வேலைப்பளு கழுத்தை நெரிக்கிறது. அம்மாவுடன் போனில் சொந்தக் கதை பேசக் கூட நேரமில்லாமல் இருந்த போது, நான்கு நாட்கள் விடுமுறை வரமாய்க் கிடைத்தது. திருமணத்திற்குப் பின் என் வீட்டிற்கு நான் முதல் முறை செல்வதால் சொல்லிலடங்கா மகிழ்ச்சி.
சிவராத்திரி மற்றும் ஹோலி நாட்களில் வேலை செய்ததன் காரணமாக இருந்த இரண்டு நாட்கள் விடுமுறை, ஞாயிற்றுக் கிழமை மற்றும் ஒரு நாள் அதிகமாக விடுமுறை எடுத்து ஊருக்குப் போனால், அம்மா, வீட்டுக்கு மாப்பிள்ளை வந்த குஷியில் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. என்னவரும் என்னைக் கண்டு கொள்வதாக தெரியவில்லை. பாதி நேரம் அம்மாவின் இட்லியைப் பாராட்டியும், மீதி நேரம் டிஷ் டிவியில் ஹிந்தி சேனல்களைப் பார்த்தும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார். பிறகு பொழுது போகாமல் தங்கையுடனும், அப்பாவுடனும் சண்டை போட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். வீட்டை விட்டுக் கிளம்பும் போது அம்மாவுக்கு அழுகை வந்துவிட்டது. வந்ததில இருந்து பேச நேரமில்லாமல், மாப்பிள்ளையின் கொஞ்சும் தமிழில் மூழ்கி இருந்து விட்டு இப்போ என்ன அழுகை என்று தோன்ற, நான் அழவில்லை. வீட்டு முக்கைத் தாண்டியதும் என்னை அறியாமல், கண்கள் கலங்க அம்மாவுக்கு போன் செய்தேன். "என்னடா, மாப்பிள்ளை எப்படி இருக்கார்" என அம்மா கேட்க, "ரெண்டு நிமிஷத்துல மாப்பிள்ளைக்கு என்ன ஆகிடப் போகுது" என கடுப்பாகி போனை வைத்தேன். (வர வர யாருமே நம்மள மதிக்க மாடேங்குராய்ங்க)
****************************************************************************************************
மார்ச் மாதம் வந்தாலே வரி செலுத்துவது தான் கொடுமையை உள்ளது, எல்லோருக்கும். நான் வேலைக்கு வந்து மூணாவது வருஷம் இது. முதல் வருஷம் கொஞ்சமே கொஞ்சமாய் சம்பளம் வாங்கியதால், வரி என்ற வார்த்தை கூட என் காதில் விழவில்லை. இரண்டாவது வருடம், சம்பளம் உயர்வானதால், சில பல insurance களை எடுத்து வரியை சேமிக்க முடிந்தது. இப்போது இன்னும் அதிகமாகி விட்டதால், வேறு எதிலாவது invest செய்ய வேண்டும். இல்லையென்றால், சில ஆயிரங்களை வரியாகக் கட்ட வேண்டும். சம்பளமே வராமல் recession போகும் போது, எங்கிருந்து சேமிப்பது. வேறு வழி இல்லாமல், வரி கட்டித் தான் ஆக வேண்டும். (சம்பள உயர்வு கொடுத்தானே, சம்பளம் குடுக்கணும்னு தோணுச்சா...)
****************************************************************************************************
எல்லோரும் ஏர்டெல் சிறுவனைப் புகழ்ந்து கொண்டிருக்க, எனக்கு என்னவோ ப்ரூ விளம்பரம் தான் பேவரிட். அலுத்து சலுத்து வரும் மனைவிக்கு, கால் பிடித்து விடும் கணவனைப் பார்க்க அழகாய் இருக்கிறது. நானும் என்னவரும் சண்டை போட்டிருந்தால், இந்த விளம்பரம் வந்தால் சிரித்து, சமாதானம் ஆகி விடுவோம். நல்ல ரசிக்கக் கூடிய விளம்பரம். (என்ன செய்ய, டிவியில் தான் ரசிக்க முடியும், நேரில் எந்த கணவன் இப்படி செய்கிறார்)
****************************************************************************************************
போன டிசம்பர் 14 ஆம் தேதி, டில்லியில், தமிழ் நண்பர்கள் கூட்டம் ஒன்றை ஆனந்த் ஏற்பாடு செய்திருந்தார். இண்டியா கேட் கார்டனில் 40 நண்பர்கள் சந்தித்து, பேசி, களித்து, ஒரு சிறிய உதவியாய் ஒரு பார்வையற்றோர் பள்ளிக்கு நிதி வழங்கி மகிழ்ந்தோம். தமிழகத்தின் பல சிற்றூர் மற்றும் நகர மக்களை டெல்லியில் பார்த்து பேசியது அனைவருக்கும் மகிழ்ச்சியே. எல்லோரும் டெல்லியில் வாழ்வதால், அன்றாட அவசர வாழ்க்கையின் நடுவே ஒரு 'hi' scrap மட்டுமே செய்து கொள்ள முடிகிறது. தற்போது மறுபடியும் ஒரு சந்திப்பு இந்த மார்ச் அல்லது ஏப்ரலில் இருக்கலாம். நல்ல, பல ஊர்களின் தமிழைக் கேட்க மற்றுமோர் வாய்ப்பு. (தமிழ்நாட்டுல இருந்தவரைக்கும் இங்கிலீஷ்ல பீட்டர் விட்டுட்டு, டெல்லி வந்ததுக்கப்புறம் தமிழ்ல பேசுறதக் கேட்குறதே இனிமையா இருக்கு)
11 comments:
நாட்குறிப்பு படிச்சது போல இருக்கு!
என்ன சொல்றதுன்னு தெரியல.
ஆனா உங்க எழுத்து அருமையா இருக்கு. படிக்க தெரியவன் படிச்சாக்கூட முழுசா படிக்காம வைக்க மாட்டான். அப்படி இருக்கு. அத சரியா செய்யறீங்க.... இன்னும் நிறைய எதிர்பாக்கறேன் விக்கி!!!
மத்தவங்களோட நாட்குறிப்பு படிக்குறது தப்புன்னு தெரியாதா மணி.... ;)
முதல் வருகைக்கு நன்றி மணி.
விக்கி..!! இந்த அம்மாக்களே இப்படித்தான்..!! கூட இருக்கறப்ப, கவனிக்க மாட்டாங்க..!! இருங்க இருங்க உங்க அம்மாவுக்கு போன் பண்ணிச் சொல்றேன்.!!![:D]
///(என்ன செய்ய, டிவியில் தான் ரசிக்க முடியும், நேரில் எந்த கணவன் இப்படி செய்கிறார்)//என்ன மாதிரி ஆளுக இருக்கோமில்ல?!!!
உண்மை தான் சுரேஷ் அண்ணா. கூட இருக்குறப்போ நாம கண்ணுக்கே தெரிய மாட்டேங்குறோம்.
///(என்ன செய்ய, டிவியில் தான் ரசிக்க முடியும், நேரில் எந்த கணவன் இப்படி செய்கிறார்)//என்ன மாதிரி ஆளுக இருக்கோமில்ல?!!! //////
இருக்கீங்கன்னா, சந்தோஷம் தான் சிவக்குமரன்.
@ விக்னேஷ்வரி
//பட்டாம்பூச்சி விருது வாங்கினதுக்கு வாழ்த்துக்கள்.//
ரொம்ப ரொம்ப நன்றிங்க
//உங்களுடைய கலைஞர் பற்றிய பதிவு நல்லா இருந்தது.//
மிக்க நன்றி ஆமா வோட்ட போடிங்கள ஹ ஹ :-) இல்லாட்டி தமிலிஷ்ல வோட்ட போடுங்க
ஏன் மத்த பதிவ படிக்கலையா நீங்க :-) அதையும் படிங்க தோழி
//சொத்து சேர்க்கவே கட்சி, பதவி. மக்களுக்காக இல்லை என்பதை மறைமுகமா நல்லா சொல்லிருக்கீங்க. //
வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரில சொல்ல வேண்டியதை இருக்கு :-) இல்லேன்னா ஆட்டோ வந்துடும்
//சம்பளமே வராமல் recession போகும் போது, எங்கிருந்து சேமிப்பது. வேறு வழி இல்லாமல், வரி கட்டித் தான் ஆக வேண்டும். (சம்பள உயர்வு கொடுத்தானே, சம்பளம் குடுக்கணும்னு தோணுச்சா...)//
ஹ ஹ அருமையான வரிகள்
தொடர்ந்து எழுதுங்க .. வோட்டும் போட்டாச்சு ..
ம்ம்ம்ம்! நடத்துங்க!
நன்றி சுரேஷ்.
நன்றி லதானந்த்.
Post a Comment