Tuesday, November 24, 2009

பத்து விதிகள் பத்தல...

எத்தனை நாள் தான் இருக்குற சரக்கையே வெச்சு ஓட்டுறது. எதிர்ப்ப் பதிவும் போடுவோமேன்னு நினைச்சு இந்தப் பதிவு.

தராசு மட்டும் தான் விதிகள் போடுவாரா... நாங்களும் எதிர்ப் பதிவா விதிகள் போடுவோம்ல.

கணவராயிருக்கப் பத்து விதிகள்.

1. எதை நாசூக்கா சொன்னாலும் புரியாதா உங்களுக்கு. மூஞ்சிக்கு நேரா நீங்க ஒரு மக்குன்னு சொல்லி உங்க முகம் போற கோணலைப் பார்க்க வேண்டாம்னு நினைச்சா வேற வழி இல்லை போலவே.

2. "உங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்" ன்னு நாங்க உருகி காதல் மொழி பேசும் போது "அப்போ ஒரு கப் டீ போட்டுக் கொடேன்" ன்னு உங்களால மட்டும் எப்படி எடக்கு மடக்கா யோசிக்க முடியுது.

3. தினம் தினம் நாங்க சமைக்குறதை சப்புக் கொட்டி சாப்பிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாம போற நீங்க, எப்போவோ அதிசயமா பிரட் டோஸ்ட் பண்ணிட்டா மட்டும் அதை புகழ்ந்து ரசிச்சு சாப்பிடுற சூட்சுமம் என்னன்னு புரிய மாட்டேங்குது.

4. நாங்க முக்கியமான விஷயம் சொல்லும் போது மட்டும் அதை விட முக்கியமா பேப்பர் படிக்குற மாதிரி நடிக்குறீங்களே. அந்த பொல்லாப்பு ஏன்...

5. காலைல வீட்டுல ரெண்டு பேரும் உருண்டு புரண்டு சண்டை போடாத குறையா ஒருத்தரையொருத்தர் திட்டி சண்டை போட்டு, அவங்கவங்க ஆபிஸ் போயிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் ஒண்ணுமே நடக்காத மாதிரி "அந்த கடலை பக்கோடா நல்லா செய்வியே, அதை இன்னிக்கு செய்யேன்" ன்னு கூசாம எப்படி கேக்க முடியுது....

6. எப்போவாவது உடம்பு முடியலை, சமையல் எப்படிப் பண்றதுன்னு சொல்றேன் சமைச்சிடுங்கன்னு சொன்னா, ஒரு மார்க்கமா தலையாட்டிட்டு அடுக்களையையே அமர்க்களம் பண்ணி வேலையை இரு மடங்காக்கி வைக்குறீங்களே, எங்களை பார்த்தா உங்களுக்குப் பாவமா இல்ல.

7. ராத்திரி மூணு மணி வரைக்கும் (ஓ, அது அதிகாலையா, சரி ராத்திரிக்கும் அதிகாலைக்கும் நடுவுல ஒரு நேரத்துல) உக்காந்து ஆபிஸ் வேலையை செய்யுற நீங்க, எப்போவாச்சும் பத்து மணிக்கே தூங்கினாக் கூட அடுத்த நாள் காலைல எழுந்து வாக்கிங் போக மாட்டேங்குறீங்களே, ஏன்...

8. நியூஸ் பேப்பர்ங்குற விஷயம் கண்டுபிடிக்கப்பட்டதே உங்களுக்காக மாதிரி நேரம் காலமில்லாம அடுத்த நாள் பேப்பர் வர்ற வரைக்கும் வரிவரியா முந்தின நாள் நியூஸ் பேப்பர் படிக்குறீங்களே. அப்படி அதுல என்ன தான் இருக்குன்னு எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

9. கடைக்கு சாமான் வாங்கப் போகும் போது குடுக்குற லிஸ்ட்டை வாங்கிட்டு வர்றீங்களோ இல்லையோ, புதுசா எது எதையோ வாங்கிட்டு வந்து குவிக்குறீங்களே, எப்போவாவது அடுப்படி ஷெல்ஃபும், ஃப்ரிட்ஜும் நிறைஞ்சு வழியுதே எங்க வைப்போம்னு தோணியிருக்கா.....

10. நாங்க வெளியூர் போயிட்டு வீட்டுக்குள்ள நுழையும் போது வீடு இருக்குற அலங்கோலத்தைப் பார்த்திட்டு எங்க கிட்ட அசடு வழியுற நீங்க, சாதாரண நாட்கள்ல கீழே ஒரு பேப்பர் இருந்தா கூட என்னமோ பெரிய கொலையே நடந்திட்ட மாதிரி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்குறது ஏன்...

உங்களைப் பத்தி சொன்னா, பத்து விதிகள் போதல. அதுனால பத்துக்கு ஒன்னு இலவசமா இன்னொன்னும் சேர்த்துக்கலாம்.
நாங்க சந்தோஷமா ஏதாவது சொன்னாலும், சீரியஸா சொன்னாலும், சோகமா சொன்னாலும், காமெடியா சொன்னாலும் கூட உங்க ஃபேஸ் ரியாக்ஷன் சேன்ஜ் ஆகாம மங்குனி மாதிரி ஒரே எபெக்டா இருக்கே, அதுல இருக்குற வில்லத்தனம் என்ன...

52 comments:

Rajalakshmi Pakkirisamy said...

ha ha ha ... kalakiteenga :)

CS. Mohan Kumar said...

ஐயோ பாவம் (நான் அவரை சொன்னேன்)

GIYAPPAN said...

சும்மா சொல்லக்கூடாது. ரொம்ப வேலை மெனக்கெட்டு யோசனை பண்ணி எங்களை சாடி இருக்கீங்க. பரவாயில்லை. இருந்தாலும் இந்த 7 -ஆம் ஐட்டம் மட்டும் என்னை யோசிக்க வைக்கிறது. ஆமாம் ஏன் இந்த சோம்பேறித்தனம் எனக்கு? ,

செ.சரவணக்குமார் said...

கலக்கிட்டீங்க போங்க, ஏன் இந்த கொல வெறி?

ப்ரியமுடன் வசந்த் said...

ஹ ஹ ஹா..

பத்துமட்டும்தானா?

இவ்வளவு பண்ணுனாலம் அவங்க அவங்க கணவர் மேல பாசமா இருக்குறீங்க பாருங்க அதுக்கு இந்த உலகமே எழுதிக்கொடுத்தலும் பத்தாது..

:)

தராசு said...

கிளம்பீட்டாங்கைய்யா, கிளம்பீட்டாங்கைய்யா,

//கடைக்கு சாமான் வாங்கப் போகும் போது குடுக்குற லிஸ்ட்டை வாங்கிட்டு வர்றீங்களோ இல்லையோ, புதுசா எது எதையோ வாங்கிட்டு வந்து குவிக்குறீங்களே, எப்போவாவது அடுப்படி ஷெல்ஃபும், ஃப்ரிட்ஜும் நிறைஞ்சு வழியுதே எங்க வைப்போம்னு தோணியிருக்கா.....//

எதோ நம்மாளுக்கு புடிக்குமேன்னு ஒரு புடவை ஒரு நகை இந்த மாதிரி எல்லாம் வாங்கிட்டு வந்தா, அதி அடுப்படியிலும், பிரிட்ஜுக்குள்ளயுமா வைப்பாங்க.

Raghu said...

//உங்க ஃபேஸ் ரியாக்ஷன் சேன்ஜ் ஆகாம மங்குனி மாதிரி ஒரே எபெக்டா இருக்கே, அதுல இருக்குற வில்லத்தனம் என்ன...//

அது போக்கிரி விஜ‌ய்கிட்ட‌யிருந்து க‌த்துகிட்ட‌தாயிருக்கும்!

ரொம்ப‌ நாள் க‌ழிச்சு ந‌க்க‌ல், நையாண்டி எல்லாம் டாப் கிய‌ரில் ப‌ய‌ணிச்சிருக்கு இந்த‌ ப‌திவுல‌:)

http://kurumbugal.blogspot.com

trdhasan said...

ஃபேஸ் ரியாக்ஷன் சேன்ஜ் ஆகாம மங்குனி மாதிரி ஒரே எபெக்டா இருக்கே //

"மங்குனி" னா என்னா?

சுசி said...

சூப்பர் விக்னேஷ்வரி...

சும்மா பிச்சு உதறிட்டீங்க போங்க.

அதிலேம் அந்த ஃபேஸ் ரியாக்ஷன் இருக்கே.... டாப்....

கண்மணி/kanmani said...

//நாங்க சந்தோஷமா ஏதாவது சொன்னாலும், சீரியஸா சொன்னாலும், சோகமா சொன்னாலும், காமெடியா சொன்னாலும் கூட உங்க ஃபேஸ் ரியாக்ஷன் சேன்ஜ் ஆகாம மங்குனி மாதிரி ஒரே எபெக்டா இருக்கே, அதுல இருக்குற வில்லத்தனம் //
:)))))))

Vinitha said...

Super! Same everywhere! :-)

ஹுஸைனம்மா said...

அட விக்னேஷ்வரி, நீங்க முந்திகிட்டீங்களா? வட போச்சே.. நானும் எழுதிகிட்டிருக்கேன். சரி, தொடர்ச்சியா போட்டுடலாம்..

//எப்போவாவது உடம்பு முடியலை, சமையல் எப்படிப் பண்றதுன்னு சொல்றேன் சமைச்சிடுங்கன்னு சொன்னா, ஒரு மார்க்கமா தலையாட்டிட்டு அடுக்களையையே அமர்க்களம் பண்ணி வேலையை இரு மடங்காக்கி வைக்குறீங்களே, எங்களை பார்த்தா உங்களுக்குப் பாவமா இல்ல.//

அந்த சமயத்துல வரும் பாருங்க ஒரு கொலவெறி..

தினேஷ் said...

அக்கா டரியல் ஆக்க கிளம்பிட்டாங்க...

விக்னேஷ்வரி said...

நன்றி ராஜி.

நம்மளைக் கட்டிக்கிட்டா பாவமில்லாம என்ன மோகன்.

உங்களை சாட ரொம்பவெல்லாம் யோசனை பண்ண வேண்டியதில்லை ஐயப்பன் சார். உங்களை நினைச்சாலே எல்லாம் தானா கொட்டுது.

நன்றி சரவணக் குமார். சும்மா தாங்க.

எதோ நம்மாளுக்கு புடிக்குமேன்னு ஒரு புடவை ஒரு நகை இந்த மாதிரி எல்லாம் வாங்கிட்டு வந்தா, அதி அடுப்படியிலும், பிரிட்ஜுக்குள்ளயுமா வைப்பாங்க. //
இது என்னது, ஏதோ புதுசா நீங்க பண்ணாததெல்லாம் சொல்றீங்க. நான் சொன்னது வேற. புதுசா எதையாவது வாங்கிட்டு வந்து குடுத்து இதை சமைச்சுக் குடுன்னு நீங்க உயிரை எடுப்பீங்களே அதை சொன்னேன் தராசு.

பத்து இல்ல வசந்த், பதினொன்னு. சரியா பாருங்க.
இவ்வளவு பண்ணுனாலம் அவங்க அவங்க கணவர் மேல பாசமா இருக்குறீங்க பாருங்க அதுக்கு இந்த உலகமே எழுதிக்கொடுத்தலும் பத்தாது.. //
அப்பப்போ நீங்க இப்படியெல்லாம் டயலாக் பேசி தான் வண்டி ஓட்ட வேண்டியிருக்கு. ம்.

விக்னேஷ்வரி said...

//உங்க ஃபேஸ் ரியாக்ஷன் சேன்ஜ் ஆகாம மங்குனி மாதிரி ஒரே எபெக்டா இருக்கே, அதுல இருக்குற வில்லத்தனம் என்ன...//

அது போக்கிரி விஜ‌ய்கிட்ட‌யிருந்து க‌த்துகிட்ட‌தாயிருக்கும்! //
கார்க்கி, எங்கிருந்தாலும் உடனே இங்கு வரும்படி அழைக்கப்படுகிறார். :)

நன்றி குறும்பன்.

"மங்குனி" னா என்னா? //

நல்ல கேள்வி மணி, யாராவது கல்யாணம் ஆனவங்க அவங்க மனைவிகிட்ட முழிப்பாங்க. பார்த்து தெரிஞ்சுக்கோங்க.


நன்றி சுசி.

வாங்க கண்மணி.

நன்றி வினிதா. எல்லா இடத்திலேயும் ஒண்ணா இருக்குறதுனால தான் விதிகள். :)

வாங்க ஹுஸைனம்மா. சீக்கிரம் எழுதுங்க. அங்கேயும் வந்து கும்மியடிக்கலாம்.

வாங்க சூரியன்.

புலவன் புலிகேசி said...

பாவங்க உங்க அவர்....

அமுதா said...

:-))))))))))))))))))

Sen22 said...

:))))))
Sema Kalakkal..

☼ வெயிலான் said...

// ஐயோ பாவம் (நான் அவரை சொன்னேன்)//

:)))

iniyavan said...

விக்கி,

இது டூ மச்.

வாங்க அப்படியே மொழிப்பெயர்த்து உங்களவர்க்கு அனுப்புறேன்.

sathishsangkavi.blogspot.com said...

பொறுத்தது போதும்னு பொங்கிஎழுந்துட்டீங்க.......

ரொம்ப அனுபவிச்சு எழுதுனீங்களோ........

ஐயோ பாவம் (நீங்கதான்) ஏன்னா நீங்க என்ன சொன்னாலும்

கேக்கமாட்டார் இல்ல(அவருதான்).....

☀நான் ஆதவன்☀ said...

:))))))

கிருபாநந்தினி said...

பத்து விதிகள் பத்தாது! இந்த ஆம்புளைங்களுக்கு குறைஞ்சபட்சம் நூறு விதிகளாவது போடோணும்! நான் கிருபாவைக் கட்டிக்கிட்டது அப்படி நூறு விதிகள் போட்டுத்தான் யக்கோவ்!

Anbu said...

ha ha ha...

:-))))))))

அன்புடன் அருணா said...

கோடி விதிகள் உள்ள ஒரு பதிவை 11 விதியாக குறும்பதிவா போட்ட விக்னேஷ்வரியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

பா.ராஜாராம் said...

ஹா..ஹா..ஹா..

பீ...கேர் புல்... (நான் எங்களை சொன்னேன்...)

பதினொன்னு சும்மா டாப் பாஸ்!

பதினொன்னும் பாஸ்!

சூர்யா said...

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல..அப்புறம் உங்க எதிர் பதிவு பத்தி..கடைசி வரிகள்...உங்க ஃபேஸ் ரியாக்ஷன் சேன்ஜ் ஆகாம மங்குனி மாதிரி ஒரே எபெக்டா இருக்கே, அதுல இருக்குற வில்லத்தனம் என்ன. நாங்க எதாவது ரியாக்ஷன் கொடுக்க பொய் அதுலேந்து ஒரு எதிர் கேள்வி கேப்பீங்க பாருங்க "என்னா வில்லத்தனம்" அதுக்காக தான், நாங்க எல்லாரும் "நரசிம்ம ராவ் " ஆகி விடுகிறோம்..சொன்னாதானே பிரெச்சனை...சொல்லாட்டி...அப்பாடா ஒரு அளவுக்கு சமாளிசாச்சு..கல்யாணம் பண்ண இவ்வளவு நடிக்க வேண்டியது இருக்குமோ...இப்ப புரியுது எப்படி நெறைய பேரு எப்படி அழகா பதிவு போடுறாங்கன்னு..

விஜய் said...

எங்களுக்கு பத்து விதியா

நாங்களும் போடறோம்

வாழ்த்துக்கள்

விஜய்

வினோத் கெளதம் said...

ஹா..ஹா..ஹா...செம காமெடி..:))

நேசமித்ரன் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீஙக மேடம்

ஏன் நீங்க கவிதைகள் எழுதுறதை விட்டுட்டீங்க ?

:)

நேசமித்ரன் said...

வோட்டு போட்டாச்சுங்க

सुREஷ் कुMAர் said...

கெளப்புங்க.. கெளப்புங்க..

உங்க மாம்ஸ் இத படிச்சுட்டரா..
படிச்சுட்டு ஃபேஷ் எக்ஸ்ப்ரெசன் இன்னும் மங்குனி மாதிரியே வெச்சிருக்காரா..

M.S.R. கோபிநாத் said...

விக்னேஷ்வரி..

/* என் கண் அவன் - என் கணவன் */

இந்த பதிவில் நீங்க பொய் தானே சொல்லியிருக்கிங்க...

(கலைஞர் மாதிரி நாங்களும் டேடாபேஸ் மேயின்டைன் பன்னுவோம்ல)

நசரேயன் said...

உண்மையிலே பத்து விதிகள் பத்தல

Anonymous said...

// நியூஸ் பேப்பர்ங்குற விஷயம் கண்டுபிடிக்கப்பட்டதே உங்களுக்காக மாதிரி//

அது மட்டுமா. டீவீல 20 சேனல் இருக்கு. அதே செய்தியை திரும்பத்திரும்ப எல்லா சேனலையும் மாத்தி மாத்தி நாள் பூராம் பாக்கறது.

Sabarinathan Arthanari said...

நன்றாக இருக்கிறது சகோதரி :)

விக்னேஷ்வரி said...

வாங்க புலிகேசி. என்ன பண்ண, எப்போவுமே கணவர்ஸ் பாவமாகிடுறீங்க.

வாங்க அமுதா.

நன்றி Sen22.

வாங்க வெயிலான்.

அவர் மெயில் ஐடி தரட்டா உலக்ஸ். எப்போவும் நானே மொழிபெயர்த்து போரடிச்சிடுச்சு.

வாங்க Sangkavi.

மீதி எண்பத்தொன்பதை நீங்க போட்டுடுங்க கிருபானந்தினி.

விக்னேஷ்வரி said...

வாங்க நான் ஆதவன்.

வாங்க அன்பு.

வாங்க அருணா, மன்னிச்சுக்கோங்க. தப்புத் தான். :)

நன்றி பா.ரா.

ஏற்கனவே ஒருத்தர் போட்டதுக்கு பதில் தான் விஜய் இது. நீங்க மறுபடியுமா....

நன்றி வினோத் கௌதம்.

இந்த பதிவில் நீங்க பொய் தானே சொல்லியிருக்கிங்க...//
அதுவும் உண்மை. இதுவும் உண்மை கோபிநாத்.

(கலைஞர் மாதிரி நாங்களும் டேடாபேஸ் மேயின்டைன் பன்னுவோம்ல)//
ஆஹா, நான் அம்மா (அவுகளை சொன்னேன்) இல்லைங்க.

விக்னேஷ்வரி said...

ஆமா நசரேயன்.

நல்லா சமாளிக்குறீங்க சூர்யா.

நன்றி நேசன். நீங்கல்லாம் எழுதுறதைப் பார்த்துட்டும் நான் எப்படிங்க எழுதுறது...
ஓட்டுக்கும் நன்றிங்க.

உங்க மாம்ஸ் இத படிச்சுட்டரா..
படிச்சுட்டு ஃபேஷ் எக்ஸ்ப்ரெசன் இன்னும் மங்குனி மாதிரியே வெச்சிருக்காரா..//
இப்படியெல்லாம் பப்ளிக்கா கேக்கக் கூடாது சுரேஷ். அப்புறமா சொல்றேன்.

ஆமா அம்மிணி, அப்படி என்ன இருக்கு அதுலன்னு எனக்குப் புரியவே மாட்டேங்குது.

நன்றி சபரிநாதன்.

Vidhya Chandrasekaran said...

kalakkal:)

ராஜன் said...

அசத்துங்க...

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

புதுசா இருக்கே,

இப்படியெல்லாம் நடக்குதா? !!!

Priya said...

இப்படி வெறும் பத்து விதிகளெல்லாம் போதாது...உண்மையிலே உங்க தலைப்பு மாதிரியே... பத்தாது!

kanagu said...

yen indha kolaveri???

aana sema comedy :) :)

/*"உங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்" ன்னு நாங்க உருகி காதல் மொழி பேசும் போது "அப்போ ஒரு கப் டீ போட்டுக் கொடேன்" ன்னு உங்களால மட்டும் எப்படி எடக்கு மடக்கா யோசிக்க முடியுது.*/

:) :)

சிவாஜி சங்கர் said...

ஐயோ பாவமுங்க...

கிருபாநந்தினி said...

\\மீதி எண்பத்தொன்பதை நீங்க போட்டுடுங்க கிருபாநந்தினி.// விக்னேஷ்வரி அக்கா! இதை நீங்க சொல்ற வரைக்கும் நான் பிளாக் எழுத ஆரம்பிக்கலை. உங்க இந்த பதில்தான் என்னையும் பிளாக் எழுதத் தூண்டிச்சு. நீங்க சொல்ற மாதிரி 89-ஐயும் போடணும்னு ஆர்வம் அடிச்சுக்குது! கண்டிப்பா போடுவேன். அதுக்கு முன்னே இந்த அச்சுப்பிச்சு ஆரம்பிச்சிருக்குற பிளாகையும் கொஞ்சம் படிச்சு, உங்க கருத்தைச் சொல்லுங்கக்கா! உங்க பேரைச் சொல்லி எங்கூரு ஐயனாரு கோயில்ல சூறைத்தேங்காய் உடைக்கிறேன்!

Dhiyana said...

சுப்பர்ப்பா.. இத அவருக்கு மொழி பெயர்த்துச் சொல்லியாச்சா? ஒரே நாளில் உங்க அனைத்து பதிவுகளையும் பார்த்துட்டேன் விக்னேஷ்வரி. ரொம்ப நல்லா எழுதுறீங்க..

creativemani said...

மிகவும் ரசித்தேன்.. அந்த அதிர்ஷ்டசாலிக்கு வாழ்த்துக்கள்...

சத்ரியன் said...

//நாங்க சந்தோஷமா ஏதாவது சொன்னாலும், சீரியஸா சொன்னாலும், சோகமா சொன்னாலும், காமெடியா சொன்னாலும் கூட உங்க ஃபேஸ் ரியாக்ஷன் சேன்ஜ் ஆகாம மங்குனி மாதிரி ஒரே எபெக்டா இருக்கே, அதுல இருக்குற வில்லத்தனம் என்ன...//

விக்னேசுவரி,

போனஸ்-'னு போட்டு, எல்லாத்தையுமா புட்டுபுட்டு வெக்கிறது.? இந்த பொம்பளைங்களே இப்படித்தான்." வீட்டு"க்குள்ள எவ்வளவு-'ன்னாலும் தாங்கிக்கிட்டு, வாய்ப்பு கிடைக்கும் போது "வேட்டு" வெக்கிறது,.

விக்னேஷ்வரி said...

நன்றி வித்யா.

நன்றி ராஜன்.

ச்சும்மா பாலகுமாரன்.

ஹாஹாஹா, ஆமா ப்ரியா.

வாங்க கனகு.

நாங்களும் தாங்க சிவாஜி சங்கர்.

வாழ்த்துக்கள் கிருபானந்தினி. இப்போவே பார்த்திடுறேன்.

வாங்க சத்ரியன்.

நன்றி தீஷு. மொழி பெயர்த்தாச்சுங்க.

நன்றி மணிகண்டன்.

அன்புடன் மலிக்கா said...

சத்தியமா சொல்றேன் விக்கி, இந்தபத்தில் எதுவுமே என்மச்சானுக்கு பொருந்தாதுங்கோ, ஏன்னா, எல்லாமே இங்கு தலைகீழ். ரொம்ப ரொம்ப நல்லவருங்கோ பாவம் நானில்லைங்கோ அவுகதான்.

விக்கி நேரம் கிடைக்கும்போது எங்கவீட்டுக்கு வந்துட்டுபோங்க..
இதோ அட்ரஸ்

http://niroodai.blogspot.com/

வெள்ளிநிலா said...

வெள்ளிநிலா பத்திரிகையில் தங்களுடைய படைப்பான "பத்து விதிகள் பத்தல..." என்ற படைப்பை பிரசுரம் செய்யலாமா??

நன்றி
வெள்ளிநிலா