கல்லூரிக்குள் நான் நுழைந்த பொழுது அது. பேஷன் டிசைனிங் படிக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தினால் அம்மா வாங்கிக் கொடுத்த எஞ்சினியரிங் சீட்டை ஒரு பக்கமாய் ஒதுக்கி விட்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டில் நேரடியாக வந்தேன். பயங்கர எதிர்பார்ப்புகள். படிப்பதற்காக முதன் முறை மதுரை. பழக்கமான ஊர் தான் என்றாலும் படிப்பதற்கு எதிர் கொள்ளப் போகும் சவால்கள் (!!??!?!?) என்னவாக இருக்கும் என்ற பயத்துடனே வந்தேன்.
முதல் நாள் வகுப்பில் நுழைந்ததுமே எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தார்கள். அப்படிப் பார்க்குமளவு என்ன பிரச்சனை என எனக்குத் தெரியவில்லை. எங்கள் லெக்சரர் சக்கு மேடம். (அவர்களுக்கு எங்களின் செல்லப் (!!) பெயர்.) அவர் தான் என்னை முதலில் வகுப்பில் வரவேற்றார். மதிப்பெண்களைக் கேட்டு விட்டு, படிக்கும் பிள்ளை என நினைத்தார் போல. வகுப்பில் முதல் நாளே கடைசி பெஞ்சின் கடைசி சீட்டை தேடி அமர்ந்தேன். பின் தான் தோழிகள் ஒரு நட்புப் பார்வை பார்த்தனர். நல விசாரிப்புகள், அறிமுகங்கள் முடிந்தன. நம் பேச்சைக் கேட்ட பின்னர், நம்மைப் பிடிக்காதோர் இருப்பரா... வகுப்பிலிருந்த பத்தொன்பது பேரில் பதினெட்டு பெரும் (என்னை விடுத்து) என் தோழிகள். ஒருவர் மற்றவர் மீது கொண்டிருந்த அன்பு, இப்போது நினைத்தால் இழந்து விட்ட வலியாகத் தெரிகிறது.
சரி, கல்லூரி என்றாலே கலாய்த்தல் வேண்டாமா... மேட்டருக்கு வருவோம். வகுப்பில் ஐந்து பேர் ஹாஸ்டல் வாசிகள். எங்கள் ஐவருக்காக மற்ற தோழிகள் செய்த உதவிகள் கொஞ்ச நஞ்சமல்ல. எங்களின் பேவரிட் மேடம் சக்கு. பேவரிட் என்றால் எங்களால் பாடாய்ப் படுத்தப்பட்டவர். அவர்களின் வகுப்பில் நாங்கள் செய்யாத கூத்துக்களல்ல. ஒவ்வொரு டிபன் பாக்சாய்த் திறப்பது, எல்லோருக்கும் சாக்லேட் பாஸ் செய்து சாப்பிடுவது, open hair வைத்து முடியால் ஹெட் போனை மறைத்து பாடல் கேட்பது, கிளாஸ் டெஸ்ட்களின் போது டேபிள் மேலேயே நோட் புக்கைத் திறந்து வைத்து எழுதியது, மேடம் திரும்பி போர்டில் எழுதும் நேரங்களில் வகுப்பறையிலிருந்து எழுந்து கேன்டீன் போவது என்று ஸ்ட்ரிக்டான காலேஜில் நாங்கள் செய்த சேட்டைகளுக்கு அளவில்லை.
ஒரு நாள் நானும் என் தோழி ரேவதியும் வகுப்பில் காரணமே இல்லாமல் சிரிக்க வெறுப்பாகி விட்டார் மேடம். இருவரையும் எழுப்பி காரணம் கேட்க, காரணமே இல்லை என சொல்லியும் அவரால் அதை ஏற்க முடியவில்லை. நாங்கள் அவரைத் தான் கேலி செய்து சிரிப்பதாக அவர் எண்ணிவிட்டார் போலும். அவர் தொடர்ந்து கோபத்தில் கத்த, விடாமல் நாங்கள் சிரிக்க, வெறுத்துப் போய் வகுப்பிலிருந்து வெளியேறி விட்டார். உண்மையிலேயே அன்று சிரித்ததற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை.
இப்படியே எல்லா சேட்டைகளிலும் மைய ஆளாக நானிருக்க, தனியாக focus செய்யப்பட்டேன். வாரத்திற்கொரு முறை டிபார்ட்மென்ட் என்கொயரியில் நின்று, கேள்வி கேட்டவர்களே வெறுத்துப் போய் என்கொயாரி கேன்சல் செய்ததெல்லாம் உண்டு. வகுப்பில் எந்த ஒரு காதல் விவகாரம் கசிந்தாலும் அழைக்கப்படுவது நான் தான். அப்போது எனக்கும் காதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றாலும் தோழிகளின் காதலுக்குத் துணை போயிருப்பேன் என்றொரு நல்ல பெயர். அப்போதும் ஏதாவது ஏடாகூடமாக சொல்லி விட்டு வந்து விடுவேன். அதை வைத்து அடுத்த ஒரு மாதத்திற்கு கதை ஓடும். இதனிடையே பிரச்சனை யாருக்கோ அவள் Out of focus ஆகி விடுவாள். நான் மாட்டிக் கொள்வேன்.
அப்படித் தான் ஒரு முறை தோழியின் காதல் கடிதமொன்று மேடம் கையில் கிடைத்து விட்டது. அவளை அழைக்காமல், வழக்கம் போல் என்னை அழைத்தார்கள். ஐந்து வருடமாய்த் தொடர்ந்த தோழியின் காதல் கதை அது. இருவருக்குள்ளும் ஏதோ சிறு சண்டை வர, அவன் அவளிடம் மன்னிப்பு கேட்டு எழுதியிருந்தான். கடிதத்தின் விவரம் எனக்கு சொன்னதும், நான் மேடமிடம் "இது ஒரு தலைக் காதல். அவன் தேவையில்லாது அவள் பின்னால் வருகிறான். ஒவ்வொரு முறையும் இவள் அவனை திட்டுவதும், அதற்குப் பின் அவன் தவறுக்கு வருந்தி இவளிடம் மன்னிப்புக் கேட்பதும் தொடர்கிறது. இதில் அவளின் தவறொன்றுமில்லை. என்ன, கோபத்தில் ஒரு நாள் அவன் இவளைத் தூக்கிக் கொண்டு போகப் போகிறான்." என்று சொல்லி விட்டேன்.
இதில் குழப்பம் என்னவென்றால் கடிதம் எழுதப்பட்டது சுபஸ்ரீ என்ற சுபாவிற்கு. நான் கதை சொன்னது சுபாஷினி என்ற சுபாவை வைத்து. இதில் சுபஸ்ரீக்கு எந்தக் குழப்பமுமில்லாமல் காதல் நகர, சுபாஷினி வீட்டிற்கு தகவல் கொடுக்கப்பட்டு அவளின் அண்ணன் அவளை தினமும் வந்து கல்லூரிக்கு விட்டு செல்வதும், அழைத்து செல்வதுமாக கூத்து தொடர்ந்தது. சுபாஷினிக்கு விஷயம் தெரியுமென்றாலும் அவளும் இன்னொரு சுபாவைக் காப்பத்துவதற்காக ஒன்றும் சொல்லவில்லை.இப்படி பல கதைகள் பல விதமாக மாற்றப்பட்டு வலம் வந்த நாட்களவை.
மதியம் வகுப்பிலிருக்கும் பத்தொன்பது பேரும் ஒன்றாக ஒரு பெரிய ரவுண்டாக அமர்ந்து அனைத்து வீட்டு உணவையும் ஆளுக்கொரு வாயாக சாப்பிட்டிருக்கிறோம். எங்களைப் பார்த்து பொறாமை கொள்ளாத டிபார்ட்மென்ட் இல்லை. ஒவ்வொருவரையும் எவ்வளவு காலை வாரினாலும் கோபம் கொள்ள மாட்டோம். நல்ல நட்பு, அதையும் தாண்டிய புரிதல், விட்டுக் கொடுக்கும் அன்பு, பொறாமையில்லாத போட்டி, உரிமையான செல்லக் கோபம், உடனே ஆகும் சமாதானம், எதிர்பார்ப்பில்லாத உதவி என அன்பு மழையில் நாங்கள் நனைந்த நாட்களவை.
கிளாஸ் முழுவதும் மாஸ் பங்கடித்தது, சினிமா தியேட்டரில் பசங்களை விட அதிக சவுண்டு விட்டு விசிலடித்துக் கத்தியது, ட்ரைனிங் போகும் போது பஸ்ஸில் செய்த சேட்டைகள், பெரியார் பஸ் ஸ்டாண்டில் டாப்படித்த பிளாட்போர்ம்கள், மதுரையில் மிச்சம் வைக்காமல் சுற்றிய ஏரியாக்கள், எக்சாமில் ஒருவருக்கொருவர் பேப்பர் பாஸ் செய்து உதவிய நேரங்கள் என அகலாத நினைவுகள் பல.
இப்போதும் எப்போதாவது தொலை பேச நேர்ந்தாலோ, நேரில் சந்தித்தாலோ அதே அன்பு மாறாமல், எங்கள் கதை பேச நேரங்கள் போதவில்லை. "அவர் வந்திடுவாரு நான் கிளம்பறேன்", "குழந்தை எழுந்திருச்சிருப்பா", "மாமியாரை கோவிலுக்குக் கூட்டிட்டுப் போகணும்" என்று ஏதோ ஒரு பொறுப்பு நினைவிற்கு வர சொல்லா நட்பின் இதத்தை ஒரு கட்டியணைத்தலில் பரிமாறி விடை பெறுகிறோம்.
மூன்றாம் பிறை
மறுபக்கத்துக்கு
துப்பட்டா
சிறகு முளைத்த பருவம் அது
பூப்பதற்கு காரணம் கேட்டால்
விழிக்கும் செடி போல்தான்
பின் வரிசை புன்னகைகள்
மேகத்தை விரித்து வெட்டி
நட்சத்திர பொத்தான் தைக்கும்
கனாப் பருவம்
மாறாத சோலையாய்
பால்யத்தின்
நினைவுத் தடங்கள்.
காலங்கள் கடந்துவிட்டாலும்
நம் நினைவுகளை
கடக்கையில்
எப்போதோ வந்து போன
அம்மைத் தழும்பாய்
ஏதோ ஒரு பிரிவு வலி.
49 comments:
:-))))))
விக்கி,
இல்லாத அலும்பெல்லாம் பண்ணியிருக்கீங்க.
நீங்க லவ் மேரேஜா??
mmm u noughty girl :))
:-)))
கவிதை மிக அருமை.விக்னேஷ்!
பயங்கர சேட்டையா இருந்திருக்கே....
//காலங்கள் கடந்துவிட்டாலும்// :-)
அருமை!
அய்யோ அய்யோ உலகநாதன் உலகம் புரியாத நாதனா இருக்காரு. நம்ம சிங்க மச்சான் பத்தி எடுத்து விடுங்க விக்கி:-))
கல்லூரிப் பருவ நாட்கள் அழகானவை; அருமையானவை; ரசனையானவை! உங்கள் பதிவு அதை நிரூபிக்கிறது.
அது ஒரு அழகிய கனாக்காலம். உங்க கல்லூரி வாழ்வியலும்.... பின் தோன்றும் கவிதையும் அற்புதம்... என்னையும் 15 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து சென்று மனதை ஏதோ செய்தது.
//பேஷன் டிசைனிங் படிக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தினால் அம்மா வாங்கிக் கொடுத்த எஞ்சினியரிங் சீட்டை ஒரு பக்கமாய் ஒதுக்கி விட்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டில் நேரடியாக வந்தேன்//
இந்த இடத்துலேயே நீங்க ஜெய்ச்சிட்டிங்க..
நல்லா அட்டாகாசம் பண்ணி இருக்கிங்க போல படிக்கிறப்ப..:)
உங்க பஞ்சாயத்தெல்லாம் எல்லாம் உங்க காலேஜ்ல நம்பினாங்கே
ஹயோ ஹயோ ! அவங்க எல்லாம் நினைத்த எனக்கு பாவமா இருக்கு !
என் தளத்திற்கு வந்து பின்னூட்டம் இட்டத்திற்கு நன்றி அக்காவ் ! சிங் அய்த்தான் எப்படி இருக்கார் ? :)
//பழக்கமான ஊர் தான் என்றாலும் படிப்பதற்கு எதிர் கொள்ளப் போகும் சவால்கள் (!!??!?!?)//
மொத்தத்தில மதுரை பெரிய சவாலை சந்திச்சிருக்கு.
//சொல்லா நட்பின் இதத்தை ஒரு கட்டியணைத்தலில் பரிமாறி விடை பெறுகிறோம்.//
உங்களுக்கு இப்டியாவது பாத்துக்க முடியுது... ஹூம்.
கவிதை அருமை.
மதுரையில இப்போலாம் பொண்ணுங்க அட்டகாசம் தாங்கலை. வாரணம் ஆயிரம் போயிருந்தப்போ எங்க சைட் எல்லாம் சைலண்ட். எல்.டி.சி.பொண்ணுங்க போட்ட ஆட்டம் இருக்கே....
எல்லாம் நீங்க ஆரம்பிச்சு வச்சதுதான் நினைக்குறேன்.
நீங்க எந்த காலேஜ்?
//ஒரு பக்கத்துக்கு
மூன்றாம் பிறை
மறுபக்கத்துக்கு
துப்பட்டா
சிறகு முளைத்த பருவம் அது
பூப்பதற்கு காரணம் கேட்டால்
விழிக்கும் செடி போல்தான்
பின் வரிசை புன்னகைகள்//
அட அட அட...
அருமையான கல்லூரி நினைவுகள்
ஃபேசன் டிசைனிங்?
தமிழ்நாடு பாலிடெக்னிக்?
மாஸ்கட்டடிக்காத கல்லூரி நாள் இனிக்காது..
ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க...பெரிய வாலா இருந்திருப்பீங்க போல...
எனக்கு பிடித்து , ரசித்த வரிகள்
பூப்பதற்கு காரணம் கேட்டால்
விழிக்கும் செடி போல்தான்
பின் வரிசை புன்னகைகள்
எப்போதோ வந்து போன
அம்மைத் தழும்பாய்
ஏதோ ஒரு பிரிவு வலி.
அப்புறம் , உங்களோட கேள்விக்கு பதில் எல்லாம் நல்லபடியா நடந்தால், பத்திரிக்கை தங்களக்கு அனுப்புவேன்...பார்க்கலாம் , :)
:) Kallori natkal enrum alganavae :)
சுருள்வத்தி(Falshback) சூப்பர்.
சுருள்வத்தி(Flashback) சூப்பர்.
//உண்மையிலேயே அன்று சிரித்ததற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை.//
காரணமே இல்லாமல் சிரித்துக்கொண்டிருந்த நாட்கள் ஞாபகத்திற்கு வருகிறது. என்னதான் பேசி சிரிப்பீங்கன்னு எல்லாரும் கேட்ட அதே கேள்வி. கல்லூரியில் வகுப்பில் 13 பெண்கள் மட்டுமே. ஆனாலும் சிரிப்பிற்கு சந்தோஷத்திற்கும் குறைவே இல்லை.
கலகலன்னு போகும்போதே சின்னதா ஒரு பயம்....
கவிதை அழகாய் இருக்கிறது.வலியை விட்டுச்செல்கிறது.
//மீண்டும் வேண்டும் நாட்கள்...//
aaha..Thaangathu. .thaangaathu
பாலிடெக்னிக்ல இவளோ அட்டகாசங்களா!.
//ஏதோ ஒரு பொறுப்பு நினைவிற்கு வர//
ஆமாங்க. உண்மைதான்.
ஆமாம் உங்க பேரு என்ன விக்னேஷா இல்ல விக்னேஸ்வரியா ??
செம சேட்ட பண்ணி இருக்கீங்க ??
##இப்போதும் எப்போதாவது தொலை பேச நேர்ந்தாலோ, நேரில் சந்தித்தாலோ அதே அன்பு மாறாமல், எங்கள் கதை பேச நேரங்கள் போதவில்லை. "அவர் வந்திடுவாரு நான் கிளம்பறேன்", "குழந்தை எழுந்திருச்சிருப்பா", "மாமியாரை கோவிலுக்குக் கூட்டிட்டுப் போகணும்" என்று ஏதோ ஒரு பொறுப்பு நினைவிற்கு வர சொல்லா நட்பின் இதத்தை ஒரு கட்டியணைத்தலில் பரிமாறி விடை பெறுகிறோம்.###
கடைசில சென்டிமென்ட்ல முடிச்சிடிங்க
நல்ல பதிவு
இது ஒரு இனிமையான Nostalgia
வாங்க அன்பு.
வாங்க உலகநாதன். ஆமாங்க, ஆனா லவ் பண்ணனும்ங்குற அறிவெல்லாம் வேலைக்கு வந்தப்புறம் தான் வந்தது. :)
வாங்க அப்துல்லா.
எழுதின கை அப்படி பா.ரா.
இது சேம்பிள் தான். மொத்தமா சொன்னா தலை கிறுகிறுத்துப் போய்டுவீங்க வெயிலான்.
நன்றி வினிதா.
அவரை எதுக்கு ஆட்டைக்குள்ள சேர்த்திக்கிட்டு. அவரு பாவம், ஒரு பக்கமா இருக்கட்டும் விடுங்க அபி அப்பா.
நன்றி ரவிப்பிரகாஷ்.
நன்றி கருணாகரசு.
நாம எப்போ தான் பிடிவாதம் பண்ணி ஜெயிக்காம இருந்தோம் வினோத் கௌதம்.
நம்புற அளவுக்கு நடிச்சோம்ல வளர்பிறை.
வாங்க சுசி. மதுரைக்கு வந்த சோக காலம்னு டைட்டில் வெச்சிருக்கலாமோ... :)
எல்.டி.சி.யெல்லாம் சொல்லவா வேணும். அவங்க ஆட்டத்துக்கு என்னைக்கும் குறைச்சலிருக்காதே. நான் Women's Polytechnic பப்பு.
அட, பாலிடெக்னிக்கை கரெக்டா எப்படி சொன்னீங்க பிரியமுடன் வசந்த்...
மாஸ்கட்டடிக்காத கல்லூரி நாள் இனிக்காது.. //
சரியா சொன்னீங்க.
நன்றி சூர்யா. காலேஜ் நேரத்துல வால்தனம் பண்ணாம எப்படி...
எல்லாம் நல்லபடியாகி உங்கள் திருமணப் பத்திரிகை பெற பிரார்த்திக்கிறேன்.
ஆமா mystic
நன்றி கோபிநாத்.
ஆமா அம்மிணி, எல்லோருக்கும் இப்படி ஒரு அனுபவம் இருந்திருக்கு.
நன்றி வேல்ஜி.
வாங்க ராஜி.
எங்க இருந்தாலும் அட்டகாசம் பண்ணுவோம்ல. நாங்கல்லாம் மதுரைக்காரய்ங்க. :)
நன்றி அரங்கப் பெருமாள்.
நீங்க எப்படி இருக்கீங்க அரங்கப் பெருமாள். Hope you are getting better now.
"விக்கி" ன்னு வெச்சுக்குவோமா அமிர்தலிங்கம். நன்றி.
நன்றி தராசு.
டெரர்:)
//உண்மையிலேயே அன்று சிரித்ததற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை.//
காரணம் இன்றி சிரித்த அந்த நாட்கள்... எல்லோர் கல்லூரி வாழ்கையிலும் உண்டு ... அன்று சிரித்ததை நினைத்தால் இன்று கண் கலங்குவது ஏனோ...
"மீண்டும் வேண்டும் நாட்கள்"..
Same blood..
Good one..
நம் பேச்சைக் கேட்ட பின்னர், நம்மைப் பிடிக்காதோர் இருப்பரா... வகுப்பிலிருந்த பத்தொன்பது பேரில் பதினெட்டு பெரும் (என்னை விடுத்து) என் தோழிகள்.- nice.
என் கல்லூரி நாட்களை நானும் நினைத்து பார்க்கிறேன் நீங்கள் பண்ணியதில் 90% நானும் பன்னிருகிறேன் , கிளாஸ் கட்டடித்து படம் பார்க்க தெரியாத theatre கண்டுபிடித்து போனது , கிளாஸ் boys 40 thil 30 பேரிடமாவது சண்டை போட்டது (ellam girls kaga) , days scholor லஞ்ச் திருடி தின்று பாதியிலே அவன் பார்த்து முழுவதையும் குடுத்தது இன்னும் நிறைய நான்கு வருடங்களை சொல்லி முடிக்க முடியாது . மறக்க முடியாத விடுதி வாழ்க்கை ! நல்ல பதிவு தோழி .........
//என்று ஏதோ ஒரு பொறுப்பு நினைவிற்கு வர சொல்லா நட்பின் இதத்தை ஒரு கட்டியணைத்தலில் பரிமாறி விடை பெறுகிறோம்.//
எந்தப் பொறுப்புகளும் இல்லாத அந்த நிலையில் நட்பு பெரிதாகத் தெரிந்தது. இப்போ விரும்பியே உறவுகளுக்கு நட்புகளைவிட முக்கியத்துவம் தருகிறோம்.
//முதல் நாளே கடைசி பெஞ்சின் கடைசி சீட்டை தேடி அமர்ந்தேன்//
லாஸ்ட் பெஞ்ச்ல உக்காரும்போது ச்சும்மா உடம்புல ஒரு தெனாவெட்டு வரும் பாருங்க, ஏதோ நாமதான் ஹீரோங்கற நெனப்புல இருப்போம்.
கல்லூரி நாட்கள் எல்லாருக்குமே ஒரு வாசனையான கொசுவத்திதான். அந்த கொசுவத்திய மறுபடியும் பத்த வெச்சதுக்கு நன்றி விக்கி!
http://kurumbugal.blogspot.com
எல்லோரும் விரும்பி வேண்டும் கல்லூரி நாட்களை அழகாக பதிந்துள்ளீர்கள் விக்கி. தொடரட்டும் இனிய பகிர்வுகள்.
வாங்க வித்யா. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்.
வாங்க பேனா மூடி. சரியா சொன்னீங்க.
நன்றி Sen22
நன்றி குமார்.
எல்லார் வாழ்க்கையிலும் ஒரு தடம் கல்லூரி நினைவுகள். நன்றி மதார்.
ஆமா ஹுஸைனம்மா.
லாஸ்ட் பெஞ்ச்ல உக்காரும்போது ச்சும்மா உடம்புல ஒரு தெனாவெட்டு வரும் பாருங்க, ஏதோ நாமதான் ஹீரோங்கற நெனப்புல இருப்போம். //
அப்படியெல்லாம் இல்லைங்க குறும்பன். நமக்கு எப்போவுமே அங்கே உக்காந்து பழகிப் போச்சு, பள்ளி நாட்களிலிருந்தே.
நன்றி குறும்பன்.
நன்றி துபாய் ராஜா.
ரெளடியா இருந்திருப்பீங்க போல. கல்லூரி நினைவுகள் அருமை.
அருமை
ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து மதுரைக்கு போய் இவ்வளவு பண்ணிறுக்கீங்க!!!
பூப்பதற்கு காரணம் கேட்டால் விழிக்கும் செடி போல்தான் பின் வரிசை புன்னகைகள் //
அழகு
மலரும் நினைவுகள் :)
மீண்டும் மீண்டும் மனதில் நிகழ்த்திப் பார்க்கும் தருணஙகளை
பதிவு செய்வதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது
பிடிமானம் அற்ற பொழுதுகளில்
நினைவின் துணைதான் எவ்வளவு
ஆறுதல். நல்ல மீள் நினைவுகள்
விக்னேஷ்வரி
:-) :-)அருமையான நினைவுகள்
காரணமில்லாம சிரிக்கிறதுக்கு வேற ஒரு காரணம் இருக்கு! சொன்னா அடிப்பிங்க!
நல்ல வரலாறு
சிறிய கார்ப் பிரியர்களை மட்டுமலாது பெரிய கார்ப் பிரியர்களையும் ஈர்க்கும் இது போன்ற வடிவமைப்புகள் மனதை கொள்ளை கொள்கின்றன. நாங்கள் ஏழைகள்.
நல்ல வாழ்க்கை.. நல்ல விவரிப்பு.. அம்மைத் தழும்பு மேட்டர் அற்புதம்
நன்றி ஜெயந்தி.
இதுக்கு மேலேயும் பண்ணியிருக்கோம் பாலகுமாரன்.
நன்றி அமித்து அம்மா.
நன்றி நேசன்.
நன்றி அது ஒரு கனாக்காலம்.
நீங்க சொல்லலைனாலும் அடி வாங்க தான் போறீங்க வால்.
நன்றி கவிக்கிழவன்.
நாங்கள் ஏழைகள்.//
வாங்க தமிழ் உதயன். பார்ப்பதற்கு கண்கள் இருக்கும் வரை நாம் ஏழைகள் அல்ல. கமெண்ட்டை பதிவு மாத்திப் போட்டுட்டீங்களோ...
நன்றி உழவன்.
"நினைத்தலே இனிக்கும்" நாட்கள்.
Post a Comment