க எல்லாம் சீனர்கள் வசிக்கிறாங்க. இந்த நாடுகள்ல எல்லாம் யோ சீனால சாப்புட்ட மாதிரியான உணவு வகைகள் இருக்காது.
தென் கிழக்காசிய நாடுகளில் கிடைக்கும் உணவு வகைகள் போல சீனா, தைவான் நாடுகளில் இருக்காது.
( வாய்ல வைக்க முடியாது)
இங்க சைனீஸ் வெஜிடேரியன்ல கூட கட்டாயம் முட்டை இருக்கும். ( நீங்க வெஜிடேரியனா? ஒரு நான் வெஜ் கூட உங்க லிஸ்ட்ல இல்ல?)
//வித்யா said...
குட் ரிவ்யூ:)
//
ரைட்டு.. கூட்டு போட்டு பதிவு போட்டு குட் வேறயா?
எஸ்.கே. இந்த சதியை முறியடிப்பொம் சகா.
நாளைக்கு நான் டாஸ்மாக் பத்தி எழுதறேன். நீங்க ஜெர்மன் வைனை பத்தி எழுதுங்க
அப்படியே ஜொள்ளு ஊத்துதுங்க...:))
ஸ்ரப்..ச்லப்..ரைட்டுங்க. யோ சைனா வாங்கப்பா சீக்கிறம்..:)))
//பக்கத்து டேபிளைப் பார்த்து ஜொள்ளு விடக் கூடாது//
டேபிளை ஏன் பாக்கறோம், டேபிளில் இருப்பவர்களை பார்க்கலாம்ல? ;)
//Schezwan Mushroom Dimsum//
பேரைச் சொல்றீங்களா, இல்ல, மந்திரவாதி மாதிரி ஏதாவது மந்திரம் சொல்றீங்களா
//இருநூறு ரூபாய்க்கு அளவு ரொம்பக் குறைவு என யோகி குறை பட்டுக் கொண்டார். நமக்கெதுக்கு அந்தக் கவலையெல்லாம்//
அதானே :)
வி & வி புதுசா கூட்டணி அமைச்சிருக்கீங்க, சொல்லுங்க, "வி & வி ஃபுட்ஸ்"னு ஏதாவது ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கற திட்டம் இருக்கா :)
ஹனி சில்லி பொடேடோ ஃபோட்டோ பாக்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு. வேளச்சேரியில் ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்ட் இருக்கு. ஆனா இந்த சாப்ஸ்டிக்ஸ் பயத்தாலேயே நான் இதுவரைக்கும் ட்ரை பண்ணியதில்லை. அடுத்த வாரம் போய் பாத்துட்டு சொல்றேன் :)
இந்த பதிவு மட்டும் கேப்டன் கண்ணுல பட்டுதுன்னா, கண்ணு சிவக்க, "இந்தியன் என்று சொல்லடா, இட்லியை வாங்கி தின்னடா....ஆங்"ன்னு உறுமிடுவார்
கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க :)
ஏ அம்மா பாத்தே வயிறு நிறைஞ்சுடுச்சு.. ( இல்லன்னா ரங்கமணி பர்சில்ல காலியாகும் )
முன்னாடி தாய் ரெஸ்ட்ரண்ட் போயிருந்தோம் .. டிபரண்டா சாப்ப்டறது புடிக்கும் ..இன்னொருக்கா டிபரண்டா சாப்பிடனும்ன்னு நினைக்கிறப்ப இதை ஞாபகம் வச்சிக்கிறேன்..
எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.
படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html
மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.
நட்புடன்,
சே.குமார்.
இதுக்காகவே டெல்லி வரணும்போலிருக்கே
இங்க சிங்கப்பூர்-ல சைனீஸ் உணவுகளை பார்த்தாலே தலை தெறிக்க ஓடிருவோம்... :-)
உங்க பதிவையும், அதில் இருக்கற படங்களைப் பார்த்ததும்.....
என்ன சொல்ல பசிக்குது....
நான், ஸீஃபுட் ஃபிரைட் ரைஸ் + மிக்ஸ் ஃபிரைட் ரைஸ் + பொடாடோ ஃப்ரை தவிர வேறு எதுவும் சாப்பிடுவதில்லை. எலி வால் போல ஏதாவது போட்டுடுவாங்கலோன்னு பயம்.
வயறு எரியுது ....சென்னைல வந்து சீன உணவுகளை சாப்பிட்டு பாருங்க .. அப்பறம் தெரியும் எங்க வயறு ஏன் எரியுதுன்னு :(
அடேயப்பா பெரிய பதிவுதான் !
எப்படி இப்படி பொறுமையா உங்களால .....................
அப்படியே எனக்கு ஒரு பார்ஸல் ஆமா சொல்லிட்டேன் . நாங்கெல்லாம் ராவான ரவுடிக .மலையையே உருட்டுவோம்ல.............
////////////இன்னும் தமிழ்நாட்டில் யோ சைனா வரவில்லை. வெளியில் இருக்கும் நம் மக்கள் அவசியம் ஒரு முறை சென்று வாருங்கள். கண்டிப்பாக எனக்கு நன்றி கூறுவீர்கள். ;) மாத முதல் நாள் தவிர மற்ற நாட்களில் பார்ட்டிக்கு இங்கே செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
நானும் யோகியும் மட்டும் சென்ற பொழுது 600 ரூபாயும், அடுத்த முறை சென்ற போது 800 ரூபாயும் பில் ஆகியது. //////////
என்ன இது சின்னப்புள்ளத்தனமாவுல இருக்கு . ஒரு நாளைக்கு என்னை அங்கே கூட்டி போறீங்களா ?
அப்படி மட்டும் நடந்தது அங்கேயே நீங்க குறைந்தது ஒரு வருடம் மாவாட்டவேண்டியதிருக்கும் ஆமா சொல்லிட்டேன் .
மீண்டும் வருவான் பனித்துளி !
இந்தியாவிலும் இலங்கையிலும் கிடைக்கும் சைனீஸ் உணவு அவரவர் ருசிக்கேற்ப தயாரிக்கப்படுகிறது. சைனீஸ் சாப்பிட சைனீஸ் சாப்பாடு சாப்புடுறது கஷ்டம்ங்கோ.
இத டைப்பண்ணிட்டுத் தான் கொமன்ட்ஸ் பார்த்தேன். ஆம் ஜோசப் பால்ராஜ் சார் சொல்லுவது உண்மை. தாய்லாந்தில் கிடைக்கும் சைனீஸ்சாவது பரவாயில்லை. தாய்லாந்து டைச்சிருக்கும். ஆனால் மலேசியா சிங்கப்பூர் இந்தோனேசியாவில் கிடைக்கும் சைனீஸ்னா ரொம்ப கஷ்டம்ப்பா.
ஒரு முறை பிரான்சில் ஒரு சைனீஸ் ரெஸ்டோரன்ட் போனோம். அவங்க கூட பிரன்ச் சாப்பாட்டு ஸ்டைல் கொஞ்சம் மிக்ஸ் பண்ணி சமைச்சிருந்தாங்க. கொஞ்சம் இன்டியன் ஸ்டைலும் இருந்த மாதிரி இருந்துது.
அய்ய, சைனீஸ்ல போயி சைவம் சாப்டலாமா?????
frenchy fry kitaikathaa? :((
வெயிலான் said...
தல
தண்ணியும், உப்பும் கலந்த பழைய சோற்றின் சுவைக்கு இந்தசோழ நாடே அடிமை..........!
அப்படியே ..ஒரு சின்ன வெங்காயம்...ம்ம்ம்ம்ம்
இதுக்கு முன்னாடி..மத்ததெல்லாம் ம்கும்..!
ஒரு சைனாக் கம்பெனிக்காக ஒன்றரை ஆண்டுகள் வேலை பார்த்தோம். சோறு கிடைக்காத இடத்தில் ஒரு நாள் ஒரு வேலை இருந்தது. அன்று மதியம் அந்த சைனாக் கம்பெனி எங்களுக்குச் சோறு போட்டது. தொடுகறிகளோடு சேர்ந்த அரிசிச் சாப்பாடுதான். கிருஷ்ணன் என்றொரு நண்பர் பசிகாரணம் பந்திக்கு முந்திவிட்டார். பிந்திப் போன நான் அந்த சுவையான சாப்பாட்டைச் சுவைத்துக் கொண்டே கிருஷ்ணனின் தட்டைக் கவனித்தேன். அவர் முடிக்கும் தருவாயில் இருந்தார். "பீன்ஸ் பொறியல் நல்லா இருந்ததா, கிருஷ்ணன்?" இது நான். "சூப்பர்!" இது அவர். மேற்கொண்டு நான் ஒன்றும் சொல்லவில்லை.
மறுநாள் கிருஷ்ணனை எங்கள் குழுத் தலைவன் (சின்ன வயதுதான்) சூ(Xu) முன் கொண்டு நிறுத்தினேன். "What was that minced item mixed with the beans in yesterday lunch?" இது நான். "Chicken?" இது சூ. "Don't you know that some of our people are vegetarians?" நண்பர் கிருஷ்ணன் பாவம் ஒரு மரக்கறி ஐயர். "Vegetarian? What's that?" என்கிறான் சூ. அப்படி, சீனாக் காரனுக்கு vegetarianism இல்லவே இல்லை.
நீங்க சாப்பிட்டது 'இந்தியா-சீனா : பாஈ-பாஈ'
இங்க பெங்களூரில் எங்க வீட்டுக்கு பக்கத்துலயும் ஒரு யோ!சைனா இருக்கு.எப்போவும் கூட்டம் நிரம்பி வழியும்...:-)
நண்பரே நல்ல அறிமுகங்கள்
வாழ்த்துக்கள்............
உங்கள் தளத்திற்கு புதியவர் நான்...
வசதி இருக்கும் போது நம்ம பக்கமும் வர முயற்சியுங்கள்..
பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் இப்போது இப்பதிவு குறித்து தொடர்பதிவு எழுதிட கீழ்கண்ட 10 நண்பர்களை நட்புடன் அழைக்கின்றேன் உங்களின் காதல் நினைவுகளை மறைவின்றி இந்த தொடர் பதிவின் வாயிலாக பகிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
Cheena (சீனா)
கேபிள் சங்கர்
ஈரோடு கதிர்
Butterfly சூர்யா
இராகவன், நைஜிரியா
விக்னேஷ்வரி
சேட்டைக்காரன்
வெற்றி
பிரேமா மகள்
பிரவின்குமார்
நீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்.
http://wwwrasigancom.blogspot.com/2010/03/blog-post_23.html
ராமன் ஊர்ல இல்லாத நேரமாப் பார்த்து தான் பதிவு போட்டிருக்கேன் பூந்தளிர். ;)
கார்க்கி, நோ பப்ளிக் டேமேஜ்.
நைஜீரியாவின் நாய்க்கறியா நேசமித்திரன்? ;)
ம், நல்ல பாயிண்ட். அடுத்த பதிவில் இடு பொருட்களையும் நினைவில் கொள்கிறேன்.
பூந்தளிர், நோ நோ டேமேஜ்.
ருசியா இருந்ததுல அவ்ளோ தான் மேட்டர் சைவக் கொத்து பரோட்டா. நமக்கெதுக்கு பேரெல்லாம்.
பயப்படதீங்க வெயிலான்.
கண்டிப்பா பழைய சோறின் ருசி தனி தான். ஆனாலும் சாப்பாட்டுல வெரைட்டி ருசிச்சுப் பார்க்கணும்ங்க.
மங்குனி, என்னையும் உங்களை மாதிரி நினைச்சுட்டீங்களா? ;)
நன்றி ப்ரியா. யோ சைனாவையும் முயற்சித்துப் பாருங்கள்.
அது தான் சைனீஸ் ஸ்பெஷாலிட்டி வசந்த்.
ஓ, க்ரேட் தாமோதர். நான் வெஜ் ஐட்டமெல்லாம் எப்படி இருந்தது?
வாங்க கேபிள்.
ஆமா பெங்களூர்ல இருக்கு ராமலக்ஷ்மி. ஒரு முறை போய்ப் பாருங்க.
கண்டிப்பா சுசி. எப்போ இண்டியா வர்றீங்க...
வாங்க சித்ரா.
இப்போதைக்கு அம்மா சாப்பாடு கொட்டிக்கோங்க. நான் வரும் போது சைனீஸ் சாப்பிடலாம் ராஜி.
நன்றி வித்யா.
வாங்க சிபி.
ஹிஹிஹி.... ஸ்பெஷலா உங்களுக்குக்காகத் தான் குமார். எதிர்வினைக்குக் காத்திட்டிருக்கோம். நாங்களும் ஜெர்மன் சாப்பாடைத் தெரிஞ்சுக்க வேண்டாமா... கூட்டு சதியைத் தொடரலாமா...
பார்சல் பண்ணா நல்லாருக்காது Han!F R!fay. ஒரு முறை நைனாவை இட்டுக்கினு போக சொல்லி சாப்பிட்டுப் பாருங்க.
மாம்ஸ், இண்டியா வரும் போது நாம ஜமாய்ச்சிடலாம்.
வாங்க இந்திராகி சரவணன்.
வாங்க ஜோசப் பால்ராஜ். நானும் கேள்விப்பட்டிருக்கேன் உங்க ஊர் சைனீஸ் பத்தி. ஆனாலும் சைனீஸ்ல வெஜ் நல்லாருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். சைனால இருந்து என் கலீக் ஒருத்தர் இண்டியா வந்த போது இந்த ரெஸ்டாரண்ட் போயிருந்தோம். அப்போ அவர் சொன்னார் டிபிகல் சைனீஸ் டேஸ்ட் இருக்குன்னு.
ஹிஹிஹி.... உங்க பதிவுகளால நாங்க வயிறெரிய மாட்டோம் கார்க்கி.
வாங்க சங்கர்.
ரகு, ஆரம்பிச்சிட்டீங்களா உங்க ஜொள்ளை.... ஒரு முறை போய் சாப்பிட்டு வாங்க. நீங்களும் மந்திரம் சொல்வீங்க.
ஹிஹிஹி... எங்க கூட்டணில ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சா நாங்க சாப்பிட்டே காலி பண்ணிடுவோம். :)
சாப்ஸ்டிக்ஸ் பயம் வேண்டாம் ரகு. அங்கே உங்களுக்கு ஃபோர்க்கும் கிடைக்கும்.
அவருக்கு நல்லா மிச்சம் வைக்குறீங்க முத்துலெட்சுமி. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.
நன்றி குமார். வாசித்தேன்.
அவசியம் வாங்க அம்மிணி.
இண்டியா வரும் போது டேஸ்ட் பண்ணுங்க ரோஸ்விக்.
சைனீஸ் ட்ரை பண்ணுங்க சங்கவி.
ஹாஹாஹா... எங்கேயாவது அபப்டி சாப்பிட்ட அனுபவமா ஜெய்லானி.
சென்னைல சைனீஸ் அவ்ளோ மோசமா ரோமியோ.
வாங்க சங்கர். ஆரம்பிச்சுட்டீங்களா ரவுடி ஸார்.
ஹிஹிஹி.... யோ சைனால மாவு ஆட்ட வேண்டாம். வேறெதுவும் வேலை கிடைக்கலாம்.
வாங்க முகிலினி. நினைவு வெச்சிக்கிறேன். இண்டியாவுக்கு வெளில போனா சைனீஸ் சாப்பிட மாட்டேன்.
எங்கே போனாலும் நான் சைவம் தான் சாப்பிடுவேன் தராசு.
ஃப்ரென்ச் ஃப்ரைஸ் விட ஹனி சில்லி பொடேடோ டேஸ்டி மயில்.
பேரரசன் உங்களுக்குக் கல்யாணம் ஆனதுக்கப்புறம் இதையே உங்கள் நிரந்தர உணவாகத் தர சொல்லி மனைவிக்கு சொல்லிடுவோம்.
நீங்க பாவம் ராஜா சுந்தரராஜன்.
நீங்க போனீங்களா ப்ரியா கதிரவன்.
நன்றி விடிவெள்ளி. அவசியம் உங்கள் தள்மும் வருகிறேன்.
தொடர்ந்திடுவோம் சங்கர்.
have u tried flower drum at delhi and chennai? (a veg chinse restruant). delhi i dont know the exact place
ஆகா செம சூப்பரா இருக்கும் போல. நான் இன்னும் சைனீஸ் போனதில்ல இந்தியாவில்......U.S.A. போகும்போதெல்லாம், சைனீஸ் மற்றும் தாய் ரெஸ்டாரெண்ட் போவோம்.....கண்டிப்பா போய் சாப்பிட்டுவிட்டு சொல்கிறேன், விக்னேஷ்வரி......பகிர்வுக்கு நன்றி, வித்யாவிற்கும் தான்....
Post a Comment