Wednesday, March 17, 2010

கேஷுவல்ஸிலும் கலக்கலாம்


நம்ம பசங்கள்ல பாதி பேருக்கு ஃபார்மல்ஸுக்கும் கேஷுவல்ஸுக்கும் வித்தியாசம் தெரியலை. அப்படியே காஷுவல்ஸ் போட்டாலும் மேலிருந்து கீழ் வரை பார்க்கும் போது ஒரு லுக் வர்றதில்லை. இபப்டியெல்லாம் மொக்கையா இருந்தா ரொம்பக் கஷ்டம் பசங்களா. இதோ உங்களுக்கான கேஷுவல் டிப்ஸும், அலமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# (#-இது கேஷுவல்ஸ் இல்ல).

* அலுவலகத்தில் கேஷுவல் அனுமதியென்பதற்காக விருப்பம் போல் அணிந்து செல்லாதீர்கள். உங்கள் உடை உங்கள் மீதான் மதிப்பைக் குறைக்கா வகையிலும், பிறர் கண் கவரும் வண்ணமும் இருக்க வேண்டும். ஆஃபிஸ் HR இடம் கேஷுவல் ட்ரெஸ் கோட் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

* சுருக்கமான ஆடைகளை எப்போதும் அணியாதீர்கள். டி-ஷர்ட்டாக இருந்தாலும் அயர்ன் செய்ததாக இருக்கட்டும்.

* லெதர் கைக் கடிகாரங்கள் பெரிய ரவுண்ட் டயலுடன் இருப்பது கேஷுவல் ட்ரெஸ் கோடுடன் அற்புதமாக செல்லும்.


* இடத்திற்கு, நேரத்திற்கு தகுந்த ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள். பார்ட்டிகளுக்கு ஃபார்மல்ஸும், பீச்சிற்கு (Beach) குர்தா பைஜாமாவும் உங்களை வித்தியாசமாகக் காட்டும். பார்ட்டிகளுக்குக் கேஷுவல்ஸையும் தவிருங்கள்.

* உங்களின் ஷார்ட்ஸ் முட்டிக்கு மேல் இல்லாமலும், கணுக்காலைத் தொடாமலும் இருத்தல் நல்லது. ஷாட்ஸுடன் செருப்பு அணிவது வீட்டில் ஓகே. வெளியில் வாக்கிங், ஜாகிங், பீச் செல்லும் போது வெள்ளை நிற கேஷுவல் அல்லது ஸ்போர்ட்ஸ் ஷூஸ் அணிந்து செல்லுங்கள்.


* உங்களின் Wallet நிறைந்து அழாதிருக்கட்டும். தேவையான பொருட்களை மட்டுமே அதில் வையுங்கள். உங்களின் வங்கிக் கார்டுகளை கார்ட் ஹோல்டரில் தனியாக வையுங்கள். இதனால் உங்கள் பர்சும் பெரிதாகாது. கார்டுகள் பத்திரமாகவும் இருக்கும்.

* முடிந்தவரை ஷாப்பிங்கிற்குத் தனியாக செல்லாதீர்கள். உங்களுக்கு மற்றவரின் தேர்வு சரியாக இருக்கலாம். முடிந்தால் அந்த மற்றவர் பெண்களாக இருக்கட்டும்.

* குண்டாக இருக்கும் ஆண்கள் ‘V' கழுத்து கொண்ட டி-ஷர்ட் முயற்சிக்கலாம். இது உங்களின் எடையைக் குறைத்துக் காட்டும்.


* ஆண்கள் தலைமுடி வளர்த்து போனிடைல் போடுவது சற்று உறுத்தலான, பெண்களுக்குப் பிடிக்காத ஸ்டைல். அதைத் தவிர்த்தல் நலம்.

* உங்கள் தொடை, கால்களுடன் ஒட்டிய ஜீன்ஸைத் (Skinny Jeans) தவிருங்கள்.


* ஜீன்ஸ், ட்-ஷர்ட்டுடன் சன் கிளாஸ் (Sun Glasses) அணியலாம். குர்தா-பைஜாமா, ஷார்ட்ஸுடன் சன் கிளாஸஸ் பொருத்தமாக இருக்காது.
* பெரிய ப்ரிண்டட் டிஸைனுள்ள ட்-ஷர்ட், ஷட்டுகளைத் தவிருங்கள். இது உங்கள் மதிப்பைக் குறைத்துக் காட்டக் கூடியது.


* ஷார்ட் ஷர்ட்ஸ் மிகச் சிறந்த காஷுவல்ஸ். ஆனால் பருமனான ஆண்கள் அதைத் தவிருங்கள்.


* Ugg boots ஐ முற்றிலுமாகத் தவிர்த்திடுங்கள். அந்த ஃபேஷன் இப்போதில்லை.

* ஏதேனும் அணிகலன்கள் (செயின், மோதிரம், வாட்ச், ப்ரேஸ்லெட்) அணிவதாக இருந்தால் அவை சில்வர் நிறத்திலிருத்தல் நலம். ஆனால் அதிகமான எண்ணிக்கையில் அணியாதீர்கள்.

* பேகி பேண்ட் (Baggy Pants) பழைய ஃபேஷனாகி விட்டது. இப்போதைய ஓய்வு நேர ஃபேஷன் உடை ட்ராக் சூட். நியூட்ரல் நிற (கருப்பு, கிரே, நேவி, ப்ளூ, கரும்பச்சை) நிறங்கள் ஆண்களுக்கேற்றது.


* உங்கள் பணியிடத்தில் கேஷுவல்ஸ் அணிய அனுமதியிருந்தால் ஜீன்ஸ், டி-ஷர்ட், ஷூஸ் போதுமானது. ப்ரிண்டட் மற்றும் அடர் நிற டி-ஷர்ட்கள், ஸ்டைலிஷ் தொப்பி, கலர்ஃபுல் ஷூக்களுக்கு நோ சொல்லிடுங்க.

* விளம்பரப் படங்களில் அரைக்கை சட்டையுடன் குட்டை டை அணிவது அழகாகக் காட்டப்பட்டிருக்கலாம். அதற்காக மயங்கி அதே ஸ்டைலை ஃபாலோ செய்து விடாதீர்கள். அரைக்கை சட்டையுடன் குட்டை டை அணிவது உங்களைக் கோமாளியாகக் காட்டும். (திட்டாதீங்க. நிஜமாவே தான்)

* மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். புது ஸ்டைல்களை முயற்சிக்கத் தயங்காதீர்கள்.

* ஃபார்மல்ஸுடன் போகாத வெள்ளை நிற சாக்ஸ் கேஷுவல்ஸுடன் நன்றாகவே செல்லும். ஆனால் ஆஃபிஸ் கேஷுவல்ஸுக்கு வெள்ளை நிற சாக்ஸ் வேண்டாம்.

* அகலமான பெல்ட்கள் கேஷுவல்ஸுக்கு ஏற்றது. அதில் பெரிய பக்கிளுடன் (Buckle) அணியலாம். பெரும்பாலும் வெண்ணிற ஷூ அணிவதால் உடைக்கு ஏற்ற வண்ண நிற பெல்ட்டைத் தேர்ந்தெடுங்கள். லைட் ப்ரௌன் நிற பெல்ட் ஆல் டைம் கேஷுவல்.


* கேஷுவல்ஸ் ரிலாக்ஸான, ஓய்வு நேர உடையென்பதால் மைல்ட் பெர்ஃப்யூம் உபயோகிக்கலாம். விளையாடும் நேரங்களில் மட்டும் ஸ்போர்ட்ஸ் பெர்ஃப்யூம் உபயோகியுங்கள்.

* இவையனைத்தும் சிரமமாக இருந்தால் வீட்டிலிருக்கும் பெண்களைக் கேளுங்கள். ஆண்களை விட ஆண்களுக்குப் பொருத்தமான உடை என்ன என்பதை அவர்கள் அறிவார்கள்.

ஆண்களின் ஆடை அலமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்கள்:

- நேவி அல்லது கிரே நிற சூட் (ப்ளேசர்)

- கருப்பு ஷு மேட்சிங் சாக்ஸ்களுடன்

- கருப்பு மற்றும் பிரவுன் பெல்ட்

- ப்ளைன் டை

- ப்ளைன் சட்டைகள்

- பிரான்டட் ஜீன் இரண்டு கேஷுவல் ஷர்ட்டு, டி-ஷர்ட்டுகளுடன்.

- ஒரு ஓவர்கோட். (பிரவுன் அல்லது க்ரீம் நிறம் சிறப்பு)

- ஸ்போர்ட்ஸ் வியர் செட் குறைந்தது இரண்டு

- வெள்ளை நிறக் காட்டன் கைக்குட்டைகள்


- பெர்ஃப்யூம் கலெக்ஷன்ஸ்



இனி உங்களை எத்தனை பெண்கள் பார்க்கிறார்கள் என்பதை அவர்களறியாமல் கவனியுங்கள், நீங்கள் சாமர்த்தியசாலியெனில். வாழ்த்துகள் நண்பர்களே.

அடுத்த ஃபேஷன் பகுதியில் - பார்ட்டி வியர் (Party Wear)

ஃபேஷன் தொடர்பான உங்கள் கேள்விகளையும் நண்பர்கள் மெயிலலாம். முடிந்தவரை பதிலளிக்கிறேன்.

71 comments:

kanagarajlrt said...

வெளங்கிரும் ..............

கார்க்கிபவா said...

சில பேர் இருக்கிறார்கள். என்ன அணிந்தாலும் சூப்பரா இருப்பார்கள். அது போல யாரையாவது தெரியுமா உங்களுக்கு?

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்புகள்.

Anonymous said...

சில பேர் இருக்காங்க அவங்களுக்கு என்ன அணிந்தாலும் நல்லாஇருக்கும். ஆனா அணிய மாட்டார்கள். யாருன்னு தெரியுமா உங்களுக்கு?

அன்பேசிவம் said...

இவங்க ரெண்டு பேருமே இப்படித்தான் என்னை பத்தி எப்போதுமே பெருமையா பேசிட்டு இருப்பாங்க, சரி சரி விடுங்க கார்க்கி, விஜி அண்ணி, நீங்க ரெண்டுபேரும் நானா வந்து சொல்ற வரைக்கும் விடமாட்டிங்க போல?

தராசு said...

//இவையனைத்தும் சிரமமாக இருந்தால் வீட்டிலிருக்கும் பெண்களைக் கேளுங்கள். ஆண்களை விட ஆண்களுக்குப் பொருத்தமான உடை என்ன என்பதை அவர்கள் அறிவார்கள்.//

ஹூக்கும், இவிய சொல்லீட்டாலும்.....

தராசு said...

கார்க்கி,

அப்படிப் போடு அருவாள, எனக்கு ஒருத்தரத் தெரியும், அதாங்க தராசுன்னு ஒருத்தரு,

ஹலோ, ஹலோ, நோ,..... நோ,.....
நோ பேட் வேர்ட்ஸ் பிளீஸ்....

பா.வேல்முருகன் said...

நீங்க சொல்ற டிப்செல்லாம் சூப்பரா இருக்கு.

ஆனா என்னை மாதிரி தலைல வழுக்கை விழுந்த ஆளுங்களுக்கு எதைப்போட்டாலும் நல்லா இருக்காதே.

எங்களுக்கு ஏதாவது டிப்ஸ் தரக்கூடாதா?

Sabarinathan Arthanari said...

பயனுள்ள பதிவு நன்றி

manasu said...

//சில பேர் இருக்கிறார்கள். என்ன அணிந்தாலும் சூப்பரா இருப்பார்கள். அது போல யாரையாவது தெரியுமா உங்களுக்கு?//

u want viki to say thats u???

no tharpuhazchi........

மங்குனி அமைச்சர் said...

ஆகா நல்லா ஐடியா தரிங்களே , இனிமே டிரஸ் எடுக்க போகும் போது கேர்ள் பிரண்ட்ஸ்ஸ கூட கூப்டுகனும்.( அய்யய்யோ....... பட்ஜெட் ட்ரிபிள் மடங்காயிடுமே )

Mohan said...

இந்த மாச பட்ஜெட்டை அதிகமாக்கிடுவீங்க போலிருக்கு.பயனுள்ள தகவல்களுக்கு நன்றி!

manasu said...

கேர்ள் பிடிப்பதற்கும் ஐடியா கொடுப்பாங்க அடுத்த பதிவுல, மங்குனி.

Saminathan said...

மயிருள்ள மகராசன் அள்ளியும் முடியலாம் ; அவுத்தும் முடியலாம் !
மொட்டைத்தலையன் என்ன செய்ய..?

Saminathan said...

ஆனாலும் கோடிங் டிப்ஸ் நன்று ; கேஸூவல் அணிந்தாலும் / ஃபார்மல்ஸ் அணிந்தாலும் நிறம் / உயரம் / பருமன் ஆகியவற்றுக்கு ஏற்ற மாதிரி தேர்ந்தெடுத்தால் தான் எடுபடும்

இதெல்லாம் தெரிஞ்சுதான் நம்மவர்கள் உஷாராக வேஷ்டி சட்டையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் !

என்னப் பொருத்த வரைக்கும் களத்து மேட்டு காஸ்ட்யூம் தான் ஆல்வேஸ் பெஸ்ட் !

Vidhya Chandrasekaran said...

அழகாய் தொகுத்திருக்கீங்க மேடம்.:)

mightymaverick said...

போலோ ஷர்டுகள் அணியலாம் என்பதை விட்டு விட்டீர்களே...

அதே மாதிரி வெள்ளியில போடக்கூடிய செயின், பிரேஸ்லெட் எல்லாம் மொந்தைமொந்தையாக போடாமல் இடைப்பட்ட (medium) அளவுகளில் அணிய எடுப்பாகஇருக்கும் என்பதினை விட்டு விட்டீர்கள்...

ஆனாலும் உங்கள் பதிவிற்கு நன்றி...

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{ நம்ம பசங்கள்ல பாதி பேருக்கு ஃபார்மல்ஸுக்கும் கேஷுவல்ஸுக்கும் வித்தியாசம் தெரியலை. அப்படியே காஷுவல்ஸ் போட்டாலும் மேலிருந்து கீழ் வரை பார்க்கும் போது ஒரு லுக் வர்றதில்லை. இபப்டியெல்லாம் மொக்கையா இருந்தா ரொம்பக் கஷ்டம் பசங்களா. }}}}}}}}}}}}


ஏலே மக்கா எங்களுக்கேவா நாங்கெல்லாம் ராவான ரவுடிக .மலையையே உருட்டுவோம்ல


மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

கலக்கல் !

பனித்துளி சங்கர் said...

சொல்லிட்டீங்கள்ல இனிமேல் பாருங்க ஒரு பயபுள்ளக தூங்க முடியாது ஆமா .........


மீண்டும் வருவான் பனித்துளி

Prabhu said...

பொதுவா பொண்ணுங்களுக்கு ஆண்கள் டிரஸ் பத்தி நல்ல டேஸ்டாமே, அப்படியா?
சம்பந்தமே இல்லாத விஷயங்களை சரியாக எப்படி தெரிந்து கொள்கிறீர்கள்! :)

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{ மயில் said...
சில பேர் இருக்காங்க அவங்களுக்கு என்ன அணிந்தாலும் நல்லாஇருக்கும். ஆனா அணிய மாட்டார்கள். யாருன்னு தெரியுமா உங்களுக்கு?

}}}}}}}}}}}}



யாருல மயில் இது பெயரே வித்தியாசமா இருக்கும்போதே நினச்சே ! ஏதோ வில்லங்கம் இருக்குனு இப்பதால தெரியுது அது என்னனு .......


மீண்டும் வருவான் RDX ANNIYAN

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{ pappu said...
பொதுவா பொண்ணுங்களுக்கு ஆண்கள் டிரஸ் பத்தி நல்ல டேஸ்டாமே, அப்படியா?
சம்பந்தமே இல்லாத விஷயங்களை சரியாக எப்படி தெரிந்து கொள்கிறீர்கள்! :) }}}}}}}}}}}


ஆஹா வாங்க அய்யா pappu அடுத்த ஆராய்ச்சியாளர் நீங்களா ???? ஏற்கனவே இங்க கலவரமா இருக்கு இதுல நீர் புதுசா எண்ணய உற்றுகிறீரோ ???????????


மீண்டும் வருவான் பனித்துளி

பனித்துளி சங்கர் said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !


மீண்டும் வருவான் பனித்துளி !

விக்னேஷ்வரி said...

அனைவருக்கும் விளங்கத் தான் எழுதினேன் கனகராஜ். நன்றி.

இல்ல கார்க்கி, நான் ஆளைப் பார்ப்பதில்லை. முதலில் உடைகளையே பார்க்கிறேன். :)

நன்றி ராமலக்ஷ்மி.

விஜி இந்த மெஸேஜ் ராம்க்கா? :)

அவங்க சரியாத் தான் சொல்லுவாங்க தராசு. ஆனா அதைப் புரிஞ்சுக்கத் தெரியாது உங்களுக்கு.

முரளி, இன்னும் தெளியலையா...

பாவம் மிஸஸ். தராசு. ;)

நீங்களும் எந்த உடைகள் போட்டாலும் நல்லாருக்கும் Vels. வழுக்கை தானே, அதைப் பத்தி ஒரு தனிப்பதிவு போட்டுடலாம். :)

விக்னேஷ்வரி said...

நன்றி சபரிநாதன் அர்த்தநாரி.

தவறிக் கூட நான் பொய் சொல்ல மாட்டேன் மனசு. :)

பொண்ணுங்க அவங்களுக்குத் தான் காஸ்ட்லியா வாங்குவாங்க. உங்களுக்கில்ல. அதுனால தைரியமா கூட்டிட்டுப் போங்க மங்குனி.

ஒரு மாசம் தானே மோகன். ஆகிட்டுப் போகுது. நன்றி.

மனசு, இதெல்லாம் நல்லா இல்ல. அப்புறம் நான் அழுதுடுவேன்.

இப்படியெல்லாம் பழமொழி சொல்லி வருத்தப்படாதீங்க பூந்தளிர். எனக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியல ;)
ம், வேட்டி சட்டையும் நல்ல உடை தான். ஆனால், காலை வாக்கிற்கும், ஐ.டி. கம்பெனிக்கும் அதை அணிந்து செல்ல முடியாதே.

நன்றி வித்யா.

எக்ஸ்ட்ரா டிப்ஸுக்கு நன்றி வித்தியாசமான கடவுள்.

விக்னேஷ்வரி said...

மலையெல்லாம் அப்புறம் உருட்டலாம் சங்கர். முதல்ல ஒழுங்கா ட்ரெஸ் பண்ணக் கத்துக்கோங்க.

நன்றி சங்கர்.

பப்பு, எது சம்பந்தமில்லை. இதை அப்படியே வீட்ல போய் அம்மாக்கிட்ட சொல்லிப் பாருங்க. பார்ப்போம்.

சங்கர், வேண்டாம் மயிலு பத்தித் தெரியாம வம்பு வெச்சுக்காதீங்க.

ஆஹா, யாரங்கே.... இழுத்துச் செல்லுங்கள் இந்த சங்கரை. எல்லாரையும் நக்கலடிச்சிட்டு இருக்கார்.

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ! //
கடைசியா இது யாருக்கு சங்கர்.

Chitra said...

tips in detail. :-)

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு.......இம்பூட்டு அழகான டிப்ஸ் கொடுத்ததுக்கு, நன்றி.

பனித்துளி சங்கர் said...

ஆஹா உறங்குற RDX அந்நியனை குச்சிய வச்சு சொரன்டுரமாதிரி இருக்கே ??????????????

பனித்துளி சங்கர் said...

RDX அந்நியன் அவதரித்துவிட்டான் .

இனி என்னை எதிர்ப்பவர்கள் விரைவில் அனைவரும் தண்டிக்கப்படுவீர்கள் ..............

ஜீவன்சிவம் said...

சரியா சொல்லியிருகீங்க... பாராட்டியே ஆகணும்...

சுசி said...

நீங்க கலக்கிட்டீங்க விக்னேஷ்வரி..

Unknown said...

//இனி உங்களை எத்தனை பெண்கள் பார்க்கிறார்கள் என்பதை அவர்களறியாமல் கவனியுங்கள், நீங்கள் சாமர்த்தியசாலியெனில்.//

ஆஹா...இது உங்களுக்கே நல்லாருக்கா....

நா சாமர்த்தியசாலி தான்..... ( நானும் ரௌடி நானும் ரௌடி..) :-)


நாங்க வாடிக்கையாளர்களுக்கு என்ன சொல்லணுமோ அதை அழகா சொல்லி தந்துருகீங்க....
THANX அக்கோவ் ...!!!!!

Thamira said...

இனி உங்களை எத்தனை பெண்கள் பார்க்கிறார்கள் என்பதை அவர்களறியாமல் கவனியுங்கள்,//

இந்த ஒண்ணுக்காக இவ்ளோ காரியமா.? வெளங்குச்சு. அதான் கல்யாணம்தான் முடிஞ்சு போச்சே. அப்புறம் எதுக்கு வெட்டியா.. ஹூம்.!

வால்பையன் said...

ஐடியாவெல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா இதெல்லாம் யார் வாங்கி கொடுப்பா!?

வால்பையன் said...

//கார்க்கி said...

சில பேர் இருக்கிறார்கள். என்ன அணிந்தாலும் சூப்பரா இருப்பார்கள். அது போல யாரையாவது தெரியுமா உங்களுக்கு?//


அவர்கள் வால்பையன் என்று புனைபெயர் வைத்திருப்பார்கள் சகா!

shanmuforu said...

பெரிய ஆராய்ச்சியே நடதீருப்பீங்க போல.!!??

Prathap Kumar S. said...

//சில பேர் இருக்கிறார்கள். என்ன அணிந்தாலும் சூப்பரா இருப்பார்கள். அது போல யாரையாவது தெரியுமா உங்களுக்கு?//

சப்பை மேட்டரு சகா... நம்ம ராமராஜன், பாண்டியராஜனும் தான் எது போட்டாலும் சூப்பரா இருப்பாங்கோ :))

விக்னேஷ்வரி எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு நம்ம செந்தில் டவுசரு மாதிரி டவுசரு போட்டா பேஷனா இருக்குமா-?? ட்ரை பண்ணலாமா??? சொல்லுங்களேன்...

பா.ராஜாராம் said...

இம்பூட்டு இருக்கா...நல்லவேளை எங்க காலத்துல பிறக்கலை நீங்க...

// கார்க்கி said...

சில பேர் இருக்கிறார்கள். என்ன அணிந்தாலும் சூப்பரா இருப்பார்கள். அது போல யாரையாவது தெரியுமா உங்களுக்கு?//

மானங்காத்த தமிழன்,மாவீரன் கார்க்கி வாழ்க! :-))


realy, profesional's touch vikki!

ஆத்தாடியோ...

பா.ராஜாராம் said...

// உங்களின் Wallet நிறைந்து அழாதிருக்கட்டும். தேவையான பொருட்களை மட்டுமே அதில் வையுங்கள்.//

தேவையான "பொருள்" இல்லாததால்தானே,இந்த வித்தை..ஹி..ஹி..

sathishsangkavi.blogspot.com said...

அருமையான குறிப்புகள்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கலக்கறீங்க விக்னேஷ்வரி

Ganesan said...

அடி ஆத்தி,
நம்ம மதுர கார பொண்ணு எழுதின எழுத்தா, மவராசி நீ நல்லா இருக்கணும் தாயி.

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம் நிரம்ப நன்றிகள்

நீங்கள் சொன்னதுதான் சரி நிறைய பேர் அவர்கள் அணியும் ஆடைகளைத்தான் கவனிக்கிறார்கள் நானும் ஸ்டைலா ட்ரெஸ் பண்ணிருக்குற ஆண்களையே சைட் அடிக்கிறது உண்டு அவ்வ்வ்வ்....

Jerry Eshananda said...

அடியாத்தீ ....இம்புட்டு ...விசயமிருக்கா? இனி ...நாங்களும் களத்துல இறங்குவோம்ல...

Raghu said...

ஆஃபிஸ்ல‌ ஸ்ட்ரிக்ட்லி ஃபார்ம‌ல்ஸ் விக்கி :(

//முடிந்தவரை ஷாப்பிங்கிற்குத் தனியாக செல்லாதீர்கள். உங்களுக்கு மற்றவரின் தேர்வு சரியாக இருக்கலாம். முடிந்தால் அந்த மற்றவர் பெண்களாக இருக்கட்டும்//

100% உண்மைதான்!

கூடிய‌ சீக்கிர‌ம் "உடை வ‌டிவ‌மைப்பு - விக்னேஷ்வ‌ரி"ன்னு ஏதாவ‌து ஒரு சினிமா டைட்டிலில் வ‌ர‌ வாழ்த்துக்க‌ள் :) (அதெல்லாம் எதுக்குங்க‌ன்னு நோ சீன்...ஓகே?)

Thenammai Lakshmanan said...

ஏகப்பட்ட ஃபாஷன் கிங்குகளை களமிறக்கி விட்டுட்டீங்க போல விக்னேஷ்வரி...

இங்கே பாருங்க ஒரு ஃபாஷன் பரேடே நடக்குது ...

கார்க்கிபவா said...

@மனசு,

சரியா போச்சு. ஜோக்கு சகா அது. சிரிங்க பார்ப்போம்!!!

// நம்ம ராமராஜன், பாண்டியராஜனும் தான் எது போட்டாலும் சூப்பரா இருப்பாங்கோ :)//

உங்க டேஸ்ட்டுல மண்ன கொட்ட. உங்களுக்கு அஜித்தும் பிடிக்கனுமே.. சரியா சகா? :))))

RAMYA said...

எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு, சரி எல்லாத்துலேயும் நாலு பார்சல் :)

குறிப்புக்கள் அனைத்தும் அருமை விக்கி!!

Rajan said...

”பீச்சிற்கு (Beach) குர்தா பைஜாமாவும் உங்களை வித்தியாசமாகக் காட்டும்”

துபாய்ல பீச்சுக்கு டவுசர் போடாம போனா, வெளிய பத்திடுவானுங்க..

மங்குனி அமைச்சர் said...

//பொண்ணுங்க அவங்களுக்குத் தான் காஸ்ட்லியா வாங்குவாங்க. உங்களுக்கில்ல. அதுனால தைரியமா கூட்டிட்டுப் போங்க மங்குனி.//

அட நீங்க வேற நம்ம பேரச்சொல்லி அவுக ரெண்டு டிரஸ் எடுப்பாக , பில்லு நம்ம கட்டனும் அத சொன்னேன்

Anonymous said...

யக்கோவ்.....பதிவு சும்மா அட்டகாசமா கீது! ஃபார்மல்ஸ்சோ காஷுவல்ஸ்சோ....ஆனா ஒரு மேட்டர மட்டும் ஒன்னியும் பண்ணமுடியாது....அது வசீகரம்.அது கூடவே பொறக்கனும் இல்ல வளர்த்துக்கனும், அது நம்மகிட்ட இருந்துட்டா பொண்ணுங்க மட்டுமில்ல ஒலகமே நம்மள பார்க்கும். இது மாதிரி இன்னும் நெறைய பதிவு எழுதுங்க. பகிர்வுக்கு நன்றி!
http://padmahari.wordpress.com

விக்னேஷ்வரி said...

வாங்க சித்ரா. :)

வாங்க சைவக் கொத்துப்பரோட்டா. நன்றி.

சங்கர், என்ன பிரச்சனை இன்னிக்கு உங்களுக்கு.... ;)

நன்றி ஜீவன் சிவம்.

நன்றி சுசி.

கல்யாணம் ஆனா பொண்ணுங்களை நீங்க பாக்குறதில்லையா.. இல்ல, பொண்ணுங்க உங்களைப் பார்க்கணும்னு நினைக்குறதில்லையா... பார்ட் டைமா உளவியலும் படிச்சிருக்கேன் ஆதி. வேண்டாம் சிங்கத்தை எழுப்பி விடாதிங்க. ;)

வாழ்த்துகள் Han!F R!fay, நன்றியும்.

விக்னேஷ்வரி said...

ஊட்டுக்காரம்மாவைக் கேளுங்க வால்.

வால், நீங்களுமா.... முடியல.

படிக்கும் போது பண்ண ஆராய்ச்சிங்க shanmuforu

நீங்க ராமராஜன், பாண்டிய ராஜன் ஃபேனா நாஞ்சில் பிரதாப். கொஞ்சம் தள்ளியே நில்லுங்க. ;)
ட்ரை பண்ணுங்க பிரதாப், ஆனா பார்க்குறவங்க பயந்துடாம.

பா.ரா. ஆனா, என் காலம் வரைக்கும் நீங்க இருக்கீங்கள்ல. அதுனால ஃபாலோ பண்ணித் தான் ஆகணும். :)
வேண்டாம். கார்க்கி கூட கூட்டு சேராதீங்க நல்லதில்ல மாம்ஸ்.
நன்றி பா.ரா.

தேவையான "பொருள்" இல்லாததால்தானே,இந்த வித்தை..ஹி..ஹி. //
ஹிஹிஹி...

நன்றி சங்கவி.

நன்றி முத்துலெட்சுமி.

வாங்க காவேரி கணேஷ். மதுரைல இருந்து தான் இம்பூட்டும் கத்துக்கிட்டு வந்தேன் மக்கா. :)

விக்னேஷ்வரி said...

ம், கலக்குங்க ஜெரி.

ஃபார்மல்ஸ் டிப்ஸ் ஏற்கனவே வாசிச்சிருப்பீங்கள்ல ரகு. அதை ஆஃபிசுக்கும், இதை வெளியேவும் ஃபாலோ பண்ணுங்க.
நன்றி ரகு. (இன்னுமாய்யா உலகம் நம்மளை நம்புது...)

ஆமா தேனம்மை. சரியா சொன்னீங்க.

கார்க்கி, ஒரு வார்த்தை சொல்லிட்டு எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு பாருங்க. :)
இழுத்துட்டீங்களா அஜித்தை.

என்ன ரம்யா, என்னவோ இட்லி, வடை பார்சல் மாதிரி சொல்றீங்க. :)
நன்றி ரம்யா.

ம், அது தான் சரி ராஜன். ஆனா நம்மூர் சென்னை பீச்சுல இந்த எழுத்தாளர்கள் இம்சை தாங்க முடியல. அங்கேயும் குர்தா பைஜாமால சுத்திக்கிட்டு.

ஹிஹிஹி... சரியா சொன்னீங்க மங்குனி. அனுபவமோ...

ம், சரி தான் பத்மஹரி. நன்றி.

ஸ்ரீவி சிவா said...

ரொம்ப நாள் உங்களிடமிருந்து எதிர்பார்த்த பதிவு. மிக சிறப்பு. நிறைய விஷயங்கள் புரிஞ்சது. 10 பொருட்கள் லிஸ்ட் சூப்பருங்கோ.

//லெதர் கைக் கடிகாரங்கள் பெரிய ரவுண்ட் டயலுடன் இருப்பது கேஷுவல் ட்ரெஸ் கோடுடன் அற்புதமாக செல்லும்.//
பெரிய சதுர டயல் இன்னும் மேன்லியாக காட்டும்.. சரிதானே? முன்னமே நீங்க சொன்னதுதான். ;)

// கலர்ஃபுல் ஷூக்களுக்கு நோ சொல்லிடுங்க//
என்னா விக்கி இப்படி சொல்லிட்டீங்க? நல்ல பிரவுன் கேஷுவல்ஸ் ஷூ நல்லா செட் ஆகும் இல்ல?

//உங்களுக்கு மற்றவரின் தேர்வு சரியாக இருக்கலாம். முடிந்தால் அந்த மற்றவர் பெண்களாக இருக்கட்டும்.//
சர்த்த்த்தான்...நிதர்சனம்! :)

கைய கடிக்காத விலையில் எதாவது நல்ல perfume (designer vikki recommended brand) தெரிஞ்சா சொல்லுங்க

அரங்கப்பெருமாள் said...

ஆமாங்க...நல்லா சொன்னீங்க.

நட்புடன் ஜமால் said...

இப்படியும் டிப்ஸ் கிடைக்குதா!

நன்றிங்கோ ...

Sanjai Gandhi said...

பணக்கார சமாச்சாரம்..

ஆண்கள் வாழறதே பெண்களுக்காகத் தானா? :)) ஏன் அவர்களுக்குப் பிடிக்கிற மாதிரியே உடை அணியனும்? :(

Sanjai Gandhi said...

//ஆண்களின் ஆடை அலமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்கள்://

ஒருவாட்டி வாங்கி அப்டியே வச்சிக்கிட்டா எப்போவும் இருக்கும்ல? :)

'பரிவை' சே.குமார் said...

அருமையான குறிப்புகள்.

புதுகை.அப்துல்லா said...

எனக்கு டிரெஸ் செலக்‌ஷன் ஈஸி. வெள்ளைச் சட்டை, ஏதாவது ஒரு டார்க் கலரில் ஃபேண்ட்.தட்ஸ் ஆல்.

:)

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கு செலக்‌ஷன் எப்பவும் ஈஸி. வெள்ளைச் சட்டை, ஏதோ ஒரு டார்க் கலரில் பேண்ட். தட்ஸ் ஆல்

:)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

nice post vikki...
bit busy in ...........
helpful
thx
catch u later
balakumaran

Anonymous said...

simply

super

valga valamudan

v.v.s

complan surya

மாத்தியோசிங்க‌..! said...

arumaiya...irukku...

மாத்தியோசிங்க‌..! said...

supparu...

விக்னேஷ்வரி said...

சரிதான் சிவா. ஆனால் கேஷுவல்ஸுடன் ரவுண்ட் டயல் அதிகம் பொருந்திச் செல்லும்.

இல்ல சிவா, வெள்ளை நிற ஷூக்களுடன் ஒப்பிடும் போது கேஷுவலில் மற்ற ஷூக்கள் பின் தள்ளப்பட்டு விடும். வெள்ளையுடன் கலந்து எந்த வண்ணமிருந்தாலும் சரி.

எனக்குத் தெரிந்த பெர்ஃப்யூம்கள் தவிர இன்னும் நல்ல பெர்ஃப்யூம்களை மார்க்கெட்டில் தேடி சீக்கிரமே சொல்றேன் சிவா.

நன்றி அரங்கப் பெருமாள்.

நன்றி ஜமால்.

எதுவும் பணக்கார சமாச்சாரம் இல்லை சஞ்சய்.
இப்படியெல்லாம் கேள்வி கேட்டுக்கிட்டே இருங்க, சீக்கிரமே கல்யாணம் ஆகிடும் ;)

ம், வாங்கி வெச்சுக்கோங்க சஞ்சய்.

விக்னேஷ்வரி said...

நன்றி குமார்.

வயசானவங்களைப் பத்தி இங்கே பேச்சில்ல அப்துல்லா. அதுனால நீங்க கவலையை விடுங்க.

நன்றி பாலகுமாரன்.

நன்றி சூர்யா.

நன்றி மாத்தியோசிங்க.

commomeega said...

ரொம்ப அக்கறையுள்ள பதிவு. எனக்கு கண் கலங்குது.