1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எங்க அம்மா, அப்பாவிற்கு 11 வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்து பிள்ளையாரிடம் வேண்டி நான் பிறந்ததால் விக்னேஷ்வரனின் பெயரிலிருந்து 'விக்னேஷ்வரி' வந்தது.
கல்யாணத்திற்குப் பிறகு ஜோசியர் 'த' அல்லது 'ல' வில் ஆரம்பிக்கும் பெயர் வைத்தால் தான் எனக்கும் அவருக்கும் சண்டை இல்லாம குடும்ப வாழ்க்கை போகும் என சொன்னதால் 'தன்வி' என்ற பெயர் வந்தது.
இரண்டு பெயர்களுமே அம்மாக்களின் தேர்வு என்பதாலோ என்னவோ எனக்குப் பிடிக்கும்.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
நேற்று. அவரிடம் கோபப்பட்டு கோபம் தவறு என வருந்தி அழுதேன்.
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
தேர்வின் கடைசி அரை மணி நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் என் கையெழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.
4. பிடித்த மதிய உணவு என்ன?
நான் ஒரு சரியான Foodie. எது சாப்பிட்டாலும் ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என நினைப்பேன். அதுனால எல்லா வெஜ் ஐடெமும் ஓகே. இருந்தாலும் ஆல்டைம் ஃபெவரிட் தயிர் சாதம், மாவடு தான்.
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அந்த வேறு யாருடன் என்பது யார் என்பதைப் பொறுத்தது என் பதில்.
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவியில். கடலில் குளிப்பதே எனக்குப் பிடிக்காது. பிசுபிசுவென்று உப்பெல்லாம் ஒட்டி, வாய்க்குள் உப்புத் தண்ணி போய்.... ச்சீ.... எனது சித்தி குற்றாலத்தில் இருப்பதால் குற்றால அருவிகளில் குளித்த அனுபவம் நிறைய உண்டு. இப்போதெல்லாம் பாத்ரூமில் ஷவரையே குற்றால அருவியாக பாவித்துக் குளிக்க வேண்டிய நிலைமை.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
உடை. Fashion Designing படித்ததின் விளைவு. அடுத்ததாக கண்டிப்பாக கண்கள்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் - என்னுடைய தன்னம்பிக்கை, தைரியம், உழைப்பு, வளர்ச்சி. ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த என்னை தலைநகர் வரை கொண்டு வந்தவை இவை தான்.
அது போக அதிகம் விட்டுக் கொடுப்பது மற்றும் எல்லாரையும் அனுசரித்துப் போவது.
பிடிக்காத விஷயம் - எப்போதாவது அழுவது, அனாவசியக் கோபம், கொஞ்சமே கொஞ்சமான சோம்பேறித்தனம்.
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்த விஷயம் - அவரிடம் எனக்கு எல்லாமே பிடிக்கும். அவரின் பொறுமை, அக்கறை, பாசம், காதல், உண்மை, கடின உழைப்பு, இன்னும் பல. இவை தான் ஒரு தமிழச்சியை பஞ்சாபியாக மாற்றின.
சமீப காலமாக அவர் கிட்ட ரொம்ப ரொம்ப பிடிச்சது, அவரின் கொஞ்சும் தமிழ்.
பிடிக்காத விஷயம் - வேலை என வந்து விட்டால் அனைத்தையும் மறந்து மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை பார்ப்பது.
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
கண்டிப்பாக என் அம்மா. சின்ன வயசிலிருந்து ஒரு தாயாய் இல்லாமல், தோழியாய் இருந்து வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் என்னை வழி நடத்திக் கொண்டு வந்தவர்கள்.
I really miss my mom.
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
ஆரஞ்சும், பச்சையும் கலந்த டிசைனர் சூட்.
12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பதிவை மட்டுமே பார்த்து எழுதி கொண்டிருக்கிறேன்.
"பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்" பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தினமும் குறைந்தது ஒரு முறையாவது இப்பாடலைக் கேட்பது வழக்கம். இளையராஜாவின் தாலாட்டிற்காக.
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு.
14. பிடித்த மணம்?
Remy Marquis
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
சந்தன முல்லை - ஒரு பதிவரால் நான் அதிகம் கவரப்பட்டேன் என்றால், அது இவரால் தான். பிள்ளையின் சேட்டைகளைக் கூட இவ்வளவு சுவாரசியமாகச் சொல்ல முடியுமா என என்னை "அட" போட வைத்தவர்.
சத்யா - தான் ஒரு தொழிலதிபர் என்ற எந்த பெருமையும் இல்லாமல் அனைவரிடமும் இனிமையாகப் பழகும் மனிதர். பல போலி எழுத்துக்களுக்கு நடுவே தனக்காக மட்டுமே எழுதிக் கொண்டிருப்பவர்.
வித்யா - என் எல்லாப் பதிவுகளுக்கும் ஒரு ஸ்மைலியாவது போட்டு பிரசென்ட் சொல்லி விட்டுப் போபவர். நல்ல எழுத்துத் திறமை உள்ளவர். முக்கியமாக என்னைப் போலவே அவரும் ஒரு சாப்பாட்டுப் பிரியர்.
லதானந்த் சார் - சிறந்த சிறுகதை எழுத்தாளர். வித்தியாசமான வேலையில் இருந்து வித்தியாசமான அனுபவங்களை நம்முடன் பகிர்பவர். அவர் மேல எனக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு. காரணம், அவரின் மனைவியின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டதால்.
நால்வரையும் அழைக்கக் காரணம், அவங்களப் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு தான்.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
இரண்டு பேர் என்னை அழைத்துள்ளனர்.
சஞ்சய் - நல்ல படைப்புத் திறமை கொண்டவர். அவரின் கவிதைகளை நான் மிகவும் ரசித்துப் படித்துள்ளேன். தன் கருத்துகளை நேரடியாக சொல்லும் தைரியம் கொண்டவர். இவரின் எல்லாப் பதிவுகளுமே வித்தியாசமாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். சமீபத்தில் பிடித்தது http://podian.blogspot.com/2009/06/blog-post_02.html
லோகு - நன்றாக எழுதுகிறார். ஒரு முறை உரிமையாய் சண்டை போட்டு இப்படி எழுதாதீங்கன்னு சொன்னதிலிருந்து அப்படி எழுதாதவர். மிக சிறியவர். ஆனாலும் நல்ல எழுத்துகளைத் தருபவர். இவரையும் நான் தொடர்ந்து படித்து வந்தாலும் இவரின் காதல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை http://acchamthavir.blogspot.com/2009/04/blog-post_28.html
17. பிடித்த விளையாட்டு?
Shuttle badminton. காலேஜ் டேஸ்ல பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து விளையாடினதோட சரி. இப்போவும் விளையாட ஆசைப் பட்டு அவரைக் கூப்பிட்டா நேரம் இல்லைன்னு சொல்லித் தப்பிச்சுடுறார்.
18. கண்ணாடி அணிபவரா?
நொய்டா ரொம்ப டஸ்டி. கண்ணாடி இல்லாம வெளில போனா கண்ணு இன்பெக்ஷன் ஆகி டாக்டர் கிட்ட போகணும். அதுனால வீட்டை விட்டு வெளிய போகும் போது மட்டும் Goggles போட்டுப்பேன். மத்தபடி பவர் எல்லாம் இல்லை. இந்த போட்டோ நான் ஆபீஸ் கிளம்பும் போது எடுத்தது.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
இது தான் அடுத்த காட்சி, இது தான் முடிவு என நம்மை ஊகிக்க வைக்க முடியாத படங்கள் பிடிக்கும். ஆனா, சொதப்பக் கூடாது. சரியா சொல்லனும்னா, பாலசந்தர் படங்கள் மாதிரியான படங்கள்.
20. கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்டரில் அயன். திருமணத்திற்குப் பிறகு எங்களின் முதல் படம்.
வீட்டில் கடைசியாக பார்த்தது Die Hard 4. நேற்றிரவு HBO வில்.
21. பிடித்த பருவ காலம் எது?
எல்லா பருவமும் ஆரம்பிக்கும் போது பிடிக்கும். லேசான தூறல் தரும் மழைக் காலம், சிலு சிலுக்கும் குளிர் காலம், குளிரைப் போக்க சூரியன் வெளிவரும் வெயில் காலம், தென்றல் வீசும் வசந்த காலம் இப்படி எல்லாமே தொடங்கும் போது மனதிற்கு இதமாகவும் ரம்மியமாகவும் இருக்கும்.
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
:( இப்போதைக்கு எதுவும் இல்ல. நேரம் கிடைத்தால் படிக்க நிறைய புத்தகங்களை அலமாரியில் அடுக்கி வைத்துள்ளேன்.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
பதினைத்து நிமிடத்திற்கு ஒரு முறை. ஆட்டோமாடிக் செட்டிங் போட்டு வச்சிருக்கேன்.
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
குழந்தை அழுற சத்தத்திலிருந்து குழலோசை வரை எல்லா சத்தமும் சங்கீதம் தானே.
ஹாரன் சத்தத்தைத் தவிர.
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அம்மா வீட்டிலிருந்து மாமியார் வீடு வரை. ;) 2940 கிலோமீட்டர்.
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
பெயிண்டிங்ல ஆர்வம் உண்டு. அதுல கோச்சராவும் இருந்திருக்கேன். பள்ளி, கல்லூரி நாட்களில் பாரதம், ஃபோல்க் மற்றும் வெஸ்டர்ன் நடனங்கள் பண்ணிருக்கேன். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு சில பல பரிசுகள் வாங்கிருக்கேன். என்னுடைய சமையல் எனக்கு ப்ளஸ்னு எங்க அப்பாவும், அவரும் சொல்லுவாங்க. இந்த மாதிரி basic qualifications தவிர எக்ஸ்ட்ராவா எந்த தனித் திறமையும் கிடையாது.
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நம்பிக்கை துரோகம்.
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
Blog reading
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
Switzerland and Sydney என் வாழ்நாள் கனவு. இதுவரை நான் பார்த்ததில் பிடித்தது சண்டிகர். ஒரு நாள் டூருக்கு ஏற்ற அழகான, தூய்மையான நகரம். நம்ம ஊர் ஊட்டி, கொடைக்கானாலும் பிடிக்கும்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க, " யாருக்காகவும் நம்ம கொள்கைய மாற்றி, நம்ம தனித் தன்மையை இழந்து வாழக் கூடாது" ன்னு. அதே மாதிரி இப்போ வரை நான் நானாக தான் இருக்கேன். அப்படியே இருக்கணும்னு ஆசை.
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அவர் இல்லாம எதுவும் செய்யனும்னு நான் இது வரை நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. எல்லாமே அவராக இருக்கவே நான் விரும்புகிறேன்.
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
இன்றைய வாழ்வு இறைவன் கொடுத்த பரிசு. அதனால் நீ நீயாகவே வாழ்.
அப்பாடா... முடிஞ்சதா!!! :)
43 comments:
//நல்ல படைப்புத் திறமை கொண்டவர். அவரின் கவிதைகளை நான் மிகவும் ரசித்துப் படித்துள்ளேன். தன் கருத்துகளை நேரடியாக சொல்லும் தைரியம் கொண்டவர். இவரின் எல்லாப் பதிவுகளுமே வித்தியாசமாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். சமீபத்தில் பிடித்தது http://podian.blogspot.com/2009/06/blog-post_02.html //
எனக்குத் தெரிஞ்ச யாரும் இதை படிச்சிடாம இருக்கனுமே.. :(
( வாங்குன பொட்டிக்கு மேல 4 வரி சேர்த்து எழுதிட்டிங்களே விக்னேஷ்வரி..)
//அவரின் கவிதைகளை//
தயவு செய்து சில நாட்கள் தலைமறைவாய் இருக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். :(
//இவரின் எல்லாப் பதிவுகளுமே வித்தியாசமாகவும், நேர்த்தியாகவும் //
புருடா விட ஒரு அளவு வேணாமா? :))
அட, லூசா விடுங்க சஞ்சய். இதெல்லாம் வாழ்க்கைல ஜகஜம்.
அழைப்பிற்கு நன்றி விக்கி! மிக சுவாரசியமாக இருந்தது உங்கள் அனைத்துக் பதில்களும்! உங்கள் ஆளுமையை ரசித்தேன்! அப்புறம் என்னை இப்படி வாரிவிட்டுட்டீங்களே!
விரைவில் நானும் அழைப்பில் இணைகிறேன்! நன்றி!
ரொம்ப வெளிப்படையா அழகா உண்மையை எல்லாம் சொல்லியிருக்கீங்க! அதுவும் இரண்டாவது பதில், உங்களுக்குள் இருக்கும் குழந்தையை காட்டிக்கொடுத்துவிடுகிறது! :-) So sweet of you, Tanvi!
நாங்க சொல்றதுக்கு முன்னாடி சஞ்சய் வந்து ஒத்துகிட்டாரு..
அழகா எழுதி இருக்கீங்க..
அது சரி உங்க வீட்டுக்காரரை எப்போ அழ வச்சீங்க
/எனக்குத் தெரிஞ்ச யாரும் இதை படிச்சிடாம இருக்கனுமே..//
இருங்க நம்ம சகாக்கள்கிட்ட சொல்லிட்டு வறேன்..
அப்புறம் , பதிவு.. ம்ம் பல மேட்டர் வெளில வந்திருக்கு.. குட்..
2, 30, 32 .... :)
Vicky is going great writing her blogs. This is pretty interesting as well. But, Social responsibility is long awaited from bloggers like Vicky. Avoid Introducing english amidst Tamil. Take my comments as just a honest opinion of your well wisher. I am a mirror, I reflect true image. Please don't mistake me.. Take care..
நன்றி முல்லை. அட வாங்க முல்லை, நானே எழுதிட்ட போது நீங்க எழுதுறதுக்கு என்னபா...
நன்றி SK.
அது சரி உங்க வீட்டுக்காரரை எப்போ அழ வச்சீங்க //
வாங்க தொடர்பவன். அவரு தினமும் காலைல அழுவாரு, எனக்கு வெங்காயம் நறுக்கிக் குடுத்து.
வாங்க கார்க்கி.
நன்றி மணிநரேன்..
Thanks for your comments Vijay. I will try to improve myself.
$anjaiGandh! said...
//நல்ல படைப்புத் திறமை கொண்டவர். அவரின் கவிதைகளை நான் மிகவும் ரசித்துப் படித்துள்ளேன். தன் கருத்துகளை நேரடியாக சொல்லும் தைரியம் கொண்டவர். இவரின் எல்லாப் பதிவுகளுமே வித்தியாசமாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். சமீபத்தில் பிடித்தது http://podian.blogspot.com/2009/06/blog-post_02.html //
எனக்குத் தெரிஞ்ச யாரும் இதை படிச்சிடாம இருக்கனுமே.. :(/////
சஞ்சய்.. நான் படிச்சிட்டேனே:-))
அழகா உண்மையை எல்லாம் சொல்லியிருக்கீங்க விக்னேஷ்வரி (A)தன்வி:-))
உண்மைகளா எழுதிட்டு 16வது கேள்விக்கு மட்டும் 50% பொய் எழுதிட்டீங்களே:-((
என்ன வேற இழுத்து விட்ருக்கீங்க. சரி ஜமாவுல சேர்ந்துடறேன். பதிவு ச்சோஒ ச்வீட்:)
இங்கும் நானா..?
எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவான பதில்கள்.
வாங்க தொடர்பவன். அவரு தினமும் காலைல அழுவாரு, எனக்கு வெங்காயம் நறுக்கிக் குடுத்து///
அப்போ அவருதான் சமமையலா? பெண்ணியம் பேணும் தன்விக்கு வாழ்த்துக்கள்
\\உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
Blog reading \\
:-)))
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் தல
//இது தான் அடுத்த காட்சி, இது தான் முடிவு என நம்மை ஊகிக்க வைக்க முடியாத படங்கள் பிடிக்கும். ஆனா, சொதப்பக் கூடாது. சரியா சொல்லனும்னா, பாலசந்தர் படங்கள் மாதிரியான படங்கள்.//
ஆனால் எங்களால் பாலசந்தரின் பெரும்பாலான படங்களை ரொம்ப தெளிவாக யூகிக்க முடிகிறதே..
குறிப்பாக சுஜாதா வருகைக்குப் பின் உள்ள படங்கள்..,
ஒரே சாலைதான், நிறைய வளைவுகள், திருப்பங்கள் நிறைந்திருக்கும். ஆனால் பழகியவர்களுக்கு கண்களைக் கட்டிவிட்டால் கூட எப்போது எந்த வளைவு வரும் தெரியும். அந்த அளவு தெளிவாக திரைப்படங்களில் முடிச்சுக்களை வைத்திருப்பார்.
மிக வித்தியாசமான வானமே எல்லை படத்தில் கூட தனது வழக்கமான கதை அம்சம் கொண்ட ஒரு ஃபிளாஷ்பேக் வைத்து தனது முத்திரையைப் பதித்திருப்பார்.
==================================
அவரது இயக்கம் இல்லாமல் தயாரிப்பில் வந்த படங்கள் ஆஹா... இந்த தலைமுறைக்கு ரோடு போட்டவர் அவர்தான்.
//நொய்டா ரொம்ப டஸ்டி. கண்ணாடி இல்லாம வெளில போனா கண்ணு இன்பெக்ஷன் ஆகி டாக்டர் கிட்ட போகணும். அதுனால வீட்டை விட்டு வெளிய போகும் போது மட்டும் Goggles போட்டுப்பேன்//
கோர்கான் தான் டஸ்ட் சிட்டின்னு சொல்லுவாங்க நீங்க நொய்டாவை சொல்லுரிங்க, முக்கால்வாசி நொய்டாவுல டஸ்ட் கிடையாதுன்னு நினைக்குறேன். செக்டர் அம்பதுக்கு மேலதான் அதிகம் டஸ்ட் இருக்கும்ன்னு நினைக்குறேன்.
அதே போல சண்டிகர் ரொம்ப அழகான ஊர்தான் -:) அந்த ராக் கார்டன் மற்றும் ரோஸ் கார்டன் அல்டிமேட், டிசம்பர் மற்றும் ஜனவரியில் பார்க்க கொடுத்து வைத்திருக்கணும் :)
நினைவுகளை சிலநிமிடம் மீட்டெடுக்க உதவிய உங்கள் பதிவிற்கும் உங்களுக்கும் , நன்றி சிஸ்டர்
அப்பறம் அத்தான் என்ன லூதியானாவா :)
//அவரிடம் எனக்கு எல்லாமே பிடிக்கும். அவரின் பொறுமை, அக்கறை, பாசம், காதல், உண்மை, கடின உழைப்பு, இன்னும் பல. இவை தான் ஒரு தமிழச்சியை பஞ்சாபியாக மாற்றின. //
இது ஒரு வகையில் உங்களின் முந்தைய பதிவுகளில் இருந்து யூகித்து வைத்து இருந்தேன்..உங்கள் கணவர் வட இந்தியர் என்று..பரவ இல்லை எனக்கு கொஞ்சம் மூளை வேலை செய்து..
பதில்கள் நீங்கள் நீங்களாக வந்து இருக்கிறது..
அபியும் நானும் பார்த்து விட்டிர்கள..:))
Very nice answers! (sincere? is the correct word)
I liked it! :-))
Howz Punjabi?
Probably it is like Urdu that I am pitted against!
Note - I referred your blog in http://pengalpathivugal.blogspot.com/ that I am trying to maintain!
தெளிவான சுருக்கமான பதில்கள். வாழ்த்துகள்.
நன்றி....
தொடர்பதிவிற்க்குள்ளும் என்னை தள்ளியமைக்கு........
வாங்க இயற்கை. நன்றி.
நன்றி வித்யா, யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
நன்றி நர்சிம்.
அப்போ அவருதான் சமமையலா? பெண்ணியம் பேணும் தன்விக்கு வாழ்த்துக்கள் //
அடக் கடவுளே, நான் சமைக்குறேங்குறதால அவரு ஹெல்ப் பண்ணுவாருப்பா. உடனே ஆரம்பிச்சுட்டீங்களா பெண்ணியம், ஆணியம்னு
வாங்க முரளி கண்ணன்.
நன்றி சுரேஷ்.
எங்களால் பாலசந்தரின் பெரும்பாலான படங்களை ரொம்ப தெளிவாக யூகிக்க முடிகிறதே.. //
அப்போ நான் இன்னும் கத்துக் குட்டியாவே இருக்கிறேன்னு நினைக்கிறேன்.
முக்கால்வாசி நொய்டாவுல டஸ்ட் கிடையாதுன்னு நினைக்குறேன். //
இல்லைங்க பித்தன், நொய்டா முழுக்க டஸ்டி தான் இப்போ. வீடு சுத்தப்படுத்தி மாளல.
சண்டிகர் ரொம்ப அழகான ஊர்தான் //
ஆமாங்க, ரொம்ப அழகான ஊர்.
அப்பறம் அத்தான் என்ன லூதியானாவா :) //
அவர் ஜலந்தர்ங்க.
நன்றி வினோத் கெளதம். இன்னும் பார்க்கலைங்க. ஆனா படம் வந்ததும் பலரும் பார்த்திட்டு போன் செய்து உன் கதை தான்னு சொன்னாங்க. பாக்கணும்.
He is good.
Thank you Vinitha.
நன்றி ஸ்ரீதர்.
வாங்க சத்யா, இப்போ உங்க டர்ன்.
//இல்லைங்க பித்தன், நொய்டா முழுக்க டஸ்டி தான் இப்போ. வீடு சுத்தப்படுத்தி மாளல.//
அவர் சொன்னது விமு.. இது விபி.. :))
beautiful.
ponmalar
\\"பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்" பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தினமும் குறைந்தது ஒரு முறையாவது இப்பாடலைக் கேட்பது வழக்கம். இளையராஜாவின் தாலாட்டிற்காக.\\
அருமையான பாடல்...இசையின் மூலமாக நமக்கு ஒரு தாய் கிடைச்சிருக்கு என்றால் அது ராஜா தான் ;)
அவரின் நந்தலாலா படத்தின் "தாலாட்டு கேட்க நானும், கைவீசி நடந்திடும் காற்றே" பாடல்கையும் நேரம் கிடைக்கும் போது கேட்டு பாருங்கள். உருகிடுவிங்க ;)
பதிவின் பதில் அனைத்தும் கலகல..கலக்கல் ;)
//அபியும் நானும் பார்த்து விட்டிர்கள..:))/
//இன்னும் பார்க்கலைங்க. ஆனா படம் வந்ததும் பலரும் பார்த்திட்டு போன் செய்து உன் கதை தான்னு சொன்னாங்க. பாக்கணும்.//
இயன்றால் Father of the Bride ஆங்கிலத் திரைப்படம் பார்க்கவும்.
ஹாலோ அக்கா, இது தான் உங்க ப்ளாக்ல நான் முதல் தட comments போடுறேன். ரொம்ப சுவாரஸ்சியமா எழுதுறீங்க:)
//தேர்வின் கடைசி அரை மணி நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் என் கையெழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.//
haha..ரசித்து படித்தேன்:)
//தியேட்டரில் அயன்.//
தியேட்டரில் பார்க்கும் நல்ல பழக்கம் இருக்கா? நீங்க ரொம்ப நல்லவங்க யக்கா!!!:)
பதில்கள் அனைத்தும் ரசிப்புத் தன்மையுடன் உள்ளது..
இப்போதுதான் லதானந்த் அங்கிளின் வழிகாட்டுதலில் இத்தளத்திற்குள் நுழைந்தேன்.
நன்று..
வாழ்க வளமுடன்
நார்த் இந்தியன் பெண்கள் அணியும் சிந்தூரின் வித்தியாசம் பற்றி ஒரு பதிவு போடுங்களேன்!
அப்புறம் உடைகள்..
பிறகு எப்பவும் போல சாப்பாடு!
சிந்தி கடி என்று ஒரு ஐடம், ஹைதராபாத்தில் சாப்பிட ஞாபகம். நம்ம ஊர் போண்டா மோர் கொளம்பு. ரெசிபி போடுங்க.
எளிய பாசாங்கற்ற பதில்கள்
மனம் திறந்து பாராட்ட ஒரு மேலான மனநிலை தேவை அது உங்களிடம் மிகுந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி
hi விக்னேஷ்வரி,
முடிந்தால் http://podipaiyan.blogspot.com/ சென்று படித்து பார்க்கவும்.
-பொடிப்பையன்
நல்ல பதில்கள் விக்னேஸ்வரி. வாழ்த்துகள்
அதென்ன வி.மு., வி.பி. சஞ்சய்?
நன்றி பொன்மலர்.
கண்டிப்பாக கோபிநாத். ராஜாவின் இசைக்கு மயங்காத செவிகள் உண்டோ...
உங்கள் கருத்துக்கு நன்றி.
நிச்சயம் பார்க்க முயற்சிக்கிறேன் பாலராஜன் கீதா.
வாங்க தமிழ்மாங்கனி. அதிசயமா பாலிவுட் ஸ்டிரைக் நடந்தப்போ இங்க தமிழ்ப் படம் தியேட்டர்ல ஓடிச்சு. பார்க்காம விடுவோமா....
நன்றி உண்மைத் தமிழன்.
நீங்க கேட்ட பதிவெல்லாம் போட்டுடுவோம் வினதா.
நன்றி நேசமித்திரன்.
நிச்சயம் படிக்கிறேன் பொடிப்பையன்.
நன்றி ஆதவன்.
faq model-இல் பதிவு நன்றாக இருக்கிறது .
மனம் நிறைந்த நல்ல தம்பதிகள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்த விஷயம் - அவரிடம் எனக்கு எல்லாமே பிடிக்கும். அவரின் பொறுமை, அக்கறை, பாசம், காதல், உண்மை, கடின உழைப்பு, இன்னும் பல. இவை தான் ஒரு தமிழச்சியை பஞ்சாபியாக மாற்றின.
திருமதி விக்னேஷ்வரி அவர்களுக்கு,
நான் விருந்தினராய் தங்களின் வலைப்பூ படிக்கும் போது என்னில் எழுத்த சந்தேகத்தினை இங்கே கேள்வியாக வைத்துள்ளேன்.
தங்கள் தங்களின் கணவர் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். தங்களது பிறப்பிடம் தமிழகம் என்று சொல்லியுள்ளீர்கள், ஆனால் பஞ்சாப், பாஞ்சாபி என வார்த்தைகளும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளனவே. ஆதலின் அதனைக் குறித்து தெரியப் படுத்துக.
நன்றி
Post a Comment