காதல் என்றால் என்ன?
I love you சொல்லி, ஒருவருக்கொருவர் உருகி உருகி காதல் மொழி பேசி, கண்ணும் கண்ணும் கலந்து, கவிதைகளென காகிதங்களைக் கரைத்து, சாக்லெட் பேப்பர் முதல் சாரி பின் வரை சேர்த்து வைத்து, பிறந்த நாளுக்கு வாழ்த்து மடலனுப்பி, முத்தங்களை பத்திரமாய் சேமித்து, யார் சொல்லியும் கேளாமல் வீட்டை எதிர்த்து மணந்து, பின் தினம் போடும் சண்டைகளாய்த் தான் தொடர்கின்றன இன்றைய பல காதல்கள்.
இது தான் காதலா....
காதல் புனிதமானதெனில் காதல் வாழ்வு மட்டும் ஏன் சாபமாகிறது?
காதலுக்கும் ஆயுட்காலம் உண்டா...
அப்படியானால் திருமணத்திற்கு முன் வந்தது உண்மைக் காதலில்லையா...
இப்படிப் பல கேள்விகள் விவாகரத்து வரை போகும் காதல் திருமணங்களைப் பார்க்கும் போது என்னுள் எழுகின்றன.
காதல் என்றால் என்ன...
ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு கொண்டு, அந்த அன்பு எந்த அளவுக்கும் மிகுந்து திகட்டி விடாமல், அடுத்தவரின் சுதந்திரத்தைப் பறிக்காமல், துணையின் ரசனையைக் கெடுக்காமல், அவரை முழுமையாய்ப் புரிந்து கொண்ட மனமாய், எப்போதும் துணையாய் நிற்கும் தூணாய், நல்ல நட்பாய், எல்லாவற்றிற்கும் மேலாக காதல் ஒத்துக் கொள்ளப்பட்ட அன்று மனமடைந்த மகிழ்ச்சி நிலை ஒவ்வொரு நாளும் தொடர்வதாய் இருக்க வேண்டும்.
வண்ணங்களாய்த் தொடங்கிய காதல் வாழ்க்கை அழகான ஓவியம் போன்ற திருமண வாழ்க்கையாக நகருவதால் அதன் சில ரகசியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
காலைப் பொழுது எப்படி இருந்தாலும் ஒரு புன்னகையோடு உங்கள் துணையை எதிர் கொள்ளுங்கள். அது அந்த முழு நாளின் மகிழ்ச்சிக்கும் அடித்தளம்.
இருவரும் வேலைக்கு செல்வதாக இருந்தாலும், அல்லது வீட்டிலேயே வேலை அதிகமாக இருந்தாலும் கூட காலை தேநீர் நேரத்தை உங்கள் துணைக்காக (குடும்பத்திற்காக) ஒதுக்க மறக்காதீர்கள். இதற்காக பத்து நிமிடம் முன்னதாக எழுந்திருக்க வேண்டுமானால் தவறில்லை.
எதிர்பார்ப்பைக் குறைத்து பொறுப்பை உணரும் வாழ்க்கை இது.
குடும்பத்தில் ஒருவருக்குப் பிடிக்காத உணவு ஏதேனும் சமைக்கப்பட்டால், அதனுடன் சேர்த்து எளிமையான இன்னொரு உணவையும் செய்து விடுங்கள். இது உங்களுக்கு அவர் மீதான அக்கறையைக் காட்டும்.
எக்காரணம் கொண்டும் உங்கள் துணையின் குடும்பம் / உறவினர் பற்றி தவறாகப்
பேசாதீர்கள். மனிதர்கள் எல்லோருமே தவறு செய்யக் கூடியவர்கள். ஆனால் அவர்களின் தவறை சுட்டிக் காட்ட உங்கள் பேச்சுரிமையைப் பயன்படுத்த வேண்டாம்.
உண்மையாய் இருங்கள். உங்கள் துணையே உங்களின் நல்ல நண்பராக / தோழியாக இருக்கட்டும்.
எப்போதாவது ஒருவருக்கு தனிமை தேவைப்படும் நேரங்களில் மற்றவர் அதற்கு இடையூறாக இருக்க வேண்டாம்.
சிறு முடிவுகள் எடுப்பதில் கூட துணையின் ஆலோசனையைக் கேளுங்கள். ஒரு மனிதரின் கருத்துகள் மதிக்கப்படும் போது, அதை மதிக்கும் உங்கள் மீதும் மதிப்பும் அன்பும் அதிகரிக்கும்.
முடிந்தவரை சுயக் கட்டுப்பாட்டில் இருங்கள். உங்களின் கோபம், வார்த்தைகள் உங்களவரையும், குழந்தைகளையும் பாதிக்காதவாறு நடந்து கொள்ளுங்கள்.
எப்போதும் வீட்டின் அனைத்து வேலைகளையும் ஒண்டியாய் செய்யும் மனைவிக்கு முடியும் போது உதவுங்கள். நீங்கள் உதவாவிடில் கூட உதவ வந்ததை நினைத்தே உங்கள் துணை மகிழ்ச்சி அடைவார்.
பெண்கள் ஆண்களுக்கு செய்யும் பெரிய உதவி, அவர்களின் அலுவல்களில் தலையிடாது இருப்பது தான். வீட்டில் என்றாவது உங்களவர் வேலை பார்க்க நேர்ந்தால் அதற்காக கோபித்துக் கொள்ளாமல், ஒரு டீ போட்டுக் கொண்டு போய் கொடுத்துப் பாருங்கள். அடுத்த நாள் ஈவினிங் ஷோ நிச்சயம்.
குழந்தைப் பராமரிப்பிலும் இருவரின் பங்கும் சமமாக இருக்கட்டும். 'அவன் அம்மா பையன், அவ அப்பா பொண்ணு' என்றில்லாமல், "எங்கள் குழந்தை(கள்)" என்று வளருங்கள்.
எப்போதாவது பிரச்சனை வரும் நேரங்களில் அதிகம் பேசி ஒருவர் ஒருவரை காயப்படுத்துவதை விட, பேசாமல் இருந்து விடுங்கள். மௌனத்தை விட சிறந்த ஆயுதம் வேறில்லை.
முடியும் போது சிறு சிறு அன்றாடத் தேவைகளைப் பரிசாகக் கொடுத்து அவர்கள் முகமடையும் மகிழ்ச்சியைப் பாருங்கள்.
முடிந்தால் வருடத்திற்கொரு முறை வேலைகளை மறந்து (துறந்து) துணையுடன் எங்காவது குறைந்தது மூன்று நாட்கள் சென்று வாருங்கள்.
உங்களுக்கான நேரத்தையும் அன்யோன்யத்தையும் அதிகப்படுத்தும் விஷயங்களில் அக்கறை கொள்ளுங்கள்.
திருமண வாழ்வு காதல் வாழ்வை விட பன்மடங்கு இனிக்கும்.
அப்புறம் உங்கள் துணையை 'தங்கமணி, ரங்கமணி' என்றெல்லாம் உங்களால் நிச்சயம் விளிக்க முடியாது.
சக ஹிருதயத்தின் மீது
நேயமுற்று
அந்த மென் உணர்வு
மிகுந்து கசந்து விடாமல்
பிறிதோர் சுயம் கெடாமல்
இணையின் ரசனையோடு
இழைந்து
புரிதல் பூர்த்தியும்
பூரணமுமாய் வளர்ந்து
நல் சிநேகமாய்.. .
காதலை பரிமாறிப் பெற்ற
சம்மத நொடியின் பரவசம்
ஒவ்வொரு விடியலின் போதும்
இருத்தல்
காதலுக்கு அழகு
44 comments:
ரொம்ப நல்லா இருக்குங்க
ஒரு தெளிவான பார்வை
மனதுக்கு அணுக்குமான குரல்
//எப்போதாவது பிரச்சனை வரும் நேரங்களில் அதிகம் பேசி ஒருவர் ஒருவரை காயப்படுத்துவதை விட, பேசாமல் இருந்து விடுங்கள். மௌனத்தை விட சிறந்த ஆயுதம் வேறில்லை. //
பெஸ்ட்
இதெல்லாம் அனுபவப்பாடங்கள் தானே..
good
:-)....
Raittu...
100 பாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள் அக்கா
உறவுகளை மேம்படுத்த உதவும் வழிகள்..:)
//...மௌனத்தை விட சிறந்த ஆயுதம் வேறில்லை.//
ஆம்.
சூப்பர்.. அட்வைஸ் அம்புஜமாயிட்டிங்களே..
நல்ல யோசனைகள்...
தலைப்பே அருமை.. பதிவும் மிக நன்றாக இருந்தது...
mm..enakku ethirkaalathil udhavum..:)
என் தங்கைகளை தவிர்த்து, முதல் பின்னோட்டம் இட்ட வாசக தோழி தாங்கள்தான்...
பின்னோட்டம் இட்ட தங்களக்கு மிக்க நன்றி...ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது...நன்றிகள் பல...
எதார்த்தம் எப்போதும் அழகு,இந்த இடுகையும் :)
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க விக்னேஷ்வரி ...
பல விடயங்கள் எங்க வீட்ல நடக்கிறத பாத்து எழுதிட்டீங்களோன்னு நினச்சேன் :)))
இனிமே தங்கமணி ரங்கமணி வாம்மா நீ.... பாட்ட கூட யாரும் கேக்காதீங்கப்பா....
//...மௌனத்தை விட சிறந்த ஆயுதம் வேறில்லை.//
:) :) :)
அருமையான தலைப்பு.
ஆழமான கருத்து.
அழகான கவிதை.
நல்ல கருத்துக்கள், அற்புதமான பதிவு. அலேசனைகளுக்கு நன்றி கூறி செயல்படுத்த முயற்ச்கின்றேன். நன்றி.
நல்ல யோசனைகள் !
விக்னேஷ்வரி,
அருமையான பதிவு. நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீர்கள். சில தெரிந்தவை என்றாலும், தேவைப்படும் சமயத்தில் ஞாபகமாக மறந்து விடுகிறது.
நன்றி நேசன்.
சில அனுபவங்களும், சில மற்றவரின் அனுபவத்திலிருந்து கற்ற பாடங்களும் தான் வசந்த்.
வாங்க குமார்.
வாங்க அன்பு. நன்றி.
வாங்க மணிநரேன்.
அட்வைஸெல்லாம் இல்லைங்க கோபிநாத். லேபில் பாருங்க.
நன்றி ஜெட்லி.
நன்றி மணிகண்டன்.
வாங்க சூர்யா. உங்கள் பதிவுகளுக்கு என் பின்னூட்டம் எப்போதும் இருக்கும்.
நன்றி அப்துல்லா.
நன்றி laksh.sri. எல்லா வீட்டுலையும் நடக்குற கதை தானேங்க.
வாங்க ராஜி.
நன்றி வேல்ஜி.
நன்றி பித்தனின் வாக்கு.
நன்றி வளர்பிறை.
நன்றி ஹுஸைனம்மா.
அனுபவம் அழகாக பேசியிருக்கிறது இந்த இடுகையின் மூலமாக.
அழகான உறவுகள் பத்தி
அறிவான எழுத்து.
-பதுமை.
//எக்காரணம் கொண்டும் உங்கள் துணையின் குடும்பம் / உறவினர் பற்றி தவறாகப் பேசாதீர்கள்//
வெரி நைஸ்!
நேய தவம் - இந்த மாதிரி தலைப்புலாம் எப்படிதான் புடிக்கறீங்களோ! ஒரு ரேஞ்சுல போயிட்டிருக்கீங்க...
ஆமா,
ஒரு ரேஞ்சுலதான் போயிகிட்டிருக்கீங்க,
நல்ல ஃப்ளோ. வாழ்த்துக்கள்.
"குழந்தைப் பராமரிப்பிலும் இருவரின் பங்கும் சமமாக இருக்கட்டும். 'அவன் அம்மா பையன், அவ அப்பா பொண்ணு' என்றில்லாமல், "எங்கள் குழந்தை(கள்)" என்று வளருங்கள்."
நல்ல கருத்து...
தங்கள் பெருந்தன்மைக்கு நன்றிகள் பல..
நல்லா இருக்கு.....100 பாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள்
ரொம்ப நல்லா இருக்குங்க அருமையான விடயம் நேர்த்தியான பார்வை
அழகான நேயதவம் அழகு விக்கி...
"ஹம்கோ சாத்தி மிலுகையா!" என்று பாடிக்கொண்டு, வசதி பார்த்து காதல் கல்யாணம் செய்த நண்பர்கள் ( என்னோடு படித்தவர்கள் ) நன்றாக தான் இருக்கிறார்கள்!
:-)
மொழி ஒன்றும் தடை இல்லை...
நான்?
அருமையான கட்டுரை விக்கி.
நீங்கள் சொல்லியதில் ஏறக்குறைய 90%சதவிகிதம் பின்பற்றுபவன் நான்.
தொடர்ந்து அனுபவங்களை எழுதுங்கள் தோழி.
நல்ல விஷயம் விக்னேஷ்வரி... :) :)
பகிர்வுக்கு நன்றி.. :)
ஒரு வருடம் முன்னதாக உங்கள் தமிழ் ப்ளாக் படித்துவிட்டு நான் எழுதியது மீண்டும் உங்களுக்காக.
முதல் முறையாக பிளாக்ல் பெண்ணின் கவிதை கண்டேன் மகிழ்ச்சி. அவளுக்காக எழுதியது.
இருப்பதை தொலைப்பது, சும்மா கிடைத்ததை தொலைப்பது, பாடுபட்டு கிடைத்ததை தொலைப்பது ..இப்படி தொலைப்பதும் - இருப்பதை தொலைத்து - தேடுவது, சும்மா கிடைத்ததை தொலைத்து - தேடுவது, பாடுபட்டு கிடைத்ததை தொலைத்து - தேடுவது ..இப்படி தொலைத்ததை - தேடுவதும். சுகமே...
இரண்டு பாடல்கள் நினைவில் (1) - ஜே-ஜே; தேடி தேடி தேடி தீர்ப்போமா (2) பார்த்தாலே பரவசம்; அன்பே சுகமா அழகே சுகமா...
காதலில் சுகமும் சுமையாகும் சுமையும் சுகமாகும் - காதலின்றி மனிதம் உணர முடியது -
எய்ட்ஸைத் தடுக்கலாம் வரும் வழியும் பரவும் வழியும் தெரிவதால்
காதலைத் தடுக்க முடியாது வரும் வழியும் பரவும் வழியும் தெரியாததால்
அப்பாடா- என்னெல்லாம் தோணுது.... தேடுவோம் தேடுவோம்... ஒரு உணர்வு
தைத்ரீய உபநிஷதம் குறித்து விரிவாக ப்ளாக்ல் எழுத போதிய நேரமில்லை. எனக்கு தெரிந்த, பிறர் தெரிய வேண்டும் என்கிற கருத்துக்களை மட்டும் நான் பதிவு செய்கின்றேன். விரிவாக அறிந்து கொள்ள புத்தகங்களை படிக்கவும். பிற்காலத்தில் இதை எழுதினால் உங்களுக்கும் தெரிவிக்கின்றேன்.
அன்புடன்
பகவதி.
tதிருமணம் குறித்து வேதங்கள் எவ்வளவோ கூறுகின்றன.
எனினும் ஆங்கில விரிவுரையாளர்கள் கதை கட்டுரை வடிவில் இன்றைய காலகட்டத்துடன் ஒப்பிட்டு எழுகின்ற கருத்துக்கள் நம்மவர்களை வெகுவாக கவர்கின்றன.
எனது UG (Psychology) Part II English paper ல் "On Marriage" என்று ஒரு பாடம். திருமண உறவு குறித்து மிக எளிமையாக அலசும் பாடம். "Values of Life" என்கிற தொகுப்பின் ஒரு பகுதி.
இதன் சுருக்கத்தை எனது ஆங்கில ப்ளாக்ல் விரைவில் பதிவு செய்கிறேன். உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
அன்புடன்
பகவதி
நன்றி அமித்து அம்மா.
நன்றி பதுமை.
நன்றி குறும்பன்.
நன்றி தராசு.
நன்றி பிரியா.
வாங்க சூர்யா.
நன்றி புலிகேசி.
நன்றி தியா.
நன்றி துபாய் ராஜா.
வாங்க வினிதா. எப்படி கல்யாணம் செய்தாலும் கல்யாணத்திற்குப் பிறகு நம் வாழ்க்கை நம் கையில் தான்.
நன்றி உலக நாதன்.
நீங்கள் சொல்லியதில் ஏறக்குறைய 90%சதவிகிதம் பின்பற்றுபவன் நான். //
மகிழ்ச்சி நண்பரே.
வாங்க கனகு.
ஓராண்டு இடைவேளைக்குப் பின் உங்களை மீண்டும் பின்னூட்டங்களில் பார்ப்பது மகிழ்ச்சி பகவதி.
உங்கள் பதிவுகள் நல்ல தகவல்கள். நன்றி நண்பரே.
"நல்ல எழுதிருக்கீங்க" - அப்டின்னு சொல்லிச் சொல்லி போரடிக்குது விக்கி!
ரொம்ப matured-ஆக எழுதி உள்ளீர்கள். நானும் எனது துணைவியை House Boss-என்று விளிக்கிறேன். எல்லாம் ஒரு உரிமையில் தானுங்கோ..
நீங்கள் எழுதி உள்ளது நிச்சயம் சிலருக்கு உபயோகம் ஆக இருக்கும்
மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com
அசத்தல் விக்னேஷ்வரி... நானும் 90%வந்தாச்சு.. :)))
Nalla errunthathu .. :) kekavae santhosama errunthathu ,,,
Nanri for this blog :)
கேட்கும் போது நல்லாயிருக்கு. சண்டையில்லாமலா! என்ன போங்க?
“ஊடல் காமத்திற்கின்பம்” அய்யன் வள்ளுவர் சொன்னது.
//பேசாமல் இருந்து விடுங்கள். மௌனத்தை விட சிறந்த ஆயுதம் வேறில்லை.//
இப்பிடித்தான் நானும் இருப்பேன். அதனாலே, அவளுக்கு நாமதான் ரொம்ப சண்டை போடுறோமோன்னு ஒரு நினப்பு.அடுத்த வேளை சாப்பாட்டுக்குள்ளே அது கரைஞ்சு போயிடும்.
நன்றி மணி.
நீங்கள் உங்கள மனைவியை அழைப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி மோகன். நல்ல விஷயம்.
வாழ்த்துக்கள் சுசி.
Welcome Mystic.
அதுக்காகவே அடிக்கடி சண்டை இருந்தா ஒரு சமயத்துல வெறுப்பாகிடும் அரங்கப் பெருமாள்.
கவிதையாகிச் சொன்னவிதம் மிகவும் அருமை
நதிமூலம்
Post a Comment