Wednesday, July 15, 2009

கோவை, திருப்பூர் நண்பர்களே...


இரண்டு வாரங்களுக்கு முன்பு நியூயார்க் படம் பார்த்தோம். வித்தியாசமான, வலுவான கதை, கதைக்கு வலு சேர்க்கும் இர்ஃபான் கானின் நடிப்பு, காட்சி அமைப்புகள், அழகான காதலை வெளிப்படுத்தும் கேட்ரினா கைஃப் என படமே தூள். மசாலா வகையறாக்கள் இல்லாத மற்றுமோர் படம் பாலிவுட் சினிமாவில்.

நியூயார்க்கில் WTC தகர்க்கப்பட்ட போது அங்கிருந்த இந்தியர்களின் நிலையை கொஞ்சமே கண்ணீருடன் அழுத்தமாய் சொல்லியிருக்கும் படம். படம் முழுவதும் நியூயார்க்கில் எடுக்கப்பட்டிருந்தும் தேவையில்லாமல் நாட்டை வலம் வரும் பாடல் காட்சிகள் இல்லாதது படத்தின் ப்ளஸ். எவ்வித காரணத்தாலும் தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது என்ற வாதம் ஏற்புக்குடையது. காதலுக்காக கதறும் கடைசிக் காட்சியில் கேட்ரினா அசத்தியிருக்கிறார். விவரிக்க வார்த்தை இல்லையெனினும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் நல்ல படம் பார்த்த முழு திருப்தியில் வெளிவரலாம். படம் பார்த்த யாரும் டோட்டாவை (டோட்டா என்ற வார்த்தையை) மறக்க முடியாது.
(ஜான் ஆப்ரகாமின் குழி விழும் சிரிப்பிற்காக பெண்கள் அவசியம் பார்க்க வேண்டும் ;) )

**************************************************



இப்போதெல்லாம் எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் சலிப்பைத் தரும் நிலையில் சற்றே ரசிக்க வைக்கின்றன விளம்பரங்கள். நடிகைகளை அரைகுறை ஆடையுடனும், இயல்பற்ற நடிப்பிலும் பார்த்து போரடித்த நிலையில் ஹீரோ ஹோண்டாவின் விளம்பரத்தில் வரும் எளிமையான பெண்ணின் காதல் சொல்லும் பார்வை ரொம்பவே இயல்பு. இப்படி ஒரு பெண்ணின் சிரிப்பிற்காக எத்தனை தூரம் வேண்டுமானாலும் வருவார்கள் ஆண்கள்.

எப்போதுமே அனைவரும் ரசிக்கும், மதிக்கும் விளம்பரங்களைத் தருவதில் ஏர்டெல்லுக்கு நிகர் ஏர்டெல் மட்டுமே. முன்பு வந்த இந்தியா, பாகிஸ்தான் குழந்தைகளின் விளம்பரத்தில் ஒரு பட்டம் மூலம் ஒற்றுமையை வலியுறுத்தியது. மாதவன், வித்யா பாலனின் காதல் ரம்மியமாக இருந்தது. அப்பாவின் கையுடன் கயிறு கட்டி பையன் தொலையாமல் காட்டியதில் அப்பாவின் பாசமிருந்தது. ஸைப் அலிகான், கரீனா கபூர் மற்றும் ஷாருக் வந்த போதும் அழகான நட்பு மற்றும் காதலை வெளிப்படுத்தியது. சிறிது நாள் முன் வந்த ஏர்டெல் சிறுவன் ரொம்ப சமர்த்தாக அப்பாவிடம் அம்மாவை கம்ப்ளைன்ட் செய்ததை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. இந்த விளம்பரங்களுக்கு குறையாத வகையில் இப்போதைய ஏர்டெல் விளம்பரமும். பையனுக்கு குரல் கொடுக்கும் மக்களைப் பார்த்து பெருமிதப்படும் அப்பாவும், அவர்களுக்காக மகனின் குரல் ஒலிக்க வேண்டும் என எதிர்பார்க்கும் அப்பாவின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுக்கும் பொறுப்பான மகனையும் பார்க்க பெருமையாய் உள்ளது. (சல்யூட் ஏர்டெல்)

**************************************************

என்னவர் என்னை வேலையை விட்டு விட்டு தொடர் கதை எழுத சொல்கிறார். (!?!!?!!?!!?!!??!!!!!!)
தூக்கத்தில் கனவுகள் வருவது இயல்பு. ஆனால் எனக்கு முதல் நாள் வந்த கனவு அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் கிடையாது. இது எதுவும் பிரச்சனையா? தகவல் தெரிந்தோர் சொல்லுங்கப்பா. (தமிழ் சீரியல்களில் நடிக்க புது முகங்கள் வரவேற்கப்படுகிறார்கள். கதை: அட, என் கனவுகள் தாங்க.)

**************************************************

அப்படி இப்படி என தள்ளிப் போன ப்ராஜெக்ட் விசிட் இப்போது முடிவுக்கு வந்து விட்டது. வரும் திங்கள் காலை கோயம்பத்தூருக்குப் பறக்கிறேன். அங்கே வெதர் நன்றாக இருப்பதாக தோழி சொன்னாள். டெல்லி வெக்கையிலிருந்து விடுதலை என நினைக்கும் போதே மனசுக்குள் மழை அடிக்கிறது. (கோயம்பத்தூர், திருப்பூர் பதிவர்களின் / நண்பர்களின் நேரம் அடுத்த பதினைந்து நாட்களுக்கு சரியில்லை என்பது அரசமரத்தடி சித்தர் வாக்கு)

**************************************************

சீக்கிரமே காதல் கதைகள் எழுதி உங்களையெல்லாம் இம்சிக்கலாம் என நினைக்கிறேன். என் எல்லா மொக்கைகளையும் தாங்கும் நண்பர்கள் இதையும் தாங்குவார்கள் என்னும் நம்பிக்கையுடன் வருகிறது அடுத்த பதிவு காதல் கதை - 1. அனைவரும் காதல் கதை எழுதும் போது இந்த கதைகளில் என்ன ஸ்பெஷல் எனக் கேட்போருக்கு, இவை அனைத்தும் என் வாழ்க்கையில் நான் பார்த்த என் நண்பர்கள் மற்றும் தோழிகளின் உண்மைக் கதைகள். அவர்களிடம் அனுமதி வாங்கியே எழுதப்படும். (இந்த அறிவிப்பு நீங்கள் தப்பிப்பதற்காக. இதற்கு மேலும் படித்து மாட்டிக் கொண்டால் கம்பெனி பொறுப்பேற்காது)

**************************************************

கடைசியாக பதிவுலக கிசுகிசு

* அனைவரையும் கலாய்த்து எழுதி வரும் இவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை மிகத் திகிலுடன் எதிர்கொண்டுள்ளார் இந்த ஜிம்பலக்கா. காரணம் என்னவென்றால் ரொமான்டிக்காக பேச பெண்ணுக்குத் தெரியவில்லையாம். மாப்பிள்ளை எவ்வளவு அழகாகப் பேசினாலும் இவர் அதை விட அழகாய்க் கலாய்த்து நகைச்சுவையாக்கி விடுவதால் அந்த பக்கம் இப்போதைக்கு கப்சிப். (கல்யாணத்துக்கு அப்புறம் ராமனுக்கேத்த சீதையா இருந்து தானே ஆகணும்)

* இன்று மட்டும் ஆறு முறை அழைத்து விட்டார் இந்த யூத் பதிவர். காரணம் என்னவெனில் நடிகையின் பெயர் கொண்ட பெண்ணிடமிருந்து வந்த மெயில் தானாம். உங்கள் எழுத்து நன்றாக உள்ளது. அந்த எழுத்துக் கடலில் நான் தொபுக்கடீர்னு விழுந்து விட்டேன் என்றெல்லாம் எழுதியதோடு மட்டுமல்லாமல் முடிக்கும் போது 'என்றும் அன்புடன்' என்றிருப்பதால் அந்த "என்றும்" அன்புடனுக்கான அர்த்தம் புரியாமல் மனிதன் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். (சீக்கிரமே அதற்கான அர்த்தம் அறிய வாழ்த்துக்கள்)

27 comments:

deesuresh said...

எழுத்துக்களின் நடை அருமை விக்கி..!!

நானும் நியூயார்க் விமர்சனம் படித்தேன்.ஜான் ஆப்ரகாம் தீவிரவாதி என்று அறியப் படும் காட்சி, கேத்ரினா வின் மேக்கப் இல்லா நடிப்பு இவை பற்றி கிலாகித்து எழுதியிருந்தார்கள். எங்க படம் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு..!! ஹிந்திப் படம் பார்த்து வருசக்கணக்காச்சு..!!

நன்றி விக்கி உன் பகிர்வுக்கு...!!!!

ஐந்திணை said...

நல்லா வந்திருக்கு, தொடருங்கள்.

வால்பையன் said...

கிசுகிசு தான் யாருன்னு தெரியல!

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))))

*இயற்கை ராஜி* said...

கோவை வர்றீங்களா?. வாங்க..வாங்க.. நல்வரவு:-)

trdhasan said...

ஏர்டெல் மட்டுமா! ஹோடோபோன் விளம்பரமும் கவித்துவமாகத்தான் இருக்கிறது.

விக்னேஷ்வரி said...

வாங்க சுரேஷ். பேசாம bigflix member (Renting of movies) ஆகிடுங்க. நிறைய ஹிந்தி படம் பார்க்கலாம்.

நன்றி ஐந்திணை.

உங்களுக்கே தெரியலையா வால்.

வாங்க அமித்து அம்மா.

ஆமா இயற்கை. முடிந்தால் சந்திப்போம்.

FunScribbler said...

john abraham போஸ்ட்டரை மட்டும் நாள் முழுக்க பார்ப்பேன். அவர் படத்தை பார்க்காமல் இருக்க முடியுமா!!!

வித்யா பாலன் is my favourite!!! அந்த விளம்பரத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு வராது!! :)

உங்க காதல் கதைகளை படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்...சீக்கிரம் ப்ளீஸ்....

Unknown said...

கோயம்பத்தூர், திருப்பூர் பதிவர்களின் / நண்பர்களின் நேரம் அடுத்த பதினைந்து நாட்களுக்கு சரியில்லை என்பது அரசமரத்தடி சித்தர் வாக்கு)


அப்பவே ஜோசியர் சொன்னாரு...?

வருக வருக...

தினேஷ் said...

அக்கா என்ன கிசு கிசுவோ ஒண்ணும் புரிலே..

ஆனா உங்க கனவுல எப்புடி பிக்ஸன் கதைகளா இல்ல சீரியலுக்கு ஏத்த மாமியார் மருமகள் கதைதானா ?

காதல் கதைல உங்க கதையும் உண்டா

என்றும் அன்புடன்
பாசக்கார சகோ..
சூரியன்

ஹி ஹி

நேசமித்ரன் said...

என்ன ஒரு FLOW உங்க எழுத்துல ..
இந்த கிசு கிசுத்தான் புரிய மாட்டேங்குது
உங்க காதல் கதைகளை எதிர்பார்குறோமுங்க..
விளம்பரம் மேட்டர் நல்லா சொல்லி இருக்கீங்க ..!

விக்னேஷ்வரி said...

ஆமா டி.ஆர்.தாசன் வோடபோன் விளம்பரங்கள் அழகு தான். ஆனால் உணர்ச்சியை அழகாக வெளிப்படுத்துவதில் ஏர்டெல்லுக்கு நிகர் ஏர்டெல் மட்டுமே.

அவர் கன்னத்துக் குழிக்காகவே பார்க்கலாமே தமிழ் மாங்கனி. :)

உங்க காதல் கதைகளை படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்... //

ரிஸ்க் எடுக்குறது உங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரியா....

நன்றி பேரரசன்.

புரியுற மாதிரி எழுதனும்னா கிசு கிசுவா ஏன் எழுதணும் சூரியன்.
கனவுக் கதைகள்ல நிறைய வருது. கனவுங்கும்போது பிக்ஷன் இல்லாமலா...
என் கதை இருக்குமானு இன்னும் முடிவு பண்ணல. அப்படி என் கதை வந்தா நீங்க ஈசியா கண்டுபிடிச்சிடலாம். ஹீரோ பஞ்சாபி, ஹீரோயின் தமிழ்ப் பொண்ணு. :)

நன்றி நேசமித்திரன். கிசு கிசு சீக்கிரமே புரியும்.

deesuresh said...

காதல் கதை வேறயா கலக்குங்க அம்மிணி...!!

கார்க்கிபவா said...

அப்போ பிரபுவின் கன்னக்குழியும் புடிக்குமா?

அந்த பொண்ணு, கதவுல சாஞ்சு ஒரு லுக் விடுமே... அப்பப்ப்பா.. ஃப்ளைட்டு புடிச்சு போகலாம்னு பார்த்தேங்க.. கடைசில வர வேனாம்ன்னு சொல்லிடுச்சு :))

தொடர் கதைய படிச்சா எஙக்ள வேலை விட்டு தூக்க மாட்டாங்களே?

கோவைக்கா? ரைட்டு

அட, தொடர்கதையா காதல் கதையா?

கலாய்க்கிற பெண் பதிவர் யாருங்க? அதுவும் திருமனமாகாதவரா? புரியலையே

எனக்கு போட்டியா இன்னொரு யூத்தா? யார்ரா அவன்?

Anonymous said...

வால்பையன் said...

கிசுகிசு தான் யாருன்னு தெரியல!//

ஆமாங்க

Kumar.B said...

not only Airtel/vodafone AD see maruthi service AD.

மந்திரன் said...

//காதல் கதை - 1//

நிறைய எதிர்பாப்புடன் எதிர்பாக்கிறோம் ..

सुREஷ் कुMAர் said...

ஹாய்.. http://wettipedia.blogspot.com/2009/07/blog-post_17.html க்கு வந்து விழாவில் கலந்துகொள்ளவும்..

सुREஷ் कुMAர் said...

//
தூக்கத்தில் கனவுகள் வருவது இயல்பு. ஆனால் எனக்கு முதல் நாள் வந்த கனவு அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து வருகிறது.
//
ஆஹா.. கனவுலையே மெகா சீரியல் ஓடுதா..
அழுவாச்சி சீரியலா.. காமெடி சீரியலா..
எவ்ளோ எபிசோட் ஓடிருக்கு..

सुREஷ் कुMAர் said...

//
அப்படி இப்படி என தள்ளிப் போன ப்ராஜெக்ட் விசிட் இப்போது முடிவுக்கு வந்து விட்டது. வரும் திங்கள் காலை கோயம்பத்தூருக்குப் பறக்கிறேன். அங்கே வெதர் நன்றாக இருப்பதாக தோழி சொன்னாள். டெல்லி வெக்கையிலிருந்து விடுதலை என நினைக்கும் போதே மனசுக்குள் மழை அடிக்கிறது. (கோயம்பத்தூர், திருப்பூர் பதிவர்களின் / நண்பர்களின் நேரம் அடுத்த பதினைந்து நாட்களுக்கு சரியில்லை என்பது அரசமரத்தடி சித்தர் வாக்கு)
//
அட.. இங்கன வர்ரிங்களாக்கும்..

வாங்க..வாங்க.. இருகரம்நீட்டி அன்போடு வரவேற்கிறோம்..

kanagu said...

/*இன்று மட்டும் ஆறு முறை அழைத்து விட்டார் இந்த யூத் பதிவர். காரணம் என்னவெனில் நடிகையின் பெயர் கொண்ட பெண்ணிடமிருந்து வந்த மெயில் தானாம். உங்கள் எழுத்து நன்றாக உள்ளது. அந்த எழுத்துக் கடலில் நான் தொபுக்கடீர்னு விழுந்து விட்டேன் என்றெல்லாம் எழுதியதோடு மட்டுமல்லாமல் முடிக்கும் போது 'என்றும் அன்புடன்' என்றிருப்பதால் அந்த "என்றும்" அன்புடனுக்கான அர்த்தம் புரியாமல் மனிதன் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.*/

ஹா ஹா ஹா :)

எனக்கும் ஏர்டெல்லின் விள்ம்பரங்கள் பிடிக்கும் :)

கதை எழுத போறீங்களா.. சூப்பர் சூப்பர் :)

தேவன் மாயம் said...

கிசு கிசு யாருன்னு புரியலீங்க!

தினேஷ் said...

/ஹீரோ பஞ்சாபி, ஹீரோயின் தமிழ்ப் பொண்ணு//

உங்க கதைய ராதாமோகனுக்கும் பிரகாஷ்ராஜுக்கும் சொல்லிட்டிங்க போல .. அவங்க படமாவே எடுத்து விட்டுட்டாங்க

அரங்கப்பெருமாள் said...

இப்பதான் முதன்முறையா உள்ளே வருகிறேன்.உங எழுத்து நல்ல இருக்கு படிக்க..
Bookmark added. May I come in

விக்னேஷ்வரி said...

நன்றி சுரேஷ்.

சாரி கார்க்கி, பிரபு அங்கிளையெல்லாம் எனக்குப் பிடிக்காது.

வேலையை விட்டு தூக்குற அளவுக்கு என் கதைகள் சுவாரசியமா இருக்காது. ;)

எல்லா கதையும் தான் கனவுல வருது கார்க்கி. :)

புரியாததுக்குப் பேரு தான் கிசு கிசு.

வாங்க இங்கிலீஷ்காரன்.

ஆமாம் குமார். அந்த விளம்பரங்களும் அழகு தான்.

வேண்டாம் மந்திரன். சொந்த செலவுல சூனியம் வச்சுக்காதீங்க. ;)

விக்னேஷ்வரி said...

விருதிற்கு நன்றி சுரேஷ்.

எல்லாம் கலந்த கனவா தான் வருதுங்க.

உங்கள் அன்பிற்கு நன்றி சுரேஷ்.

வாங்க கனகு.

வாங்க தேவன் மாயம்.

ஹாஹாஹா.... ஆமா சூரியன்.

வாங்க அரங்க பெருமாள். நன்றி.

தமிழ் பட்டாசு said...

enakkum kanavugal thodarnthu varukirathu. unmaiyileya romba serious aaga irrukkum enru ninaikiren. please tell me any thing worng about this.