Wednesday, December 2, 2009

பிரெஞ்சு முத்தக் காற்றும் ஐரிஷ் காஃபியும்


அழகான மாலைப் பொழுதில் கடற்கரையில் சந்திப்பாதாய் முடிவு செய்தோம். மற்ற நாட்களை விட அன்று உனக்குப் பிடித்த உடையில் நானும், எனக்குப் பிடித்த உடையில் நீயும். (நீ எது அணிந்திருந்தாலும் எனக்குப் பிடிக்கும் தானே.)

முதன் முறை உன்னுடன் பைக்கில். நகரமே வேகமாக ஓடிக்கொண்டிருக்க, எல்லாமே நின்று போனதாய் எனக்கு மட்டும். உன் நெருக்கத்தை உணர்ந்த தருணமது. சில நிமிடங்களில் கடற்கரை. சில்லென்ற காற்று கேசம் கலைக்க, சிலையாய் நின்று நான் உன்னை ரசிக்க ரம்மியமான மாலை அது.

ஏதோ கடற்கரை மணலில் நடை பழகுவது போல கால்களை மணலுக்குள் புதைத்து முழித்து நான் நிற்க, என் செல்லக் குறும்பைப் புரிந்தவனாய் உன் கைகள் கொடுத்தாய். அதன் பின் மலர்கள் மீது நடப்பது போன்றிருந்தும், முட்கள் மேல் நடப்பது போல் நான் சிரமப்பட உன் பிடிமானம் இறுகியது என் கைகளில். கடல் இன்னும் தூரத்தில் இருக்கக் கூடாதா என் ஏங்கியது மனது.

லேசானத் தூறலுக்கு எழுந்து ஓடும் சிலர், தூறல் விழுவதே தெரியாமல் காதலில் விழுந்திருக்கும் பலர் இருக்கும் கடற்கரையில் அலைகளுக்கு சில அடிகள் தூரத்தில் அமர்ந்தோம். மயக்கும்
உன் சட்டை வாசம், அந்த வாசனையை உணரும் நெருக்கம், நமக்குத் துணையாய் முழு நிலவு, என் அண்மைக்குப் போட்டியாய் உன்னைத் தொட ஆர்ப்பரிக்கும் அலைகள், அவற்றைப் பெருமிதப் பார்வையுடன் பார்க்கும் நான், என்னை ரசித்து என் வெட்கம் தின்னும் உன் கண்கள், வேறெந்த நேரம் அமைய முடியும் இதை விட ரசனையாய்!

ஏதோ முக்கியக் கருத்தரங்கின் நாயகன் போல பேசிக் கொண்டே....... போகிறாய். கடல், அலை, நிலா, காற்று, மேகம், வைரமுத்து, காதல், கமலஹாசன் என
முடிவற்றுப் போகின்றது என்னை மயக்கும் உன் நீண்ட உரையாடல். "போதும்டா, நிறுத்து. எப்படி இப்படி வாய் வலிக்காம பேசுற! நீ பேசுறதைப் பார்த்தே எனக்கு தாகமெடுக்குது" என்று நடுவே நான் சொன்னதை நீ மதித்ததாகவே தெரியவில்லை.

"உனக்கான வெளி மிகப் பெரியது, வான் போல. அதில் எனக்கான இடம் சிறு விண்மீனது" என்றேன். "விண்மீன்கள் வானில் பலவுண்டு. நீ தான் என் வானின் நிலவு. நான் அழகாவது உன்னாலும், நீ ஒளிர்வது என்னாலும்" என்றாய். என்ன சொல்ல எனத் தெரியாமல் "காஃபி?" என்றேன்.

பதிலாய் நீ சிரிப்பை உதிர்க்க காஃபி ஷாப் நோக்கிச் சென்றன இரு ஜோடிக் கால்களும். வரும் போது கைபிடிக்கத் தயங்கிய உன் கைகளில் ஒன்று என் இடையிலும், மற்றொன்று எனது கைகளுக்குள்ளும். கடற்கரை மணல் ஒன்று விடாது அனைத்திலும் நம் பாதம் பதிய நடை பயின்றோம். ஒன்றரை மணி நேர நடை ஒரு சில வினாடிகளாக உருக, மீதி நேரம் காஃபி ஷாப்பிற்குள்.

சுற்றிலும் காற்றும், கடலும் மட்டுமே இருந்த வெளியை விட்டு வெளிவந்தோம். அதாவது காஃபி ஷாப்பின் உள்ளே வந்தோம். என்ன வேண்டுமென்பது போல் நான் பார்க்க, நீதான் என்பது போல் நீயும் பார்க்க, "What would you like to have mam?" என்றவனை சிரித்தபடி முறைத்துக் கொண்டிருந்தாய். ஐரிஷ் காஃபி என்று முடிவானதும்தான் நகர்ந்தான் அவன்.

பேசிப்பேசியே கடற்கரையில் கடந்த நேரம், இங்கு பேசாமலே போனது. அடுத்தடுத்து அமர்ந்திருந்ததால் முகம் பார்க்க முடியாமல் போனதாய் சொன்னாய். இங்கே முகம் மட்டுமே பார்த்தபடி இருக்கிறோம். "முகம் பார்த்தபடி பேச எங்கே செல்ல வேண்டும்" என்று கேட்க எத்தனித்த நேரம் ஐரிஷ் காஃபி வந்தது. காதலால் கரைந்த நாம் காஃபியிலும் கரைந்தோம். "சர்க்கரை போடவில்லையோ.." என்றாய். கோப்பைகளை இடம் மாற்றி வைத்தேன். இரண்டு பாக்கெட் சர்க்கரை மிச்சமானது.

58 comments:

Priya said...

Superb!!!

sathishsangkavi.blogspot.com said...

//"விண்மீன்கள் வானில் பலவுண்டு. நீ தான் என் வானின் நிலவு. நான் அழகாவது உன்னாலும், நீ ஒளிர்வது என்னாலும்"//

வாவ்......

இப்படி கவிதை சொல்லியே கவுத்துட்டாங்களா!!!!

Prabhu said...

இரண்டு பாக்கெட் சர்க்கரை மிச்சமானது.////

முடியல!

நீங்க எப்பவுமே இப்படிதானா? ஹா.. ஹ...

காதல் கசிய கசிய எழுதுறீங்களே!

CS. Mohan Kumar said...

டில்லியில் குளிர் அதிகம் என்பது எழுத்தில் தெரிகிறது :௦)

தராசு said...

//கோப்பைகளை இடம் மாற்றி வைத்தேன். இரண்டு பாக்கெட் சர்க்கரை மிச்சமானது.//

செம ஃபார்ம்ல இருக்கீங்க.

கலக்கல்.

நேசமித்ரன் said...

கவிதையாக ஒரு இடுகை
நன்றாக இருக்கிறது

வாழ்த்துகள்

Priya said...

சில வரிகள் என் நினைவுகளை தொட்டுச் சென்றது....
//"போதும்டா, நிறுத்து. எப்படி இப்படி வாய் வலிக்காம பேசுற! நீ பேசுறதைப் பார்த்தே எனக்கு தாகமெடுக்குது" என்று நடுவே நான் சொன்னதை நீ மதித்ததாகவே தெரியவில்லை.//

//நீ தான் என் வானின் நிலவு. நான் அழகாவது உன்னாலும், நீ ஒளிர்வது என்னாலும்//இப்படி பல...

//என்னை ரசித்து என் வெட்கம் தின்னும் உன் கண்கள், வேறெந்த நேரம் அமைய முடியும் இதை விட ரசனையாய்!//
நிச்சயமாக இதைவிட ரசனையாய் வேறெதுவும் இருக்க முடியாதுதான்.

கார்க்கிபவா said...

// pappu said...
இரண்டு பாக்கெட் சர்க்கரை மிச்சமானது.////

முடியல!

நீங்க எப்பவுமே இப்படிதானா? ஹா.. //

ரிப்பீட்டேய்

கார்க்கிபவா said...

//டில்லியில் குளிர் அதிகம் என்பது எழுத்தில் தெரிகிறது :௦//

அப்போ ஏப்ரல் மாசம்சீக்கிரம் வரட்டும்..

சுசி said...

வாவ்.... எப்டி சொல்றது விக்னேஷ்வரி.... சூப்பர்.

//என்னை ரசித்து என் வெட்கம் தின்னும் உன் கண்கள், வேறெந்த நேரம் அமைய முடியும் இதை விட ரசனையாய்//
என்ன ஒரு வரிகள்.....

//கடல், அலை, நிலா, காற்று, மேகம், வைரமுத்து, காதல், கமலஹாசன் என முடிவற்றுப் போகின்றது என்னை மயக்கும் உன் நீண்ட உரையாடல். //
அட.. யோகிக்கு வைரமுத்து தெரியுமா?

Vidhya Chandrasekaran said...

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி:)))

நேசமித்ரன் said...

:)

தேவன் மாயம் said...

"உனக்கான வெளி மிகப் பெரியது, வான் போல. அதில் எனக்கான இடம் சிறு விண்மீனது" என்றேன். "விண்மீன்கள் வானில் பலவுண்டு. நீ தான் என் வானின் நிலவு. நான் அழகாவது உன்னாலும், நீ ஒளிர்வது என்னாலும்" என்றாய். என்ன சொல்ல எனத் தெரியாமல் "காஃபி?" என்றேன்//

அழகான வரிகள்!!

செ.சரவணக்குமார் said...

காதலில் மூழ்கித் திளைக்கும் மனதிலிருந்து வெளிப்பட்ட கவிதையான வரிகள். அருமை.

கிருபாநந்தினி said...

விக்னேஷ்வரி! (நீ தங்கச்சிதான்! இருந்தாலும் பெரிய பெரிய விஷயமெல்லாம் எழுதுறதப் பார்த்து மெரண்டு அக்கான்னுட்டேன்! மன்னிச்சுக்க!) கவித்துவமா எழுதியிருக்கேங்கிறது மட்டும் தெரியுது; இத்த அனுபவிச்சுப் பாராட்டுற அளவுக்கு எனக்கு அனுபவம் பத்தாதுங்கிறதும் புரியுது! ஒரு ஆசைக்கு இந்தப் பின்னூட்டம் போட்டுட்டேன். ஆகையினால, படிச்சு ரிஜெக்ட் பண்ணிடு! ஓ.கே!

M.S.R. கோபிநாத் said...

விக்னேஷ்வரி, நான் உங்களுக்கு ஒரு விருது அனுப்பினேன். பார்த்தீர்களா?
http://bhrindavanam.blogspot.com/2009/11/blog-post_25.html

எம்.எம்.அப்துல்லா said...

விக்கி மீண்டும் மீண்டும் படித்தேன்.

//காதலால் கரைந்த நாம் காஃபியிலும் கரைந்தோம். "சர்க்கரை போடவில்லையோ.." என்றாய். கோப்பைகளை இடம் மாற்றி வைத்தேன். இரண்டு பாக்கெட் சர்க்கரை மிச்சமானது //

அட..அட..அட..

:))

Anonymous said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஏன் இப்படி....

Princess said...

arumaiyana kavithai frnd.. epdi kadhal pozhiya ezhuthreenga.. sooper.

-padhumai.

Raghu said...

//கோப்பைகளை இடம் மாற்றி வைத்தேன். இரண்டு பாக்கெட் சர்க்கரை மிச்சமானது//

இதுதான் விக்கி ட‌ச்!

க‌ல‌க்கிட்டீங்க‌, உங்க‌ளுக்கு யாருங்க‌ விக்னேஷ்வ‌ரின்னு பேர் வெச்ச‌து, ரொமான்ஸ்வ‌ரின்னு வெச்சுருக்க‌ணும்!

Anonymous said...

ரசனையாய் இருக்கு இந்தப்பதிவு

பா.ராஜாராம் said...

நேசமித்திரன் said..

//கவிதையாக ஒரு இடுகை
நன்றாக இருக்கிறது//

ரிப்பீட்டேய்..

ப்ரியமுடன் வசந்த் said...

//"போதும்டா, நிறுத்து. எப்படி இப்படி வாய் வலிக்காம பேசுற! நீ பேசுறதைப் பார்த்தே எனக்கு தாகமெடுக்குது" //

எவ்வளவு அழகா காதல் சொல்லி பேசியிருக்கீங்க...

ஹைய்யோ விக்கி இப்பிடி பொழம்பவச்சுட்டீங்களே...

காதலில் மூழ்கி முத்தெடுத்தவருக்கிந்த கவிதைட்டுரை எழுதுவது சுலபம்தானே

அரங்கப்பெருமாள் said...

//பேசிப்பேசியே கடற்கரையில் கடந்த நேரம், இங்கு பேசாமலே போனது.//

[வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல] - வள்ளுவன் வாக்கு.

சூப்பர்.

சர்க்கரை வியாதி இருந்தா என்ன பண்ணுறது புரியல...

ரோஸ்விக் said...

வரிக்கு வரி காதலும் கவிதையும் கலந்தோடுகிறது....
உண்மையில் எனக்கொரு மறு ஜென்மம் வேண்டும். இது போல இழைந்து இழைந்து காதலிக்க....நிஜமாகவே...

மிக மிக அருமை. :-)

இது கதையோ, கவிதையோ இன்னும் எனக்குப் பிடிபடவில்லை. ஆனால் காதல் மட்டும் கரைபுரண்டு ஓடுகிறது. (இப்போது என் நெஞ்சத்திலும்)

கபிலன் said...

சூப்பர்!
அருமையான நடை!

விக்னேஷ்வரி said...

நன்றி ப்ரியா.

வாங்க Sangkavi.

இன்னும் கொஞ்ச நாள்ல நீங்களும் எழுதுவீங்க பப்பு.

மே மாசத்துலேயும் காதல் பதிவுகள் உண்டுங்க மோகன்.

நன்றி தராசு.

நன்றி நேசமித்திரன்.

விக்னேஷ்வரி said...

மீண்டும் நன்றி ப்ரியா.

பதிவுக்கு கமெண்ட் போடாம, கமெண்டுக்கு கமெண்டா கார்க்கி. நடத்துங்க.

நன்றி சுசி.
அட.. யோகிக்கு வைரமுத்து தெரியுமா? //

அடுத்து, டெல்லில கடல் எங்க இருக்குன்னு கேப்பீங்களா சுசி... இதெல்லாம் அனுபவிக்கனும். ஆராயக் கூடாது.

அது பெருகிகிட்டே தான் போகுது வித்யா. கூடவே நானும். ;)

பதிவு நகைச்சுவையாவா இருக்கு நேசமித்திரன்... :(

நன்றி தேவன் மாயம்.

விக்னேஷ்வரி said...

நன்றி சரவணக் குமார்.

பரவாயில்லைங்க நந்தினி

பார்த்தேன் கோபிநாத். மிக்க நன்றி. சீக்கிரமே எல்லாருக்கும் பிரிச்சுக் குடுத்துர்றேன்.

நன்றி அப்துல்லா.

ஃப்ரீயா விடுங்க மயிலக்கா.

நன்றி பதுமை.

விக்னேஷ்வரி said...

நன்றி குறும்பன். அதுக்காக அம்மா வெச்ச பேரை மாத்த முடியாது.

நன்றி அம்மிணி.

வாங்க பா.ரா.

பொலம்பாதீங்க வசந்த். சீக்கிரமே ஒரு பொண்ணா பாருங்க. காதல் வளருதோ இல்லையோ, கவிதை வளரும்.

இப்படியெல்லாம் எடைக்கு மடக்கா கேள்வி கேட்டா எப்படிங்க அரங்கப் பெருமாள்.

வாங்க ரோஸ்விக். மறுஜென்மம் எதுக்குங்க... இப்போவே காதலிங்க.

நன்றி கபிலன்.

CS. Mohan Kumar said...

விக்னேஸ்வரி பற்றிய 25 விஷயங்கள் அறிந்து கொள்ள இந்த (http://veeduthirumbal.blogspot.com/) ப்ளாக்-கிற்கு வரவும். நான் எழுதும் வாரம் ஒரு பதிவர் வரிசையில் இந்த வாரம் விக்னேஸ்வரி பற்றி எழுதியுள்ளேன்

மகா said...

//லேசானத் தூறலுக்கு எழுந்து ஓடும் சிலர், தூறல் விழுவதே தெரியாமல் காதலில் விழுந்திருக்கும் பலர்//
nice.....

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க.

KASBABY said...

இயந்திர வாழ்கையில் வசித்து வரும் மனிதருக்கு கொஞ்சம் வாழவும் கற்று கொடுக்கிறது உங்கள் கட்டுரை.
அருமை...

"உழவன்" "Uzhavan" said...

நல்ல விவரணை. இறுதியில் சர்க்கரை மேட்டர் இனிப்பு :-)

விக்னேஷ்வரி said...

நன்றி மோகன்.

நன்றி மகா.

நன்றி அமித்து அம்மா.

நன்றி kasbaby

நன்றி உழவன்.

Unknown said...

கலையாமல் நின்ற என் தண்ணீரின் நடுவே கல் எறிந்தது போல் இருக்கிறது உங்களின் கதை, அருமையான வரிகள் நண்பரே

FunScribbler said...

அக்கா, வர வர லவ்ஸ் ரொம்ம்ம்ப சூப்பரா போகுது உங்க எழுத்துகளில். ரொம்ப நல்லா இருக்கு. ரசித்து படிக்கும் வண்ணம் இருக்கு.:)

நசரேயன் said...

காதல் ரசம் கரை புரண்டு ஓடுது

Rajalakshmi Pakkirisamy said...

//கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி:)))//

yaarungunga vidhya...

Rajalakshmi Pakkirisamy said...

//கோப்பைகளை இடம் மாற்றி வைத்தேன். இரண்டு பாக்கெட் சர்க்கரை மிச்சமானது.//

ha ha ha...Super

naangalam chinna ponnunga vikki....

Chitra said...

"ஏதோ கடற்கரை மணலில் நடை பழகுவது போல கால்களை மணலுக்குள் புதைத்து முழித்து நான் நிற்க, என் செல்லக் குறும்பைப் புரிந்தவனாய் உன் கைகள் கொடுத்தாய். அதன் பின் மலர்கள் மீது நடப்பது போன்றிருந்தும், முட்கள் மேல் நடப்பது போல் நான் சிரமப்பட உன் பிடிமானம் இறுகியது என் கைகளில். கடல் இன்னும் தூரத்தில் இருக்கக் கூடாதா என் ஏங்கியது மனது." - well-expressed and well-said. Superb!

புலவன் புலிகேசி said...

//கோப்பைகளை இடம் மாற்றி வைத்தேன். இரண்டு பாக்கெட் சர்க்கரை மிச்சமானது.//

என்னா கஞ்சத்தனம்...காதல் கசிகிறது...

trdhasan said...

நான் அழகாவது உன்னாலும், நீ ஒளிர்வது என்னாலும்" என்றாய். என்ன சொல்ல எனத் தெரியாமல் "காஃபி?" என்றேன்.
//

காதல்!
ஒவ்வொரு எழுத்திலும் இழையோடுகிறது......

சூர்யா said...

eppadi ippadi...இரண்டு பாக்கெட் சர்க்கரை மிச்சமானது.

Anbu said...

Raittu...

Mystic said...

wow ... What a romantic reading :)



by,
http://lonelyboyvideos.blogspot.com/

kanagu said...

/*இரண்டு பாக்கெட் சர்க்கரை மிச்சமானது*/

அருமையா இருந்துதுங்க.... :)

எப்டிங்க இப்படியெல்லாம்??? கலக்குங்க...

☼ வெயிலான் said...

//பார்த்து மெரண்டு அக்கான்னுட்டேன் //

:)))))

Shan Nalliah / GANDHIYIST said...

Great! Greetings from Norway!

copypaste said...

sarkkarai pool inirraaga ka(vi)thai

butterfly Surya said...

xlent, simply superb வேறு என்னத்த சொல்ல..

வாழ்த்துகள்.

விக்னேஷ்வரி said...

நன்றி ஸ்ரீதர்.

நன்றி தமிழ் மாங்கனி.

வெள்ளம் வராத அளவுக்கு இப்படியே ஓடும் நசரேயன்.

வித்யாவையா யாருன்னு கேக்குறீங்க..... ராஜி.........
நீங்க இந்தியா வாங்க, அப்புறம் பாக்குறோம் யாரந்த சின்னப் பொண்ணுன்னு. :)

நன்றி சித்ரா.

விக்னேஷ்வரி said...

காதலில் கஞ்சத்தனம் அவசியம் புலிகேசி.

நன்றி டி.ஆர்.தாசன்.

அப்படித் தான் சூர்யா.

வாங்க அன்பு.

நன்றி Mystic.

விக்னேஷ்வரி said...

நன்றி கனகு.

விடுங்க வெயிலான். எப்பவும் நடக்குறது தானே.

நன்றி Shan Nalliah.

நன்றி copypaste.

நன்றி சூர்யா.

Unknown said...

மணிரத்தினம் படம் பார்த்த எபெக்ட்...

சூப்பருங்கோ...

சுப. முத்துக்குமார் said...

I can't stop a smile that blossoms on my face after read your french kiss. Poetic-a oru posting. romba nalla irukku.. very interesting vigneshwari.

Unknown said...

இப்படி இருந்தால் யார் வீட்டிலும் சக்கரை வாங்க வேண்டிய அவசியம் இல்லை தானே.....